8

Màu nền
Font chữ
Font size
Chiều cao dòng

phoneai தூக்கி எறிந்துவிட்டு முழங்காலில் முகத்தை புதைத்து அழுதவள் எப்பொழுது உறங்கினால் என்று அவளே அறியாள்.தன் தலை முடியை யாரோ கோதுவதைப் போன்ற உணர்விலே தான் தன் கண்களை சிரமப்பட்டு பிரித்து எதிரிருந்த உருவத்தை பார்த்தால்.

அவள் கண்முன்னே அவளது ஆருயிர்த் தோழி நவ்யா அமர்ந்து அவளை நோக்கி அன்றலர்ந்த மலரைப் போல் புன்னகைத்துக் கொண்டிருந்தாள் .என்றுமே நாம் எத்தனை துயரில் இருந்தாலும் குழப்பத்தில் இருந்தாலும் நமக்கு நெருக்கமானவர்கள் ,நமது நண்பர்களின் முகத்தில் தோன்றும் ஒரு புன்னகையே நம் மனதின் ரணத்தை குறைக்கும் பெரும் சக்தியை பெற்றிருக்கும் .

ஸ்வஸ்திகாவிற்கும் அதே போல் காலையில் தனது தோழியின் சிரித்த முகம் தனது கவலைகளை ஏதோ ஒரு வகையில் குறைப்பதாக உணர்ந்தாள் .பதிலிற்கு சிறிதாய் புன்னகைத்தவள் "என்னடி காலங்காத்தால வந்துருக்க "என்று எழுந்து அமர

அவளோ அவளை ஒரு முறை முறைத்தவள் கைக்கடிகாரத்தை கண் காட்ட அதுவோ மதியம் 2 மணி என காட்டியது .மிகவும் தாமதமாக தூங்கியதால் இத்தனை நேரம் உறங்கியிருக்கிறோம் என்பதை உணர்ந்தவள் சோர்ந்த முகத்துடன் "லேட்டாக தூங்குனேன் டி அதான் இவ்ளோ நேரம் ஆயிருச்சு "என்றவள் அவள் கண்ணைப் பார்க்காமல் குளிக்க செல்ல

நவ்யாஅவள் கையை பிடித்தவள் "என்னாச்சுடி முகம்லாம் ஒரு மாறி இருக்கு "என்க

அவளோ "அது அதெல்லாம் ஒண்ணுமில்லடி நைட் fullaah படுச்சேன் அவ்ளோ தான் "என்று கூற தன் தோழி தன்னிடம் பொய் உரைப்பது தெளிவாக புரிந்தாலும் அவளே கூற விரும்பாத ஒன்றை தோண்டி துருவி கேட்க அவளிற்கு மனமில்லை எனவே அவளே தன்னிடம் பகிர நினைக்கையில் பகிர்ந்து கொள்ளட்டும் என்று அவளை குளிக்க அனுப்பி வைத்தால் .ஸ்வஸ்திகாவிற்குமே தனிமை தேவைப் பட்டது .

அவள் குளியலறைக்குள் வந்து நின்றபோதும் சரண் அவளை பார்த்து

கூறிய வார்த்தைகளே காதில் ரீங்காரமிட்டுக் கொண்டிருந்தது "chi நீலாம் ஒரு பொண்ணாடி." "இப்டி தான் எவன் கூப்பிட்டாலும் போய்டுவியா" "chi உன்ன எல்லாம் cousinnu சொல்லிக்கவே அவமானமா இருக்கு " என்று அவனது ஒவ்வொரு ஏச்சுக்களும் நினைவிற்கு வர தண்ணீரோடு கணக்கில்லாமல் கன்னத்தில் வழிந்த கண்ணீரையும் கரைத்தால் .

அவள் நினைவுகள் ஒரு மாதமாய் நடந்தவைகளை நினைவில் கொண்டு வந்தது .சரணும் ஸ்வஸ்திகாவும் என்றும் எலியும் பூனையும் தானே அவள் எத்தனையோ முறை கூறியும் அவன் அந்த மாலினியுடன் பேசுவதை நிறுத்தவே இல்லை .அவள் எவ்வாறு இருவரையும் பிரிப்பது என்று யோசித்துக் கொண்டிருக்க அப்பொழுதே அவள் கண்ணில் பட்டான் சரனிற்கு கடுகளவும் பிடிக்காத சந்தோஷ் என்னும் மாணவன் .

சந்தோஷ் அவள் வகுப்பில் பயிலும் மாணவன் தான் ஓரிரு முறை பார்த்திருக்கிறாள் .இது வரை அனைவரையும் தன் சிரித்த முகத்தாலேயே வசீகரப்படுத்தி வைத்திருந்த சரண் கோப முகத்தை காட்டியது இவனிடம் மட்டும் தான் .அது ஏனென்று அவள் அப்பொழுது ஆராயவும் இல்லை அவளிற்கு தேவைப்பட்டது சரணை வெறுப்பேற்ற ஒரு விஷயம் .எனவே தானே வழிய சென்று சந்தோஷிடம் பேச்சை வளர்த்தால் .அவனும் தன்மையாகவே அவளிடம் நடந்து கொண்டான் .அவனது குறும்புப்பேச்சும் உதவும் குணமும் அவளிற்கு மிகவும் பிடித்திருந்தது .எனவே அவனிடம் ஒரு நல்ல தோழியாய் பழகினால்.அவனிடம் அவள் பேச்சு கொடுக்க துவங்கும் பொழுதே சரண் வந்து அவளிடம் அவனிடம் பேச வேண்டாம் என்று கூற அவனை சீண்டுவதற்கு தனக்கு கிடைத்த வாய்ப்பாய் இதை நினைத்தவள் அவன் பேச்சை கேட்கவில்லை தொடர்ந்து சந்தோஷிடம் பேசினால்.

இதை சிறிது காலம் கண்டும் காணாமல் விட்ட சரண் ஒரு நாள் அவள் லைப்ரரியில் இருக்கையில் அவளிடம் வந்தவன் அவளை யாரும் இல்லாத ஒதுக்குபுறமான இடத்திற்கு இழுத்து சென்றவன் "என்னடி நெனச்சுட்டு இருக்க "என்க

ஸ்வஸ்திகாவோ மனதில் (ஆங் காண்டானியா )என்று நினைத்தவள் வெளியில் "என்ன நினைக்கணும் "

சரண் "என் உனக்கே தெர்லயா . நா சுத்தி வளச்சு பேசல நா அவ்ளோ சொல்லியும் அந்த சந்தோஷோட பேசிடிருக்க என்ன திமிரா "

ஸ்வஸ்திகா "நீ கூட தான் நா அவ்ளோ சொல்லியும் மாலினியோட பேசுற நா ஏதாச்சும் சொல்றேன்னா "

சரண் "பைத்தியமாகி நீ எதை இதோட connect பண்ற ?அவ என்னோட costaff எப்படி பேசாம இருக்க முடியும் "

ஸ்வஸ்திகா "அதே மாறி இவன் என் classmate எப்படி பேசாம இருக்க முடியும் "

சரண் "ஸ்வஸ்தி i am not in the மூட் டு ஜோக் இனி அவனோட பேசுற வேலை பழகுற வேலைலாம் வசிக்காத அவ்ளோ தான் "என்க

ஸ்வஸ்திகாவிற்கோ யாரும் தன்னை கட்டுப்படுத்துவது என்பது பிடிக்காத விஷயம். யாரேனும் ஒன்றை செய்யாதே என்று கூறினால் அதை தான் முதலில் செய்வாள் இக்குணத்தை அவளிடம் அவள் பெற்றோர் பலமுறை மாற்ற கூறியும் அவள் மாற்றிக்கொள்ளவில்லை .

சரண் அவனிடம் பேசாதே என்பதை இத்தனை அழுத்தி சொல்ல அதையே அவள் குணம் செய்யத் தூண்டியது அவனை நக்கலாய் பார்த்தவள் "நாளைக்கு அவனோட படத்துக்கு போறேன் போய்ட்டு அப்டியே வெளிய போறேன் என்ன பண்ண முடியுமோ பண்ணிக்கோ போடா "

என்று விட்டு நகல அவன் பற்களை கடிப்பது அவளிற்கு தெளிவாய் கேட்டது .

அடுத்தநாள் கிளம்பியவளிற்கு ஏனோ முதல் முறையாக சரணின் பேச்சை கேட்டால் என்ன என்று தோன்றியதோ என்னவோ வண்டியில் சென்றுகொண்டிருந்தவள் திடீரெண்டு திரும்பி அவளது பள்ளித் தோழியின் வீட்டிற்கு சென்றால் .போனில் சார்ஜ் இல்லாது போக அது சுவிட்ச் ஆப் ஆகி இருந்தது அன்று முழுவதும் .

பின் அடுத்த நாள் கல்லூரிக்கு சென்றவள் வழக்க போல் வீடு திரும்ப தன் வண்டியை எடுக்க வர அவள் வண்டியின் மெலோ சரண் கோபமாய் அமர்ந்திருந்தான் .அவள் வந்ததும் அவளை நிமிர்ந்து பார்த்தவன் "நேத்து அவன் கூட படத்துக்கு போனியா ?"என்க

அவளோ அவனை வேவுபெற்றவென்றே "ஆமா அதுக்கென்ன இப்போ "என்று கூறிய அடுத்த நொடி அவள் கன்னத்தில் கையை வைத்திருந்தால் ஆம் சரண் அவளை அடித்திருந்தான்.

யாரிடமும் அதிர்ந்து கூட பேசாதவன் எத்தனை இறுக்கமான சூழலையும் சிரித்தமுகமாய் காய் ஆள்பவன் அனைவரின் மனநிலையையும் தனது குரும்பாலேயே சீர்செய்பவன் இன்று முதல் முறையாய் ஒரு பெண்ணை கை நீட்டி அடித்திருந்தான்.

அவன் அவளை அடித்து விட்டான் என்ற அதிர்ச்சியிலிருந்து மீளாதவள் அவனை நிமிர்ந்து பார்க்க அவனோ ."chi நீலாம் பொண்ணாடி .ஒரு தடவ சொன்னா தெரியாது .உன் இஷ்டத்துக்கு தான் எல்லாத்தையும் பண்ணுவ அப்டி தான "என்றவன் அவளை நெருங்கி வந்து "ஏண்டி போன "என்க

அவளோ கோபம் கண்ணை மறைக்க "அவன் கூப்டான்னு போனேன் இப்போ என்னங்குற "என்க

அவனோ நிதானமாய் சற்று இடைவெளி விட்டு நின்றவன் கையை கட்டிக் கொண்டு "அவன் கூப்டான்னு போனியா "என்க

அவள் "ஆமா ஆமா ஆமா "என்று கத்த

அவனோ "எவன் கூப்பிட்டாலும் போய்டுவியா ?"என்று வார்த்தையில் விஷம் தோய்த்து கேள்வி எழுப்ப இவளுக்கோ சப்த நாடியும் அடங்கியது என்ன வார்த்தை கேட்டு விட்டான் என்னை பார்த்தென்று அவளை சிறிது நேரம் நோக்கியவன்"உன்ன எல்லாம் என் மாமா பொண்ணுன்னு சொல்லிக்கவே அசிங்கமா இருக்கு எப்டியோ போய் தொள ஆனா இனி உன் வாயால என் பேர மட்டும் கூப்டறாத "என்றவன் அவ்விடம் விட்டு விறுவிறுவென்று சென்று விட அவளிற்கோ தான் விளையாட்டாய் தானே செய்தோம் ஏன் இத்தனை கடுமையாய் தன்னை ஏசி விட்டு செல்கிறான்? என்ன வார்த்தை கூறிவிட்டான் என்னை பார்த்து என்று நினைத்தவளுக்கு கண்ணீர் நிற்காமல் வழிய scootyai எடுத்து தன் வீட்டிற்கு வந்தவள் அப்பொழுதிலிருந்து அழுதுகொண்டே இருக்கிறாள் .

அவன் தன்னை திட்டியதை வார்த்தைகளை நினைவுகூர்ந்தவள் ஏனோ காரணம் இன்றி இவ்வாறு தன்னிடம் நடந்து கொள்ள மாட்டான் என்பதை உணர மறுத்தால்.குளித்து முடித்து ஓர் தீர்க்கமான முடிவெடுத்தவள் நவ்யாவுடன் வெளியே சென்றால் மனநிம்மதியை வேண்டி .

ஸ்வஸ்திகா "என்னடி திடீர்னு என்ன வெளிய கூப்டு வர நீ இப்டிலாம் கூப்டு வர மாட்டியே என்ன மேட்டர் "என்க

நவ்யாவோ "ஒன்னும் இல்லடி நாளைக்கு விக்ரம் புதுசா பார்ட்னெர்ஷிப் பண்ணிருக்குற கம்பெனி மெம்பெர்ஸ்க்கெல்லாம் ஒரு buisness பார்ட்டி arrange பண்ணிருக்காரு .நானும் அட்டென்ட் பண்ணனும் என்ட பார்ட்டி wearlaam இல்லேல அதான் ஷாப்பிங் பண்ணலாம்னு "என்க

ஸ்வஸ்திகாவும் "ஓஹ் அப்டியா சரிடி "என்றுவிட்டு அமைதியாகி விட்டால் இதே வேறு நேரமாய் இருந்திருந்தால் "பார்ட்டிக்காகவா விக்ரமகாகவா" என்று கலாய்த்திருப்பாள் எனில் இன்றோ அவளே அவள் நிலையில் இல்லையே மௌனமாய் கடைக்கு வந்தவர்கள் ஒவ்வொரு செல்லையாய் ஆராய்ந்தார்கள் .

ஸ்வஸ்திகாவின் கண்ணில் ஒரு மயில் கழுத்து நிற சேலை பட அவளிற்கோ அன்று சைந்தவியின் நிச்சயத்தின் போது தனது வெள்ளை நிற சுடிதாரை அவன் வீணாக்கி விட்டதால் அவள் கத்தி விட்டு அவனிடம் பேசாமல் இருக்க அடுத்த நாள் காலையில் அவள் குளித்துவிட்டு வெளியே வந்து பார்த்த போது மயில்கழுத்து நிறத்தில் அழகிய வேலைப்பாடுகள் நிறைந்த ஒரு chudidhaar கட்டிலில் சாரி கத்திரிக்கா என்ற தாளுடன் இருந்ததன் நினைவு வந்தது .

கண்ணின் ஓரம் நீர்த்துளி கோர்க்க அதை அவசரமாய் துடைத்தவள் நவ்யாவிற்கு கோல்டன் நிறத்தில் ஒரு chiffon சேலையும் அதற்கேற்ற ரெடிமேட் blouseayum வாங்கி விட்டு பில் போட செல்ல அங்கோ கூட்டமாய் இருந்தது .

நவ்யாவிற்கு கூட்டத்திற்குள் சென்றால் சில சமயம் மூச்சு திணறல் ஏற்படும் ஆதலால் அவளிடம் சேலையை வாங்கிய ஸ்வஸ்திகா கூட்டத்திற்குள் நுழைந்து பில் போடு விட்டு வெளியே வர யாரோ இடித்ததில் நிலைதடுமாறியவள் அருகில் இருந்த ஒரு ஆடவனின் தோளை பிடிமானத்திற்காக பற்றி நின்று "சாரி சார் "என்று அவன் முகத்தை நிமிர்ந்து பார்க்க அங்கு நின்றதோ சரண் .

அவன் "கத்திரிக்கா sorrydi ஏதோ கோவத்துல அப்டி சொல்லிட்டேன் sorrydi .நா என்னைக்காச்சும் ஒண்ணா அதட்டியாச்சும் ஏதாச்சும் பேசிருக்கேனா அப்டி இருக்கேல நா அப்டி ஒரு வார்த்தை சொன்னேனா ஏதாச்சும் விஷயம் இருக்கும்னு புரிஞ்சுக்க மாட்டியா "என்க

அவளோ எதுவும் பேசாது நிற்க அவள் தோளை தொட்டவன் "நா பேசிட்டே இருக்கேன் நீ இப்டி சும்மா இருந்தா என்ன அர்த்தம் டி "என்க

அவளோ நிமிர்ந்து அவனை பார்த்தவள் "நேத்தே என்ன உயிரோட கொன்னுட்ட சரண் செத்த போனம்லாம் பேசாது "என்றவள் நிற்காமல் அங்கிருந்து நகர்ந்து வந்து விட அவள் செல்வதையே கண்ணில் வலியுடன் நோக்கியவன் செய்வதறியாது செயலற்று நின்றான் .

அடுத்த நாள் மாலை buisness பார்ட்டிக்காக அந்த கோல்டன் சிபிஎன் சேலையை நேர்த்தியாய் அணிந்தவள் எந்த வித ஒப்பனையுமின்றி மெல்லிய அணிகலன்களுடனே தேவதயாய் ஜொலித்தவள் வீட்டை விட்டு வெளியேற அவளிற்காக அவள் வீடு வாசலில் காரில் நின்றுகொண்டிருந்தவன் அவளை பார்த்த மாத்திரத்தில் சிலை ஆனான் .

அவனை கண்டுகொண்டவள் கை அசைத்து அவன் அருகில் வந்து அமர அப்பொழுதும் அவன் அப்படியே இருக்க அவளோ என்னாச்சு இவருக்கு என்று நினைத்தவள் அவன் தோளை தொட்டு உலுக்கி "விக்ரம் என்னாச்சு "என்க

அவனோ மனதில் நினைத்ததை வாய் வழியாய் உளறிவிட்டான் "என்ன அழகுடா "என்று அவன் கூறியதை கெட்டவள் முகம் செம்மையுற அப்புறம் திரும்பிக் கொள்ள அவனும் தான் உளறிவிட்டதை நினைத்து தலையில் அடித்துக் கொண்டவன் காரை எடுக்க அங்கு ஓர் அசாத்திய அமைதி நிலவியது.அவ்வமைதியை கலைக்க விரும்பியவன் பாட்டை ஓட விட பாட்டும் அவனின் மனநிலைக்கேற்ப

"பெண்ணே நீயும்

பெண்ணா பெண்ணாகிய ஓவியம்

ரெண்டே ரெண்டு கண்ணா

ஒவ்வொன்றும் காவியம்

ஒரு மூன்றாம் பிறையை சுற்றி

தங்க சரிகை நெய்த நெற்றி

பனி பூக்கள் தேர்தல்

வைத்தால் அடி

உனக்கே என்றும் வெற்றி

பிரம்மன் செய்த சாதனை

உன்னில் தெரிகிறது

உன்னை எழுதும் போது தான் மொழிகள் பிறக்கிறது "என்று ஒவ்வொரு வரியாய் அவளை ரசித்துக் கொண்டே காரை ஓட்ட அவன் பார்வை வீச்சை உணர்ந்தவள் வெட்கம் தலை தூக்க அவன் புறம் திரும்பவே இல்லை.இரு உள்ளங்களும் மனம் நிறைந்த சந்தோஷத்துடன் buisness பார்ட்டிக்கு செல்ல விதியோ திரும்புகையில் இந்த சந்தோஷம் நிலைக்காதென்று அவர்களை பார்த்து நக்கலாய் சிரித்தது .

Bạn đang đọc truyện trên: Truyen2U.Pro