16. ஷர்மி எஸ் எஸ்

Màu nền
Font chữ
Font size
Chiều cao dòng

16. சார்மி எஸ் எஸ்

"ம்மா... எனக்கு வீட்டுலயே இருந்தா? ஒரு மாதிரி அப்சட்டா இருக்கு.. அதனால நான் காலேஜ்க்கு போகவா?" என மிகப்பணிவுடன் தன் முன் அமைதியாய் கேட்கும் மகளை பார்த்த திவ்யாவுக்கு! மனதினுள் சற்று பயம் தொற்றிக்கொள்ளத்தான் செய்தது.

அதற்குள் அங்கு வந்த தயாளன். "எழில் சொல்றது தான் சரி. நீ போயிட்டு வாம்மா." என்றார் அக்கறையுடன்.

"சரிங்கப்பா." என்று கூறியவளின் முகம் சோகத்தைக்காட்டினாலும், மனதினுள்.. 'இப்ப அந்த நெட்டக்கொக்கு முகத்தை பார்க்கணும். என்கிட்டயே வம்பு பண்ணுனான்ல? இன்னிக்கு அவனை வச்சு செய்றேன்." என முடிவெடுத்தவள்.

வழக்கத்திற்கு மாறாக.. "அகரா. நீ என்ன இன்னும் கிளம்பாம இருக்க? உனக்கு இந்த வாரம் இன்டர்னல் ஸ்டார்ட் ஆகுதுல்ல..? சோ கிளம்பு." என்றாள் பொறுப்பாக.

வருணாவிடம் திரும்பி "வரு டார்லிங். இன்னிக்கு ஒரு நாள் மட்டும் லீவ்வ கன்டினியூ பண்ணிட்டு, அம்மாக்கு ஹெல்ப் பண்ணுங்க," என்றாள் மிக அக்கறையாக.

தன் ஸ்கூட்டியில் கல்லூரி வளாகத்திற்குள் நுழைந்ததில் இருந்து அவள் கண்கள் கதிரைத்தான் தேடியது. ஆனால், அவள் தேடலுக்கு சொந்தக்காரனான அவனோ? அவள் கண்ணில் சிக்கவில்லை... அவனைத் தேடியதில்.. எதிரில் வந்துக்கொண்டிருந்த மாறனைக்கூட கவனிக்காமல் மாறன் மீது மோதினாள்.

"இங்க யாருடா.. தூணை கட்டி வச்சது?" என வாய்விட்டு புலம்பியவள், மெல்ல நிமிர்ந்து பார்க்க, அங்கு மாறனோ அவளை கொலை வெறியில் முறைத்துக்கொண்டிருந்தான்.

'சுமோ, எதுக்கு இப்ப நம்மளை இப்படி முறைக்கிது?' என சற்று தள்ளி நின்றுப்பார்க்க. அவன் கையில் இருந்த சமோசா இவள் மோதிய வேகத்தில் மண்ணில் விழுந்திருந்தது.

"சரி.. சரி.. விடு சுமோ. உனக்கு ஒன்னு என்ன? பத்து சமோசா வாங்கித்தரேன். இன்னிக்கு என்னோட ட்ரீட்டு. ஆமா.. உங்க நொன்னன் எங்க?" என மாறனிடம் பேசியவளின் குரல், அவனுக்கு என்றாலும்., விழிகளோ! கதிரைத்தான் தேடி அலைந்துக்கொண்டிருந்தது.

ஆனால்.. பதில் எதுவும் கூறாமல்.. அங்கிருந்து நகரப்போன மாறனிடம், "ஏய்.. நில்லுடா.. அதான் சொல்றேன்ல தெரியாம தட்டி விட்டுட்டேன்னு, அப்புறமும் எதுக்கு இப்படி மூஞ்சை தூக்கி வச்சிருக்க?" என்றால் கேர்லெஸ்சாக.

"தெரிஞ்சிப் பண்ணாலும், இல்ல தெரியாம பண்ணாலும்.. நீ தட்டிவிட்டது சாதாரண பொருள் இல்ல... எல்சா பேபி.. இது உனக்கு கண்டிப்பா ஒரு நாள் புரியும்.." என மனதினுள் சொல்லியவன் அங்கிருந்து நகர முயற்சித்தான்.

"ஹேய்... என்னடா.. நானும் பார்த்திட்டே இருக்கேன்.. உன் வாய் திறக்கலன்னாக்கூட.. உன் மூஞ்சு ஏதோ? எனக்கு சீரியஸா அட்வைஸ் பண்ணுது போல? என்ன!" என்றாள் அவள் இடுப்பில் கைவைத்து முறைத்து.

"இல்ல. எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு. அதான்.." என மாறன் இழுக்க...

"உனக்கு இருக்கிற ஒரே வேலை.. சாப்பிடுறதுதான்.. அதுக்குத்தான கூப்பிடுறேன்.. வா." என அவனை கேண்டினுக்கு அழைத்துச் சென்றாள்.

***

"என்ன திவி? ஏன் இப்படி இருக்க?" என்று தன் மனைவியின் கையை அக்கறையாக பிடித்து தயாளன் கேட்க,

"இல்லங்க.. எனக்கு நம்ம எழில நினைச்சா பயமா இருக்குங்க? அவ அவளாவே இல்லைங்க... அவ ஒரு விசயத்தை பண்றதுக்கு, யார்கிட்டையும் கேட்டு நிக்கவே மாட்டா.. ஆனா, இன்னிக்கு காலையில.." என திவி சொல்லி முடிப்பதற்குள்..

"இங்கப்பாரு.. திவி.. நீ ரொம்ப யோசிக்கிற... அப்படில்லாம் எதுவும் இல்ல.. வேணும்னா. நீயே பாரு.. அவ காலேஜ் விட்டு வர்றப்ப.. நம்ம பழைய எழிலா.. நம்ம வீட்டுக்கு வருவா." என்றார் தயாளன்.

அதை வெளியில் இருந்து பார்த்துக்கொண்டிருந்த வருணாவிற்கு கதிர் மேல் கோவமாக வந்தது. அவரால் தான்.. இவ்வளவு பிரச்சனையும்... என தன்னால் முடிந்த அளவுக்கு திட்டித் தீர்த்தாள்.

கல்லூரி சென்ற அகரனுக்கோ! மனம் எல்லாம், நிச்சயம் நின்றதிலேயே இருந்தது. ஆனால், அபியோ அதைப்பற்றி சிறிதுக்கூட நினைப்பில்லாமல் மிகவும் சகஜமாக இருந்தான்.

"ஏன்டா.. அபி.. உனக்கு இந்த நிச்சயம் நின்னதுல எந்த வருத்தமும் இல்லையா?" என்றான் அகரன்.

"இதுக்கு நான் ஏன்டா வருத்தப்படனும்.. உண்மைய சொல்லனும்னா? எங்க மாமா, அந்த டெவில் கிட்ட, இருந்து தப்பிச்சதுக்கு நான் சந்தோசம் தான் படணும்." என்றான் அபி.

ஆயிரம் கூறினாலும், அக்கா என்ற பந்தம்... அந்த வார்த்தையினால் கோவம் கொண்டது. "இங்கப்பாரு.. என்ன சொன்னாலும் என் அக்கா ஒன்னும், உங்க மாமா மாதிரி ஏமாத்தல.." என்றான் கோவமாக அகரன்.

அதற்கு அவனைப்பார்த்து சிரித்த அபினவ்வோ! "டேய்.. நானும் உன்னை மாதிரி... என் மாமாக்கு சப்போர்ட் பண்ணி பேசலாம். ஆனா! அதனால வீனா எனக்கும், உனக்குமான நட்புத்தான் கெட்டுப்போகும்.. இப்பவும் சொல்றேன். அவரு எனக்கு மாமா தான். ஆனா நீ என்னோட பிரண்ட்டு.. எனக்கு ரெண்ட் பேருமே முக்கியம்"  என்றான் அபினவ்.

அப்போது தான்... தான் கோவமாக பேசியதை உணர்ந்தவன். "சாரிடா.. அது வீட்டுல நடந்ததையே யோசிச்சிட்டு இருந்தேனா? அதான்... தப்பா எடுத்துக்காத.." என்றான் அகரன்.

"என்னடா..? காலையிலேயே டெவில் எதுவும் சாபம் கொடுத்திட்டு போயிருச்சா? நீ என்னன்னா? புதுசா சாரி- கீரின்னு சொல்ற. நமக்குள்ள எதுக்கு இதெல்லாம்?" என்றான் அபினவ்.

"நண்பேன்டா." என அகரன் அவன் தோளில் கைப்போட்டு சொல்ல... "நட்புடா.. நேர்மைடா. நீதிடா.." என்றான் அபினவ். அங்கே வழக்கம் போல் நட்பு ஜெயித்தது.

***

கேன்டினில் இருந்து வந்தவளின். கண்கள் என்னவோ? அந்த ஸ்டாப் ரூமைத்தான் சுற்றி சுற்றி வந்தது.

'ஒரு வேளை நம்மளை பார்த்து பயந்து லீவ் போட்டுட்டுடானோ? ச்சே... அவனை இன்னிக்கு கலாய்க்கிறதுக்காக எவ்வளவு ஆசை ஆசையா வந்தேன். எல்லாம் போச்சு." என்று புலம்பிக்கொண்டே வந்தவள், எதிரே வந்தவனின் மீது மோதினாள்.

"என்ன? இன்னிக்கு காலையில இருந்து எது மேலையாச்சும் மோதிட்டே இருக்கோம்... ஒரு வேளை அந்த நெட்டகொக்கு எதுவும் சூனியம் வச்சிருச்சா?" என முணுமுனுத்துக்கொண்டே நிமிர்ந்துப்பார்க்க, அங்கே.. இவ்வளவு நேரம்... யாருக்காக காத்திருந்தாளோ? அவனேதான் நின்றுக்கொண்டிருந்தான்.

அவனைப் பார்த்ததும் அவள் முகம் அழகாய் புன்னகையை சூடியது. ஆனால் பாவம். அதை ரசிக்கும் மனநிலையில் தான் அவன் இல்லை.

"சாரி." என்று அங்கிருந்து நகர, வேகமாய் அவன் முன்வந்து நின்றவள்!.. "ஹலோ! நெட்ட கொக்கு. என்ன? என்கிட்ட இருந்து எஸ்கேப் ஆகுறீயா? எப்புடி? எம்புட்டு அழகா உன்னை மாட்டி விட்டேன் பாரு... இனிமேலாவது போட்டிக்கு வர்றதுக்கு முன்னாடி... யாரு என்னன்னு பார்த்திட்டு வா. நாங்களாம்.. அப்பவே அப்புடி." என்றாள் இல்லாத காலரை தூக்கி விட்டு.

அவனோ.. இப்படி ஒருவள் தன்னிடம் பேசிக்கொண்டிருக்கிறாள் என்பதை கூட கவனிக்காது பிரின்சிபல் அறைக்குள் செல்ல முயற்சிக்க, அவன் கையைப்பிடித்து தடுத்து நிறுத்தியவள்.

"என்ன? நான் பாட்டுக்கு பேசிட்டே இருக்கேன்.. நீ பாட்டுக்கு போயிட்டு இருக்க.. சொல்லிட்டுப் போ..." என்றாள் எழில்.

கோபத்தை எல்லாம் கட்டுப்படுத்தியவன்... நீண்ட. பெருமூச்சை இழுத்துவிட்டு... "ம்.. என்ன சொல்லனும்.." என்று  கேட்டான்.

"ம்... தோர்த்துட்டேன்னு ஒத்துக்கோ..." என்றாள் எழில்  தெனாவட்டாக.

"ஆமா.. நான் தோர்த்துட்டேன். ஏன்னா நான் உன்னை காதலிச்சேன். அதனால, நான் தோர்த்துட்டேன்.

ஆமா, நான் தோத்துட்டேன். ஏன்னா! நான் உன்னை விளையாட்டாக்கூட காயப்படுத்தக்கூடாதுன்னு நினைச்சேன். அதான் நான் தோர்த்துட்டேன்.

ஆமா, நான் தோத்துட்டேன். நீ என்கிட்ட சண்டை போடுறத கூட நான் உன் பாசம்னு பார்த்தேன். அதான் தோர்த்துட்டேன்.

ஆமா நான் தோத்துட்டேன். நீ என்கிட்ட இந்த நிச்சயத்த நின்னுடும் நின்னுடும்ன்னு சொல்றப்ப எல்லாம்.. மனசுல ஊசி வச்சுக்குத்துனாலும். உன் முகத்துல தெரிஞ்ச அந்த சந்தோசத்தை பார்த்து நான் சிரிச்சேன்ல? அதான் நான் தோர்த்துட்டேன்.

ஆமா நான் தோர்த்துட்டேன். என் உயிரையே கேப்பேன்னு தெரியாம உன்னை என் உயிருக்கும் மேல நேசிச்சேன். அதான் தோர்த்துட்டேன்.

ஆனா, உண்மையா நான் எங்க தோர்த்தேன் தெரியுமா? என் மனசுல உனக்குன்னு நான் கட்டி வச்சிருந்த மாளிகையில.. வேற ஒருத்திய கூப்டு வந்து நிறுத்தி... அந்த மாளிகைய தரமட்டமா, அடிச்சு நொறுக்கினீயே அந்த இடத்துலத்தான்."

என ஆதங்கமாய் சொல்லியவன்! "பட்.. நான் உனக்கு நன்றி சொல்லியே ஆகனும்... இதெல்லாம் எனக்கு புரியவச்சதுக்கு. நெக்ஸ்ட். என் லைப்ல மட்டும் இல்ல. என் கண்ணுல கூட நீ படக்கூடாதுன்னு நினைக்கிறேன். அதுக்காக நீ எதுவும் பண்ண வேண்டாம். நானே.. இந்த வேலைய விடலாம்னு முடிவு பண்ணிட்டேன். கெட் லாஸ்ட் பிரம் மை லைப்." என சொல்லியவன்... விருவிருவென பிரின்சிபல் அறைக்குள் நுழைந்தான்.

ஆனால்... இவளுக்கோ? ஏனோ மனம் பாரமாகிப் போனது... அவன் கூறிய ஒவ்வொரு வார்த்தைகளும்... நம் எதுவும் தவறு செய்து விட்டோமோ? என யோசிக்க தோன்றியது... ஆனால்... அதெல்லாம் அவள் மூளைக்கு உரைக்கவில்லை.

'என்ன இவன்? இப்படி பஞ்ச் டயலாக் பேசிட்டு போறான்... உண்மையிலே யே வேலைய விட்டுப் போறானா?  ம்.. போகட்டும்.. நமக்கென்ன? நம்மத்தான் இவன்கிட்ட ஆரம்பத்துலேயே சொன்னோமே... இவனை பிடிக்கலன்னு.. அதவிட்டுட்டு.. காதல் கீதல்-னு காமெடி பண்ணிட்டு இருக்கான்... எப்படியோ? இன்னும் ரெண்டு வருஷத்துக்கு.. வீட்டுல கல்யாணப் பேச்செடுக்க மாட்டாங்க.. அப்புறம் காலேஜ்-ல இவன் தொல்லையும் இருக்காது." என சொல்லியவள் அங்கிருந்து சென்றாள்.

***

"இல்ல... கதிர் அண்ணா.. நீங்க இந்த வேலைய விட்டு போகக்கூடாது.." என்றான் மாறன்

.
"எனக்கு உன்னைப் பார்த்தா பொறாமையா இருக்கு." என்றான் கதிர்.

மாறனோ அவன் புரியாமல் பார்க்க... "காதலிக்கிற பொண்ணு, நம்மளை பிடிக்கலன்னு சொன்னா? அந்தப்பொண்ணு மேல கண்டிப்பா நமக்கு கோவம் வரும்.. வெறுப்பு வரும்... ஆனா உன்னால எப்படிடா? அந்தப்பொண்ணு நல்லா இருக்கனும்னு நினைக்க முடியுது.. அதுக்கும் மேல.. எப்படி அந்தப் பொண்ணுக்கிட்டயே உன்னால ஒரே மாதிரி பிகேவ் பண்ண முடியுது?" என்று கேட்டான் கதிர்.

"ஏன்னா அந்தப்பொண்ணு எனக்கு காதலியாவோ? தோழியாவோ? இல்ல அவன் என் எதிரியாக்கூட என்கூட இருந்தாப்போதும்னு நினைக்கிறேன். அதுக்கும் மேல. என் காதல் கண்டிப்பா நடக்காதுன்னு தெரியும்.. அப்படி நடக்காதுன்னு தெரிஞ்ச ஒரு விசயத்துக்காக, நான் ஏன் அவளோட நட்பை இழக்கனும்?" என்று மாறன் கேட்க...

"ம்.. நீ சொல்றது சரி தான்டா... ஆனா எனக்கு! எங்க நான் இங்க இருந்தா அவளை வெறுத்துருவேனோன்னு தோணுது... அதுக்கும் மேல.. எனக்கு அவளைப் பார்த்தாலே... வேற ஒரு பொண்ணை என்கூட சேர்த்து வச்சிப் பேசுனதுதான் நியாபகத்துல வருது. நானும், அவளும் மீட் பண்ணாம இருக்கிறதுதான். எனக்கும், அவளுக்கும் நல்லது. கண்டிப்பா.. நான் உன்னை மிஸ் பண்ணுவேன்." என்று அங்கிருந்து வீட்டிற்கு சென்றான்.

***

இங்கே கல்லூரி முழுவதும்... கதிர் ரிசைன் லெட்டர் கொடுத்ததுதான் ஹாட் டாபிக்... இதை அகரனும், அபினவும் கூட எதிர்ப்பார்க்கவில்லை.

எழிலுமே... அவன் கூறியதை... சும்மா சொல்கிறான்... அப்படியெல்லாம் செல்ல மாட்டான்... என்று தான் நினைத்தாள்... ஆனால்... இது அவளுக்குமே சற்று குழப்பமாகத்தான் இருந்தது.

'ஏய்... எழிலு.. என்னடி இது கன்ட்ராவி.. அந்த நெட்டக்கொக்கு... இங்க இருந்தாலும்.. தொல்லையா இருக்கு.. இல்லனாலும் பிரச்சனையா இருக்கு? இப்பலாம்... நான் என்னை பத்தி யோசிக்கிறத விட்டுட்டு, அவனைப்பத்தியே யோசிட்டு இருக்கேன்.. இது நல்லதுக்கு இல்ல... பேசாம.. இந்த மாறனைக்கூப்டு நல்ல படத்துக்கு போறோம்... அப்படியே நல்ல பிரியாணி கடையா பார்த்து ஒரு வெட்டு வெட்டுறோம்.. அப்புறம் வீட்டுக்கு போயி... காலையில பண்ண மாதிரி ஒரு சோக கீதம் வாசிக்கிறோம்... அப்புறம் நிம்மதியா படுத்து தூங்குறோம்..' என முடிவெடுத்தாள்.

அதற்குள்... அங்கு வந்த மாறன்… "எனக்கு கொஞ்சம் வெளிய வேலை இருக்கு?" என சொல்ல...

'என்ன முதல் பிளான்னே புட்டுக்கிடும் போல. இல்ல. எழிலு.. ஒரு தடவ முடிவு பண்ணிட்டே உன் பேச்சை நீயே கேட்கக்கூடாது... இந்த சுமோவ தள்ளிட்டு இன்னிக்கு படத்துக்கு போயே ஆகனும்.'

"என்னடா.. நானும் பார்த்துட்டே இருக்கேன்... காலையில வந்ததுல இருந்து வேலை ... வேலைன்னு ஓவரா சீன் போட்டுட்டு இருக்க?" என எழில் கேட்க...
அவன் ஏதோ சொல்ல வர...

"இங்க பாரு.. நீ-யும் ஏதாச்சும் பஞ்ச் டயலாக் பேசுனன்னு வச்சிக்கோ? செலவானாலும் பராவாயில்ல-ன்னு கேக்-ல எலி மருந்தை கலக்கி கொடுத்திருவேன்..." என எழில் மிரட்ட...

"அய்யோ அது இல்ல எல்சா பேபி.. இந்த அக்கெளன்ட் டீடைல்ஸ் ஓட ஹார்ட் காபிஸ் எல்லாம்... யூனிவர்சிட்டி-க்கு அனுப்பனும்... அதான்.." என்றான் மாறன்.

"என்னமோ சொல்ற? ஆனா எதுவும் சரியில்ல.. போ.. போயித்தொலை." என எழில் சொல்ல...

"கண்டிப்பா உனக்கு ஒரு நாள் புரியும்.. எல்சா பேபி..." என மாறன் மனதினுள் சொல்ல..

"டேய்.. மயிண்ட் வாய்ஸ் ல பேசுறதா இருந்தா? அங்கிட்டு ஓரமா நின்னு பேசு... நீ சொல்றது இங்க வரைக்கும் கேட்குது" என எழில் சொல்லிவிட்டு அங்கிருந்து சென்றாள்.

***

"ஏன்டா இப்படி பண்ண?" என ஸ்யாமளா கேட்க...

"என்னக்கா? நீயும் இப்படி கேட்கிற?" என கதிர் சொல்ல...

"டேய்... நீ வீட்டுல-யே இருந்தா அதைப்பத்தி யோசிச்சிட்டு இருப்பன்னுத்தான்... நான் உன்னை காலேஜுக்கே அனுப்பி வச்சேன்.. நீ என்னன்னா? ரிசைன் பண்ணிட்டு வந்திருக்க..?" என அவனின் அக்கா கேட்க...

"எனக்கு அந்த காலேஜ் போக பிடிக்கலக்கா.." என கதிர் சொல்ல..

"காலேஜ் போக பிடிக்கலையா? இல்ல அவளை பார்த்து கோவமா இருக்கிற மாதிரி நடிக்க முடியலையா?" என ஸ்யாமளா கேட்க...

விரக்தியாய் சிரித்தவன்... "நடிக்கிறதா? இல்லக்கா.. அங்க அவளை பார்த்திட்டே இருந்தா நான் கண்டிப்பா அவளை வெறுத்திருவேன்... அதுக்காகத்தான்..." என கதிர் சொல்ல...

"ம்... முத்திப்போச்சுடா உனக்கு... ஒன்னும் சொல்றதுக்கில்ல...ஆனா மறுபடியும் சொல்றேன்? நீ இப்ப இந்த வேலைய விட்டு வந்தது தப்பு... அப்புறம்.. தப்பு உண்மையாவே உன் மேல- இருக்கிற மாதிரி ஆகிரும்.. அதை மட்டும் மனசுல வச்சிக்கோ..." என தன் தமையனின் நலனை மனதில் வைத்து... சொல்லியவள்.. அங்கிருந்து சென்றாள்.

அவனுக்கு.. அவளைப் பார்த்த நாளிலிருந்து அத்தனை நினைவுகளும்.. அவன் கண் முன் நிழல் படமாய் ஓடியது... கடைசியாக.. அந்த நிச்சயத்தின் நினைவுகள் வரவும்... அவள் மேல் இருந்த காதல் கோவமாய் மாறியது... வேகமாய் தன் மொபைலை எடுத்தவன்! நிச்சயத்தன்று... இவன் அவள் கைக்கு மருந்திடும் போது.. அவள் வலியில் சிணுங்க. இவன் மெல்ல ஊதி விட.. அவள் தன்னை மறந்து அவனைப்பார்க்க.. அதை இவர்கள் இருவருக்கும் தெரியாமல் அகரன் தன் மொபைலில் எடுத்திருந்தான்... அதை அவன் உடனே அவனுக்கும் அனுப்பியிருந்தான்.

அதையே பார்த்துக்கொண்டிருந்தான்... கை டெலிட் பட்டனை கிளிக் செய்ய சொல்ல. மனமோ! வேண்டாம்... என சொல்ல.. அறிவோ.. இதற்கு மேல். இந்தப்புகைப்படம் உனக்கெதுக்கு? என சொல்லஎன்றது.

அறிவுக்கும் மனதுக்கும் இடையில் நடந்த சண்டையில் அமைதியாய் அமர்ந்திருந்தான் நம் எழிலின் கதிர்...

(காதலில் மனதின் பேச்சைக்கேட்டாலும், அறிவின் பேச்சைக்கேட்டாலும். அதன் முடிவு என்னவோ காலத்தின் கையில்தான்... அதை அடுத்தடுத்த அத்தியாயங்களில் நாம் காண்போம்...)

*********
Watpad id: sarmi_ss

Pratilipi id: sarmi ss "ஷர்மி பெனிட்"

*********

Bạn đang đọc truyện trên: Truyen2U.Pro