20. மது அஞ்சலி

Màu nền
Font chữ
Font size
Chiều cao dòng

விருவிருவென ஸ்டாஃப் ரூமில் நுழைந்த கதிரின் முகம் கர்ன கொடூரமாய் காட்சியளித்தது.

ருத்ரமூர்த்தியாக காட்சியளித்தவனின் கோபம் எல்லாம் எழிலின் மீதுதான் விழுந்தது. எங்கே அவளை வெறுத்து விடுவோமோ என்று அஞ்சித் தான் கல்லூரியை விட்டே செல்ல எத்தனித்தான். அதற்கும் விதி சதி செய்துவிட தான் எதற்கு அஞ்சினானோ அதையே செவ்வனே செய்து கொண்டிருக்கிறான்.

தன்னை ஒரு விளையாட்டுப் பொம்மையாய் மற்றவர்கள் பயன்படுத்துவதை தாங்க முடியவில்லை அவனால். அதிலும், தன் பெற்றோரிடம் நற்பெயர் பெற தன்னை அவள் பயன்படுத்தியதை அறியாமல் குற்றப்படுத்துகிறேன் என்ற பெயரில் கல்லூரியில் வைத்து அகரன் தன்னை அசிங்கப்படுத்தியது, இவை அனைத்திற்கும் மேல் தன் தமக்கையைத் தவிர்த்து தன் குடும்பத்தினரே தன்னை ச்சீ என்று பார்த்ததை தாங்கிக்கொள்ள இயலவில்லை அவனால். வலியில் புழுவாய் நெளிந்துக் கொண்டிருந்தான் அவன்.

இவ்வாறு கதிர் உள்ளூர் வலியில் தவிக்க, அங்கே அகரனிடம் புரிய வைக்கிறேன் என்ற பெயரில் மல்லுக்கு நின்று கொண்டிருந்தாள் எழிலழகி.

"டேய் தம்பி பையா, சொன்னா புரிஞ்சுக்கோடா தயவுசெய்து கதிர் கிட்ட சண்டைக்கு போகாத ப்ளீஸ்! அவர் பாவம்டா" என்ற எழிலைக் கண்களை உருட்டி விசித்திரமாக பார்த்து வைத்தான் அகரன். பின்னே, இப்படி பேசுபவள் அல்லவே அவள்!

" ஆத்தீ... பயபுள்ள ஏன் இப்படி பார்க்குது?" என்று எண்ணியவள், அவன் பார்வையின் அர்த்தத்தை உணர்ந்து சமாளிக்கும் விதமாய், "அதில்லடா, என்னதான் அவர் தப்பு செய்திருந்தாலும் எல்லார் முன்னாடியும் அவரை அசிங்கப்படுத்துவது தப்புடா. அதுவும், இது அவர் வேலை பார்க்கிற இடம்.... அத.." என்று மேலும் எதையோ சொல்ல வந்தவளை தடுத்து நிறுத்தியவன்,

"போதும் நிறுத்து! எனக்கு எல்லாம் புரிஞ்சிடுச்சு.. எல்லாம்... எல்லாம் புரிஞ்சிடுச்சு..." விரல்களால் பின் கழுத்தை தடவியபடி , "ஆனா.. தயவுசெய்து இப்படி இருக்காத.. என்னால தாங்க முடியல" என்று பீடிகைப் போட்டவனை விசித்திரமாக பார்ப்பது இவள் முறை ஆயிற்று.

"என்ன புரிஞ்சிடுச்சு? ஏன் முடியல? எதுக்காக இப்படி புரியாம பேசுறான்? எல்லாரையும் குழப்புறது நம்ம வேலை. அப்படிப்பட்ட நம்மளையே இவன் குழப்புறானே. ஐயோ ஆண்டவா!!!" என்று புலம்பியவள் அவனிடமே அர்த்தத்தையும் கேட்டுவிட, அவன் கூறியதைக் கேட்டவள் அப்படியே ஸ்தம்பித்து நின்றாள்.

அவன் கூறிய பதில் அப்படி!!!
அவன் கூறியதை ஏற்க முடியாமல், "டேய், இப்ப நீ சொன்னத ஒரு முறைக் கூட சொல்லு. சரியா கேக்கல" என்க, "நீயும் உன் காதும்.." என்று பதித்தவர், " அடேய், லேடி டெவில்.. அந்த மனுஷன நீ லவ் பண்ண ஆரம்பிச்சுட்ட. அதான், அவர் செய்த துரோகத்தையும் ஓரம்கட்டி வழியே போய் அந்த ஆள் கிட்ட பேசிட்டு இருக்க. இப்ப கூட அந்த மனுஷனுக்காக என்கிட்ட பரிந்து பேசிட்டு இருக்க. இது சுத்தமா சரியில்ல சொல்லிட்டேன். காதல் கத்திரிக்காய் எல்லாம் தூக்கி எறிஞ்சிட்டு போய் உருப்படியா ஏதும் வேலை இருந்தா செய்ற வேலையைப் பாரு"
பெரிய மனிதனைப் போல் லேடி டெவிலிற்கே அட்வைஸ் செய்து அவ்விடம் விட்டு சென்றவனை கண் இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தாள் அந்த லேடி டெவில்.

அவன் தலை மறையும் வரை அதே பொசிசனில் நின்றவள், தன் தலையை இடது வலமாக ஆட்டி, "சரி இல்லடா... சுத்தமா சரி இல்லடா.. இப்படி தலைவால் எதுவுமே தெரியாம நீயா ஒரு முடிவுக்கு வரது சுத்தமா சரியில்லடா... அது ரொம்ப தப்புடா" என்று தன் பாட்டில் புலம்பியவளை மேலும் புலம்பவிட அங்கே வந்து நின்றாள் பிரியங்கா.

தன் அருகே யாரோ வந்து நிற்கும் அரவம் தெரியவும் திரும்பி பார்த்தவளின் கண்களுக்கு விருந்தளிப்பது போல் கெத்தாக நின்றிருந்தாள் பிரியங்கா.

அவள் நின்ற தோரணையைக் கண்ட எழில், "யாருடா இது? நியூ எண்ரியா என்ன? இருக்குற டுவிஸ்ட் பத்தாதுன்னு இது வேறயா? நிக்குற தோரணையே சரியில்லையே" என்று எண்ணியவளுக்கு சட்டென்று ஏதோ தோன்ற, "ஆனா.. இவ முக ஜாடைய பார்த்தா எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கே?" என்று அவள் தனக்கு இல்லாத மூளையை புரட்ட துவங்கவும் பொரி தட்டியது அவளுக்கு.

" ஆஹா!! இவ அந்த அபினவோட தங்கச்சி மாதிரி இருக்காளே! ஏற்கனவே அபினவ் அந்த நெட்ட குரங்கு விஷயத்துல கேள்வி கேட்டே நம்மள வாட்டி எடுத்துட்டான். இப்ப இவ என்ன கேட்கப் போறான்னு தெரியவில்லையே ஆண்டவா!!" என்று உள்ளுக்குள் புலம்பத் துவங்கினாள் எழில்.

எழில் பிரியங்காவை நேரில் கண்டதில்லை என்றாலும் ஒருமுறை அபினவை அவன் தந்தையிடம் போட்டுக் கொடுப்பதற்கு என்று அவன் வீட்டிற்கு சென்றபோது சுவற்றில் மாட்டியிருந்த போட்டோவில் கண்டிருந்த ஞாபகம் சிறிது இருந்தது. அதோடு, அண்ணனும் தங்கையும் அச்சடித்தது போல் ஒரே முக ஜாடையாக் கொண்டு பிறந்துள்ளதால் சட்டென்று கண்டு கொண்டால் எழிலழகி.

எழிலழகி இப்படி யோசித்துக் கொண்டிருக்க, இங்கே பிரியங்காவோ எழிலை அளவெடுத்துக் கொண்டிருந்தாள். காலை கதிர் எழிலிடம் தன் ஆதங்கத்தை கொட்டியது முதல் சற்று முன் அகரன் எழிலின் சம்பாஷனையையும் சற்று தள்ளி நின்று கவனித்துக் கொண்டுதான் இருந்தாள் பிரியங்கா.

இவர்களின் பேச்சிலிருந்து நடந்ததை ஊகித்தவளுக்கு ஒன்று மட்டும் உறுதியாக புரிந்தது, அதாவது இனி கதிரின் மனதிலும் வாழ்விலும் எழகி என்ற ஒருத்திக்கு துளியும் இடமில்லை என்பதை.

ஆனால், எத்தகைய வலியையும் புரட்டிப் போடும் வல்லமை காதலுக்கு உண்டு என்பதை பாவம் அவள் அறிந்திருக்கவில்லலை!!

அதிலும், இனி கதிரை தன்னவனாக்கிக் கொள்ள அவள் செய்ய வேண்டியதை மனதில் அசைப்போட்டவளுக்கு சற்று எழிலை சீண்டி பார்த்தால் என்ன என்று தோன்ற, அதை செய்ய வந்திருந்தாள் அவள். தான் செய்யப்போகும் காரியம் அவளுக்கே ஆப்பாகிப் போக போகின்றது என்பதை உணராமல்!!

"நீ தான் எழிலழகியா? இந்த காலேஜுக்கு நான் வரதுக்கு நீயும் ஒரு காரணம்" என்ற பிரியங்காவை முறைத்து வைத்தாள் எழில். பின்னே, மரியாதை மிஸ்ஸிங் அல்லவா!! ஆனால், பதில் எதுவும் கூறவில்லை அவள்!!

" ஏன்னு கேக்க மாட்டியா? சரி நீ கேட்காட்டி என்ன நானே சொல்றேன். என் மாமா மேல அபாண்டமா பழி போட்டதுக்கு உன்னை நிச்சயம் முடிச்சதுல இருந்து பார்க்கணும்னு நினைச்சிட்டு இருந்தேன். மாமாவோட காதலுக்கும் மனசுக்கும் கொஞ்சம் மும் தகுதி இல்லாத அந்த அழகி..எழிலழகி யாருன்னு பார்க்கிறதுக்கு" என்று பிரியங்கா கூறிக் கொண்டே போக,

"ரைட்டு... இவளோட கோட்டாவ ஸ்டார்ட் பண்ணிட்டா" என்றால் தனக்குள்ளேயே.

"உனக்கு என் மாமாவைப் பற்றி என்ன தெரியும்? ஏன் அப்படி ஒரு குற்றத்தை அவர் மேல சுமத்தின? இதுவரைக்கும் எந்த பெண்ணையும் ஏறெடுத்துக் கூட பார்த்தது இல்லை தெரியுமா? நான் கூட சின்ன வயசுல இருந்து அவரை விரும்புறேன். ஆனா அவர் என்னை திரும்பிக்கூட பார்க்கல.

அப்படிப்பட்டவரை போய் ச்ச... செய்றது எல்லாம் செஞ்சிட்டு சும்மா போய் மன்னிப்பு கேட்டா உடனே அவர் உன்ன மன்னிச்சிடுவாரா என்ன? லேசில மன்னிக்கக் கூடிய காரியத்தையா நீ செய்திருக்க" கோபமாய் கர்ஜித்தவள்.

"இங்க பாரு இன்னும் ஒருவாட்டி என் மாமா லைஃப்ல வரலாம்னு கனவுல கூட நினைக்காத. அதுக்கு நான் விடமாட்டேன். மன்னிப்பு மண்ணாங்கட்டினு அவர் முன்னாடி போய் அவர் நிம்மதிய கெடுக்காத. இட்ஸ் மை வார்னிங். அண்ட் இந்த லவ்வு கிவ்வுனு ஏதாவது இருந்தா உனக்குள்ளேயே வச்சுக்கோ அதை காரணம் காட்டி, அவரை நெருங்கலாம்னு பாக்காத. நீ முழுசா என் கண்காணிப்பில் தான் இருப்ப ஜாக்கிரதை" என்றவள் எழிலின் பதிலைக் கூட எதிர்பார்க்காமல் விருவிருவென சென்றுவிட, இங்கு எழிலின் நிலைமைதான் படு மோசமாய் போனது.

நிச்சயம் முடிந்ததிலிருந்து அவள் கேட்கும் புராணம் தான் இது. அபினவ் மாறன் என்ற வரிசையில் தற்போது இவள்! பிரியங்காவின் பேச்சில் உண்மை இருந்ததாலும் தன் மீது குற்றமுள்ள காரணத்தினாலும் அவள் மரியாதையின்றி பேசியதைக் கூட பெரிதாக எடுக்கவில்லை அவள்!

" எல்லாம் சரி, அது என்ன கடைசியில போற போக்குல லவ் வு அது இதுன்னு சொல்லிட்டு போயிட்டா. டூ பேட் . நம்ம எவ்வளவு தான் இல்லைன்னு சொன்னாலும் ஒருத்தனும் நம்மள நம்ப போறது இல்ல போலிருக்கே" என்றவள் சொக்கிப் போன முகத்துடன் மாறனை தேதிச் செல்ல எத்தனிக்க "நோ!! அப்புறம் அவனும், என் அண்ணன் அப்படி இப்படின்னு படுத்தி எடுத்திடுவான்" என்று எண்ணியவள் தன் வேலையைப் பார்க்க சென்றாள்.

..................

மாலை வீட்டிற்கு சோர்ந்து போய், சுட்டித் தனம் ஏதுமின்றி வந்தவளைக் காண பாவமாய் இருந்தது மற்றவர்களுக்கு. இதற்கெல்லாம் காரணமான கதிரை நினைக்கும்போது ஆத்திரமாக வந்தது அவர்களுக்கு. தங்கள் தவப்புதல்வி செய்து வைத்த கூத்தை அறியாமல் அந்த அப்பாவியின் மீது கோபத்தை வளர்த்து வந்தனர்.

இங்கு எழிலோ, தீவிர சிந்தனையில் மூழ்கி இருந்தாள்.

"நான் தப்பு செய்தேன் தான். அதற்காக மன்னிப்பு கேட்க போனா கண்டுக்கவே மாட்டேங்கறார் அந்த மனுஷன். சரி, மன்னித்துவிட்டேன்னு ஒரு வார்த்தை சொன்னா என்னவாம்? நம்ம சார்பா மன்னிப்பு கேட்டாச்சு தானே விட்டிடலாம்னு பார்த்தா மனசு கேட்க மாட்டேங்குதே! அய்யோ அண்டவா!! நான் என்னதான் செய்யறது நீயே சொல்லு" என்று புலம்பியவள் இன்று முழுவதும் நடந்ததை அசைப் போட்டுப் பார்த்தாள், முக்கியமாக பிரியங்கா கூறியதை எண்ணிப் பார்த்தாள்.

தான் செய்த தவறின் வீரியம் நன்றாக புரிந்தது அவளுக்கு. நற்குணம் படைத்த ஒருவனின் குணத்தின் மீது பழியைப் போடுவது எத்தகைய தவறு என்றும் அவன் மனம் எத்தனை பாடுபட்டிருக்கும் என்றும் நினைக்க நினைக்க கதிரை எண்ணி மனம் வலித்தது அவளுக்கு.

"அவர் கிட்ட திரும்பவும் மன்னிப்பு கேட்டே ஆகணும். அவர் மன்னிச்சிட்டேன்னு சொல்ற வரைக்கும் விடக் கூடாது. அது தான் " என்று , " ஓய் வாத்தி, இதோ வரேன் நீ எவ்வளவுதான் ஓடினாலும் நோ யூஸ். அம்மா தாயே உன்னை மன்னிச்சிட்டேன் ஆள விடுன்னு நீ கெஞ்சுற வரைக்கும் உன்ன விட மாட்டேன்" என்று சபதம் எடுத்தவள் நிம்மதியாக உறங்க போனாள்.

இந்த மன்னிப்பு கேட்கும் படலத்தின் கதிரிடம் தலைக்குப்புற விழப்போவதை உணராமல். அதுவும் காதல் என்ற பெயரில்.

********
Watpad id: MadhuAnjali

********

Bạn đang đọc truyện trên: Truyen2U.Pro