23. மாயாதி

Màu nền
Font chữ
Font size
Chiều cao dòng

கடந்து போவதில் காலத்திற்கும் நதிக்கும் ஒரு ஒற்றுமை உள்ளது. நதி எவ்வாறு நல்லது கேட்டது பாராது அடித்து செல்லுமோ அதுபோலவே, காலமும் இன்ப துன்பங்களை கடந்து வாழ வைக்கும்.

ஆனால் அதில், இனிமைமிக்க தருணங்களை மகிழ்ந்து சுவைக்கும் நாம், துயர கணங்களில் நகர்ந்திட அதே ஆர்வம் காட்டுவதில்லை.

ரணம் உடலிலோ மனதிலோ எதிலும் சரி, காலம் காயம் ஆற்றும் மருந்து. அடிக்கடி செவி அறிந்த வாக்கியம்தான் எனில், இவ்வார்த்தை தாங்கிய உண்மை உலகளாவியதல்லவா!

      காலை பத்து மணி. அவ்வறையில் நிலவிய நிசப்தத்திற்கு ஆயுள் ஒரு நொடிதான். மறுகணமே கலகலப்பாக பேச ஆரம்பித்தனர். அல்ல.. அல்ல.. எழிலழகியை கலகலப்பாக்க முயன்றனர். அன்று ஞாயிற்று கிழமை ஆதலால், குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் வீட்டில் இருந்தனர்.

       கட்டிலில் வாடிய கொடியில்  மலர துடிக்கும் மலராய் எழிலழகி முதுகிற்கு அரணாய் தலையணை வைத்து அமர்ந்திருக்க, கால் மாட்டில் தயாளன் அமர்ந்திருந்தார்.

        அருகில் இட்லி தட்டோடு ஊட்டிக்கொண்டிருந்த
திவ்யா "இன்னும் ரெண்டு வாய் வாங்கிக்கமா. தெம்பு திடமா இருக்க வேணாமா"

       "என் செல்லம்மால அடம்பிடிக்காம சாப்பிடுடா. மருந்து மாத்திரை சாப்பிடனும்ல. அப்பதானே சீக்கிரம் சரி ஆகும்" என்ற தயாளன் அவளது உடம்பில் உள்ள வெள்ளை கட்டுகளை பார்த்தார்.

        "அம்மா ப்ளீஸ் போதும். இதுக்கு மேல சாப்பிட முடியல" என்றாள் எழிலழகி, இட்லியில் பத்து விள்ளல் வாங்கிமுடித்து.

         "இன்னும் ஒரு இட்லிதான்டி இருக்கு. சாப்பிடு எழில்" என தாயவள் கெஞ்ச, அவள் மறுக்க இத்தனையும் பார்த்திருந்த அவளது உடன்பிறப்புகள்

        "அம்மாமாமா... அவ மட்டும்தான் உங்களுக்கு புள்ளையா! எங்கள பாத்தா புள்ள மாதிரி தெரியலையா?" என வருணா அகரனிற்கும் சேர்த்து நியாயம் கேட்க,

        "அதானே ஏதோ அடிபட்டு கைலயும் கால்லையும் சின்ன சின்னதா கட்டு போட்டு,  நல்லா எந்த வேலையும் பாக்காம தப்பிச்சிட்டா. அவளுக்கும் சேர்த்து வேல பாக்குற எங்களுக்குதான் நீ ஊட்டணும்  ஆனா வேணாம் சொல்ற அவளுக்கே ஊட்டுறீங்க இதெல்லாம் நியாயம் இல்ல தாய்குலமே!" அவன் சொன்னதென்னவோ சிரிக்காமல் தான். ஆனால், இந்த நியாயத்தை கேட்டு  பக்கென சிரித்துவிட்டான் அவனது நண்பன் அபினவ்.  எல்லோருமே சிரித்துவிட,

     எழில் "அடிங்க..." என அகரனை அடிக்க கை ஓங்கினாள். அவன் லாவகமாக நகர்ந்துவிட, எழில் "அப்பா இவன பாருங்கப்பா" என குற்றம் சாட்டினாள்.

     ஆம், அங்கு அபினவ் மற்றும் வர்ஷிகா வந்திருந்தனர்,  எழிலை பார்ப்பதற்காக. இது இரண்டாவது வாரம் இவர்கள் இப்படி வருவது. இங்கு வந்து  கிஞ்சித்தும் அவர்கள் காதல் செய்வதில்லை. பிராதன காரணம் எழிலோடு நேரம் செலவிடுவதே! மாறனும் நேரம் கிடைக்கும்போதெல்லாம் பார்த்துவிட்டு போவான், கைபேசியில் அழைத்தும் நலம் விசாரிப்பான்.

        அகரன், அபினவ், வருணா வர்ஷிகா அனைவரும் ஆ காட்ட, திவ்யாவின்  கையில் இருந்த இட்லி தட்டு காலி ஆனது.

        மடி சாய்த்து தோள் தந்து வேண்டாம் வேண்டாம் ஓரிரு  நம்பிக்கை சொல், சிநேக புன்னகை தரும் உறவுகளின் அன்புக்கு ஆறாத வலியையும் ஆற்றிவிடும் வல்லமை உள்ளதே! அவ்வகையில் எழிலழகி பேரு பெற்றவள் தான்.

      தலையில் கட்டு, வலது கையிலும் மாவு கட்டு காலில் சிறிதாக ஒரு கட்டு அங்கங்கு சிராய்ப்புகள் வேறு. மருத்துவமனையில் ஒரு வாரம் தங்கிவிட்டு, வீடு சேர்ந்து இரண்டு வாரங்கள் ஓடி போனது. அடுத்த வாரத்தில் கட்டுகளை பிரித்துவிடலாம் என மருத்துவர் கூறவே, அனைவரும் நிம்மதி கொண்டனர். உடல்காயம் ஒருபுறம், மனதின் அலைப்புறுதல் மறுபுறமென  அவள் அமைதியாகிவிட, குடும்பத்தாருக்காக பழைய எழிலாக மாற நினைத்து அதில் வெற்றியும் கண்டாள்.

     தயாளன் மாத்திரை எடுத்து தர, அதை விழுங்கியவள் நிமிர்ந்து தந்தையை பார்க்க "எல்லாம் சரியாகிடும் தங்கம் படுத்து ரெஸ்ட் எடு" என அவர் சென்று விட,

      திவ்யா எழிலின் தலை வாரி, உடை மாற்றி, முகம் கழுவி பொட்டிட்டு குழந்தைக்கு செய்வது போல செய்ய, "அம்மா உங்களுக்கு சிரமம் தரேனா?  மூணு வாரமா நீங்களும் நர்சரி பக்கமே போகல" என்றாள் வருத்தமாக.

      திவ்யா "என்னடி பேச்சிது? உனக்கு செய்யாம யாருக்கு செய்ய போறோம். நீதான் வளந்துட்ட மத்தபடி எங்களுக்கு நீ குழந்தை தான். ஏதோ போதாத நேரம் சீக்கிரம் நடக்க ஆரம்பிச்சிடுவடா. எந்த நேரத்துல அந்த கதிரு மாப்பிள்ளைனு வீட்டுக்குள்ள வந்தானோ அப்பவே நிம்மதி போய்டுச்சு"

         எழிலுக்கு தான் இதை கேட்டு  உள்ளத்து உறுத்தல் அதிகமானது. தப்பு செய்யாமல் அவன் வாங்கும் வசவு சொல் இவளை தண்டித்தது.

       அன்று போன கதிர்தான், எழிலை காண ஆசையிருந்தும் எம்முகத்தை வைத்து எழில் வீட்டிற்கு போவது  என அவன் அம்முயற்சியில் இறங்கவில்லை. இருந்தாலும் மாறனிடம் எழிலின் நலம் விசாரிக்க தவற மாட்டான். மாறனிற்கே ஆச்சரியம் கதிரின் காதல் கண்டு. அதை அவனிடமே கேட்டு வைத்தாலும், பதிலுக்கு பதில் கசந்த சிரிப்பை உதிர்க்க, மாறனுக்கு ஆயாசமாகும்.

           காதல் ஒன்றும் காய்கறி வியாபாரம் இல்லையே? சந்தையில் விலை ஏறி குறைய. காதல் சிப்பியில் வளரும் முத்து போல. மூடி திறக்கும் எல்லா சிற்பிக்குள்ளும் மழைத்துளி நுழைவதில்லை! அந்நேரம்
காத்திருந்து முத்து பெரும் சிப்பியின் பொறுமை என்றும் வீழ்வதில்லையே!
மழை வரம் தரும் நாள் என்றோ!
சிப்பியும் உயிர் பெரும் நாள் அன்றே!
காதலின் ஆயுள், காதலர்களின்  கையில்!

       மருத்துவமனையிலே மாறன் கதிர் சிகிச்சைக்கு சேர்த்தது முதல் ரத்தம் கொடுத்து, தயாளனிடம் திட்டு வாங்கி போனது வரை எழிலிடம் கூறியிருந்தான். அதை கேட்டு,  தான் தன்னலத்திற்காக பத்தாம் பசலித்தனமாக நடந்ததை நினைத்து வெட்கினாள். தன் தவறை புரிந்தவள், அதன் ஆழத்தை உணர்ந்தாள்.

       மனிதனாய் பிறந்த ஒவ்வொருவரும் உயிருக்கு நிகராய் போற்றப்படுவது மரியாதை. பொது முன்னிலையில் தாம் உருவாக்கி வைத்திருக்கும் நல்ல திரையில் கரும்புள்ளி  விழுந்தால், எல்லோரின் பார்வை வட்டமடிப்பது அக்கரும்புள்ளியைத்தானே! அதை அகற்றி தன்னிலை அடைவது கடினம். அங்கு உடைவது நம்பிக்கை அல்லவா!

அதிலும் எழில் செய்த காரியம் என்ன? அதனால் கதிர் பெற்ற வெகுமதி என்ன? இவளது பெற்றோர்கள் மத்தியில் அவன் வாங்கும் ஏச்சுகள் நெருஞ்சி முள்ளாய் குத்தியது. உயிர் காத்த அவனுக்கு இவள் அளித்த மதிப்பு என்ன? தன் சொந்த விருப்பு வெறுப்புக்காக ஒருவரது ஒழுக்கத்தினை குறி வைப்பது தவறன்றோ! அதை நினைக்க நினைக்க மனம் பாரமானது.

      இவற்றை விட, அன்று நடந்ததற்கு காரண கர்த்தா தான் என தெரிய வந்தால் என்ன ஆகும்? பெற்றவர்களின் நம்பிக்கையை பொய்யாகியது போலல்லவா இருக்கும்! எப்படி தாங்குவர்? முதல் முறை பயம் கண்ணை இருட்டியது.

      கதிர் திட்டு வாங்குவது ஒருமுனை வேதனை அளித்தால், தவறு அவன் மீது அல்ல என்பதை எவ்வாறு கூறுவாள்? ஆகமொத்தம் பெரும்பாலும் எழிலின்  நேரங்களை, கதிரின் சிந்தனைகளே ஆக்ரமித்திருந்தது.

      'இதுக்கு ஒரு முடிவு கட்டணும்டா சாமி' என தோழி நிஷாவிற்கு போன் போட்டாள். பரஸ்பர விசாரிப்புகள் முடிந்து,

      எழில் "என்னால முடியல நிஷா? கதிர் விஷயம் மண்டைக்குள்ள சுத்திட்டே இருக்கு. தப்பு பண்ணிட்டேன்னு உள்ள அடிச்சிக்கிது"

          நிஷா "ஏன்டி அவர லவ் பண்றியா?"

          எழில் "ச்சே ச்சே லவ்வா அதும் நானா நெவெர்! என் தேவைக்காக  இன்னொருத்தர் வாழ்க்கையில விளையாடிட்டோமேன்னு வருத்தம் அவ்ளோதான்"

         "இந்த மாதிரி ஒருத்தர லவ் பண்ணாலும் தப்பில்லடி. எவ்ளோ கேரிங். அவர் உன்னைய உண்மையா லவ் பண்றார் எழில். இல்லனா நீ இவ்வளவு பண்ணத்துக்கு அப்புறமும் ஹாஸ்பிடல்ல உனக்கு ஏன் உதவி  பண்ணனும்?  என்னை கேட்டா நீ ஓகே சொல்லிருக்கலாம் இவருக்கு. மேரேஜ் லைப்ல ஒரு பார்ட். ஒரு நாள் அத எல்லாருமே எதிர்கொண்டே  ஆகணும். எப்போ பண்ணிக்கலாம்னு நம்ம தீர்மானிக்கலாம் அதில்  தப்பில்ல. அதுக்காக நல்ல மாப்பிள்ளை கிடைச்ச விடக்கூடாது எழில்" என நிஷா  அன்று பேச பேச கோபம்தான் வந்தது.

'தான் எதை கேட்டால்? இவள் என்ன சொல்கிறாள்?' என இருந்தது. அதைவிட  கதிரை பற்றி யாராவது புகழ்ந்தால் எரிச்சல் வருகிறது.

      "அவன்லாம் ஒரு ஆளு அஞ்சுரூபா தாளு. அடேய் நெட்டகொக்கு என் மனசுக்குள்ளையா வர பாக்குற எப்படி வர நானும் பாக்குறேன்டா" சவால் எடுத்தாள். காதலுக்கு அணை கட்டுவது, காற்றாற்று வெள்ளத்திற்கு தடுப்பு போட்ட கதைதான்.

        தவறுக்கு மன்னிப்பு கேட்பதை விட, தவறை சரி செய்ய வேண்டும் என எண்ணி, அவனுக்கு தான் மாட்டிய மூகமுடியை  தன் கையாலே எடுப்பது என முடிவெடுத்தாள். அந்த நாளுக்காக நாட்களை எண்ணி கொண்டிருக்கிறாள்.

     "அக்காகாக்கா.... எவ்ளோ நேரம் கத்துறோம் என்ன நெனப்புல இருக்க நீ?" என எழிலின் காதுக்குள் கத்தினர் அவளது உடன்பிறப்புகள்.

      எழில் "அடேய் பொடி பயலே! மாட்டுனியா... என்ன சொன்ன என்ன சொன்ன சின்ன கட்டா என் கை கால்ல இருக்கிறது சின்ன கட்டா உனக்கு. வலிக்கிறது எனக்குதான்டா தெரியும்" என அகரனின் காது  மடல் பிடித்து திருக

       "அடியேய் விடுடீ ராட்சசி...காது கையோட வந்துர போகுது  ஆஆஆஆ வலிக்கிது..." என அவன் கத்த

       "ஹான் வலிக்கட்டும் நல்லா  வலிக்கட்டும் வலிக்கத்தானே திருகினேன்" என்ற எழில் அபினவ் தலையில் கொட்டினாள்.

    "என்ன ஏன்க்கா கொட்டுற?" அவன் பாவமாய் விழிக்க, எழில் "ஹ்ம் உனக்கென்ன என்ன அவன் கிண்டல் பண்ணதும்  அப்படி ஒரு சிரிப்பு அதான் கொட்டுனேன்" என்றாள்.

       வர்ஷிகா முகத்தை ஆராய, சோகத்தின் சாயல் தெரிந்தது. "என்ன உன் லவ்வர கொட்டினதும் உனக்கு வலிக்கிதோ?" என எழில் கேட்க "இல்ல பேபி  காலேஜ்ல பேசிப்போமே தவிர இங்க வரது  உன்னை பாக்கத்தான்  பேபி" என்றாள் வர்ஷிகா .

     எழில் "ஹேய் வர்ஷு நா சும்மா விளையாடினேன். அவன அடிச்சதும் உன் ரியாக்ட் பாத்தேன் அவ்ளோதான். சரி சரி என்ன செஸ் போர்டு! இதே விளையாடி போர் அடிக்கிது பல்லாங்குழி, தாயம் கொண்டு வாங்க. ஒரு கை வச்சி மேனேஜ் பண்ணிக்கிறேன்"

       "அக்கா கொஞ்சமாது மூளைய பயன்படுத்தி விளையாடுக்கா" என்றாள்  வெள்ளை காயை அடுக்கிக்கொண்டிருந்த வருணா.

     எழில் பதிலுக்கு  "ஆமா உன் மூளைய நீ  பயன்படுத்து நா என் மூளையை பையாலஜி லேப்ல வைக்கிறேன்  போவியா"

       தனிமையில் நாடாமல் காக்க வந்த கடவுள் அளித்த பரிசுகளே, உடன்பிறப்புகள்.

      *******************

    பிரியங்கா கோபத்தின் உச்சியில் இருந்தாள்.

மூன்று வாரத்திற்கு முன் மொட்டைமாடியில் கதிரிடம்
"நீங்க மட்டும் என்ன கட்டிக்கலைனா என்ன செய்வேன்னு எனக்கே தெரியாது" என கூறிடவும்..

      அவனோ "எப்படி எழிலோட ஸ்கூட்டி பிரேக் ஒயர கட் பண்ணியே அது போலவா?" என்று அசராமல் கேட்டான். அவனது குரலில் அத்தனை கடுமை.

     பிரியங்கா வெடவெடத்து போனாள். "மாமா மா...மா" என அவள் பேச முடியாமல் திணற 'ஒன்னும் சொல்லவேண்டாம்' என கையமர்த்தியவன்.

      கதிர் "ஒன்னும் சொல்லாத. எனக்கு உன்மேல அந்த அபிப்ராயம் கொஞ்சங்கூட இல்ல. வாழ்க்கைல சேருகிறோமோ இல்லையோ.. என்ன ஆனாலும் என் மனசுல எழில் மட்டும் தான். அத உன்னால மட்டும் இல்ல வேற யாராலயும் மாத்த முடியாது. தயவு செய்து இங்கேயிருந்து உங்க வீட்டுக்கே கிளம்பு. அங்க போயி நல்ல காலேஜ்ல ஜாயின் பண்ணிக்கோ. இங்க இருந்துகிட்டு வேற என்ன செய்யலாம்னு யோசிக்காத. உன் பேரும் காலேஜ் பேரும் கெட கூடாதுங்குற ஒரே காரணம் தான் போலீஸ்கிட்ட நா போகல. இல்லனா உன்ன அர்ரெஸ்ட் பண்ண ஒரு நிமிஷம் ஆகாது" என்றான் கடுமையாக எச்சரிக்கும் விதத்தில்.

        அவன் சொல்வதை பொறுமையாக கேட்டவள், "உன்னால முடிஞ்சத பாத்துக்கோ மாமா  நா இங்கதான் இருப்பேன்" என கூறிவிட்டு போக, கதிருக்கு ஆவேசம் வந்தது.

       நேராக பிரியங்கா தந்தையிடம் சென்றவன், நடந்த அனைத்தையும் ஒன்றுவிடாமல் கூறினான்.

"என் பொண்ணு இந்தளவுக்கு செய்வான்னு நான் நெனச்சு கூட பார்க்கல மாப்பிள்ள. இனியும் அவ இங்க இருக்கக்கூடாது" என்றார் வருத்தும் கோபமும் கலந்த குரலில்.

எந்த தந்தை தான் விரும்புவார் மகள் இப்படி செய்தால்.

    பிரியங்காவை தன்னுடன் அழைத்து வந்து கண்டித்து  அருகிலிருக்கும் கல்லூரியில் சேர்த்துவிட்டார்.

         அவளுக்கும் காதல் தான். சிறுவயது முதல் சொல்லி சொல்லி வளர்த்தே, பெற்றோரின் ஆசையில் இவளுக்கும் காதல் முளைத்துவிட்டது. இல்லை என அறிந்து ஏற்று கொள்ள அவள் வயது இடமளிக்க வில்லை. சட்டென விட்டுத்தரவும் அவள் பிடிவாத குணம் வாய்ப்பு தரவில்லை.

இதற்கு தான் படைக்கும் இறைவனுக்கு தெரியுமல்லவா யாருடன் நம் வாழ்க்கை முடிச்சை போடவேண்டுமென்று... இடையில் மனிதர்கள் நாம் எதுவும் அறியாமல்...அறியாமையில் சிக்கி... சொந்தம் ... முறை... என்று குழந்தைகளின் முன் சிறுவயதிலிருந்தே பேச பேச அவர்களின் மனதில் தேவையில்லாத எண்ணங்கள் முளைத்து விபரீதத்தில் முடிந்துவிடுகின்றன சில நேரங்களில்... பெற்றோர்களான பெரியவர்கள் இவ்வகை பேச்சை குழந்தைகளின் மனதில் பதியவைக்காமல் இருந்தால் நலம்...

            இவள் தீவிரமாக  காதலிக்க, அவனோ தீர்க்கமாக காதலிக்க, எந்த காதல் வெற்றி பெறுமோ? அல்ல மீண்டுமொரு யுத்தக்களம் உருவாக்குமா? ஏனெனில்  காதலிற்கும் யுத்தத்திற்கும் தெய்வ கால பந்தம் உள்ளதே!

***********

   Watpad id: Maayaadhi

   Pratilipi id: Aarthi Murugesan "மாயாதி"

***********

Bạn đang đọc truyện trên: Truyen2U.Pro