7.காவியா செங்கொடி

Màu nền
Font chữ
Font size
Chiều cao dòng

பல வண்ணங்களை தனக்குள் கலந்து காட்சிபடுத்தும் ஓவியங்களின் ஒப்பனையை நிறைக்க கண்கள் கடும் பிரயத்தனம் செய்யுமாம்!

இளங்கதிரின் விழிகளும் அதை தான் செய்தன. மாலை வெயிலில் முத்துக்களாய் பூத்திருந்த வியர்வைத்துளிகளும் அந்நீர் குமிழியில் தோன்றிய ஒளி சிதறல்களும் கலைந்த மைத்தீட்டலும், அடடடடா!!!

ஸ்கூட்டியில் அமர்ந்து திரும்பி இவனை நோக்கிய எழிலழகியின் எழிலோவியத்தைக் கண்டு 'செம்ம !!! 'என்றது இளங்கதிரின் மனம்.

இதுவரை அவளின் துடிப்பான பேச்சில் ஈர்க்கப்பட்டவன் இப்போது அவளது அழகிலும் சிறிது ஈர்க்கப்பட்டிருந்தான்.

'ப்ச் இந்த வாயாடி நமக்கு பார்த்த பொண்ணா? இவள கட்டிக்கிட்டு தினம் தினம் வீட்டுல டபுள் யூ டபுள் யூ இ தான் போலயே. ஆனா க்யூட்டா தான் இருக்கா?' என்றவனின் நினைவுகள் ரிவைன்ட் செய்து மதிய நேரம் தனக்கு பார்த்திருக்கும் பெண் என அவனின் அம்மா அனுப்பிய எழிலழகியின் புகைப்படத்தை காட்சிபடுத்தியது.

அதில் மை ஊதா நிற ஜரிகை புடவையில் அழகாய் சிரித்துக் கொண்டிருந்தாள் எழிலழகி.

' ம்கூம்... அத விட இப்ப தான் செம்மயா இருக்கா ' ஒப்பீடும் நடத்தி ரிசல்ட்டும் அறிவித்துக் கொண்டான். மனதளவில் மட்டுமே!

நொடி நேரத்தில் நடந்துமுடிந்தன அவனின் எண்ண கணக்கீடுகள். கணினியை காட்டிலும் பத்து மடங்கு சக்தி வாய்ந்த மனித மூளையில்.

ஏற்கனவே சோர்வில் இருந்தவள் இவன் அழைத்துவிட்டு அமைதியாய் நின்றதைக்கண்டு எரிச்சலடைந்தாள்.

" இந்தாய்யா நெட்டக்கொக்கு . என்னைய நிறுத்திட்டு நீ கனவு கண்டுட்டு இருக்க..? மனசுல பெரிய கலாம் பேரன்னு நினைப்பு.. மொதல்ல நகரு. எனக்கு வேலை இருக்கு. நீ பொறுமையா நின்னு கனவு காணு" என்றவள் அதட்ட,

நிகழ்காலம் வந்தவன் "அடடே!!! டாபி என்ன பசிவெறில இருக்கியோ?" என்க

" என்னது டாபியா ?" என்று முழித்தவளை பார்த்தவன் வண்டியின் ஹெட்லைட்டில் கையூண்றிக் கொண்டு

" அதாவது டாபி!!! இந்த டாபர் மேன் இல்ல டாபர் மேன். அது என் ஃப்ரண்ட் வீட்டுல இருக்கு. அது எப்பப்பார்த்தாலும் என்னையவே பார்த்துக் கொலைக்கிது. அப்புடியே உன்ன மாதிரி. அதான் செல்லமா உன்ன டாபின்னு கூப்பிட்டேன்" என்றான்.

சோர்ந்திருந்தவள் இருந்த மீத சக்திகளையும் ஒன்று திரட்டி, " அடிங்க!, யாரப்பார்த்து டா நாயிங்குற" என்று எகிற

அவளை எரிச்சல் படுத்திய சந்தோசத்தில், "இந்தா இப்புடி கொலச்சா நாயிங்காம என்ன செய்வாங்க. வௌ!!! வௌ!!! " என்று மேலும் சீண்டினான்.

" அடேய் நெட்டக்கொக்கு! மறுபடி மறுபடியும் நாயிங்குற. நீ நாயி உன் குடும்பம் நாயி. உன் வம்சமே நாய் வம்சம்டா நாய்ப்பயலே " என்று முந்தியை எடுத்து இடுப்பில் சொருகி மல்யுத்தம் நடத்த தயாராகினாள்.

' ஆத்தாடி சும்மா இருந்தவளை சொறிந்துவிட்டோமே! இவ்வளவு கேவலமா பேசுறா. இவள மட்டும் நாயின்னு சொன்னா என் வம்சத்தையே நாய் வம்சம் ஆக்கிட்டாலேப்பா. மானம் போறதுக்குள்ள நிறுத்துடா கதிரு. உனக்கு காரியம் தான் முக்கியம் ' நினைத்துக் கொண்டவன்.

" அ.. ஆ.. சாரி சாரி எழில்! காம் டௌன் காம் டௌன் . சும்மா விளையாட்டுக்காக சொன்னேன். உன் கூட நான் விளையாடாம வேற யாரு விளையாடுவா? " என்றவனை

' இப்போ உனக்கு என்ன வேணும்? ' என்பதாகப் பார்த்தாள்.

" எனக்கு ஒரு ஹெல்ப் பண்ணனும் எழில் " என்றான் பவ்வியமாக.

" உனக்கு ஹெல்ப் பண்ண தான் எங்க வீட்டில என்னைய பெத்துவிட்டாங்க பாரு! நகரு டா. எனக்கு வேல இருக்கு வீட்டுக்கு போகனும் " என்றாள்.

" என்ன வேல? நேரா போய் சாப்புட்டு தூங்குவ அதானே " என்றவனை கண்டு முழித்தவள்.

' கண்டு புடிச்சுட்டானே ' என நினைத்துக் கொண்டு வெளியில் கெத்தாக, " என் வீடு என் சாப்பாடு என் நேரம் நான் என்ன வேலைனாலும் செய்வேன். சார் மட்டும் தினமும் பண்ணைக்கு போய் யானைக்கு சாணியா அள்ளுவிங்க" என்றவளை கண்டு மானசீகமாக தலையில் அடித்துக் கொண்டவன்
எழுந்த கோவத்தை கட்டுப்படுத்திக் கொண்டு

"ரொம்ப பேசுறடி... சரி அதவிடு. அபினவ் கிட்ட அவங்க லவ் பண்றாங்கன்னு வீட்டில் சொல்லிடுவேன்னு சொன்னியாமே " என்றவனை கேள்வியாய் பார்த்தவள்.

" ஆமா சொன்னேன் அதுக்கு என்ன இப்போ? " என்றாள் எகத்தாளமாய்.

" ஹான் அதான் டாபி ச்ச... எழில் எனக்கு ஒரு உதவி பண்ணு. இந்த அபினவ் இல்ல அபினவ்.. அவன் என் மாமா பையன். எனக்கும் அவனுக்கும் சின்ன வயசிலிருந்தே செட் ஆகாது. நீ என்ன பண்ணுற, எவ்வளோ முடியுமோ அவ்வளோ சீக்கிரம் அவன் வீட்டில் சொல்லிடு. நானே சொல்லலாம் ஆனா, நான் தான் சொன்னேன்னு தெரிஞ்சா வீட்ல சண்ட போடுவான். அவன் அடிவாங்குறத பார்த்து நான் சந்தோசப்படனும் எழில். என்ன எனக்காக செய்வ தானே" என்றான் நல்லபிள்ளையாய்.

' அட இது தான் மேட்டரா? யூ ? ஹாப்பி ? அதுவும் என்னால? ஹாஹா நெவர் ' தனது எண்ணவோட்டத்தை அப்படியே அவனிடம் சொன்னாள்.

" என்ன நெட்டக்கொக்கு! என்ன தைரியம் இருந்தா நான் உனக்கு ஹெல்ப் பண்ணனும்னு என்னட்டே வந்து கேட்ப்ப? ஒரு நிமிசம் முன்னாடி வரையும் சொல்றத பத்தி ஐடியா இருந்துச்சு. ஆனா, இப்போ இல்ல. நீ சந்தோசப்படுவன்னா நான் சொல்லவே மாட்டேன் " என்றாள் அழுத்தம் திருத்தமாக.

' ஹான் ஃபார்ம்க்கு வந்துட்டா ' என்றவன் "ஏய் என்ன நமக்கு ஒரு உதவி வேணுமேன்னு பொறுமையா கேட்டா ஓவரா பேசுற. இந்தா பாரு டாபி வேணும்னா நாலு பிஸ்கட் பாக்கெட் வாங்கி தரேன். சொல்றத செய். போனதும் அபினவ் அப்பாக்கிட்ட விசயத்த சொல்ற" என்றவனை வண்டியின் முன் சக்கரத்தில் இடித்தவள்

" இப்ப சொல்றேன் கேட்டுக்கோ என்னால அத பத்தி வீட்டில் சொல்ல முடியாது. ஒரு வேல நீயே சொன்னினாலும் நான் உனக்கு எதிரா சாட்சி சொல்லுவேன். உன்னால ஆனதப்பார்த்துக்கோடா பீலாங்கரடி தலையா. நாய்னா சொல்ற? நாய் என்னபண்ணும்னு உனக்கு காட்டல நான் எழிலழகி இல்லடா " என்று தன் வண்டியை கிளப்பியவள்

" வரேன்டா நாய்சேகரு " என்றுவிட்டு தான் இடித்த இடத்தில் தேய்த்து கொண்டு நிற்கும் இளங்கதிரை சைட் மிரரில் பார்த்து சிரித்தவாறு வீட்டை நோக்கி பறந்துவிட்டாள் .

அவளை சொல்லவிடக்கூடாது என்று நினைத்ததை சாதித்துவிட்ட சந்தோசத்திலும் சற்று நேரம் அவளிடம் விளையாடிய ஆனந்தத்திலும் உற்சாகமானவன் பின் தலையை கோதிக்கொண்டு , செல்பவளை கண்டு " க்ரேசி!!! " என்று முணுமுணுத்துக் கொண்டான் உறைந்த புன்னகையுடன்.

--------------------------------.

" வந்துட்டா வந்துட்டா. ஸ்ஸு!! ஓடிப்போய் அவங்க அவங்க ப்ளேஸ்ல செட்டில் ஆகுங்க" கத்திக்கொண்டே வீட்டிற்குள் சென்றவள் வருணா தான்.

எழிலழகி வண்டியை நிறுத்தி விட்டு உள்ளே வர, தயாளன் திவ்யா வருணா மூவரும் ஆளுக்கு ஒரு புறம் அமர்ந்திருந்தனர். அகரன் இன்னும் வந்திருக்கவில்லை.

அவர்களின் சூழ்நிலை கண்டு ஏதோ சரியில்லை என ஊகித்துக் கொண்டவள் தயாளனிடம், " அப்பா என்ன ஆச்சு ஏன் எல்லாரும் கப்பல் கவுந்த மாதிரி இருக்கிங்க?" என்க

அவர் மூக்குக்கண்ணாடியை ஒரு முறை சரிசெய்து கொண்டு, " என்னன்னு உன் அம்மாட்ட கேளுடா . காலையில நீங்க கிளம்புனதில இருந்து இப்புடித்தான் இருக்கா. ஒரே அழுகை. சாப்பிடவேயில்ல" என்று அவர் வருத்தமான குரலில் கூறினார்.

தன் அன்னையின் அருகில் சென்றவள் " அடடே!!! இந்த ஆல் இந்தியா ரேடியோ திவ்யாக்கு என்னாச்சு?. இன்னிக்கு ஒரே இறைச்சலாமே " அவர் அருகில் அமர்ந்ததும் தான் தாமதம் எங்கிருந்துதான் அடக்கி வைத்திருந்தாரோ அவ்வளவு கண்ணீரையும் மள மள வென பொழிந்துவிட்டார்.

அவர் அழுவதை கண்டு பதறிவிட்டாள் எழில் . வருணாவிற்கும் தயாளனிற்குமே சற்று பதட்டம் தான்.

தாயின் கண்ணீரை துடைத்துவிட்டவள் "அய்யோ அம்மா என்னம்மா இது சின்ன புள்ள மாதிரி. என்னாச்சும்மா ஏன் அழற. யாருவது எதுவும் சொன்னாங்களா? அப்பா எதுவும் திட்டுனாறா? வாய்பில்லையே நீங்க தான் பக் பக் பக் ஏ மாடப்புறான்னு பாட்டு பாடிட்டு சுத்துற ஜோடியாச்சே. அப்புடியே சொன்னாலும் நீதானே திட்டுவ ??" என்ற மகளை கண்ணீருடனே முறைத்தவர் அவள் கையைத்தட்டி விட்டு.

" ஆமா இந்த வீட்டுல நான் தான் கொடுமைக்காரி. என் பேச்சை யாரு கேட்கிறா. பேருக்கு தான் அம்மான்னு இருக்கேன். யாரும் மதிக்கிறதில்ல. பெருசா அழுகுறத கேட்க வந்துட்டாங்க எல்லாரும். இந்த எதிர்வீட்ல இருக்கா அந்த பொண்ணு. பிரசவத்துக்கு அம்மா வீட்டுக்கு வந்திருக்கா. அவ அம்மாகாரி என்னவிட இரண்டு மூனு வயசு சின்னவ இந்தா பாட்டியாக போறா. நானும் தான் இருக்கேன் வீட்டில ஒரு விசேசத்தை வச்சு பார்க்க முடியாம " என்றவர் நைட்டிக்கு மேல் போட்டிருந்த தூவாளையில் மூக்கை உறிஞ்ச, எழிலழகிக்கு புரிந்துவிட்டது அவர் எங்கே எதற்கு சுற்றுகிறார் என்று.

அவளை சம்மதிக்க வைக்க தான் திட்டம் போட்டனர். ஆனால், உண்மையில் அவர் மனதில் நிறைந்திருந்தவையை தான் கொட்டிக்கொண்டிருந்தார்.

' இந்த தாய் கிழவி எதெதுக்கு எல்லாம் போட்டி போடுது பாரு ' என நினைத்துக் கொண்டு

" அம்மா நீ ஏன் சீக்கிரம் பாட்டியாகனும்னு நினைக்கிற. இன்னும் கொஞ்ச நாள் அப்பாவோட டூயட் பாடு யங் கப்பிள்ஸாவே இருங்க. உனக்கு விசேசம் நடத்தனும்னு தான் ஆசையா சொல்லு. உனக்கும் அப்பாக்கும் ஐம்பதாம் கல்யாணம் பண்ணுவோம். எல்லாரும் கல்யாணம் பண்றாங்கன்னு நம்மளும் பண்ணக்கூடாதும்மா " என்றாள் அவரை சமாதானம் செய்யும் பொருட்டு.

" அய்யோ என்ன மன்னுச்சுக்கம்மா. நான் போய் உங்களை கல்யாணம் பண்ண சொல்லி கேட்ப்பேனா? எதோ என் போதாத காலம் புலம்பிட்டு இருக்கேன். என்னால அதை மட்டும் தானே செய்ய முடியும். இப்பக்கூட நல்ல வரன் வந்திருக்கு. அமோகமான பொருத்தம். பையன் ராசா கணக்கா இருக்காப்ள. எப்ப பொண்ணு பார்க்க வரட்டும்னு கேட்டுக்கிட்டே கிடக்காங்க.

என்னால என்ன பண்ணமுடியும். நான் சொல்றத யாரு கேட்ப்பா?இந்தா கிறுக்கச்சியாட்டம் உக்காந்து புலம்பத்தான் முடியும். அழகு ராஜாவா இருக்காப்ள அந்த பையன். எவளுக்கு வாச்சிருக்கோ? நமக்கு தான் அந்த கொடுப்பனையில்லையே!

பீபி சுகர்னு கண்ட கண்ட வியாதி. போய்ச்சேரதுக்குள்ள ஒரு பேரனையோ பேத்தியையோ கொஞ்சிட்டா நிம்மதியா கண்ணமூடலாம். எங்க அது தான் நடக்காது போலயே. இன்னும் இரண்டு வருசமோ மூனு வருசமோ ஒரு நல்லதை காணம போயி சேருறேன். ஆனா நீ கவலப்படவேணாம் எழிலு. உன் வாழ்க்கை உன் இஷ்டம்.

நான் ஏதோ காலாகாலத்துல பிள்ளைக்கு கல்யாணம் பண்ணிப்பாரக்க முடிலையேன்னு பேசிட்டு இருக்கேன். சரி சரி போ இப்ப தான் வந்த சோர்வா இருப்ப. நான் போய் டீ போட்டு எடுத்துட்டு வரேன். சாப்புட்டு தூங்கு நாளைக்கு வேலைக்கு போகனும்ல " கண்களில் கோபம் வருத்தம் கண்ணீர் எல்லாம் ஒன்று சேர்ந்து வடிய எழிலுக்கும் அழுகை வந்துவிட்டது.

அவர் தோளில் சாய்ந்து கொண்டவள் " அம்மா ஏம்மா இப்புடிலாம் சொல்ற. நீ எனக்கு ரொம்ப நாள் வேணும்மா. இது மாதிரில்லாம் சொல்லி பயமுறுத்தாதம்மா ப்ளீஸ் " என்றவளும் அழுக, அவளின் கண்களை துடைத்து விட்ட திவ்யா

" உன்ன பயமுறுத்த சொல்லல்ல எழில்ம்மா. மனுச நிலைமை எப்படி இருக்கும்னு யாருக்கும் தெரியாது. அதுக்குள்ள உனக்கு ஒரு நல்லத பண்ணி பார்க்கனும்னு எங்களுக்கும் ஆசை இருக்காதா சொல்லு. ப்ளீஸ் டா. எனக்காக சரின்னு சொல்லேன். இப்போ வந்த வரனை விட அம்மாக்கு மனசேயில்லடா. உனக்கு ரொம்ப பொருத்தமா இருப்பாப்ள பையன். அப்பா நல்லா விசாரிச்சுட்டாரு. எந்த பிரச்சினையும் இல்ல. உனக்கு நாங்க கெட்டதை செய்ய நினைப்பமா சொல்லு " என்க

சிறிது நேரம் அவரின் தோளில் இருந்த படியே அமைதிகாத்தவள் " சரிம்மா. நான் கல்யாணம் பண்ணிக்கிறேன் " என்றாள் மெதுவாய்.

அவரோ " ம்க்கூம்... நீ இப்படி தான் சொல்லுவ. அவங்க வந்த பிறகு விரட்டியடிப்ப. உன் சேதி எனக்கு தெரியாதாக்கும் " என்றவரை முறைத்தவள்

" இங்க பாரு திவ்யா நீ கேட்ட நான் சரின்னுட்டேன். ஒழுங்கு மரியாதையா அவங்கள பொண்ணு பார்க்க வரச்சொல்லு. நானும் என் புருசன் கூட டூயட் பாட ரெடியாகிட்டேன். அந்த மாப்பிள்ளைக்கு என்ன பிடிச்சு எனக்கும் சரின்னு தோனிடுச்சுன்னா அவர் தான் உன் மருமகன். நான் சொல்லிட்டேன். அப்பறம் உன் இஷ்டம் " என்றவள் திவ்யாவின் தலையில் ஐஸ் மழையை அள்ளி கொட்டியிருந்தாள்.

உயர்நீதிமன்றமாவது ?உச்சநீதிமன்றமாவது ? தாயின் கண்ணீருக்கு இல்லாத சக்தி வேறெதற்கு இருக்கிறது. ஆனால் அதே கண்ணீரினால் தான் பல பெண்களின் சாதனை கனவுகள் சவப்பெட்டியில் புதைந்தது என்பதும் மறுக்கவியலாத விசயமே!

எழிலழகியை தாடை பற்றி கொஞ்சியவர் " என் செல்லம் நீ போய் ஃப்ரெஸ் ஆகுடா. அம்மா உனக்கு டீ யும் சூடா சமோசாவும் எடுத்துட்டு வரேன் " என்றவளை அனுப்ப, அவரின் மகிழ்ச்சியில் தானும் திருப்தி அடைந்தவள் தன்னறை நோக்கிச் சென்றுவிட்டாள்.

தயாளனிடம் சென்ற திவ்யா " என்னங்க பேசாம இருக்கிங்க. மாப்பிள்ளை வீட்டுக்கு கூப்பிட்டு நாளைக்கு நாள் நல்லா இருக்கு. நல்ல நேரமா பார்த்து வந்து பொண்ணு பார்த்துட்டு போகச்சொல்லுங்க " என்க

தயாளன் " ஏம்மா அவசரப்படுற. அதான் பாப்பா சரின்னு சொல்லிட்டாலே " என்றவரை கையில் அடித்தவர்

" எந்த சாமி கணக்கோ சம்மதிச்சுட்டா. அவ மனசு மாறுறதுக்குள்ள சேதிய முடிக்கப்பார்க்கனும். ப்ச் இப்ப நீங்க பேசுறிங்களா நான் போசவா " என்றவரிடம் தலையசைத்து விட்டு இளங்கதிரின் வீட்டுக்கு அழைத்தார் தயாளன்.

அழைப்பேற்ற கலைவாணன் தயாளனை பேசவிடாது " அட தயாளன் சார் நானே உங்களுக்கு கூப்பிடனும்னு நினைச்சேன். என் பையனுக்கு பொண்ணு போட்டோ காட்டுனோம். அவனுக்கு பொண்ணு புடிச்சிருக்காம் . நேர்ல பார்த்து பேசிட்டு மேற்கொண்டு பேசிக்கலாம்னு சொல்றான் " என்றார் உற்சாகமாய்

" ரொம்ப சந்தோசம் சார். என் பொண்ணும் கல்யாணத்துக்கு ஒத்துக்கிட்டா. நாங்க இன்னும் பையன் போட்டோ காட்டல. நீங்க ஒன்னு பண்ணுங்க நாளைக்கு நாள் நல்லா இருக்காம் வீட்டுல சொல்றாங்க . முடிஞ்சா நாளைக்கே ஒரு எட்டு வந்து பொண்ணை பார்த்துட்டு போங்களேன் " என்றார் தயாளன்.

" கண்டிப்பா சார் ரொம்ப சந்தோசம்
நான் எப்ப நல்ல நேரம்னு பார்த்துட்டு லீவ் போடுற மாதிரி இருந்தா பையன்டையும் ஒரு வார்த்தை கேட்டுட்டு கொஞ்ச நேரத்தில் கூப்பிடுறேன் சார். அப்போ நான் வைக்கவா "என்றவர்கள் பேச்சை முடித்துக் கொள்ள இங்கே திவ்யா தான் ஆகாயத்தில் பறந்து கொண்டிருந்தார். ஏனோ அவருக்கு நிச்சயம் இந்த சம்பந்தம் முடிந்துவிடும் என்று அசைக்கமுடியா நம்பிக்கை இருந்தது.

*******
வாட்பட் ஐ.டி: sengodi

பிரதிலிபி ஐ டி: காவியா செங்கொடி.

*******
உங்களின் பேராதரவோடு... இதோ ஏழாவது பதிவு... படித்துவிட்டு நிச்சயம் உங்களின் கருத்துக்களை பகிர்ந்துவிட்டு செல்லுங்கள்...

Bạn đang đọc truyện trên: Truyen2U.Pro