9. நிருலெட்சுமிகேசன்

Màu nền
Font chữ
Font size
Chiều cao dòng

இருவரும் அன்று கல்லூரி வரவில்லை என்றதும் சோகமான மாறன் "என்ன கொடுமை சரவணா? கேண்டின் போக நான் வச்சிருந்த இரண்டு அடிமைகளும் சொல்லி வச்ச மாதிரி லீவ் போட்டு எஸ்கேப் ஆகிட்டாங்களே?" என்று புலம்பியபடி தானே தனியாக கேண்டினை நோக்கி சென்ரு கொண்டுருந்தவன், அபினவைப் பார்த்ததும் நின்றான். 

அவனோ இன்றும் வர்ஷிகாவுடன் நேரம் செலவழிக்க முடியாதென மனதுள் நொந்து கொண்டான்.

"ஹே, அபி எப்படி இருக்க? இங்க என்ன பண்ணுற?"

"ஹாய் மாறன் சார். நல்லாருக்கேன்." என அபினவ் முழிக்க.

"ஏன் முழிக்கிற? உன் டிபார்ட்மெண்ட் இங்க இல்லையே? அப்புறம் இங்க என்னப் பண்ணுறனு கேட்டேன்.?" என்றான் மிரட்டலாக.

"என் ஃப்ரெண்ட்ஸ் இந்த டிபார்ட்மெண்ட்லயும் இருக்காங்க சார். அதான் அவங்களைப் பார்க்க வந்தேன்." என்றான் சமாளிக்கும் விதமாக.

அதற்குள் அங்கு வந்த வர்ஷிகாவை கண்ணசைவில் அங்கிருந்து போக சொல்லி அவளை அனுப்பி வைத்தான் அபினவ்.

அதனை கண்டும் காணாமல் இருந்த மாறன் “சீக்கிரம் ஃப்ரெண்ட்ஸ பார்த்துட்டு க்ளாஸ்க்குப் போ."

"சரிங்க சார். தாங்க் யூ."
"அட ஆண்டவா! ஊர்ல காலேஜே இல்லாத மாதிரி இங்க தான் படிப்பேனு சேர்ந்தேன்ல.. நட்பு  மண்ணாங்கட்டினு தேவை தான்.” என்று புலம்பியவாறே தன் வகுப்பை நோக்கிச் சென்றான்.

அங்கு கதிரின் வீட்டிலோ,  “சம்மந்திய கூப்பிட்டு நாம வீட்டுக்கு நல்ல படியாக வந்துட்டோம்னு சொல்லிட்டீங்களா?” என்றார் மீனாட்சி.

“இப்போ தான் பேசினேன் மீனா. அவங்களுக்கு ரொம்ப சந்தோஷம். நம்ம கதிர அவங்களுக்கு ரொம்ப பிடிச்சிருக்கு.”  என்றார் கலைவாணன்.

“ரொம்ப நல்ல மாதிரியா இருக்காங்க. நமக்கேத்த மாதிரி. முடிஞ்சளவு சீக்கிரம் கல்யாணத்த வச்சுடலாங்க, தள்ளிப்போட வேண்டாம்.” என்றார் மீனாட்சி.

“சரிம்மா. நாம உடனே ஷ்யாமளா, மாப்பிள்ளை அப்புறம் அவங்க வீட்டிலையும்  பேசிடலாம். வா” என்றார் கலைவாணன்.

“சரிங்க. உடனே பேசிடலாம். இல்லன்னா  அக்காவும் தம்பியும் மொக்கப் போட ஆரம்பிச்சுடுவாங்க” என்று சிரித்தார் மீனாட்சி.

********

எழிலின் வீட்டில்,

"எனக்கு ரொம்ப சந்தோசமா இருக்குங்க, நானே எதிர்பார்க்கலை, எழில் சம்மதிப்பான்னு" என அதீத ஆனந்தத்தில் திவ்யா வயதை மீறி துள்ளிக்குதிக்காத குறையாக கூறினார்.

தயாளனோ சிறு புன்னகையுடன், "மாப்பிள்ளைய பார்க்கும்போது அமைதியா இருந்தாலும், நம்ம எழில நல்லா சமாளிப்பார்ன்னு நினைக்கிறேன்." என்றார்.

“எப்படிங்க சொல்லுறீங்க?” என்றார் திவ்யா.

“திவ்யா! மாப்பிள்ளை யாருன்னே தெரியாம, மாப்பிள்ளையோட ப்ரெண்டுக்கு காஃபி கொடுத்தா நம்ம பொண்ணு. அதில்லாம, மாப்பிள்ளைன்னு மாத்தி பாத்த பையனக்கூட கண்டுக்காம, மாப்பிள்ளை ப்ரெண்டுட்ட எதோ முணுமுணுத்தா. கவனிச்சியா?“ என்றார் தயாளன்.

“நீங்க எப்போ இதலாம் நோட்டீஸ் பண்ணுனீங்க? நான் பதட்டத்துலயே இருந்தேங்க. அதான் கவனிக்கலை.” திவ்யா.

“ஹாஹா.. நீயா அப்படி இல்லை. எழில் உன்னை அந்த மாதிரி வைத்து இருந்தாள்.“ என்றார் தயாளன்.

“அதுவும் சரிதான்.  எல்லாத்தையும் சரியா கவனிச்சிருக்கீங்க. அப்போ அவ கதிர கல்யாணம் பண்ணிக்க சரி சொல்லுவானு நினைச்சீங்களா?” என்றார் திவ்யா

“ஹ்ம்ம்.. கண்டிப்பா எதிர்பார்த்தேன்.  அது இல்லாமல் அவளா சம்மதிச்சும் இருக்க மாட்டா. கதிர் தான் அவளோட சம்மதத்துக்கு பின்னாடி இருப்பார். இன்னும் சொல்லனும்னா அவ நமக்காக தான் சம்மதிச்சு இருக்கா. அவளையே கூப்பிட்டு கேட்டா தான் இன்னும் தெளிவா தெரியும்.” என்றார் தயாளன்.

“எப்ப இருந்து ஜோசியம் பார்க்க ஆரம்பிச்சீங்க? சொல்லவேயில்லை?.” திவ்யா

“அப்போ அப்போ இப்படி மொக்க போட்டு எழிலோட அம்மான்னு ப்ரூவ் பண்ணுற திவிமா..“  என்று சிரித்தார் தயாளன்.

“என்ன நக்கலா? மொக்கப் போடாம சொல்லுங்க? மாப்பிள்ளையோட ப்ரெண்ட மாப்பிள்ளைன்னு நெனச்சவ அப்புறம் மாப்பிள்ளைக்கு எப்படி ஓகே சொன்னா?" என்று கேட்டார் திவ்யா.

“அதான் சொல்லுறேனே.. அவள்ட்ட தான் கேக்கனும்.” என்றார் தயாளன்.

“எனக்கு உடனே தெரிஞ்சுக்கணுமே?” என ஆர்வமிகுதியில் திவ்யா கூற,

"நாங்க சொல்லுவோம்.. ஆனா, கொஞ்சம் அதிகமாவே செலவாகும் பரவாயில்லையா?" எனக் கோரசாக கூறிக் கொண்டே வருணாவும் அகரனும் வந்து சேர்ந்தனர்.

"நீங்க என்ன இங்க பண்ணுறீங்க? அக்கா எங்க? அவ எண்ண பண்ணிட்டு இருக்கா? ஆமா உங்களுக்கு எப்படி அவங்க என்ன பேசுனாங்கனு தெரியும். ஒட்டு கேட்டீங்களா?" எனக் கோவமாக திவ்யா முறைக்க.

“ம்மா.. எவ்வ்வ்ளோ கேள்வி..? அப்பா நீங்க பாவம்பா” அகரன் விளையாடிட.

“இப்பவாவது புரிஞ்சுகிட்டீங்களே..“ தயாளன்.

“நீங்க ரொம்ப நல்லவருப்பா…“ என்றாள் வருணா.

மூவரும் திவ்யாவை கலாய்க்க, "என்ன ஒன்னு கூடிட்டீங்களா? சாப்பாட்டுக்கு என்கிட்ட தான் வரனும். ம்மா பிரியாணி, கோலா.?  உங்களுக்கு பழைய சாதம் கூட இல்ல. இருங்க உங்கள கோலா போட்டுடறேன்.” திவ்யா

“திவிமா சும்மா டா உன்ன நான் போய் கலாய்பனா?” தயாளன்

“ஆமாம்மா நாங்க சும்மா உள்ளுளாய்க்கு பண்ணுனோம்.” அகரன், வருணா.

“அந்தப் பயம் இருக்கனும். இப்போ நான் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லுங்க?” என்றார் திவ்யா.

அகரனும்‌ வருணாவும் அன்று தாங்கள் கேட்டதை ஒன்று விடாமல் கூறிட, திவ்யாவோ தலையில் கை வைத்து விட்டார்.

தயாளனோ, சிரிக்கவே ஆரம்பித்து விட்டார்.

“என்னங்க இரண்டு பேரும் இப்படி இருக்காங்க? சரிபட்டு வருமா?” திவ்யா

“கண்டிப்பா வரும்மா.. கதிர் நல்ல மெச்சூர்ட் பர்சன். எழில் வெளில தான் சேட்ட பட் அவளும் மெச்சூர்ட் தான். சோ எதுவும் தப்பாகாது.  எழிலை சரிக்கட்ட கதிர்னால மட்டும் தான் முடியும்னு இதுல இருந்தே தெரியுது.” தயாளன்

“கொஞ்சம் யோசிங்க மா, ஒரு அம்மாஞ்சிய எழில் அக்காட்ட கோர்த்து விட்டு அவனோட பாவத்தை காலம் பூரா சுமக்கனுமா? நோ” என அந்த காலத்து நாயகிப் போல் வாயில் கை வைத்து வருணா அலறிட.

“கதிர் சார் செம ஸ்ரிக்ட். அவர்ட்ட இவள கோர்த்து விட்டு நான் ஜாலியா என்ஜாய் பண்ணப்போறேன். சோ, மாப்பிள்ளை எங்க கதிர் சார் தான். அதுவும் இல்லாம இரண்டும் ஒன்னத்துக்கு ஒன்னு சலிச்சது இல்ல” என விளம்பர பாணியில் அகரன் கூறினான்.

பெற்றோரோ தங்களை மறந்து சிரித்து மகிழ்ச்சியை பகிர, திருமணப் பெண்ணோ தன் வருங்கால அடிமையை சாரி கணவனை மிக்சி இல்லாமல் அரைத்துக் கொண்டிருந்தாள்.

“டேய் நெட்டக் கொக்கு உனக்கு எவ்ளோ தைரியம் இருந்தா நான் அவ்ளோ சொல்லியும் என்னவே சரின்னு சொல்ல வச்சிருப்பே. சரியான வளந்த மாடு , இம்ச....

நாமளே கேடி.. இந்த வாத்தி நமக்கு மேல கேடியா இருக்கானே..?  இவன சமாளிக்கவே திவ்யா பண்ணுற பிரியாணிய நாலு பிலேட் ஜாஸ்தியா சாப்பிடணும் போல, என்ன இப்படி பொலம்ப விட்டுடானே..” என்று புலம்பிக்கொண்டிருந்தாள்.

இங்கு எழிலோ இவ்வாறு புலம்ப இவளின் புலம்பலுக்கு காரணகர்த்தாவோ தன் மனம் கவர்ந்தவளை வைத்து செய்த குதூகலத்துடன் அக்கா ஷ்யாமளாவிடம் நடந்தவற்றை கூறி சிரித்துக்கொண்டிருந்தான்.

“அடப்பாவி, இனிமே தினமும் வீடலையே கேம் ஷோ லைவ்வா பார்க்கலாம் அப்படிதான?” ஷ்யாமளா.

“யா..யா அப்கோர்ஸ் டெபனட்லி” என்றான் கதிர்.

“ஹாஹா… உன்ன இப்படி பார்க்க ரொம்ப ரொம்ப ஹாப்பியா இருக்குடா… ஆமா நெக்ஸ்ட் என்ன பண்ணலாம் இருக்க? உனக்கு அவள பிடிச்சுருக்குனு கல்யாணத்துக்குள்ள சொல்லுவியா மாட்டியா?” என்றாள் ஷ்யாமளா கிண்டலாய்.

“சொல்லனும் ஷ்யாமு, ஆனா அதையும் தாண்டி அவளா என்னை புரிஞ்சுக்கிட்டா சூப்பரா இருக்கும்ல” என்று புன்னகைத்தான் கதிர்.

“சூப்பரா தான இருக்கும்.  டேய் இனி ரெண்டு பேரும் ஒரே இடத்துலே வேலைப்  பார்க்கப் போறீங்க. ஒரே ரொமான்ஸ், ஜாலி தான்.. ஹ்ம் நீ நடந்து.” என்றாள் ஷ்யாமளா.

“ஜாலி ரொமான்ஸ் நீ பார்த்த? நான் அவளைப் பத்தி எல்லாம் சொல்லியும் நீ இப்படிலாம் கேட்டு என்ன வெறுப்பேத்துர? “என்றான் கதிர்.

“எல்லாம் ஒரு ஜாலிக்கு தான். என் கல்யாணத்தப்போ நீ கொஞ்ச நஞ்சமா பண்ணுன?  இன்னும் நிறைய இருக்கு தம்பி வெய்ட் அன்ட் வாட்ச்.” ஷ்யாமளா.

“எல்லாம் என் நேரம். நீ நடந்து.. பிள்ளைப் பூச்சிலாம் வாலாட்டுதே ஓ மை காட்.” கதிர்.

“ சரி நீ போய் உன் ஆள்கூட கனவுல டூயட் பாடு, அம்மா அப்பா இங்க வீட்டில எல்லார்கிட்டயும் பேசிட்டு இருக்காங்க நான் அங்க கண்டின்யூ பண்ணுறேன். பை.” ஷ்யாமளா.

“பை பை” என்று வைத்தான் கதிர்.

என்னதான் மனதுக்கு பிடித்தவளே துணைவியாக வரும் ஆனந்தம் இருந்தாலும், மாறனிடம்‌ எப்படி இந்த விஷயத்தை கூறுவது என்ற எண்ணமே அதிகமாக கதிரை தொந்தரவு செய்து கொண்டிருக்கிறது. அவனிடம் ‌மறைக்கவும் விரும்பாத கதிர் உடனே மாறனுக்கு அழைத்து கல்லூரி அருகில் இருக்கும் காஃபி ஷாப்பிற்கு உடனே வரக்கூறி விட்டு தானும் அவனை காணச்சென்றான்.

இவ்வளவு நேரமிருந்த இலகுவான மனம் கடினமான உணர்வு தருவதை கதிரால் தடுக்க இயலவில்லை.  தம்பியாக நினைத்தவன் தன்னை தவறாக எண்ணி விடுவானோ? என்ற எண்ணம் மேலோங்கிட தான் அவனை காண உடனே முடிவு செய்து செல்கிறான்.

அங்கு மாறனோ கதிருக்கு முன் வந்து தனக்கு பிடித்தமான ஐட்டங்களை வாங்கி உண்ண ஆரம்பித்து இருந்தான்.

“ஹாய் மாறா, என்ன விட்டுட்டு என்ன சாப்பிடுற?” என்றான் கதிர்.

“ஹாய் கதிர் ப்ரோ. டுடே ஜாலியா லீவ் போட்டுட்டு உடனே என்னை பாக்காம இருக்க முடியாம தானே ஓடோடி வந்தீங்க?” என்று சிரித்தான் மாறன்.

“அடடே, ஆமான்னு சொல்ல ஆசையா தான் இருக்கு பட் எனக்கு பொய் சொல்ல வராதே” என்றான் கதிர்.

“ப்ரோ என்கிட்டயே டபாய்கிறீங்க பார்த்தீங்களா! அன்னைக்கு எழில வெறுப்பேத்தி அபினவ் லவ்வ வீட்டில போட்டுக்குடுக்காம இருக்க நீங்க அள்ளித் தெளிச்ச உண்மைய நான் கேட்டுட்டேனே” மாறன்.

“ஹாஹா.. சும்மா ஒரு சோசியல் சர்வீஸ்காக தான் மாறா.” கதிர்.

“நம்பிட்டேன். நீங்க நடத்துங்க, அதுக்கு முன்ன இப்போ சாப்பிட என்ன வேணும் ஆடர் பண்ணுங்க” மாறன்.

“ஓகே.” கதிர்.

தனக்கு வேண்டியதை ஆடர் செய்து விட்டு மாறனிடம் விஷயத்தை ஆரம்பித்தான் கதிர்.

“மாறா, உன்கிட்ட ஒரு விஷயம் சொல்லணும் பட் நீ என்னை தப்பா எடுத்துக்க வாய்ப்பு அதிகமா இருக்கு பட் அதையும் தாண்டி நீ என்ன அப்படி நினைச்சுடக் கூடாதுன்னும் பேராசையா இருக்கு” என்றான் கதிர் நிதானமாக.

இதை கேட்ட மாறனிற்கே ஆச்சரியம். தான் செய்தது சரியென்றால் சரி தவறென்றால் மற்றவரின் முகம் பார்த்து மன்னிப்பு கேட்கும் குணமே இதுவரை கதிரிடம் கண்டவன் அவன். மாறாக  இப்பொழுது அவன் வருத்தமிகு தயக்கத்தை ஆச்சரியமாக பார்த்து அதற்கான விடையை அவனே கூற ஆரம்பித்தான்.

“நீங்க இப்போ பயப்பட தான செய்யணும், ஏன் வருத்தம் அப்புறம் தயக்கம்? அதுவும் என்கிட்ட?  என்னடா இவ்வளவு நாள் காலேஜ்ல டார்ச்சர் பண்ணுன ராட்சசி இனி வீட்டிலையும் டார்ச்சர் பண்ணுவானு பயப்படறீங்களா? “ என மாறன் சாதாரணமாக கூறிட

அவன் கூறியதை வியப்பாக கேட்டுக் கொண்டிருந்த கதிருக்கு தான் என்னவென்று கூற முடியாத நிலை.

“மாறா, உனக்கு எப்படி தெரியும்? நான் அதைப்பத்தி பேச தான் உன்னை வரச்சொன்னேன்.” கதிர்

“எழில் ஏன் லீவ்னு கேட்க அவளுக்கு ப்பிங் பண்ணினேன் பட் அவட்ட இருந்து நோ ரெஸ்பான்ஸ். சோ அகரனுக்கு கூப்பிட்டேன். அவன் எல்லாம் சொல்லிட்டு உங்க போட்டோவையும் வாட்ஸப் பண்ணினான். “ மாறன்.

“உனக்கு கோவம் வருத்தம் எதுவுமே இல்லையா? எப்படி நார்மலா இருக்க?“ என்றான் கதிர்.

“கண்டிப்பா இல்ல. சந்தோஷமா தான் இருக்கு. என் ப்ரெண்டுக்கு நல்ல லைஃப் அமையப்போறத நெனச்சு. காதல் உணர்வை தாண்டி எழில்கிட்ட நான் நட்புணர்வ தான் அதிகமாக பீல் பண்ணுறேன். இப்போ நீங்க தான் மாப்பிள்ளை. சோ, அந்த நட்பு கடைசி வரை எனக்கு கிடைக்கும் அதனால வருத்தமோ கோபமோ இல்லை." என்றான் மாறன்.

“நன்றி மாறா. என்ன புரிஞ்சுக்கிட்டதுக்கு. சத்தியமா இவ்வளவு தெளிவான பேச்சு எதிர்ப்பாக்கல. இப்போ தான் மனசு அமைதியா இருக்கு.” கதிர்.

“விடுங்க ப்ரோ. இதப்பத்தி இனி பேச வேண்டாம். நமக்குள்ளவே இருக்கட்டும். அன்ட் சீக்கிரம் ஃபேமிலி மேன் ஆகப்போறீங்க. வாழ்த்துக்கள்” மாறன்.

இங்கு மாறனின் கதிருக்கான கடைசி வாழ்த்தை கேட்ட இன்னொரு இதயமோ சதீஷ் இல்லனா நித்தீஷ் என தனக்கான அடுத்த ஹேண்சம் பையனை எங்கே தேடுவது என்ற தேடுதல் வேட்டைக்கு சென்றது.

அதனைக் கண்டு கொண்ட கதிருக்கோ சிரிப்பு தான் வந்தது. பின்னே அது அவன் வகுப்பு மாணவி சந்தனா. வந்த அன்றே அவனை சைட் அடிக்கிறேன்னு பார்த்துட்டே இருந்தப் பொண்ணு இப்போ கல்யாணம் ஆகப்போகுதா அப்போ அங்கிள் லிஸ்ட்னு அசால்ட்டாக அவனைக் கடந்து சென்றாள்.

அவனும் இவற்றை கடந்து வந்தவன் தானே. அதனால் மாறன் சந்தனா இருவரையும் நன்கு புரிந்து கொண்டான். தன்னவள் உட்பட.

***********
வாட்பட் ஐ.டி: Niru_lakshmigesan

பிரதிலிபி ஐ.டி: @நிருலெட்சுமிகேசன்

***********

Bạn đang đọc truyện trên: Truyen2U.Pro