அனிச்சம் பூவே, அழகிய தீவே by @vaanika-nawin

Màu nền
Font chữ
Font size
Chiều cao dòng

அஸ் யூசுவல் லவ் ஸ்டோரி. கண்டதும் காதல், மாமன் மகள், அத்தை பையன், லவ் ப்ரேக் அப், சினிமாத்தனமான திருமணம். இப்படியான கதைக்கும் தம்பி நீ விமர்சனம் எழுத ஆரம்பிச்சிட்டியா? அப்படின்னு கேட்குறது என் காதுல் விழுகின்றது. எப்போதும் எனது விமர்சனங்கள் நல்ல கதைகளுக்கு மட்டுமே வரும். அதாவது நான் நல்ல கதைகள் என திருப்திப்படும் கதைகளுக்கு மட்டுமே நேரம் எடுத்து விமர்சனம் எழுதுவேன். அப்படி இந்த கதையில் என்ன இருக்கு என்று நீங்கள் யோசிப்பது புரியாமல் இல்லை. ஏன் என்றால் ஆரம்பத்திலேயே கதையின் கருவை கூறி ஸ்பாய்லர் அலேர்ட் செய்துவிட்டேன்.
அப்படி இந்த கதையில் என்ன விசேஷம் என நினைப்பவர்களுக்கு....

எழுத்தாளினியின் எழுத்து திறமை. Mind blowing writing அப்படி கூறும் அளவுக்கு எழுத்தாளினியின் எழுத்து திறமைமை இதில் பார்க்க முடிந்தது. அதரப்பழசான ஒரு கதைக்கருவை வைத்துக்கொண்டு மிகவும் கவித்துவமனா எழுத்து நடையில்.... ஆம் கவித்துவமான எழுத்து நடைதான். அதுவும் மிக நேர்த்தியாக.

அப்டேட்டுக்கு அப்டேட் கவிதையாலேயே கதை நகரும் விதம் மிக அருமையாக இருந்தது. சில இடங்களில் வாசிக்கும் போது அப்படியே வாய் பிளந்து ஆச்சரியமாக படித்ததும் உண்டு. அதுவும் மனோரஞ்சிதம் பூவுக்கு இருக்கும் குணத்தை கூறிய போது, இப்படியான தகவல் எல்லாம் நமக்கு தெரியாமல் போய்விட்டதே என்று என் மீதே வெறுப்பும் வந்தது.

வாட்பெட்டில் எழுத்தாளினியின் முதல் கதை என்பதால் ஆரம்பத்தில் புது எழுத்தாளர்களுக்கு உரிய தடுமாற்றம், எழுத்துப்பிழைகள், குறியீட்டு பிழைகள் எல்லாம் இருந்தது ( நீயெல்லாம் எழுத்து பிழை பத்தி பேசுறேன்னு நீங்க கேட்குறது எனக்கு கேட்கல ஹிஹி). ஆனால் அதையும் தாண்டி ஒவ்வொரு அப்டேட்டிலும் கதை என்று எதுவுமே இல்லாவிட்டாலும் அதை எழுதிய விதம், இப்படி ஒரு எழுத்தாற்றலை நான் வாட்பெட்டில் பார்த்ததில்லை. ஏன் என்னுடைய இத்தனை வருட வாசிப்பில் நான் பார்த்ததில்லை. பொன்னியின் செல்வனில் கல்கி ஆங்காங்கு கவிதையாக சிலவற்றை கூறியிருப்பார். ஆனால் அதில் கூட சிலவை குறித்த அத்தியாயத்துக்கு பொருந்தாமல் அதற்கு முந்தைய அல்லது பொதுவான ஒரு கவியாக இருக்கும். ஆனால் ஒரு forum மில் படித்த கதை ஒன்றில் "கண்ணம்மா என் காதலி" கவிதையை எழுத்தாளர் சூப்பராக பாவித்திருப்பார். அதன் பின் கவிதைகளை சூப்பராக பயன்படுத்தியது எழுத்தாளினி அவர்கள்தான்.

இந்த மொத்த கதையையும் அவர் போட்ட கவிதைகளை வைத்தே கூறிவிட முடியும். தனியாக அந்த கவிதைகளை போட்டால் அதுவே ஒரு கதையாக மாறிவிடும்.

அடுத்து ஹீரோயின்.. என்னத்த சொல்ல. நான் சொல்ல வந்தது ஜீவிகாவை அல்ல. ஜென்பர் விங்கட்டை. அய்யய்ய்ய்யோ செம்ம க்யூட். @sengodi எரியா பக்கம் வரக்கூடாது. முதன் முதலாக வாட்பெட் காஸ்டிங்க் போட்டதில் எனக்கு பிடித்த காஸ்டிங்க் இதுதான். அதுவும் ஹீரோயின் மேல ஒரு க்ரஷ்ஷே வந்திடுச்சி. எழுத்தாளினியிடம் கேட்டால் தெரியும். நான் செய்த அளப்பறைகள்.

கடைசியில்.. கதை எப்படி என்று கேட்பவர்களுக்கு... கண்டிப்பாக இந்த கதை காமர்ஷியலா ஹிட்தான். ஆனால் புதிதாக ஏதும் இருக்கின்றதா, அல்லது வித்தியாசமான கதை கருவா என்று கேட்டால் அப்படி எதுவும் இல்லை. ஆனால் வித்தியாசமான எழுத்து நடை. இது போன்ற unique ஆன எழுத்து நடை உள்ள நீங்கள் இது போலவே பல படைப்புக்கள் படைக்க வேண்டும் என்பது என் ஆசை.

இதுல ஒரு முக்கியமான விடயம் என்னவென்றால்.... வாட்பெட்டில் கதை முடிவடைய முன்னரே விமர்சனம் எழுதிவிட்டேன். இதில் இருந்தே புரிந்திருக்கும் கதைக்கரு என்பது எப்போதும் சாதாரனமான ஒன்று. ஆனால் எழுத்து நடை extra ordinary.

" அனிச்சம் பூவே அழகிய தீவே" கண்டிப்பாக வாட்பெட்டின் இன்னுமொரு ஹிட்.

Bạn đang đọc truyện trên: Truyen2U.Pro

#review