"என்னை மறந்தாயோ கண்ணம்மா" by @nivethamagathi

Màu nền
Font chữ
Font size
Chiều cao dòng

Nivethamagathi
டைட்டிலுக்கு ஏற்றது போலவே கதையும் இருந்தது. இதுவே ஆண்பாலில் இருந்தால் தேவா,ராஜிக்கும் ,,பெண்பாலில் இருந்தால் வாசு, பாஹிக்கும் பொருந்தும்,டைட்டில் சூப்பர்.

ஆரம்பத்திலேயே கதை ஒரு தெலுங்கு படம் போன்று இருக்கும் என்று எனக்கு கூறியதால் கொஞ்சம் இதை படிக்க பின்வாங்கினேன். ஆனால் முதல் இருபத்தி ஏழு அத்தியாயங்கள் செம்ம ஸ்பீட். எங்கேயும் ஒரு சிறு தொய்வு கூட இல்லாமல் சிறப்பாக சென்றது.

இருந்த போதும் எல்லோரும் இறந்ததாக நினைத்த ராஜி திரும்ப வந்தது மட்டும் என் மனதுக்கு பெர்சனலாக பிடிக்கவில்லை. மற்றபடி கதை சூப்பர். கடைசி நான்கு அத்தியாயங்கள் மட்டும் கொஞ்சம் ஸ்பீட் குறைந்த ஒரு பீல்.

இந்த கதையில் ப்ளாஷ் பேக் கூறியிருக்கும் விதம் மிகவும் அருமையாக இருக்கும். வித்தியாசமாகவும் ஒரு நேர்த்தியிலும் இருந்தது. குறிப்பாக பாஹி அடம்பிடித்து திருமனம் முடிக்கும் காட்சி எல்லாம் வேற லெவல் ரைட்டிங்க்.

கதையில் பாஹியின் கேரக்டர் ஒன்றுதான் என் மனதை விட்டு எங்குமே நீங்கவில்லை. அவ்வளவு அழகான,ஸ்மார்ட்,ஸ்வீட் வில்லித்தனமான ஹீரோயின். (கொஞ்சம் வயசாயிடிச்சு அவங்களுக்கு இல்லைன்னா நான் வாசுவ போட்டுத்தள்ளிட்டு தூக்கியிருப்பேன். )

காதலின் மொழி சாதனாவிற்கு பின் இந்த பாஹிதான் பெஸ்ட் பீமேல் லீட் உங்களின் கதைகளில்.

இந்த கதைக்கு நான் எதிர்மறை கருத்து ஒன்று தெரிவித்த போது இதன் எழுத்தாளிணி  கூறிய ஒரே விடயம் "எனக்கு குடும்ப உறவுகள் மிகவும் முக்கியம் " என்பது,  எனக்கும் அது சரி என்றே தோன்றியது. அதனாலேயே எனது எதிர்மறை கருத்துக்களை நீக்கிவிட்டேன்.

கண்ணம்மா... ஆரம்பம் மற்றும் இடைவேளை பின் கூட அதிரடியாக சென்று இறுதியில் கொஞ்சம் மிருதுவான மென்மையான காட்சிகளுடன் முடியும் ஒரு காதல் மிகுந்த நாவல். எந்த இடத்திலும் மோசமான காட்சிகளோ, ரொமான்ஸ் சீன் என்ற பெயரில் வல்கர் ஆன சீன்களோ இல்லாமல் சிறந்த நேர்த்தியுடன் எழுதப்பட்ட ஒரு நாவல்.

உங்கள் எழுத்துப்பணி  மேலும் தொடர வாழ்த்துகிறேன்.

Bạn đang đọc truyện trên: Truyen2U.Pro

#review