"சஞ்சனா" By @miru_writes

Màu nền
Font chữ
Font size
Chiều cao dòng

ஒரு சிறந்த எழுத்தாளியினிடம் இருந்து வாசகர்களுக்கு ஒரு பொக்கிசமான நாவல்.கதை கரு என பார்த்தால், மெளனராகம், அலைபாயுதே, ஓகே கண்மனி, ராஜா ராணி இதோட ரிசம்ப்ளன்ஸ் என்று கூறினாலும் கதையை கூறிய விதமும் அதற்கு எழுத்தாளினி பாவித்த சொற்களும் நம்மை மயங்க செய்கின்றது.

கதாபாத்திரங்களுக்குள் சென்று பார்த்தோமேயானால் ,என்னத்த போய் பார்க்கிறது.எங்கும் சஞ்சனா எதிலும் சஞ்சனா. கதை முழுவதுமே சஞ்சனா சஞ்சனா சஞ்சனா.. இந்த கதையை ஜீவிஎம் இடம் கொடுத்தால் இன்னுமொரு "விண்ணைத்தாண்டி வருவாயே "கன்பார்ம் ஆக கிடைக்கும்.

சஞ்சனா பற்றி சிறிது பேசியே ஆகவேண்டும். சஞ்சனா போன்ற ஒரு பெண் ஒரு ஆணுக்கு தோழியாக, சகோதரியாக கிடைத்தால் அவனை விட அதிர்ஷ்டசாலி வேறு யாருமே இல்லை. ஆனால் அவளும் சாதாரண பெண்தான். மனிதனுக்கே உரிய தவறு செய்யும் இயல்பு அவளிடத்திலும்  உண்டு. ஆனால் சஞ்சனா போன்ற ஒருத்தி தங்கையாக அமைந்தால் அந்த அண்ணனின் பாடு அதோ கதிதான். இதுதான் நான் சஞ்சனா பற்றி உருவகப்படுத்தியிருப்பது.

இந்த கதையில் மிகவும் எனக்கு பிடித்த பகுதி இறுதியாக வரும் அந்த ஹாஸ்பிடல் காட்சிகள். அதிரடியாக வந்த சமர்த் எந்த ஒரு அதிரடியும் இல்லாமல் போனது முதல் பாலில் அப்ரிடி ஆட்டமிழந்தது போல இருந்தது. நானும் ஏதோ பூகம்பம் வெடிக்க போகுதுன்னு நினைச்சேன் ஆனா ஸ்வீட் அண்ட் சிம்பிலா அந்த சாப்டர் அப்படியே ஓடிப்போச்சி. மேலும் இந்த கதை முடிந்த விதமும் எபிலோக் போடாததும் இந்த கதைக்கு மிகவும் பெரிய பளஸ் பாயிண்ட் என்பது எனது தனிப்பட்ட நிலைப்பாடு. காரணம்

பல நல்ல கதைகள் மிக நேர்த்தியாகவும் சிறப்பாகவும் இருக்கும். ஆனால் எபிலோக்கில் சொதப்பிவிடும். எழுத்தாளினி  அப்படி சொதப்ப கூடியவர் இல்லை எனினும் இந்த கதையை அப்படியே முடித்தது எனக்கு மிகவும் பிடித்தது..

ஷக்தி குடித்துவிட்டு அவளிடம் பேசியது சாதாரண ஒரு ஆணின் புலம்பல் அப்படித்தான் இருக்கும் என்பதற்கு எடுத்துக்காட்டு.. முடிந்தவரை அடிகளை தாங்கும் அவன் ஒரு கட்டத்தில் தான் வாங்கியதை விட பலமடங்கு எக்ஸ்ட்றா கொடுப்பதுதான் வழமை. இது காலம் பூரா நடக்கும் உண்மை.

எனக்கு இந்த கதையில் மிகவும் பிடித்த காரக்டர் சமர்த், அவனின் தாய் மற்றும் தந்தை.ஏனென்றால் இந்த கதையில் அவர்கள் பாகம் மிகவும் சிறிதே என்றாலும் அவர்களின் பாத்திரம் மிகவும் அழகாக, நேர்த்தியாக லாஜிக் கொஞ்சம் கூட இடிக்காமல் சரியாக பொருந்தியது . சிறிய சிறிய கதாபாத்திரங்களுக்கு கூட அவர்களின் ஸ்பேஸ் சரியாக கொடுக்கப்பட்டது ஒரு ப்ளஸ் பாயின்ட்.

எனக்கு இந்த கதையில் பல எதிர்பார்ப்புகளும் , பல சந்தேகங்களும் வந்த போது எழுத்தாளினி எனக்கு கொடுத்த விளக்கங்கள் மைன்ட் ப்லோவிங்க். கதையில் பல இடங்கள் ரசிக்க கூடிய சிறிய சிறிய டீட்டைல்ஸ் இருந்தது ரசிக்கக்கூடியதாகவும், மனதை இலகு படுத்தக்கூடியதாகவும் இருந்தது என்றால் மிகை ஆகாது.

இந்த கதையின் ஏனைய பாத்திரங்கள பற்றி நான் பேசாமல் இருக்க காரணம் , ஏற்கனவே  அவர்களைப்பற்றி எல்லோரும் அழகாக விமர்சித்திருப்பதால் நான் அதை விமர்சிப்பதில் எதுவும் ஆகிவிட போவதில்லை..

இவ்வளவு நாளும் இது போன்ற ஒரு best working நாவலை படிக்காமல் விட்டதுக்கு மன்னிக்கவும்.

எல்லா எழுத்தாளர்களிடமும் நான் எப்போது கேட்பது வித்தியாசமான கதைகளை முயன்று பார்க்குமாறு. ஆனால் உங்களிடன் வேண்டுவது இதே போன்ற பல காதல் , ரொமான்டிக் கதைகளை உங்கள் பானியிலேயே கொடுக்க வேண்டும் என்று வேண்டியவனாக..

உங்கள் எழுத்துப்பணி மேலும் மேலும் சிறக்க

வாழ்த்தும் நான்.
miru_writes

Bạn đang đọc truyện trên: Truyen2U.Pro

#review