"டைட்டானி கனவுகள்" by @balasundarnovels

Màu nền
Font chữ
Font size
Chiều cao dòng

எத்தனையோ கதைகள் நான் படித்திருக்கின்றேன். ஆனால் இந்த கதை நான் படித்ததிலேயே மிகவும் வித்தியாசமான கதை.ஹாலிவூட்டில் க்ரிஸ்டோர்பர் நோலனின் திரைப்படங்கள் ரொம்பவே வித்தியாசமான கதை கருவை கொண்டிருக்கும். அதிலும் குறிப்பாக "inception, interstellar,tenet" என்பவை எல்லாம் மிகவும் பொறுமையாக கதையை உள்ளீர்த்து நாம் பார்க்க வேண்டும்.இதை இங்கு நான் கூற காரணம் ,

இந்த கதையில் அப்படியான ஒரு பொறுமையை நான் கடைப்பிடித்து என் மனதுக்கு கடிவாளமிட்டு ,கதையை உள்ளீர்த்து படித்தேன். நிஜமாக என்னாலேயே நம்பவில்லை இப்படியும் என்னால் இன்றைய காலகட்டத்தில் பொறுமையாக படிக்க முடியும் என்று.

கதை ப்ரனவ், சுசி இவர்களை சுற்றி நடக்கும் அழகான காதல் கதை.முக்கியமான ஒருவரை மறந்துவிட்டேன் அதுதான் "கனவு". எங்கும் எந்த நேரத்திலும் கனவு.நாயகன் ப்ரனவிற்கு வித்தியாசமான கனவுகள் தொடர்ச்சியாக வருகின்றது. அந்த கனவில் அவனுக்கு ஒரு பெண்ணுடன் காதலும் வந்துவிடுகின்றது. இதுதான் கதை.

கதையில் ப்ரகவிற்கு தான் கனவில் இருக்கின்றோமா அல்லது நிஜத்தில் இருக்கின்றோமா என்ற குழப்பம் இல்லாமல் மிக நேர்த்தியாக சென்றது.அதிலும் படிக்கின்ற நமக்கு கனவா,நிஜமா என்ற குழப்பம் சிறிதும் வரவில்லை. மிகவும் நேர்த்தியாக வருகின்றது.ஆரம்பத்தில் ப்ரனவ் சுசியிடம் தன் காதலை கூறுவது, அதில் இருக்கும் சாதக பாதகங்களை இருவரும் பேசிக்கொள்வது எல்லாம் சூப்பர் டயலாக்ஸ். அதிலும் ஒரு சீனில் நார்த்தங்காய் வைத்து அழிச்சாட்டியம் செய்வதெல்லாம் மிகவும் காமடியாக இருந்தது.

கதை 90% படித்த பிறகும் எனக்கு கதை எங்கே செல்கின்றது என்று புரியவில்லை.கதையின் முடிவு எப்படி இருக்கும் என்பதை கணிக்கவே முடியவில்லை.அதிலும் கடைசி 5% கதை சூப்பர் ட்விஸ்ட். உங்கள் கதைகளில் நான் எதிர்பார்க்காத ஒன்று.

ஆனால் இறுதி பகுதிகளில் சுசி பேசுவதை வைத்துதான் தெரிந்தது அவளும் நிஜ உலகில் கனவில் இருக்கின்றாள் என்பது.கனவாக இருந்தாலும் கனவின் இறுதியில் சுசியும் அவனும் பிரியும் காட்சிகள் என் மனதை ரொம்பவே பாதித்தது.

ஆரம்பத்தில் கனவுதானே என்று ஜாலியாக படிக்க ஆரம்பித்த நான் நிஜத்திலும் ப்ரனவிற்கு ஒரு ஜோடி வரும் என்று எதிர்பார்த்த என்னை எழுத்தாளினி சரியாக நோஸ் கட் செய்து விட்டார்.ஏனென்றால் கதை முழுவது கனவுதானே.

ஆரம்பத்தில் கனவில் வந்த காட்சிகள் இறுதியில் அதே போல நடக்கும் போது நம் இதழ்களில் அழகான ஒரு புன்னகை வரவுவதை நம்மால் தவிர்க்க முடியாது.

இப்படி ஒரு கதை கருவை தேர்வு செய்தமைக்கு எழுத்தாளினிக்கு மிகப்பெரிய aplause. காரணம் இப்படியான கதைகள் ஆங்கிலத்தில் வெளிவந்திருந்தால் சக்கை போடு போட்டிருக்கும். ஏன் இந்த கதையே ஒரு ஹாலிவூட் மூவியாக சில டிங்கரிங்க் வேலைகளுடன் வந்திருக்கலாம். அந்த நேரத்தில் நாம் கொண்டாடி இருக்க வாய்ப்புகள் உண்டு.

கதையின் நெகடிவ்ஸ் அப்படி என்றால்.....

வழமை போல மெதுவால கதை நகருவது.இப்போதெல்லாம் இந்த எழுத்தாளினியின் கதைகள் இப்படித்தான் இருக்கும் என்பது தெரிந்ததால் எனக்கு அதுகூட குறையாக தெரியவில்லை.

இது போன்ற மிகவும் வித்தியாசமான கதைகள் எனக்கு தெரிந்து வாட்பெட்டில் இல்லை அல்லது ஒரு சில கதைகள் உண்டு என்றே கூறுவேன்.

டைட்டானிக் கனவுகள் நம்மை கனவுகளில் காதலிக்க தூண்டும் ஒரு மூழ்காத காதல்.

Bạn đang đọc truyện trên: Truyen2U.Pro

#review