கண்டவுடன் காதல்

Màu nền
Font chữ
Font size
Chiều cao dòng

"வருகிறேன் காத்திரு.." என்று செய்து அனுப்பி விட்டு என் மேசையின் மீது உள்ள படத்தை கண்டேன் என் அன்பு மனைவி சிரித்த முகத்துடன்....
அது தான் அவள் கடைசியாக சிரித்த தருணம் என்று நினைக்கிறேன்.. திருமணம் ஆகி 3 மாதங்கள் ஆகியும் அவளிடம் மட்டும் எறிந்து விழுந்துக் கொண்டே இருந்தேன்.

எங்க திருமணம் வற்புருத்தி நடைபெற்ற திருமணம் அல்லவே. இரு குடும்பத்தின் சம்மதத்தோடு ஒரு மனதுடன் நடைபெற்ற திருமணம் ஆகும் அவள் பொருத்த வரையில்.

ஆனால் எனக்கோ இது காதல் திருமணம் ஆகும்...ஆம்

கண்டவுடன் காதல் என்றும் சொல்லும் நண்பர்களை கேலி செய்யும் நான் அவளை கண்டவுடன் என்னையே நான் மறந்தேன். இழந்தேன். நண்பர்களின் உதவியுடன் அவளின் சுய விபரங்களை அறிந்தேன். என் தலையில் இடி போல் விழுந்தது ஒரு செய்தி. அவள் குடும்பத்தினர் நேற்று தான் ஒரு தொழிலதிபர் மகனுடன் சம்பந்தம் பேசி விட்டு வந்தார்களாம். கூடிய விரைவில் திருமணம் என்றும்.

காதல் வளரும் முன்னே முற்றுப் புள்ளி வந்து விட்டதே என்று யோசிக்கையில் அப்பா நீட்டினார் அவளின் புகப் படத்தை. இவளை தான் நீ திருமணம் செய்து கொள்ளே வேண்டும். அவர்களின் வீட்டாரிடம் பேசி வந்தாச்சு. திருமணம் வேண்டாம், வேறு ஒரு பெண்ணை காதலிக்கிறேன் என்று சொன்னாய் என் சொத்தில் ஒரு பங்கு கிடையாது.

ஆனால் எனக்கோ அப்பாவின் ஒரு பேச்சும் காதில் விழவில்லை, " இவளை தான் நீ திருமணம் செய்து கொள்ளே வேண்டும் என்பதை தவிர". அப்படியே அப்பாவை கட்டி தழுவிக் கொள்ளலாம் என்று இருந்தேன்.அனைத்து சந்தோசத்தையும் அடைக்கி கொண்டு, "உங்கள் இஷ்டம் அப்பா.. எனக்கு சம்மதம்..
___________________________

"நம் காதல் காற்றில் பற்றும்... அது வானின் காதில் எட்டும்... " பாடலை பாடியது என் கைப்பேசி.

"காத்திருக்கிறேன் " என்ற குறுஞ்செய்தி வந்தது என் அன்பு மனைவியிடமிருந்து.

கார் சாவியை எடுத்துக் கிளம்பினேன் காத்திருக்கும் என் அழகிய மனைவியை காண...

Bạn đang đọc truyện trên: Truyen2U.Pro