13..

Màu nền
Font chữ
Font size
Chiều cao dòng

அவன் காதலை ஏற்றுக் கொள்ளாத போதே அவனை மறக்க முடியாமல் தவித்த அவளது மனம் அவனே தனது காதலை வழிய வந்து கூறும்போது அதை தவிர்க்கவா தோன்றும்..அவனிடம் வீர வசனம் பேசிவிட்டு வந்தாலும் அவனை நோகடித்து விட்டோமே என தவித்துக் கொண்டிருந்தது. எங்கே அவன் மீண்டும் தன்னிடம் வந்து பேசமாட்டானா என எண்ணி தவித்தது..

அந்த நேரம்தான் ரேவதி அவளிடம் புடவையைக் கொடுத்து தயாராகி கீழே வரச் சொன்னார்.. இந்த திடீர் நிகழ்வை அவளால் நம்பக் கூட முடியவில்லை.. வெறும் பேச்சுக்கு திருமணத்திற்கு சம்மதித்தாலும் அவனைத் தவிர வேறொரு ஆடவனை தனதருகே நினைத்துக் கூட பார்க்க முடியவில்லை.. அதை நினைக்கும் போது அவளுக்கே அறுவெறுப்பாக இருந்தது..

"தனு உன்னை விட்டா எனக்குனு யாரு இருக்கா.. உனக்கு ஒரு கலியாணத்த பண்ணிப்பார்த்தா  தான் என்னோட ஆத்மா கூட சாந்தியடையும்..நாங்க போனப்பிறகு இந்த உலகத்துல உனக்காக யாருமே இல்லைனு அழக்கூடாதுடி.. " என்று நேற்று இரவு ரேவதி அழுதது நினைவு வந்தது..

சரி மாப்பிள்ளையிடமாவது பேசிப் பார்க்கலாம் என கிளம்பி கீழே வந்தாள்..

அவள் கீழே இறங்கியதும் " தனு நாம ஜெயிச்சிட்டோம் " என்றபடி அக்சு அவள் கால்களைக் கட்டிக் கொண்டாள்.. அதிர்ச்சியில் சுற்றியும் பார்க்க, கிருஷ் மற்றும் அவனது பெற்றோர், ராம், சக்தி , நிலா மற்றும் ஆதி என அனைவரும் அமர்ந்திருந்தனர்.. மீரா மட்டும் இல்லை..

நிலா சந்தோசமாக வந்து அவளது தலையில் பூச்சரத்தை சூட்டினாள்.. " கடைசில எப்படியோ அந்தக் கருவாயன மடக்கிட்ட " என்று காதுக்குள் கிசுகிசுத்தாள்..

தனுவிற்கு அழுகவும் முடியவில்லை.. சிரிக்கவும் முடியவில்லை.. ஓடிச்சென்று தனது தாயைக் கட்டிக் கொண்டாள்..
ராம் குனிந்த தலை நிமிராமல் இருப்பது தன்மீது உள்ள கோபத்திலா அல்லது வருத்தத்திலா என அவள் சந்தேகப்படத் துவங்க,ஆனால் அவளைப் பார்த்ததுமே போலிப் புன்னகை வீச அதை அவள் கண்டறிந்து
ராமிற்கு ஏதோ பிரச்சினை என்பதை மட்டும் சரியாக யூகித்தாள்.

" எங்களக்கு இருக்கறது ஒரே பொண்ணு அதனால கல்யாண செலவெலாம் நாங்களே பண்ணிரோம்.. கல்யாணத்த வர முகூர்த்தத்துல வெச்சிடலாம்.. " என தனுவின் தந்தை கூற,

ராஜன் தயங்கியபடியே " அது இப்போதான் ஒரு கல்யாணம் முடிஞ்சுது.. அதுக்குள்ள எப்படிப்பா.. மீராவோட டெலிவரி அப்ரோ வெச்சுட்டா அவளுக்கும் அலச்சல் கம்மியா இருக்கும்னு நினைக்கிறோம் " என்றார்..

" என்ன மாமா நிலாவும் தனுவும் ஒரே கிளாஷ்ல தான் படிச்சாங்க.. அவளுக்கு கல்யாணம் பண்ணியாச்சுல.. இப்போ என் பொண்ணு மட்டும் இன்னும் வெயிட் பண்ணனுமா . அப்படி உங்க அருமை மருமகளுக்கு அலச்சல் வேனாம்னா எங்க சொந்தக்காரங்க நிறைய இருக்காங்க.. அவங்களே எல்லா வேலையும் செய்யட்டும்.. நீங்க அர்ச்சதை தூவி வாழ்த்தி பொண்ணு மாப்பிள்ளைய வழி அனுப்ப வந்தா மட்டும் போதும்" என ரேவதி நக்கலாக கூற

"ரேவதி சும்மா இரு " என அதட்டினார சேகர்.
" நீங்க சும்மா இருங்க.. என் பொண்ணோட கல்யாணத்தை ஊரே பார்க்க ஜாம் ஜாம்முன்னு கொண்டாடனும்.. நீங்க நிலாவோட கல்யாணத்துல பண்ண மாறி எந்த கஞ்சத் தனமும் பண்ண வேண்டாம்.. புரியுதா " என்றார் கராராக..

இவர்களாலும் எதையும் எதிர்த்து பேசமுடியவில்லை. அவர் போடும் கன்டிசன்களுக்கு மறுக்காமல் தலையாட்டிக் கொண்டிருந்தனர்..

ரேவதியின் பேச்சு யாருக்கும் பிடிக்கவில்லை தான்.. ஆனால் இப்போது இவர்கள் எதிர்த்து பேசினால் ரேவதி உடனடியாக வேறொரு மாப்பிள்ளையை பார்த்துவிடுவார் என்ற காரணத்தால் தான் அமைதி காத்தனர்.. அதுமட்டுமின்றி ஏற்கனவே தனுவை ஜானகி விசயத்தில் அவமானப் படுத்தியதால் அவளை இன்னும் வேதனைப் படுத்தக்கூடாது என முடிவெடுத்தனர்..
நேற்று வீட்டுக்கு சென்ற கிருஷ் அனைவரிடமும் விசயத்தைக் கூற ஆரம்பத்தில் அனைவருமே இதை எதிர்க்கத்தான் செய்தனர்.. ஆனால் மீரா மட்டுமே தனு கடைசிவரை ராம வீட்டோட மாப்பிள்ளையா இருக்க சம்மதிக்க மாட்டாள்.. திருமணம் முடியும் வரை அமைதியாக இருந்தாலே போதுமானது.. அதுவும் ரேவதியின் வாயினை அடைப்பதற்காகவே என்று ஆலோசனை கூறினாள்.. அதன்படியே அனைவரும் நடந்து கொண்டனர்.

தனுவிற்குமே தனது தாயின் பேச்சு உறுத்தலாகத் தான் இருந்தது. ஆனால் ரேவதி எப்போதுமே இப்படித்தான் என்பதால் அமைதி காத்தாள்.. மேலும் தன் தாயை அவர்கள் முன் விட்டுக் கொடுக்க மனமில்லை..

சிறிது நேரம் அங்கே அமைதி நிலவ
" நான் தனுவோட கொஞ்சம் பேசனும்" என்றவன் சிறிது இடைவெளிவிட்டு " உங்களுக்கு  எந்த ஆட்சேபனையும் இல்லைனா " என்றான் ரேவதியை நோக்கி..

அவரும் சம்மதம் சொன்னவுடன் இருவரும் தோட்டத்திற்கு சென்றனர். மற்ற நேரமாக இருந்திருந்தால் அனைவரும் அவனை ஓட்டியேத் தள்ளியிருப்பார்கள்.. ஆனால்.....

இருவரும் யார் முதலில் பேச்சை ஆரம்பிப்பது எனத் தெரியாமல அமைதியாகவே நின்றனர்.

தனு என்னதான் அவன் தன் காதலை ஏற்றுக் கொண்டாலும் இத்தனைநாளாக தன்னை வாட்டியதற்கு தண்டனை கொடுக்க வேண்டும் என நினைத்தாள்..
ராமோ அவளிடம் எப்படி பேச ஆரம்பிப்பது எனத் தயங்கினான்..

ராமே சற்றுத் தயக்கத்துடன்
"
என் மேல நீங்க ..சாரி நீ இன்னும் கோபமாதான் இருப்பனு தெரியும்.. நான் எதையும் நியாயப்படுத்த விரும்பலை.. " என்றதுமே முரைக்க ஆரம்பித்தாள்..

அவனுக்கு அதற்குமேல் வார்த்தைகள் வற்றிப் போக
" அதுவந்து நான் .. தப்பா.. இல்லல.. நீ " என உலற ஆரம்பிக்க தனுவிற்கு அவனின்மீது இருந்த கோபம் காற்றில் பறந்தது.. என்றுமே இவளிடம் விரைப்பாக பேசும் ராம் தன் முன்னே உலருவதை நினைத்து மனதில் சிரித்துக் கொண்டாள்..

அவளது கேலிப் பார்வையை புரி்ந்துகொண்ட ராமிற்கு இன்னும் பதற்றம் அதிகரித்தது..

ராம் தான் செய்த குற்றத்திற்கு வருந்துகிறான் என்பதை புரிந்துகொண்டவள் " ராம் பழச விட்டுத் தள்ளுங்க " என்றாள்.

ராம் அதிர்ந்து நோக்கவும் " நான் பழசுன்னு சொன்னது எல்லாத்தையும் சேர்த்துதான்.. நான் உங்கள விரும்பனதையும் சேர்த்துதான் சொல்றேன்"

" தனு ப்ளீஸ் " என்று ராம் எதையோ கூற, " இல்லை ராம் நான் தப்பான எண்ணத்துல சொல்லல.. எல்லாத்தையும் நாம மறந்துட்டு நீங்க எனக்கு பார்த்துருக்க மாப்பிள்ளை..நான் இப்போதான் உங்கள பார்க்கிறேன் அந்த மாறி. " என்றாள் விளையாட்டாக

ராமிற்கு ஒருவகையில் வருத்தமாக இருந்தாலும்
தங்கள் இருவருக்குள்ளும் இருக்கும் காதல் என்றும் அழியாது என்ற நம்பிக்கையால் இதை ஏற்றுக் கொண்டான்.. அவள் தன்னால் அனுபவித்த அனைத்து வலிகளுக்கும் மருந்தாக இருக்க நினைத்தான்..
தனுவிற்காக அவன் செய்வதெலாம் வெறும் காதலுக்காக அனைத்தையும் தியாகம் செய்வதாக நினைத்து செய்யவில்லை. தன்னுள் அவளும் சரிபாதி என எண்ணியே செய்தான்..

அவள் தன் காதலைப் புரிந்து கொண்டால்தான் அவள் நிம்மதியாக புதிய வாழ்வைத் துவங்க முடியும் என நினைத்தவன் " அப்படினா நான் உனக்கு பார்த்திருக்க மாப்பிள்ளை ரைட்.. " என்று அவளிடம் நெருங்கியவன் "
என்னை பத்தி நான் முழுசா சொல்லிடறேன்..
என்னோட வாழ்க்கைல எல்லாமே எனக்கு எங்க மீராக்கா தான்..
அக்கா எங்கிட்ட எப்பவும் சொல்ற ஒரே விசயம் ' உன்னால எந்தப் பொண்ணுக்கும் கெட்ட பேர் வராம நல்ல பையனா இருக்கனும்னு தான்..
நானும் அதுனால பொண்ணுங்க பக்கம் தலையவே திருப்ப மாட்டேன்.. ஆனா என்னை தொல்லை பண்ணனும்னே எங்க கிளாஷ்ல ஒருத்தி இருந்தா.. கிளாஸ்ல எப்பபாரு என்னையவே பார்க்கிறது.. நான் வொர்க் பண்ற டெக்ஸ்டைல் ஸாப்ல வேணும்னே ஷாப்பிங் வரது..
என் சிஸ்டர் மூலமா எனக்கு எது பிடிக்குமோ அதெலாம் தெரிஞ்சுகிட்டு அந்தமாறியே டிரஸ் பண்றது.. ஆனா இதெலாம் நான் கண்டுக்க கூட மாட்டேனு தெரிஞ்சும் வீணா செய்வா.
ஆனா அவளுக்கு எங்கிட்ட நேரா காதல சொல்ற அளவுக்கு தைரியம் இல்ல..
என்னோட குடும்ப சூழ்நிலையும் அப்போ சரியா இல்ல.. ஆனா இப்போ எல்லாம் சரியா இருந்தும் என்னோட முட்டாள்தனத்தால அவள காயப்படுத்திட்டேன்..  எனக்கு இப்போ ஒரு சான்ஸ் கிடைச்சா போதும்.. அவகிட்ட என்காதல நிருபிக்க..அவ என்னோட வாழக்கைல எவ்ளோ முக்கியம்னு.. அவ இல்லாம நான் இல்லைனு.. ஆனா அது நடக்குமான்னு எனக்குத் தெரியல.. அவளுக்கே தெரியும் நான் ஒருத்தங்க மேல அன்பு வெச்சுட்டா அவங்கள எந்த சூழ்நிலையிலும் விடமாட்டேன்னு. என்னை அவ என்னைக்காவது புரிஞ்சிப்பானு எனக்கு தெரியும்..
ஆனா அது சீக்கிரமா நடக்க நான் விரும்பல.. அவ என்காதல் அனுதாபத்தால இல்லாம அவளோட
அன்பால
வந்ததன்னு அவ உணரனும்.. அது போதும் எனக்கு.
அவளுக்காக நான் எவ்ளோ நாள் வேணா காத்திட்டு இருப்பேன்..
எனக்காக நீ அவகிட்ட பேசறியா.. எனக்கு அவ மட்டும்தான் வேணும்.அவளோட காதல்தான் வேணும்.. ஆனா அவ வேற யாரோ ஒருத்தன கல்யாணம் பண்ண ஒத்துக்கிட்டா.. எனக்கு அது பிடிக்கல.. என்னோட காதலி என்னை பிடிச்சு கல்யாணம் பண்ணனும்னு ஆசப்படறன்.. அது நடக்குமான்னு நீதான் கேட்டு சொல்லணும் " என்றான்  காதல் பொங்க..

ராம் கூறயதைக் கேட்கும் முன்னரே தனது கோபத்தை விடுத்திருந்தவள் இப்போது சொல்லவா வேணும்.. அவனை வேகமாக ஓடிச் சென்று அணைத்துக் கொண்டவள் " மாப்பிள்ளை சார் நானும் என்னோட பர்ஸ்ட் லவ்வரத்தான் கல்யாணம் பண்ணிக்குவேன்.. அதனால என்னை மறந்துடுங்க " என்றாள் சந்தோசமாக..

Bạn đang đọc truyện trên: Truyen2U.Pro