5. மீராவின் கோபம்

Màu nền
Font chữ
Font size
Chiều cao dòng

இரண்டு தினங்களுக்கு பிறகு,
" கிருஷ் அவ பிரண்ட்ஸாவது போன அட்டென்ட் பண்ணாங்களா.. நான் அப்பவே சொன்னேன் அவன் அங்க போக வேணாம்னு.. கேட்டாதான.. அந்த ஏரியா கமிஷ்னருக்கு கால் பண்ணலாம்னாலும் வேணாம்ங்ற.. " என மீரா புலம்ப,

" ஏய் மலைல சிக்னல் கிடைச்சிருக்காது.. அதுனால கூட இன்பார்ம் பண்ணாம இருக்கலாம்ல.. ரிலாக்ஸ இரு.. நான் பாத்துக்குறேன் " என கிருஷ் அவளுக்கு ஆறுதல் சொன்னாலும் அவனுக்கும் பயம் இருக்கத்தான் செய்தது.. இதுவரை ராம் சொன்ன நாளில் வராமல் இருந்ததோ அல்லது மீராவிடம் பேசாமல் இருந்ததோ இல்லை.

அனைவரும் அவனுக்கு எதுவும் ஆகாமல் பத்திரமாக வர வேண்டும் என வேண்டிக் கொண்டிருந்த நேரம் வாசலில் கார் வந்து நின்றது.. மீரா உட்பட பயந்தபடியே வெளியே வந்து பார்த்தனர்.
முதலில் தீனாவும் சக்தியும் தயங்கியபடியே இறங்க..அடுத்து தலையில் பெரிய கட்டுடனும் கையிலும் காலிலும் சிறு பேன்டெய்டுகளுடனும் ராம் இறங்க அனைவரும் அதிர்ச்சியாகினர்..
அதைவிட பேரதிர்ச்சியாய் அந்தப் பெண்ணும் அவனது கையைத் தாங்கிப் பிடித்தவாரே இறங்க
அனைவரும் ஒரு நிமிடம் ஆடித்தான் போயினர்..

அதிர்ச்சியில் இருந்த மீண்ட கிருஷ் ராமையும் மற்றவர்களையும் உள்ளே அழைத்தான்..
உள்ளேவரத் தயங்கியவளின் கைகளை அழுந்தப் பற்றி வா என்று சைகை செய்ய அவளும் பயந்தவாரே உள்ளே வந்தாள்.
தனுவிற்கு கண்ணீர் சிறிதுநேரத்தில் கொட்டி விடுவேனா என்ற நிலையில் இருக்க அதை வெளியே விடாமல் இருக்கிப் பிடித்துக் கொண்டிருந்தாள்..

கீதாவும் ராஜனும் அவனது காயத்தைப் பற்றி ஆராய்ந்து கொண்டிருக்க தனுவும் நிலாவும் எதுவும் பேசாமல் அமைதியாக நின்றனர்.

மீரா தீனாவை நோக்கி " இப்பவாச்சு என்ன நடந்துச்சுனு சொல்வீங்களா இல்ல அப்டியே அமைதியாகிடுவீங்களா " என மிரட்ட தீனாவுக்கும் சக்திக்கும் வார்த்தை வர மறுத்தது.. ராம் அவ்வளவுதூரம் தைரியம் சொல்லிக் கூட்டி வந்தாலும் மீராவின் கோபத்தால் அனைத்தும் தவிடுபொடி ஆனது..

" மீரா பொறுமையா இரு.. நான் கேட்கிறேன் " என்று கிருஷ் சொல்ல அமைதியாக நாற்காலியில் அமர்ந்தாள்.

" ராம் என்னை நடந்துச்சு.. அந்தப் பொண்ணு யாரு.. " என்று கிருஷும் கோபமாக கேட்கவும் இதுவரை கிருஷின் கோபமொழி கேட்டறியாதவன் பயத்தில் நடுங்கினான்.

" ராம் என் பொறுமைக்கும் எல்லையிருக்கு.. இப்பவும் உன்மேல சந்தேகப்பட்டு கேட்கல.. நீ தப்பு பண்ணமாட்டனு எனக்குத் தெரியும்.. அதுவும் ஒரு பொண்ண நம்ம வீட்டுக்கு கூட்டிட்டு வந்துருக்கனா அதுக்கு நீ எவ்ளோ யோசிச்சிருப்பனு தெரியும். நீயே உண்மைய சொல்லு ராம்.. நீ அமைதியா இருந்து எங்க நம்பிக்கைய சிதைச்சிடாத " என கோபமாய் கிருஷ் கேட்டும் அமைதியாக இருக்க

" நடுவுல பேசறேனு தப்பா நினைக்காதீங்க.. இவர்மேல எந்தத் தப்பும் இல்ல.. நான் தான் எல்லாத்துக்கும் காரணம் " என்று அந்தப் பெண் கூற அனைவரது கவனமும் அவள்மேல் விழுந்தது..

அவளும் பயந்தபடியே சற்று நடுங்கிய குரலில்
" சின்ன வயசிலே அம்மா அப்பாவ இழந்த என்னை எங்கூரு தலைவர்தான் பத்திரமா பார்த்துக்கிட்டாரு.. நானும் அங்க வீட்டுவேலை செஞ்சுட்டு இருந்தேன்.. ஆனா அவரு என்னை அவரோட குடிகார பையனுக்கு ரெண்டாதாரமா கட்டி வைக்க நினைச்சாரு..அதுக்கு நான் ஒத்துக்கல.. அந்தநாள் தான்  இவங்கெலாம் எங்க ஊருக்கு வந்தாங்க.. ரெண்டு நாள் முன்னாடி நைட் அவரு எங்கிட்ட " என்று வார்த்தையை முடிக்க முடியாமல் அழுதபடியே " எங்கிட்ட அவரு " என இழுத்தபடியே இருக்க,
அவளின் நிலையறிந்து கீதா " பரவாலை புரியுது அழுகாதம்மா " என அவள் தோள் தட்டிக் கொடுக்க அவளும் அவர்மீது சாய்ந்தபடியே அழுக ஆரம்பித்தாள்.

" அந்த நேரம் சத்தம்கேட்டு நாங்க மூனு பேரும் உள்ளபோயி அவங்கள காப்பாத்தனும்.. அப்போதான் ராம்க்கு அடி பட்டுருச்சு " என சக்தி முடிக்க மீரா அதை நம்பாதமாறி பார்க்கவும் தலையை குனிந்து கொண்டான்.

" அதென்ன பாதிக்கப்பட்ட பொண்ணும் நல்லாருக்கா.. நீங்களும் நல்லாருக்கீங்க.. ஆனா நம்ப ஹீரோ சார்க்கு மட்டும் இவ்ளோ அடி " என மீரா அடுத்த அம்பினை ஏவ அதற்கு என்ன பதில் சொல்வதென்று தெரியாமல் இருவரும் திருதிருவென்று விழித்தனர்.

இவ்வளவு நேரம் வாயைத் திறக்காத ராம் " அவங்க யாரும் உள்ள வரலக்கா.. நான் தான் போனேன் " என்றான்..

அதையும் நம்பாத மீரா " அந்த தலைவரு உங்களுக்கு தோட்டத்து வீட்டுலதான தங்க வெச்சாரு.. அவர் எப்படி அந்த நைட் நேரத்துல அங்க கரெக்டா போனாராம்மா " என மீண்டும் கேள்விக் கனைகளை வீச இந்தமுறை யாரும் பதிலளிக்கவில்லை.. மாறாக அந்தப் பெண்ணின் தேம்பல் மட்டும் கேட்டது.

மீரா மெதுவாக எழுந்து அவளிடம் வந்து " அழுகாதம்மா.. உன்னை பாதுகாப்பான இடத்துல சேர்க்கறது என்னோட கடமை.. என் தங்கை கல்யாணம் முடியுற வரை இங்க ஒத்தாசையா இரு.. அதுக்கப்ரோ நானே உனக்கேத்த மாறி வேலை வாங்கித் தரேன் சரியா " என்றவள் நிலாவை நோக்கி " இவள உன்னோட தங்க வெச்சுக்கோ " என்றாள்..

நிலாவும் ஏதோ ஞாபகத்தில் தலையாட்டிவிட்டாள்.. ஆனால் காலையில்தான் தனு தனது அறையில் தங்கிக் கொள்கிறேன் என்று சொன்னதை மறந்துவிட்டாள்.

மீரா சக்தியும் தீனாவையும் பார்த்து " இன்னும் ஏன் இங்க நிக்கறீங்க.. உங்களுக்கும் நீங்க வீட்டுக்கு எப்ப வருவீங்கனு காத்துட்டு இருக்க
குடும்பம் இருக்குனு மறந்துடுச்சா " என முகத்தில் அடித்ததுபோல கேட்கவும் அவர்களும் இடத்தை காலி செய்தனர்.

நடக்க முடியாமல் மெதுவாக இரண்டு படியைத் தாண்டியவள் அவளைப் பார்த்து " உன் பேரு என்னம்மா " என அந்தப் பெண்ணைக் கேட்டாள்..

" ஜானகி " என அவள் தயங்கியபடியே சொல்ல ராமைப் பார்த்து அர்த்தமாக சிரித்த மீரா எதுவும் சொல்லாமல் தனதறைக்கு சென்றுவிட்டாள்..

ராம் மீரா வந்ததிலிருந்து தன்னுடன் ஒரு வார்த்தை கூட பேசவில்லை என்பதை அறியாமல் இல்லை.. மீரா இருக்கும் நிலையில் தற்போது அவனாக சென்று பேசினால் அவள் உணர்ச்சி வசப்பட்டு வயிற்றில் இருக்கும் குழந்தைக்கு ஆபத்தாகி விடுமோ என அமைதி காத்தான்.. இன்றில்லை என்றாலும் ஒரு நாள் தனது நிலையை மீரா புரிந்து கொள்வாள் என நம்பினான்.. அவன் நம்பிக்கை ஜெய்க்குமா என காலம்தான் பதில் சொல்லும்..

மீராவின் அறையில் மீரா அழுதுகொண்டிருந்தாள்.. " மீரா அவன் உன் தம்பி நீயே இப்படி புரிஞ்சுக்காம இருக்கலாமா .. அவங்கிட்ட பேசுனா நீயும் ரிலாக்சா இருப்பலடா.. ஏன்டா உன்னையும் வருத்திட்டு அவனையும் நோகடிக்குற "

கண்ணீரைத் துடைத்தவாரே
" போதும் போதும் உன் அருமை மச்சானுக்கு ரொம்ப ஒத்த ஊதாத.. எங்கிட்டயே உண்மைய மறைக்கிறான்ல.. கொஞ்சம் அனுபவிக்கட்டும் "என்க

" அப்போ அவன்மேல கோபம் இல்லையாடீ  " என்றதும் " மொதல்ல அந்தப் பொண்ணு அவனுக்கு ஏததவளான்னு தெரிஞ்சப்பிறகு தான் கோபப்படனுமா இல்லையானு முடிவு பண்ணனும்.. அதுவரைக்கும் கோபமா இருக்கறமாறியே நடிக்க வேண்டியது தான்..ஆனா தனுவ நினைச்சாத்தான் கஷ்டமா இருக்கு. " என்றாள் கவலையாக

" எனக்கும் அதேதான் கஷ்டமா இருக்கு. ஆனா ராமும் ஜானகியதான் விரும்புறேனு சொல்லலியே
அப்போ தனுக்கும் ஒரு சான்ஸ் இருக்குனுதான அர்த்தம் "

" மாமனும் மச்சானும் இதோட நிறுத்திக்கோங்க.  தனுக்கிட்ட நான் பேசிக்கிறேன்.. இப்பவே எல்லாத்தையும் கிளியர் பண்ணிட்டா யாருக்கும் எந்த மனக் கஷ்டமும் இருக்காது. நீ அவள என்னை வந்து பார்க்கசொல்லு.. அப்டியே மேகா கடைக்கு போன் பண்ணி ஜவுளியும் நகையையும் வீட்டுக்கே அனுப்ப சொல்லு.. எனக்கு கொஞ்சம் டயர்டா இருக்கு தூங்கறேன் " என படுத்துக் கொண்டாள்..

நிலாவுக்கும் கொஞ்சம் வருத்தமாக இருந்தாலும் ஜானகியைப் பார்க்கவும் பாவமாக இருந்தது.. அவளை அழைத்துக் கொண்டு தனதறைக்கு வரும்போதுதான் தனு தனது பெட்டியில் துணிகளை எடுத்து வைத்துக் கொண்டிருந்ததை கவனித்தாள்..

ஜானகியிடம் ஒரு சுடிதாரை எடுத்து குளித்திவிட்டு போட்டுக் கொள்ளச் சொல்லி குளியலறைக்குள் அனுப்பி விட்டவள் " தனு சாரிடி.. ப்ளீஷ்.. நீ நினைக்கற மாறிலா ஒன்னும் நடக்காது.. வீட்ட விட்டு போகதடி " என்றாள்..

அவளை முறைத்தவள் " என்ன ராம் மாறி என்னையும் கோழைன்னு நினைச்சியா.. இத்தனைநாள் நான் விளையாட்டா இருந்துட்ட.. ஆனா இனிதான் இந்த தனு யாருனு உங்க எல்லாத்துக்கும் தெரியப் போகுது.. அந்த ஜானகிய ராமோட லைப்ல இருந்து எப்படி துரத்துறனு மட்டும் பாரு  " என சவால் விடுத்தாள்..

தனு ராமின் மனதில் இடம்பிடிப்பாளா?
அந்த இரண்டு தினங்களில் நடந்தது என்ன? அதையேன் ராம் மீராவிடம் மறைக்கிறான் ? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்..

Bạn đang đọc truyện trên: Truyen2U.Pro