6. வன்மம்

Màu nền
Font chữ
Font size
Chiều cao dòng

தனது சிறு தலைவலிக்கு கூட பதறும் தனது மீராக்கா இன்று மயிரிழையில் உயிர்தப்பி வந்த தன்னிடம் ஒரு வார்த்தை கூட பேசாமல் சென்றது உயிர்வரை சென்று வலித்தது.. தான் எடுத்த முடிவு சரிதானா எனத் தனக்குள் கேட்டுக் கொண்டான் ராம்.

அமைதியாக படுக்கையில் படுத்தவன் காதில் மெல்லிய கொலுசொலி கேட்டது.. ஆனால் இந்தமுறை வித்தியாசமாக கேட்டது..

எழுந்து அமர்ந்தவன் தனது அருகே அமர்ந்திருந்த தனுவைப் பார்த்ததும் உடனே எழுந்து விட்டான்..
" தனு இங்க என்ன பண்றீங்க. " என அவன் பதறவும், அவனை முறைத்தவள் " ஓ சார் இப்ப மட்டும் தனுனு சொல்வீங்க.. போன்ல தனுசுயாவா.." என்க,

" நான் சொல்றத புரிஞ்சுக்கோங்க தனு.. வெளிய போங்க.. யாராச்சும் பார்த்தா தப்பாயிடும் " என அவன் கெஞ்ச,

" யாரோவா உங்க ஜானகியா.. " என்றதும்
யாராவது வருகிறார்களா என்று பார்த்தவன் " ப்ளீஷ் தனு சொல்றத புரிஞ்சுக்கோங்க.. நானே உங்ககிட்ட வந்து சாரி கேட்கனும்னு நினைச்சிருந்தேன். " என்றதும்
தான் நினைத்ததை தான் சொல்லப் போகிறான் என்பதை உணர்ந்தவள் எங்கே ஜானகியை நேரடியாகவே விரும்புவதாக சொல்லிவிடுவானோ எனப் பயந்து

"  ஐ லவ் யூ ராம்.. நீ இல்லாத வாழ்க்கைய என்னால நினைச்சுக்கோட பார்க்கமுடியாது.
இத்தனை நாள் நான் உன்பின்னாடி சுத்தியும் ஒருநாள் உன்னை தொல்லை பண்ணிருக்கேனா.. உன்னோட சந்தோசம்தான் எனக்கும் முக்கியம்னு தான இவ்ளோ நாள் இருந்தேன்.. ப்ளீஸ் என் காதல அக்செப்ட் பண்ணிக்கோ
நீ இல்லைனா நான் செத்திடுவேன். என்னை ஏமாத்திராத.. நான் சும்மா சொல்லல ராம்.. உண்மையாவே செத்ருவேன் " என ஒரே மூச்சுடன் சொல்லிவிட்டு அவன் கூப்பிடுவது காதில் கேட்டும் நில்லாமல் ஓடிவிட்டாள்.

ராமிற்கு அவளுக்கு எப்படி புரியவைப்பது எனத் தெரியவில்லை.. அவள் சென்றதும் நிலா உள்ளே வர இவளும் திட்டத்தான் போகிறாள் என நினைத்தவன் திரும்பி நிற்க
அவளோ அருகில் இருந்த களிம்பை எடுத்து இரத்தம் கசிந்து கொண்டிருக்கும் கைவிரலில் பூசிவிட்டு எதுவும் பேசாமல் சென்றுவிட்டாள்.
ராம் விரைவில் கிருஷ் மற்றும் மீராவிடம் ஜானகியைப் பற்றிய உண்மையையும் தன் காதலையும் தெரியப்படுத்தி தனுவிடம் புரிய வைக்க வேண்டும் என நினைத்துக் கொண்டான்.

குளித்து முடித்த ஜானகி தனது நீண்ட கருங்கூந்தலை துவட்டிக் கொண்டிருக்க அவளது கூந்தல் அழகில் பொறாமை கொண்டாள் தனு..

அவளை வம்பிழுக்கும் பொருட்டு " ஏய் பொண்ணே இங்க வா " என்றாள்.அவள் அமைதியாக வந்து நிற்க " இங்கப் பாரு உங்க கிராமத்துல நீ எப்படி வேணா இருந்துர்கலாம்.. ஆனா இங்க இருக்கனும்னா நான் சொல்றததான் கேட்கனும்.. புரிஞ்சுதா " என்று அதட்ட
அவளும் தலை ஆட்டினாள்..

" பர்ஸ்ட் ரூல் இவ்ளோ நீளமுடி வெச்சிருக்க கூடாது. கட் பண்ணிடு " என்றவள் அவள் முகம் சுருங்குவதைக் கண்டு " ஓகே ஓகே.. கொஞ்ச ஓவர போயிட்டன்ல.. சாரி.. ம்ம் பர்ஸ்ட் ரூல் ப்ரீ ஹேர்ல வரக்கூடாது.. "

ஜானகியும் சளைத்தவள் இல்லையே.. ராம் வரும்போதே தன் குடும்பத்தில் உள்ளவர்களிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என சொல்லிதான் அழைத்து வந்திருந்தான். ஜானகிக்கும் வாய்க்கொழுப்பு ஜாஸ்தி.. அதனால் தனுவுடன் விளையாட நினைத்தாள்..

"அப்டினா" எனப் புரியாமல் விழிக்கவும்
முகத்தை சுளித்தவள் " அப்டினா தலைய விரிச்சுப் போடக் கூடாது.. நல்லா பிண்ணி தான் போடனும்.. சரியா " என்றாள்.

" ஓ உங்களமாறி தலைவிரிச்சிட்டு அழங்கோலமா இருக்கக் கூடாதுனு சொல்றீங்களா " என்று தனுவையே கேலி செய்ய அதில் காண்டானவள்
" ரெண்டாவது கண்டிசன் ராம நீ சார்னு தான் கூப்பிடனும்.இல்ல வேணா வேணா.. உன்னை எவ்ளோ கஷ்டப்பட்டு காப்பாத்தி இருக்கான்.. சோ நீ அவன அண்ணானு கூப்பிடு " என்றதும்,
ஜானகி " எங்க பக்கத்து வீட்டு அய்யூருட்டம்மா அவங்க ஆத்துக்காரா அண்ணானு தான் கூப்பிடுவாங்க.. அப்போ நானும் அப்படித்தான் கூப்படுனுமா" என்று தனுவின் தலையில் குண்டைத் தூக்கிப் போட,

அதில் பதறியவள் " அய்யோ அப்டிலாம் கூப்பிடாத.. சார்னே கூப்பிடு..அதுவே போதும் "

" சரிக்கா அடுத்து என்னனு சொல்லுங்க.. பெரியம்மா கூப்டாங்க.. போகனும் " என்றாள்..

இவளுக்கும் பெரியம்மா என்றால் ராம் இவளுக்கு மாமன்முறை ஆவானே என்ற பயத்தில்
" என்னது பெரியம்மாவா.. எதுக்கு எங்க பெரியம்மாவ அப்டி கூப்டற " என்க

" இஇஇஇ அதுகூட தெரியாம மடச்சாம்பிராணியா இருக்கீங்க அக்கா நீங்க.. மீராம்மா சின்னம்மானா.. கீதாம்மா பெரியம்மா தான.. பெரியம்மா இப்பதான் சொன்னாங்க நீங்க சரியான காமெடி பீஸ்னு.. அதே மாறி தான் பண்றீங்க.. " என்று சிரித்தபடியே வெளியே சென்றாள்..அவள் சிறுபிள்ளைத் தனமாக பேசிவிட்டுச் செல்ல தனுவுக்கு அவள் வேண்டுமென்றே தன்னை அவமானப்படுத்துவதாக உணர்ந்தாள்..
அவள் வெளியே சென்றதும் உள்ளே வந்த நிலா " தனு ராம் பண்ணது பெரிய தப்புதான்.. ஆனா இவ என்ன பண்ணுவா.. கிராமத்துல வளந்தவ.. எந்தக் கள்ளம்  கபடமும் இல்லாம பேசிட்டு போறா..பெருசா எடுத்துக்காத.. அதேமாறி அவகி்ட்ட ரூடா நடந்துக்காத.. " என்றாள் எச்சரிக்கும் வகையில்

இதுவரை தனக்கு துணையாக இருந்த தோழி கூட அவள்புறம் சாய்ந்தது தனுவின் கோபத்தை இன்னும் அதிகப்படுத்தியது..
" ஓ உன்கண்ணுக்கு நான் இப்ப வில்லியாத் தெரியரனா. பைன் நிலா இந்த வில்லி என்ன செய்வானு போகப் போக புரிஞ்சுக்குவ "  என நிலாவிடம் ஆத்திரத்துடன் கூறிச் சென்றாள்.இதை நிலாவும் வழக்கம்போல விளையாட்டாக எடுத்துக்கொண்டாள்.

கீழே கிருஷ் மீராவைத் தவிர அனைவரும் சாப்பிட அமர்ந்திருக்க தனுவும் சென்று அமர்ந்து கொண்டாள். ஆனால் ஜானகிதான் தரையிலே அமர்ந்து உண்டதாலும் புது இடம் என்ற பயத்தாலும் தயங்கியபடியே நிற்க ராம் அதைக் கவனித்தாலும் அமைதியாகவே அமர்ந்திருந்தான்.

சாதத்தை கொண்டுவந்து வைத்த கீதா " ஏம்மா நிக்கற. உட்கார்ந்து சாப்பிடுமா.. கூச்சப்படாத.. இதை உன்னோட வீடா நினைச்சுக்கோ."என்று ராமிற்கு எதிரே உள்ள நாற்காலியில் அமரவைத்தார்..பார்வை தட்டில் இருந்தாலும் அவ்வப்போது ராமையும் பார்த்துக்கொண்டாள்.கையில் உள்ள காயத்தால் ராம் சாப்பிட கஷ்டப்பட
நிலா " இப்போ எதுக்கு சீன் போடற.. வாயத்தொற " என அவனுக்கு ஊட்டிவிட ஆரம்பித்தாள்..
மற்றநேரமாக இருந்திருந்தால் அவனும் சம்மதித்திருக்க மாட்டான்.. அவளும் அவனது நிலையை எண்ணி கலாய்த்திருப்பாள்..
எலியும் பூனையுமாக எப்போதும் சண்டை போட்டுக் கொண்டாலும் அவர்கள் உடன்பிறந்தவர்கள் அல்லவா..

ஜானகி
அவளால்தான் ராமிற்கு அடிப்பட்டது என எண்ணி கண் கலங்கியவள் அதை யாரும் தெரியாதமாறி துடைத்துக்கொண்டாள்.. ஆனால் ராம் அதை சரியாக கண்டுகொண்டான். இவர்களின் பார்வை பரிமாற்றத்தை பெரியவர்கள்  கண்டும் காணாதது போல இருந்தனர்.

சாப்பிட்டு முடித்தபின்னர் ஜானகி மீராவை தனியாக சந்தித்தாள்..
மீரா அவளைப் பார்த்ததும் சிநேகமாய் புன்னகைக்க, ஜானகியும் சிரித்தாள்.

" என்னம்மா எதாவது வேணுமா " எனக் கேட்க,
" என்னை எங்காச்சும் அனாதை ஆஷ்ரமம்  இல்ல எங்காவது வீட்டு வேலைக்கு சேர்த்து விடறீங்களாம்மா " என்றாள்..

" ஏன்டா இங்க யாராச்சும் எதாவது தப்பா சொன்னாங்களா.. "

" அய்யய்யோ அதெலாம் யாரும் ஒன்னும் சொல்லல.. நான் இங்க வந்ததாலதான் அவர்கிட்ட நீங்க பேசாம இருக்கீங்கம்மா.. அவங்க பாவம்..நான் வேணா போயிறேன்..தயவுசெஞ்சு அவர்கிட்ட பேசுங்கமா" என்று கையெடுத்துக் கும்பிட்டாள்..

அவரின் கையைப்பிடித்து " ஏய் என்ன இது.. நான் அவன்கிட்ட பேசறேன்.. நீ அழுகாத.. கண்ணைத் தொடச்சுக்கோ.. உன்னை பார்த்தாலே கோவில்பட்டி வீரலட்சுமி மாறி கம்பீரமா இருக்கு.. ஆனா   சும்மா சும்மா அழுகுற.. இது உனக்கு செட்டாகுல.. அப்ரோ என்னை அம்மானெலாம் கூப்டற அளவுக்கு வயசாகுல.. அக்கானு கூப்டு " என்றாள்..

"அக்காவா " என அவள் மனதுக்குள் தயங்க.. அவளின் எண்ணத்தை புரிந்துகொண்ட மீரா " உன்னை பார்க்கிறப்ப.. கிருஷோட தங்கச்சி சௌமியா ஞாபகம்தான் வந்துச்சு..அதுனால வேணும்னா நீ என்னை அண்ணினு கூட கூப்பிடு.. " என்றாள்..

அவள் முகம் மலர்ந்ததும் " இது உன்னோட வீடுனு நினைச்சு என்ன வேணா செஞ்சுக்கோ.. உனக்கு திடீர்னு உங்க ஊரவிட்டு இங்க வந்து தங்கறது ஒரு மாதிரிதான் இருக்கும்.. போகப்போக செட்டாகிடும்.. என்ன வேணும்னாலும் நிலாக்கிட்ட கேளு அவ செஞ்சுக் கொடுப்பா.. " என்றவள்
" நீ வேலை வேணும்னு கேட்டதான..உனக்கு ரொம்ப கஷ்டமான வேலை தரேன் " என்றதும்

அவள் முகம் அதிர்ச்சியில் விரிய, மெல்ல சிரித்த மீரா " என்னோட குட்டி ராட்சசி ஸ்கூல் போயிருக்கா..அவ ராம் மேல கோபமா இருக்கா..அவ வந்தா ராம அவகிட்ட இருந்து காப்பாத்திடு " என்றதும் சரி என தலையாட்டினாள்..

ஜானகி அறையை விட்டு வெளியே செல்லும் போது " நான் உன்னை ராம்க்கு கல்யாணம் பண்ணிவெச்சா அவன பத்திரமா பார்த்துப்பியா " என்றாள்.

முதலில் புரியாமல் முழித்தாலும் மீராவின் கனிந்த முகத்தைப் பார்த்ததும் வெட்கப்பட்டுக் கொண்டே ஓடிவிட்டாள்..

ஜானகி ராமின் காதல் ஜெய்க்குமா.. அல்லது தனுவால் ஜானகிக்கு ஆபத்து ஏற்படுமா..என்பதை அடுத்த பதிவில் காண்போம்..

Bạn đang đọc truyện trên: Truyen2U.Pro