8. அதிர்ச்சி

Màu nền
Font chữ
Font size
Chiều cao dòng

கோவிலுக்குச் சென்ற மொத்தகுடும்பமும் மீராவின் நிலையறிந்து திரும்பி வந்துவிட்டனர்.

தனுவின் கண்களிலிருந்து கண்ணீர் வடிந்துகொண்டே இருந்தது.. அவளை சமாதனப்படுத்த யாரும் முன்வரவில்லை.ஒருபுறம் இத்தனை ஆண்டுகளாக உயிருக்குயிராய் காதலித்தவன் மறுபுறம் தனது மொத்தக்குடும்பம் என யாரும் தனக்கு துணையாக இல்லை..
அவள் முதன்முறையாக தனது தாயின் பாசத்திற்காக ஏங்கினாள்.
ரேவதி மற்றவர்களுக்கு எப்படியோ ஆனால் தனுவின் விசயத்தில் எந்தக்குறையும் வைத்ததில்லை.. அவரது தோள்சாய்ந்து அழவேண்டும் போல தோன்றியது.

" நிலா நீங்களாச்சும் அவர்கிட்ட சொல்லுங்க.. தனு தெரியாம பண்ணிட்டாங்க.. அவங்க இவர விரும்புனாங்கனு சொல்லியிருந்தா நானே விட்டுக் கொடுத்திருப்பேன். என்னைவிட தனுதான் இவங்களுக்கு சரியான ஜோடி..இதுக்காக போலிசெலாம் கூப்டுகிட்டு. " என ஜானகி கூற, கண்களில் கொலைவெறியுடன் ஜானகியைப் பார்த்தான்.

அவள் பேசப்பேச அவன் கோபமாக அவளை நெருங்க, வார்த்தைகள் வெளியே வராமல் தந்தியடித்தன..அவள் பயந்து பின்னோக்கி நகர அவனோ அடுத்த அடியிலே அவளது கழுத்தினை அழுந்தப்பற்றி மேலேத் தூக்கினான்.. அவள் மூச்சுவிட சிரமப்பட ஆகாஷும் ஆனந்தும் அவனைத் தள்ளிவிட்டு இருகைகளையும் பிடித்துக் கொள்ள, கீதாவும் கவிதாவும் ஜானகியை எழுப்பிவிட்டனர்..

" உன்னைக் கொல்லாம விடமாட்டேன்.. " என ஆத்திரத்தில் பொங்க

" ராம் உனக்கென்ன பைத்தியமா பிடிச்சிருக்கு.. அவ எவ்ளோ உன்னை விரும்பிருந்தா அப்படி சொல்லியிருப்பா.. பொம்பளைப்புள்ளைய கைநீட்ற அளவுக்கு வந்துட்டியா " என கீதா அவனை கன்னத்தில் அரைய,
அவனோ அடுத்த நொடியே அவர்களது கைகளைப் பற்றியபடியே தரையில் மண்டியிட்டு அழுக ஆரம்பித்தான்.

" நான் ஒரு முட்டாள்மா.. என்னால தான் அக்காவுக்கு இப்படியாகிடுச்சு.. " என தேம்ப ஆரம்பித்தான்.. அவனின் தலையை ஆதரவாக தடவியவர் " மீரா நல்லா இருக்காடா.. இன்னும் கொஞ்ச நேரத்தில வீட்டுக்கே வந்துடுவா " என்றவர் " ஆனா அதுக்கு ஜானுவ என்னடா பண்ணுவா.. பாவம் " என்க

" அத்தை வேணாம் உங்க வாயால அவள நல்லவன்னு சொல்லாதீங்க.. அவதான் அக்காவ கொல்ல பிளான் பண்ணது..
அவ என்னை விரும்பவே இல்லம்மா.  எல்லாமே ஆக்டிங்.. என்னை உங்ககிட்ட இருந்து பிரிச்சு பழிவாங்கதான் இப்படி நடந்துகிட்டாம்மா.. நான் அப்பவே அக்காகிட்ட சொன்னேன் இவளக் கூட்டிட்டு வெளிய போயிட்டாதான் அக்காவுக்கு பாதுகாப்புனு.. ஆனா அக்காவும் மாமாவும் தான் வேணானு சொல்லிட்டாங்க.. " என்றதும் அனைவரும் அதிர்ந்து போயினர்..

அதைக் கேட்டதும் ஜானகி   கண்களிலிருந்து கண்ணீர் வரத் துவங்கியது..
" நான் நடிக்கிறனா..
மீராண்ணிய நான் தள்ளிவிட்டனா
என்ன சொல்றீங்க.. பெரியம்மா இவர்ஏன் இப்படிலாம் பேசறாரு " என கேட்க,

" போதும் நடிக்காத.. உன்னோட நீலச்சாயம் எப்பவோ வெளுத்துடுச்சு "என்றான் கோபமாக

அப்போது தான்
அதிர்ச்சியில் மீண்ட நிலா " அவ நடிக்கறானு தெரிஞ்சும் எதுக்குடா வீட்டுக்குள்ள வர சம்மதிச்ச அவ மேல அவ்ளோ லவ்வா " என அவளும் அவனிடம் கோபமாகக் கேட்க

அவனோ " ஏன்டி இப்படி பண்ண.. எங்க அக்காவோட நல்ல மனசப் பார்த்து நீ திருந்துவன்னு நினைச்சேனே.. எப்படிடி புள்ளத்தாச்சினு கூட பார்க்காம இரக்கமே இல்லாம இப்படி பண்ண நினைச்ச.. நீயெலாம் உண்மையாவே பொண்ணா..எவ்ளோ நடிப்பு.. எவ்ளோ பொய்.. ச்சே " என்று கூறிவிட்டு ஓங்கியறைந்தான். அவன் அடித்ததும் அவளும் எதிர்த்துபேசாமல் தலையை குனிந்துகொண்டாள்.

இதை ஊமையாகப் பார்த்துக் கொண்டிருந்த அனைவருக்கும் ராம் கூறியது உண்மைதான் எனப் புரிந்தது. " என்னை நடந்துச்சனு நீயே உண்மைய ஒத்துக்கிட்டா ஜெயிலுக்கு போவ.. இல்லைனா நானே அடிச்சுக் கொன்றுவேன்.." என மிரட்ட,

ஜானகியோ கண்ணீரைத் துடைத்தபடி " எனக்கு வேற வழி தெரியல ராம்.. எங்கம்மாக்கு செஞ்சு கொடுத்த சத்தியத்துக்காக மனசே இல்லாமதான் இதை செஞ்சேன்.. ஆனா என் காதல் உண்மை.. நான் உன்னை உயிருக்குயிரா காதலிக்குறேன்.. என்னை வெறுத்துடாத ராம்." எனக் கெஞ்ச,

" நீ இவ்ளோ பண்ணியும் நான் எப்படிடி உன்னை நம்புவேன்.. உன்பேர்ல இருந்து உன்னோட சுபாவம் வரைக்கும் எல்லாமே பொய்.. என்னோட வீக்னஸ தெரிஞ்சுவெச்சிட்டு நீ ஆடுன நாடகத்த நான் நம்புவன்னு நினைச்சியா.. ச்சே " என்று அவளை அடிக்க கை ஓங்கினான்..

அந்த நேரம் " ராம் போதும் நிறுத்து. இங்க என்ன நடக்குதுனு பர்ஸ்ட் சொல்லிட்டு அதுக்குபிறகு என்ன வேணா பேசிக்கோங்க " என கோபத்தில் கிருஷின் தந்தை ராஜன் கேட்க, " சொல்றேன் மாமா.. இனியும் மறைச்சு எந்த புரயோஜனும் இல்ல " என்றவன் ஆழ்ந்த பெருமூச்சு ஒன்றினை விட்டு சொல்ல ஆரம்பித்தான்.

" நான் அரண்மனைபுதூர் போன ரெண்டாவது நாள் அவள பார்த்தேன்.. அவ என்னோட கண்ணுக்கு அழகா தொி்ஞ்சா.. ஆனா அதைவிட அவள என்னை திரும்பி பார்க்க வெச்சது அவளோட கண்கள்.. ஆனா அந்தக் கண்கள இதுக்கு முன்னாடி நான் பார்த்த ஞாபகம்..ஆனா எங்கனு எனக்குத் தெரியல.. " என்றவன் சிறிது தயங்கியபடி " எனக்கும் என்னோட வொய்ப் எப்படிப்பட்டவளா இருக்கனும்னு நினைச்சனோ அதேமாறி அடக்கமா அதேசமயம் தேவைப்படற நேரம் மட்டும் போல்டா இருந்தா.. இவளோட சின்ன வயசு கதையக் கேட்கும்போது எனக்கு மீராக்காவும் நிலாவும்தா ஞாபகம் வந்தாங்க.. அதுனால என்னவோ அவள நான் அந்த ஊர்ல இருந்து காப்பாத்தி கூட்டிட்டு வரனும்னு நினைச்சு இவகிட்ட பேசுனேன்.. ஆனா அவ மறுத்துட்டா.. நானும் அந்த அன்னைக்கு நைட் என் பிரண்ட் நேகாவ வெச்சு பேசி புரிய வைக்கலாம்னு தான் நினைச்சேன்.. ஆனா அப்போதான் ஒரு ஐயா என்னைப்பார்த்து ' ஒன்ன அடைஞ்சா ஒன்ன இழப்பனு ' சொன்னது ஞாபகம் வந்தது.. அதுனால கொஞ்சம் யோசிக்க ஆரம்பிச்சேன்.. அப்போதான் அவ யாருனு எனக்கு தெரிய வந்துச்சு.. அந்தக் கண்கள நான் நம்ப வீட்ல பார்த்த நினைவு வந்துச்சு.. அது மீராக்காவோட உண்மையான அம்மாவோடது.. ஒருவேளை இவ நம்ம சொந்தமான்னு நினைக்கும்போது தான் இவ எங்க அம்மா அப்பாவ கொன்ன அந்த ஆரவோட தங்கச்சினு தெரிய வந்துச்சு.. அதையும் ஒரு தடவைக்கு ரெண்டு தடவை கிருஷ் மாமாவோட பிரண்ட் மகேஷ் அண்ணாக்கிட்ட கேட்டு கன்பார்ம் பண்ணிக்கிட்டேன்.நானும் இவ எதுவரைக்கும் போவான்னு பார்க்கதான் அவங்க போட்ட பிளான்மாறியே நடந்துகிட்டேன்..
அவள இங்க கூட்டிட்டு  வந்து அக்காக்கிட்ட சொல்லி தண்டனை வாங்கிக் கொடுக்கலாம்னு நினச்சேன்.. அக்காகிட்ட எல்லாத்தையும் சொன்னேன்.. ஆனா அக்கா ஏற்கனவே ஆரவ் ஜெயில இருக்கறதுனால தான் இவ பழிவாங்க வந்துருக்கா.. இப்படியே போனா பகை வளந்துட்டே போகும்னு அவ நம்மளோட தங்கிப் பழகுனா மனசு மாறிடுவா..
அவ திருந்தரக்கு ஒரு சான்ஸ் கொடுக்கலாம்னு சொன்னா..நான் எவ்ளோ சொல்லியும் கேட்காம தங்க வெச்சாங்க.. ஆனா அவங்ககிட்டயே நான் அவள காதலிக்கறேனு பொய் சொல்லிருக்கா.. நான் அவள இங்க கூட்டிட்டு வந்தது உண்மைதான்.. ஆனா காதலிக்கல.
அன்னைக்கு நான் அந்த குடிகாரன்கிட்ட காப்பாத்துது பொய் இல்ல உண்மைதான்..அப்போதைக்கு இவ நல்லவளா நடிக்கிறாளானு எதுவுமே ஞாபகம் இல்ல..இவ ஒரு பொண்ணுங்கறது மட்டும் தான் தோணுச்சு.. அதான் ஹெல்ப் பண்ணேன்.. எனக்கு அவ காயத்துக்கு ஹெல்ப் பண்றப்பவே புரிஞ்சிட்டேன். இவ டாக்டர் இல்ல நர்சாதான் இருக்கனும்னு.. அதான் நான் அங்க இருந்த ரெண்டு நாளும் உன்னிப்பா அவள கவனிச்சுட்டே இருந்தேன். நான் டைரில எழுதுன மாறியே  நடந்துக்கறத வெச்சு புல்லா கன்பார்ம் பண்ணிக்கிட்டேன்.. அப்போதான் போன்ல அவளோட அம்மாக்கிட்ட பேசுறது வெச்சு எதுக்கு இப்படி பண்றானு புரிஞ்சுது இந்தப் பொண்ண கட்டாயப்படுத்திதான் இவங்க அம்மாதான் வற்புறுத்தி செய்ய வெச்சாங்கனு..
.இங்க எல்லார்கிட்டயும் நல்ல நடந்துகிட்டத வெச்சு நாம நல்லவங்கனு  புரிஞ்சு திருந்திருவானு நினைச்சோம்.. ஆனா " என அவன் தொடங்கும்போது

" போதும் நிறுத்து ராம்.. நீங்க பண்ண தப்பால இன்னைக்கு என்ன நடந்துச்சுனு பார்த்தியா.. இதுவே அவ சாப்பாட்டுல எதாவது கலந்து கொடுத்துருந்தா என்ன பண்ணியிருப்ப" என கீதா கேட்க

" அத்தை அதுக்குதான் அவள தனியா விடாம யாரயாவது பக்கத்துல இருக்கறமாறி நானும் மாமாவும் பார்த்துகிட்டோம்.. அவளையும் நம்மளோடயே சாப்பிட வெச்சோம்.. ஆனா இப்படி பண்ணுவானு நினைக்கவே இல்ல..  அக்காவுக்கு மட்டும் எதாவது ஆச்சு நான் உயிரோடவே இருக்கமாட்டேன்" என அவன் கலங்க

நிலா ஜானகியிடம் " எதுக்குடி இப்படி பண்ண.. சொல்லு.. உங்கண்ணா இரக்கமே இல்லாம எங்கம்மா அப்பாவ கொன்னாங்கனு தெரிஞ்சும் எப்படிடி எங்கள பழி வாங்க நினைச்ச" என அதட்ட,

" என்னை மன்னிச்சிடுங்க நிலா.. எங்கம்மா எங்கிட்ட சத்தியம் வாங்கிட்டாங்க.. நானும் மீராண்ணிய பழி வாங்க நெருங்கலாம்னா அவங்க கலெக்டர்னால பக்கத்துல போகவே முடியல..அப்ரோ உங்க குடும்பத்தோட மொத்த நம்பிக்கையும் ராம் தானு தெரிஞ்சப்பிறகு அவனைக் காயப்படுத்த தான் நினைச்சோம். அவர உங்க குடும்பத்துல இருந்து பிரிச்சு கூட்டிட்டு போகனும்தா அவர் முன்னாடி வந்து நடிச்சேன்.. ஆனா என்னால ஏனோ அவர காயப்படுத்த முடியல.. மீராண்ணிய இன்னைக்கு கொல்ல முயற்சி செஞ்சது உண்மைதான்.. ஆனா என்னால முடியல.. அதனாலதான் மனசு  கேட்காம நானே வந்து தாங்கிப்பிடிச்சிட்டேன்.. எனக்கு நீங்க என்ன தண்டனை கொடுத்தாலும் ஏத்துக்கறேன்.. ஆனா ராம நான் காதலிச்சு ஏமாத்தனும்னு நினைக்கவே இல்ல.. ஏன்னா நான் அவர உண்மையா காதலிக்குறேன்.." என அழுக,

" உண்மை தெரிஞ்சதும் நடிக்கறியா.. மீராவ அண்ணினு கூப்பிட உனக்கு தகதியில்ல.. உன்னை  அப்பாவினு நினைச்சுத்தான என் பிரண்ட் தனுவக்கூட அடிச்சேன்.. இனிமே நீ இங்க இருக்க கூடாது.. ராம் போலிஸக் கூப்பிடு " என்று ஜானகியைக் கீழேத் தள்ளிவிட்டாள் நிலா..

அப்போது தான் அங்கு வந்து சேர்ந்த மீரா
அவளைக் கைப்பிடித்து எழுந்து நிற்க வைத்தாள்.. மீரா வந்ததும் மொத்த குடும்பமும் அவளிடம் நெருங்க அவளோ தலையை குனிந்து கொண்டாள்..

" மீரா உன்னை புத்திசாலினு நினைச்சிருந்தேன்.. ஆனா அத பொய்னு நிருபிச்ட.. ஒருவேளை உனக்கு எதாவது ஆகியிருந்தா " என கீதா அதட்ட

"  மம்மி விடுங்க.  அவ கொஞ்சம் ரெஸ்ட் எடுக்கட்டும்.." என மீராவை கிருஷ் காப்பாத்த முயல அவனை முறைத்தவர் " எல்லாத்துக்கும் காரணம் நீதான்டா.. அவதான் லூசுனா நீ அதுக்கு மேல இருக்க.  இது தெரியாம தனுவ வேற நாங்க தப்பா நினைச்சிட்டோம் " எனும்போதுதான் தனு அங்கிருந்து எப்போதே சென்று விட்டாள் என அனைவருக்கும் தெரிந்தது.

அப்போது காவலர்கள் உள்ளே நுழைய அவர்களை வெளியேறச் சொன்ன மீரா அழுது கொண்டிருந்த ஜானகி என்கிற ஆரவின் தங்கையிடம் " உன்னை மன்னிக்கறதுதான் நாங்க உனக்கு கொடுக்கற பெரிய தண்டனை.  ஆனா உன் விசயத்துல ராம் என்னை முடிவெடுத்தாலும் நான் ஏத்துக்கறேன்.. ஆனா தயவு செஞ்சு மீண்டும் என் முகத்துல முழிச்சிடாத.. பார்க்கவே அறுவெறுப்பா இருக்கு " என்றவள் அக்சுவைக் கூட்டிக் கொண்டு மேலே சென்றாள்.

Bạn đang đọc truyện trên: Truyen2U.Pro