பாகம் 6

Màu nền
Font chữ
Font size
Chiều cao dòng

Originally Published: June 20, 2021



ஐந்து அடி மூன்று அங்குலம், சற்று மெலிந்தாற் போன்ற உடல் வாகு. அழகாக இடைக்கும் கீழே நீண்டிருக்கும் சுருட்டையான கூந்தல், களையான முகம், தீர்கமான மூக்கின் மீது மின்னும் வெள்ளைக்கல் முக்குத்தி, இந்திய பெண்களுக்கே உறித்தான கோதுமை நிறம். எல்லோர் மீதும் அளவுகடந்த பாசம் வைக்கும் குணம், உதவி என்று யார் கேட்டாலும் தன்னால் இயன்றதை செய்யும் மனம், படிப்பில் கெட்டி. மைனஸ் இல்லாமையா? பெரிய்ய்ய பிடிவாதக்காரி, வாயாடி, இதுதான் நம்ம பூரணி. துணிச்சலும், குதூகலமும், குறும்பும், கள்ளத்தனம் இல்லாத குணம் நிறைந்த பெண் விபத்திற்கு பின்னர் அடியோடு மாறிவிட்டிருந்தாள். மேற் சொன்ன குணாதிசயங்களை முடக்கி, நெருங்கிய உறவுகளிடத்தும் சில தோழிகளிடத்தும மட்டுமே அது போல பழகி வந்தாள்.

"பூரணி, சுகந்தி ரெண்டு பேரும் இங்கேயே ரெடியாகிடுங்க. நான் அர்ஜுனை கார்ல கொண்டுவிட சொல்றேன்" பூரணியின் ஜடையில் குஞ்சம் வைத்து பின்னியபடி யமுனா கூறினார்.

"வேணாம் அத்தை! நாங்க காலேஜ்ல போய் மாத்திக்குறோம்" சுகந்தி பதில் கூறவும்.

"ஏன்டீ மக்கு மருமகளே! நானே என் புள்ளை கூட உன்னை வெளிய அனுப்புறேன். வேண்டாங்கற? பத்மா உன் பெண்ணுக்கு கொஞ்சமும் விவரம் பத்தலை..."

பூரணி கிளுக்கி சிரித்து, தோழியிடம் செல்ல அடியும் முறைப்பையும் வாங்கி கொண்டாள்.

"என்னடீ பொண்ணே இன்னிக்கு இளிப்பா இளிக்குற?" பத்மா சுகந்தியின் தலையில் பூவை சுற்றியபடி பூரணியிடம் கேள்வி கேட்டார்.

"அதுவா அம்மா நெக்ஸட் டூ டேய்ஸ் லீவு. நாங்க ரெண்டு பேரும் ஊரு சுத்த போறோம். பூரி பாப்பா ஹாப்பி அண்ணாச்சி!"

"பூ குட்டி அப்ப நானு?" சுகந்தி முகத்தை சுருக்க..

"டார்லிங்க்! நீ இல்லாம நான் எங்கடீ ஊரு சுத்த போவேன்? அம்மா உங்க அப்பாட்ட பர்மிஷன் வாங்கறேன்னு சொல்லிட்டாங்க." இருவரும் குதூகலித்து அணைத்து கொண்டனர்.


சற்று நேரத்தில் புடவை உடுத்தி, முழூ ஒப்பனையும் முடித்து தயாராகி இருவரும் அறையை விட்டு வெளியே வந்தனர்.


"ராஜாத்தி! தங்க விக்ரகமாட்டம் இருக்கு ரெண்டும்!" ஆதூரமாக கன்னம் வழித்து திருஷ்ட்டி சொடுக்கினார் யமுனா. "காலஜ்லேருந்து வந்ததும் சுத்தி போடு பத்மா மறக்காம! சரி சீக்கிரம் வாங்க அர்ஜுன் ரெடியாகிட்டான்".


"பூரி நீ கீழ போ, நான் வரேன்"


"இவ ஒருத்தி எங்க கிளம்புனாலும் நர்ஸரி பாப்பா மாதிரி லாஸ்ட் மினிட்ல தான் உச்சா போகணும்" தலையில் அடித்து கொண்டாள் பூரணி.

"ச்சீ.. சனியன் கத்தாத! மானத்தை வாங்குறா" சிணுங்கியபடி சுகந்தி உள்ளே ஓடினாள்.


"அம்மு மறக்காம கல்யாண ஜவுளி வாங்கும்போது, அடல்ட் டயபர் (adult diaper) வாங்கிடுங்க, அண்ணா தாலி கட்டுற நேரத்துல இவ உச்சா வருதுனு எந்திரிச்சு ஓடிட்டா என்ன செய்யிறது?"
பத்மாவும் யமுனாவும் சிரித்து கொண்டனர்.

பூரணி கார் அருகே வந்தபிறகே அங்கு விஷ்வா நிற்பதை கவனித்தாள். அதுவரை அவளை கவனித்து கொண்டிருந்தவன் அருகே வந்ததும் பார்வையை தவிர்த்து அப்போது தான் கவனிப்பது போல பாவனை செய்தான்.

"ஓ! ஹாய்... இந்த டிரஸ், மேக்கப்ல அடையாளம் தெரியலை"

'இவ்வளவு நேரம் வாயில ஈ போனது தெரியாம ஜொள்ளிட்டு..' காலை வாரிய மனசாட்சியை அடக்கினான்.

"ஹாய்! ஸாரி.."

விஷ்வாவின் முகத்தில் குழப்ப ரேகைகள்.

"இல்லை... எனக்கு.. எனக்கு" தடுமாறினான் பூரணி.

"பூரணி உனக்கு நடந்த ஆக்ஸிடண்டால நிறைய மறந்து போச்சு. அதுல என்னையும் மறந்துட்ட. அதான?"

ஆமோதிப்பாய் தலையாடியது.

"திரும்ப பிரண்ட்ஷிப் ஸ்டார்ட் பண்ண ஒண்ணும் தயக்கம் இல்லையே?"

மை எழுதிய கண்களும், படபடத்த இமைகளும், அகத்தை பட்டவர்த்தனமாய் வெளிச்சம் போட்டு காட்டும் கள்ளமில்லா முகமும் ஒவ்வொரு முறையும் அவனை தன்வசமாக்கி கொள்ள, அவனும் விரும்பியே விழுந்தான்.

"பிரண்ட்ஸ்?"
அவன் தலைசாய்த்து வினவ, உள்ளுக்குள் எதோ தடம்புரண்டது பூரணிக்கு.


"பிரண்ட்ஸ்! தாங்கஸ் விஷ்வா, புரிஞ்சுகிட்டதுக்கு. நீங்க மனசு கஷ்டபடுவீங்களோனு நினைச்சேன்".

"கஷ்டமா தான் இருக்கு..நீங்க வாங்க னு கூப்பிடுறது.. எப்பவுமே நீ வா போ னு உரிமையா தான் நீ பேசுவ. அதே மாதிரி பேசு" அவள் மறுப்பாய் பேச வர, "நீ எப்படி கூப்பிடுறியோ அதே மாதிரி தான் நானும் கூப்பிடுவேன். ஓகே னா.."

"ஐயோ சரி இனி அப்படி கூப்பிடலை".

"ம்ம்ம்...ஆல் திபெஸ்ட் உன் காம்படிஷனுக்கு"

"தாங்க்ஸ்" படபடப்பு மெல்ல குறைந்தாற் போல தோன்றியது பூரணிக்கு.

"கார்ல் உக்காரு...இதுங்க ரெண்டுத்துக்கும் இதே வேலை" டிரைவர் சீட்டில் அமர்ந்து காரை இயக்கினான். "எனக்கு இன்டர்வ்யூ இருக்கு ஒரு கம்பெனில. உங்களை இறக்கிவிட்டு போகணும். ரிட்டர்ன் வந்து பிக் பண்ணிக்கறோம். கிளம்பி போயிடாதீங்க. சித்தி ஆர்டர், கொன்னுடுவாங்க என்னை". திரும்பி அவள் புறம் நோக்கி, "என்ன பதிலை காணோம்?"

"நீங்க.. ஸாரி.. நீ.. நீ பேச விட்டா தான? ஆல் தி பெஸ்ட் இன்டர்வ்யூக்கு."

அவன் புன்னகைத்து நன்றி தெரிவிக்க, இதயக்கூட்டில் பூவாணம் வெடித்து சிதறியது பூரணிக்கு. அர்ஜுனும் சுகந்தியும் வந்து அமர்ந்ததும், கார் நகர்ந்தது.

"பூரி மா நீயா? பேக் சீட்டுல பூச்சாண்டி உக்காந்திருக்குனு நினைச்சு நான் பயந்துட்டேன்"

"டேய் உன் க்ரைம் ரேட் கூடிட்டே போகுது.. இரு டா நாளைக்கு இருக்கு உனக்கு! நீ உன் அப்பாவை எம்டன்னு கூப்பிடுறதையும் சேத்து போட்டு குடுக்கறேன்".

விஷ்வா, சுகந்தி இருவரும் சிரிக்க, போகும் வழி முழுதும் அர்ஜுனை பழிவாங்க திட்டம் தீட்டியபடி பயணித்தனர்.

🐾🐾🐾

ஆடிட்டோரியத்தில் ஒரு வித படபடப்பும் நிசப்தமும் நிலவியது. வழக்கமான வரவேற்பு உரைகளும், அறிவிப்புகளும் முடிந்து, முதலில் கரிஷ்மாவின் கல்லூரியின் பெயரை அறிவித்தனர். அவள் மட்டும் மேடை ஏறினாள். அவளிடம் சில கேள்விகள் கேட்டுவிட்டு பின்னர் ஆட சொன்னார் நடுவர். ஒரு பிரபல இந்தி பாடலுக்கு ஆடினாள்.

ஆடி முடித்தவுடன் பேசிய வேறு ஒரு நடுவர், "எவரிதிங்க் வாஸ் பர்பெக்ட் எக்ஸெப்ட் யுவர் டான்ஸ். நேத்து நீங்க ஆடினதும் ஹிப்ஹாப் ஸ்டைல் தானே? இந்த ரவுண்ட் உங்க வெற்றியை தீர்மானிக்கும் பட்சத்துல நீங்க வேற ஸ்டைல் எடுத்திருக்கலாமே" என்றார். பதில் சொல்ல முடியாமல் அமைதி காத்தாள்.

அவள் கல்லூரி முதல்வருக்கு மற்ற மாணவர்கள் மூலம் உண்மை தெரியவந்தது. ஜெயிக்கும் நோக்கத்தில் அல்லாமல், சாதாரணமாக ஆடினால் போதும் என கரிஷ்மாவை அழைத்து எச்சரித்ததோடு அவரும் இன்று அரங்கத்திற்கும் வந்திருந்தார்.

அடுத்த அறிவிப்பு முடிந்து, சுகந்தியும் பூரணியும் மேடையேறினர், பாடல் ஒலிக்க தொடங்கியதும், ஆடத்தெடங்கினர் இருவரும். ஆடிமுடித்ததும் பலத்த கரகோஷம், பாராட்டுக்கள். சில முக்கியஸ்தர்களின் உரை முடிந்து, அவர்கள் கல்லூரி நடனப்போட்டியில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. மேடையில் பூரணி இல்லை. க்ரீன் ரூமில் நாற்காலியில் தலைசாய்த்து கண்மூடி அமர்ந்திருந்தாள் பூரணி.

"பூரணி என்ன டீ? வா அனௌன்ஸ் பண்ணிட்டாங்க, நாம தான் ஜெயிச்சோம்" ஸ்ருதி அவளை உலுக்க. சுகந்தி உள்ளே நுழைந்தாள், தோழியின் முகத்தை பார்த்தவுடன் பதற்றம் தொற்றியது.

"பூரணி.. பூரணி..என்ன மா? என்னடீ செய்யுது?" அவளை கன்னத்தை லேசாக தட்டி, "ஸ்ருதி கொஞ்சம் தண்ணி எடுத்துட்டு வரியா?" வெறித்து பார்வை பார்த்தபடி அமர்ந்திருந்தாள் பூரணி.
"என்ன டீ பண்ணுது"?

"யாரு வீடியோ எடுத்தா?"

"நம்ம பசங்க தான் மொபைல்ல..."

"இல்ல... ஜெண்ட்ஸ் யாரோ எடுத்தாங்க.. ஹேண்டி கேம்ல...நான் பாத்தேன்".

மனதின் குழப்பம் பேச்சில் வெளிப்பட்டது, பேச்சு குழறியது. முன்பு பல முறை இந்த நிலையை சமாளித்திருந்தாலும், சுகந்திக்கு இது வேதனையை அளித்தது. தண்ணீர் பாட்டிலை வாங்கி, பூரணியின் பர்ஸில் அவளுடைய மாத்திரை ஒன்றை தேடி பிடித்து அதை உட்கொள்ள வைத்தாள்.

கேள்வியாக ஸ்ருதி நோக்க, "அப்புறமா சொல்றேன். நீ போய் பிரின்ஸியை பார்த்து சமாளி. இவளை ஸ்டேஜுக்கு கூட்டிட்டு வர முடியாது. "

பூரணி இன்னமும் அதையே புலம்பி கொண்டிருந்தாள். "ஹேண்டி கேம்ல வீடியோ எடுத்தாரு, சுகன் (சுகந்தி). நான் பாத்தேன்."

அந்த பெயரை கேட்டதும் சுகந்தி அழத்தொடங்கினாள். விபத்து ஏற்பட்ட காலகட்டத்தில் அப்படி தான் அழைப்பாள், அந்த கசப்பான நினைவு வலியை தந்தது. அமர்ந்த நிலையிலேயே பூரணி அவள் இடையை கட்டிகொள்ள, தாயாக மாறி அவளை தேற்றினாள் சுகந்தி.

பிரின்சி அறைக்குள் நுழைய அவரோடு நடுவராக வந்திருந்த அந்த தொழிலதிபரும் நழைந்தார்.

"சுகந்தி என்ன ஆச்சு?" இருவரையும் குழப்பமாக பார்த்தார் பிரின்சி, கல்லூரியில் சேரும் போதே முன்னெச்சிரிக்கையாக பூரணியின் நிலையை விளக்கித்தான் சேர்த்திருந்தார் கோகிலா.

"இல்லை மேம்.." சுகந்தி அந்த மூன்றாமவர் முன் பூரணியின் நிலையை விளக்க தயங்கினாள்.

"என்னனு சொல்லுங்க நான் எதாச்சும் உதவி பண்ண முடிஞ்சா பண்றேன். நான் காலேஜ் கமிட்டி மெம்பர் தான் மிஸ். சுகந்தி." என்றார் அந்த இளம் தொழிலதிபர்.

"அவளோட மெமரி லாஸ்னால சில சமயம் இப்படி ஏற்படும் மேம். பழைய சம்பவங்களை இவ கஷ்டப்பட்டு நினைவுக்கு கொண்டுவர முயற்சி செய்தா. இந்த மாதிரி ஒரு கன்பியூஷனுக்கு போயிடுவா. சில சமயம் தலைவலி, மயக்கம் கூட வரும். அவளோட மெடிசன் இருந்தது குடுத்திட்டேன். வீட்டுக்கு கூட்டிட்டு போயிடுறேன்."

"எப்படி மா போவ?" பிரன்ஸிபல் உண்மையான கவலையில்.

"மேம் என் ஃபியான்ஸே தான் காலைல கார்ல டிராப் பண்ணாரு, மதியம் வந்துஅழைச்சுட்டு போறேன்னு சொன்னாரு." சுகந்தி அர்ஜுனை அழைக்க தன் மொபைலை தேடினாள். பிரின்சி பூரணியின் அருகே வந்து அறுதலாய் தலையை கோதிவிட்டார்.

"நீங்க பாத்தீங்களா? அந்த வீடியோ எடுத்தவரை? அவரை கூட்டிட்டு வரீங்களா? நான் அவர்கிட்ட பேசணும்". இடையிடையே மெல்ல விசும்பல் ஒலி.

"அவங்க யாரு?" அந்த புதிய நபரை பார்த்து பூரணி பிரின்சிபலிடம் ஒண்டினாள்.

"அவங்க நம்ம கெஸ்ட் மா"

சற்று நேரம் அவரை பயம் கலந்த பார்வை பார்த்தாள். அவரும் அவளை அமைதியாய் பார்த்துக்கொண்டிருக்க..

"உன் கண்ணும் மீசையும் அப்பா மாதிரி இருக்கு" கூறிவிட்டு தேம்பி அழத்தொடங்கினாள். அவர் முகத்தில் ஒரு வலி படர, பிரின்சிக்கு குழப்பமும் பயமும் அதிகமானது.

"மேம் அவங்க வந்துட்டாங்க. அவரு உள்ள கார் எடுத்துட்டு வர பர்மிஷன் குடுக்கறீங்களா? இவளை என்னால தனியா கூட்டிட்டு போக முடியாது." அவர் அனுமதி அளித்ததும் "அர்ஜுன் நீங்க உள்ள ஆடிடோரியம் வந்துருங்க." என்றாள் சுகந்தி.

அந்த தொழிலதிபரின் மொபைல் ஒலிக்க, "மேம், நான்.. எதாச்சும் ஹெல்ப்?"

"இல்லை மிஸ்டர். பிரகாஷ். அவங்க பேமிலி இருக்காங்க. நோ ப்ராப்ளம். ரொம்ப நன்றி! சுகந்தி ஒண்ணு பண்ணுங்க,ஸ்டூடண்ட்ஸ் இருக்கும்போது கிளம்பினா ஆனாவசியமான கேள்விகள் வரும். நான் ஸ்டாப் விட்டு எல்லாரையும் கிளப்ப சொல்றேன் கம்ப்ளீட் டிஸ்மிஸலுக்கு ஒரு இருபது நிமிஷம் தேவைபடும். வெய்ட் பண்ணுங்க."

சுகந்தியும் நன்றி தெரிவித்தாள் பிரின்ஸிபல் அந்த தொழில் அதிபரை வழியனுப்ப சென்றுவிட்டார்.

"சுகன் அவன் எங்கனு கேளு. எனக்கு அவனை பார்க்கணும்" பிடிவாதம் பிடிக்க ஆரம்பித்தாள். சுகந்திக்கு இது பழக்கமாதலால் பொறுமையாக அவளின் கேள்விக்கு பதில் சொல்லியபடி இருந்தாள். பிரின்ஸிபல் சொன்னது போல மாணவர்கள் அனைவரும் புறப்பட்டதும் அவளை அழைத்து விவரம் கூறினார்.

"சரி வா போகலாம். உன் அர்ச்சு ணா வந்துட்டாங்க".

கதவை தட்டும் சத்தம் கேட்டது, பதட்டமாய் உள்ளே நுழைந்தான் அர்ஜுன். இருவரும் பார்வை பரிமாறி கொண்டனர்.

"பாப்பா, என்ன போகலாமா வீட்டுக்கு?" அவளை அந்த நிலையில் கண்டதும் அவர்கள் இருவரிடையே ஒரு பார்வை பரிமாற்றம், வேதனையை தாங்கிய ஒரு பகிர்வு. செல்ல சண்டைகளும், கிண்டல்களும் அர்ஜுன் அவள் மன மாறுதலுக்காக செய்யத் தொடங்கி இப்போது அதுவே நிரந்தரமாகி போனது.

"நீ கேட்டு சொல்லு அண்ணா, அப்ப தான் வருவேன்." மருந்து வேலையை தொடங்க மெல்ல கண்கள் சொருக தொடங்கியது.

"அது கேட்டுடேன் பாப்பா. நீ வந்தா தான பாக்க போக முடியும். நானும் சுகுவும் உன்னை விட்டுட்டு எங்கையாச்சும் போயிருக்கோமா"?

மெல்ல அவளை கைபிடித்து தூக்கிவிட்டான். சுகந்தியின் தோளில் சாய்ந்து நடக்க தொடங்கினாள். ஆளுக்கொரு பையை எடுத்துகொண்டனர்.

"இல்ல அர்ச்சுணா, ஹாண்டி கேம் ல யாரோ ஜென்ட்ஸ் எடுத்தாங்க. யாரு?" என்றாள் மிக உறுதியாக.

அவளை அழைத்து கொண்டு கட்டிடத்தைவிட்டு வெளியேற, தூரத்தில் காலூன்றி நின்றுவிட்டாள், மரம் வேர் விட்டது போல், எதையோ தீவிரமாக பார்த்தபடி. அவள் பார்வை சென்ற திசையில் விஷ்வா நின்றிருந்தான். சுகந்தி அவளை பலவந்தமாக நடத்தி கொண்டுபோனாள்.

கார் அருகே சென்றதும், சுகந்தியின் கைப்பிடியை விலக்கி தள்ளாடி அவனருகே சென்றாள். அவன் முகத்தில் இருந்த கலக்கமும், வலியும் கண்டு சுகந்திக்கும் அர்ஜுனுக்கும் குழப்பம் ஏற்பட்டது.

"நீ ...நீ ..தான... நீ...தான வீடியோ எடுத்த.." அவன் பெயரை யோசித்து திணறினாள்.

"பாப்பா அவன்.."

பூரணி காது இரண்டையும் மூடி கொண்டு "ஷ்ஷ்ஷ்" என்றாள் அடிகுரலில் அதட்டலாக.

"நீ சொல்லு.. சொல்லு.." விஷ்வாவை நெருங்கி, கையைப் பற்றி கொண்டாள். அது வரை அவள் பார்வையை தவிர்த்தவன் சட்டென நிமிர கண்களில் கண்ணீர் நிரம்பியிருந்தது, அதிர்ந்தனர் அர்ஜுனும் சுகந்தியும்.

மெலிந்து ஒலித்தது பூரணியின் குரல், "ஏன் டா போன? ஏன்.. ஏன்...சிவா? உன்னை தேடிட்டே இருக்கேன்... அப்பறம் மறந்து போய்டுறேன். இந்த மாதிரி கனவுல வர...முகம் அதுல தெரியலை...புகை மாதிரி வர.. காலைல மறுபடியும் மறந்துடும். கனவுல அழுவேன்.. காலைல சிரிப்பேன்..யாருக்கும் தெரியது..நீ..இருக்கிறது.

"நீ தான்னு எனக்கே தெரியலை.. யார்ட்ட சொல்ல? அது நீ தான்னு சொல்லு சிவா.." மருந்தின் வீர்யத்தில் கோர்வையாக அல்லாமல், ஆனால் மன ஆழத்தில் இருந்ததை பேசிக்கொண்டிருந்தாள் பூரணி.

பேச இயலாமல், கன்னங்களில் கண்ணீர் வழிய, உணர்ச்சிபெருக்கில் தவித்தான் விஷ்வா. அவன் கையைப்பற்றி உலுக்கியவள், மெல்ல சரிய தொடங்கினாள்.

"செல்லம்மா" பதறி அவளின் இரண்டு கைகளையும் கெட்டியாக பற்றி நிறுத்தினான்.

அரைமயக்கத்தில் புன்னகைத்து, "சிவா நீ தான்" அவள் தளிர் விரல்கள் மெல்ல அவன் கன்னத்தை வருடியது, "கூப்பிடு".

"செல்லம்மா" உயிரை அறுக்கும் வலி அவன் குரலில்.

அவன் மீது மயங்கி சரிந்தாள். அவளை அணைத்து கொண்டு அழுது தீர்த்தான்.

அதிர்ச்சியில் உறைந்து போயிருந்தனர் அர்ஜுனும் சுகந்தியும்.



Aurhor's note:

Hello friends! Indha part and adutha part linked.. have a great week ahead. Pls do read, vote, comment!

Bạn đang đọc truyện trên: Truyen2U.Pro