பாகம் 7

Màu nền
Font chữ
Font size
Chiều cao dòng

Originally Published June 21, 2021



நேசன் ஹாஸ்பிடல்" சிகிச்சை அறையில் பூரணி ஓய்வெடுத்து கொண்டிருக்க, அறை வாயிலில் மூவரும் உட்கார்ந்திருந்தனர். கோகிலா மருத்துவரோடு அவர் அறையில் பேசிக்கொண்டிருந்தார்.

"அர்ஜுன், சுகந்தி- நான் பூரணியை விரும்பறேன், அவளும் தான்...இல்லை, நேத்துலேந்து இல்ல, முன்னாடிலேந்தே. லவ்வுல நாங்க தான் டா உங்களுக்கு சீனியர். எங்க விஷயம் எங்க ரெண்டு பேரோட அம்மாவுக்கும் தெரியும். ஒரே ஒரு பிரச்சினை, பூரணி இதெல்லாத்தையும் மறந்துட்டா."

நிமிர்ந்து அவர்கள் இருவரையும் பார்த்தான். இருவர் மனத்திலும் எழுந்த கேள்விகளின் விளைவு முகத்தில் குழப்ப ரேகைகளாக பிரதிபலித்தது. அவனே தொடர்ந்தான்.

" எனக்கு சின்ன வயசுலேருந்தே அவ மேல தனி பிரியம். ஏன்னு இப்பவும் சொல்லத் தெரியலை. அவ அண்ணானு கூப்பிட்டா பிடிக்காது, buddy னு கூப்பிடுனு சொல்லுவேன். கோவிச்சுக்கிட்டேன், பிடிவாதக்காரி வேணும்னே அண்ணானு கூப்பிட்டு வெறுப்பேத்துவா. அப்ப உன் க்ளாஸ் மேட், இங்க நம்ம காலனியில் தான் இருந்தான். நினைவிருக்கா நமக்குள்ள இருந்த சண்டையில அவளை அசோசியேஷன் ப்ளே ரூம்ல (association play room) போட்டு பூட்டிவிட்டுட்டான்? நம்ம எல்லாரும் ரொம்ப நேரம் தேடி அவளை கண்டுபிடிச்சோம், பயந்து போயிருந்தா. அவனை நீ கூட அடிச்ச. அப்ப என்ன கட்டிட்டு அழுதா பயத்துல, அப்ப உன்னை ஹக் பண்ணினா டெடி பேர் மாதிரி இருக்கு, நான் உன்னை buddy bearனு கூப்பிடவானு கேட்டா" வழிந்த கண்ணீரை துடைத்து விட்டு ஒரு புன்னகையை சிந்தினான்.

"டீன் ஏஜ் வந்தப்ப எனக்கு ப என்னோட பீலிங்க்ஸ் புரிஞ்சது. ஆனா, அவ என்னை விட அஞ்சு வயசு சின்னவ அவகிட்ட எப்படி விருப்பத்தை சொல்றதுன்னு அமைதியா இருந்தேன். அவ மனசை குழப்பகூடாதுன்னு." யாரோ அவ்வழியாக கடந்து செல்ல பேச்சை நிறுத்தினான்.

"அவ ப்ளஸ் ஒன் படிக்கும் போது மெதுவா ஒரு சில சமயங்கள்ல அவ நடவடிக்கை பார்த்து அவளுக்கு என் மேல ஈர்ப்பு இருக்குன்னு புரிஞ்சுது. பட் அப்பவும் அவ படிப்பு பாதிக்க கூடாதுன்னு அமைதியா இருந்தேன். அம்மா டெல்லி போனபிறகு அப்பாவோட நடவடிக்கைல மாற்றம் இருக்குனு தெரிஞ்சுது. அவரு முன்னாடிலேந்தே எங்க மேல அன்பாவோ, ஒட்டுதலோடவோ இருந்ததில்லை.

சின்ன வயசிலேருந்தே அப்பாவோட அன்புக்காக ஏங்கிபோயிருந்தேன். ஸ்கூல்ல உனக்கு அப்பா இல்லையாடான்னு கேலி பேசுவாங்க அப்பா அமேரிக்காவுல இருக்காருனு பொய் சொல்லுவேன்." விரக்தியில் சிரித்தான்,அர்ஜுனுக்கு வலித்தது.

"இப்ப அப்பா நார்மல் ஆகுறாங்கன்னு தெரிஞ்ச உடனே ரொம்ப சந்தோஷமா இருந்தது. அதன் வெளிப்பாடா, அவ பர்த்டே அன்னிக்கு, பூரணி கிட்ட ப்ரபோஸ் பண்ணேன், அவ உடனே யெஸ் சொன்னா". அந்த தருணத்தின் ஆனந்தத்தை இப்போதும் உணர்நதவன் போல வெட்கம் இழையோட புன்னகைத்தான்.

"ஆனா நாங்க ரெண்டு பேருமே ஒரு விஷயத்துல தெளிவா இருந்தோம் - அவளும் படிச்சு முடிக்கணும், ஒரளவு செட்டிலாகணும், அதுக்கு பிறகு தான் கல்யாணம் பத்தின பேச்சு" நிமிர்ந்து அவர்களை பார்த்தவன்.

"நீங்க என்ன நினைக்கறீங்கன்னு தெரியும் -நாங்க மீட் பண்ணினோம் . அவ மாத்ஸ் டியூஷன் போய்ட்டு வரும்போது நானும் என்னோட படிப்பு சம்பந்தமா ஒரு கோர்ஸ் போயிட்டு வருவேன் அப்ப மீட் பண்ணுவோம். ஏற்கனவே நாம ஃபிரண்ட்ஸுங்கறதால யாருக்கும் டௌட் வரலை. ஒரு வருஷம் எங்க லவ் உங்க யாருக்கும் தெரியாம பாத்துக்கிட்டோம். சுகந்தி ஒரு முறை உன் தம்பிக்காக ஏதோ நேத்திகடன் செலுத்தணும்னு நீங்க எல்லாரும் குலதெய்வம் கோவிலுக்கு போனீங்க நினைவிருக்கா? எனக்கு அப்ப செமஸ்டர் இருந்ததால நான் வரல."

"ஒரு நாள் அம்மா போன் பண்ணி ரொம்ப அழுதாங்க, அப்பா இடையில நாலு நாள் காணாம போயிட்டதாவும், இவங்களுக்கு பாஷை தெரியாததால நண்பர் உதவியோட போலீஸ் கம்ப்ளைன்ட் குடுத்து அவங்க அவரை கண்டு பிடிச்சதாவும் சொன்னாங்க, காசியில இருந்து, அப்ப தான் கால் பிராக்ச்சர் ஆச்சு. இன்னும் ரெண்டு நாள்ல பரிட்சை முடிஞ்சிரும் லீவுக்கு அங்க வரேன் பயப்படாதீங்கனு சொன்னேன். அப்பா தன்னோட சம்பாத்தியம், சொத்து எல்லாத்துக்கும் என்னை வாரிசா நியமிச்சு உயில் எழுதி வச்சிட்டு, சன்னியாசம் வாங்கிக்க போறதா சொல்லிருக்காரு. அம்மா ரொம்ப ஒடிஞ்சு போய் அழுதாங்க. நான் ரொம்ப குழம்பிட்டேன்.

எனக்கு அப்பாவோட நிழல் கிடைக்கவே கிடைக்காதா வாழ்க்கையிலனு என்னோட பழைய வலியெல்லாம் மனசுல ஓட அப்படியே உட்கார்ந்துட்டேன். அன்னைக்கு நான் ஈவ்னிங் க்ளாஸுக்கு போகலை. எனக்காக வெய்ட் பண்ணிட்டு பூரணி நேராக வீட்டுக்கு வந்தா"
ஒரு சில வினாடி மௌனத்திற்கு பிறகு

"அம்மா அவளை நம்ம குல சாமின்னு சொல்லுவாங்க அர்ஜுன். ஏன் தெரியுமா?" கண்களில் நீர் கோர்க்க.
"அன்னிக்கு மட்டும் அவ வந்திருக்கலைனா நான் இன்னைக்கு இல்லை! ஸூசைட் பண்ண வீட்டுல இருந்த ஏதோ மருந்தை எடுத்துவச்சிருந்தேன்", அதிர்ந்தனர் இருவரும்.

"முதல்ல அவளுக்கு தெரியாது, நான் ஏதோ கோவத்துல தான் கதவை திறக்கலைன்னு நினைச்சா. அவ பிடிவாதமா கதவை திறக்குறியா இல்ல ஆளை கூப்பிட்டு கதவை உடைக்கட்டுமானு கேட்டா. கதவை திறந்தேன், உள்ள வந்தவ எல்லாத்தையும் பாத்துட்டு ஒண்ணுமே பேசலை. ஒரே அறை, கன்னத்துல. எனக்கு ஒண்ணுமே புரியல ஆனா, அந்த அடி என்னை ஒரு நார்மல் நிலைக்கு கொண்டு வந்துச்சு.

அவ கிட்ட விஷயத்தை சொன்னேன். நம்ம ரெண்டு பேர் அம்மாவுக்கும் இருக்கிற தைரியம் கூட உனக்கு இல்ல சிவா, உன்னை நம்பி எப்பிடி டா காதலிச்சு கல்யாணம் பண்றதுனு கேட்டா. ஆடி போய்ட்டேன். பதினாறு வயசுல அவளுக்கு இருந்த பக்குவம் எனக்கு இல்லை. இது தான் எல்லாத்துக்கும் தீர்வுன்னா வா ரெண்டு பேரும் சேர்நது சாகலாம். முதல்ல உன் கையால எனக்கு விஷத்தை குடு அப்படின்னா. உடைஞ்சு அழுதுட்டேன். தைரியம் சொன்னா". இடையில் நிறுத்தி தண்ணீர் குடித்தான்.

அதன்பின் அவள் கொடுத்த முதல் முத்தத்தை பற்றி சொல்லவில்லை. ஏனெனில் மற்றவர்களுக்கு அது ஹார்மோன்களின் உந்துதல் என தோன்றலாம். ஆனால் அவனுக்கு மட்டுமே தெரியும், அவன் துவண்டுபோன நேரம் ஒரு துணையாய், நின்று அவனுக்கு அன்பையும், ஆறுதலையும் மன உறதியையும் அவள் பகிர்ந்தாள் என்பதை.

"அப்புறம் அம்மாகிட்ட பேசவெச்சா அவங்களுக்கு போன்ல உண்மையை சொல்லாம, எங்க லவ் மேட்டரை சொல்லி அவங்க ஆசிய கேட்டா, மனசையும் ரிலாக்ஸ் பண்ணா. போனை வச்சபுறம், அம்மா எவ்வளவு சந்தோஷமா பேசினாங்க பாரு இவ்வளவு பெரிய இக்கட்டுல இருந்தும்? ரெண்டு பேர் அம்மாவும் புருஷனால தான் சந்தோஷமா இல்லை, பிள்ளைங்க நம்மாலையாவது சந்தோஷமா இருக்கட்டுமே டா, அப்படீன்னு சொன்னா".

"ரெண்டு நாளைக்கு அப்புறம் என்னோட கடைசி பரிட்சை அன்னிக்கு நான் அவளுக்காக வெய்ட் பண்ணி அவளை காணலைன்னு அவங்க வீட்டுக்கு போனேன்". நிறுத்திவிட்டு இருவரையும் பார்த்து கேட்டான், "அவளோட இந்த Short term memory loss எப்படின்னு தெரியுமா?"

"நாங்க ஊருக்கு போயிட்டு வந்தப்ப தான் அவ ஹாஸ்பிடல்ல இருந்தா. என்ன ஆச்சு அண்ணா?" சுகந்திக்கு ஆரம்பம் முதலே விபத்து என்பதை ஏற்க முடியவில்லை.

"அவ வீட்டுக்கு போனேன், அங்க ஒரே சத்தமா இருந்துச்சு. பூரணி கத்துற சத்தம் க்ளியரா கேட்டுச்சு. யாரோ ஒரு ஆளு அவ கிட்ட..." முகத்தில் வலியும் கோபமும் ஒருசேர நரம்புகள் புடைக்க.. "அவனை பிடிச்சு கீழ தள்ளினேன். அந்த ஆளு அவங்க அப்பாவுக்கு தெரிஞ்சவன், தண்ணி அடிச்சுட்டு வீட்டுக்கு வந்துருக்கான். வந்தவன் பூரணி கிட்ட அத்துமீற முயற்சி பண்ணவும்... அவ அப்பாவும் குடிச்சிருந்ததால அவரால் அவனை ஒண்ணும் செய்ய முடியலை."

விக்கித்து போனார்கள் அர்ஜுனும் சுகந்தியும், முகத்தை மூடி குலுங்கி அழுதான் விஷ்வா.
"நான் முடிஞ்சவரைக்கும் அவனை அடிச்சேன். பூரணி பயந்து போய் ஓரமா நின்னுட்டு இருந்தா. அவன் தப்பிச்சு வெளிய ஓடுனான். அவ வீட்டுல போன் கூட இல்லை. அப்பாவுக்கு அடி பட்டுருக்குமோனு பூரணி பயந்தா. ரெண்டு பேரும் அவரை தரையிலேருந்து தூக்கும்போது அவன் திரும்பவும் உள்ள வந்ததை பார்க்கல. கையில எதையோ எடுத்துட்டு வந்தவன் பூரணிய தலையில அடச்சிட்டு ஓடிட்டான்".

அவனை தேற்ற சிறிது நேரம் தேவைபட்டது. "என் உசிர காப்பாத்தின என் தேவதை என் கண்ணு முன்னாடி உயிருக்கு போராட ஆரம்பிச்சா. ஆம்புலன்ஸ்க்கு கால் பண்ணவும் அவ அம்மா வரவும் சரியா இருந்தது. இங்க தான் கொண்டு வந்தோம். போராடி ட்ரீட் பண்ணி, கிட்டத்தட்ட ரெண்டு நாளைக்கப்புறம் கண் முழிச்சா. இங்க இருந்த நேரத்துல அத்தை கிட்ட எங்களை பத்தி சொல்லிட்டேன். கண்முழிச்சு பூரணி ஏன் ஹாஸ்பிடல்ல இருக்கேன்னு கேட்டா. உண்மையை இப்ப சொல்ல வேண்டாம் அவ மனநிலை எப்படி இருக்குனு பாத்துட்டு சொல்லலாம்னு டாக்டர் சொல்லியிருந்தாங்க. அதனால அவங்க ஆக்ஸிடெண்ட ஆனதா அவகிட்ட சொன்னாங்க. என்னை பார்த்து இவரு யாருனு கேட்டா, எங்க எல்லாருக்கும் அதிர்ச்சி."

"என்னால இதை ஏத்துக்க முடியலை ஆனா டாக்டர் என்னை அமைதியா இருக்க சொல்லிட்டு நான்தான் அவளை காப்பாத்தினதா சொன்னாங்க. அப்பறம் சில டெஸ்ட் எல்லாம் எடுத்துட்டு என் கிட்டயும் அத்தைகிட்டையும் அவளுக்கு short term memory loss ஏற்பட்டு இருக்குன்னு கன்பர்ம் பண்ணாங்க. அத்தை பாவம், அவங்களோட ஒரே பிடிப்பு இவ தான். நிஜமாவே இரும்பு மனுஷி டா அவங்க."

"உண்மை தான் அண்ணா. பூரணி ஆக்ஸிடண்டுக்கு பிறகு எவ்வளவு பிரச்சினைகள். அந்த நாட்களெல்லாம் நினைச்சா... இப்ப தான் புரியுது அவ ஏன் வேத்து ஆளுங்க, அதாவது ஆண்களை பாத்து பயந்தானு. ச்சீ எவ்வளவு கேவலமான ஆளுங்க.."

"அவன் என்னடா ஆனான் விச்சு"?

விஷ்வா உதடு பிதுக்கினான். "அவ என்கிட்ட சத்தியம் வாங்கிட்டா அவனை விரட்டிட்டு போககூடாதுன்னு." கண்கஸ்ரீஐ இறுக முடி அந்த தருணத்தின் வலியை கடக்க முயன்றான்.

"சரி டாக்டர் என்ன சொன்னாங்க"?

"டாக்டர் பூரணியை ஹான்டில் பண்ண வேண்டிய வழியையும் சொல்லி குடுத்து எங்களுக்கு கௌன்சலிங்க் பண்ணாங்க. அங்க அம்மாவுக்கு என்னோட தேவை ஏற்பட்டுச்சு. அம்மாவா பூரணியான்னு ஒரு இக்கட்டுல வந்துது வாழ்க்கை. அத்தை என்னை புறப்பட சொன்னாங்க. கடைசி எக்ஸாம் எழுதிட்டு ஊருக்கு போனேன். பித்து பிடிச்ச மாதிரி இருந்தது, ஒரே நாளுல எல்லாமே தலைகீழா மாறிடிச்சு. உசிரு போற மாதிரி இருந்தது அர்ஜுன், அவளை அந்த நிலைமையில பாக்கும் போதும் அவளை விட்டு பிரியும் போதும்." அர்ஜுன் அவனை அணைத்து கொண்டு கண்ணீர் சிந்தினான். உயிராய் நேசிப்பவளை அந்த நிலையில் பார்க்க யாரால் தான் முடியும்?

"டெல்லி போய்ட்டு, அத்தை கிட்ட டெய்லி போன்ல பேசிட்டு தான் இருந்தேன். பூரணி சொன்ன அட்வைஸும், அவளோட காதலும் தான் என்ன தூக்கி நிறுத்திச்சு. அப்புறம் அத்தையோட பொறுமையான வழிகாட்டுதலும் அன்பும். அவங்களுக்கு இருக்குற பிரச்சினைகள்ல என்னையும் புரிஞ்சுக்கிட்டு, பேசுவாங்க".

சுகந்தி மெல்ல மௌனத்தை கலைத்தாள். "இன்னைக்கு டான்ஸ் ஆடும் போது யாரோ வீடியோ எடுத்தாங்கனு சொல்லி புலம்புனா. அப்பறம் உங்களை பாத்துட்டு .."

"அவ ஒரு நாள் என்கிட்ட நான் உனக்காக ஒரு டான்ஸ் ஆடுவேன் நீ அதை ரெக்காரட் பண்ணி வெச்சிக்கோ டெல்லி போன பிறகு என் நினைவு வரும் போது அதை பாரத்துக்கோனு சொன்னா. அப்ப ஹேண்டி கேம் வாங்கின புதுசு, ஸோ அவ ஆடினதை ரெக்காட் பண்ணினேன். இப்பவும் அதை வெச்சிருக்கேன். இன்னிக்கு டான்ஸ் ஆடுனதை வீடியோ எடுத்திருந்தா எனக்கு அனுப்பு சுகந்தி ப்ளீஸ்!" என்றான் விஷ்வா.

சிறிது கனத்த மௌனத்திற்கு பிறகு, "விச்சு, பூரணிக்கு பழைய நினைவு வருமா? உங்க ரெண்டு பேரோட லைப்?"

"பூரணிக்கு குணமாகி பழைய நினைவுகள் வரலாம், வராமலும் போகலாம். தானா இயல்பா வரது தான் ஸேப். நாம நினைவுபடுத்த முயற்சிக்க கூடாது. இதுதான் டாக்டர் சொன்னது. நேத்து என்னை திடீர்னு பார்த்ததும் அவ மைண்ட்ல ஏதோ மாற்றம் ஏற்பட்டு இருக்குனு நினைக்கிறேன். சுகந்தி உன் கிட்ட ஏதாவது சொன்னாளா என்னை பத்தி?" என்றான்.

"நீங்க யாருன்னு கேட்டா? நான் சொன்னேன் ஒண்ணும் ரியாக்ட பண்ணல. ஏன் அண்ணா?"

"அத்தை சொன்னாங்க நைட்டு ஏதோ கனவு கண்டு பயந்தாளாம். அதை விவரித்தான்.

"ஏன் விச்சு அவ இப்ப உன்னை பேர் சொல்லி தான கூப்பிட்டா? அப்ப நினைவு வந்திருக்குமா?"

"தெரியல அர்ஜுன்! டாக்டர் சொன்ன ரீசன், அவ என்னை பாத்தது, சின்ன வயசுல ஒண்ணா வளந்தோம்னு தெரிய வந்தது, இதெல்லாம் அவளை சிந்திக்க தூண்டியிருக்கும். ஓவர் திங்கிங் (over thinking) பண்ணினதுல மூளை சோர்வு அடைஞ்சிரும். psychological problems இருக்கறவங்களுக்கு இப்படி ஆகும். அம்மா விஷயத்துல பாத்திருக்கேன்".

"ஆனா எனக்கு வாழ்க்கை துணை னா அவ தான். அவளுக்காக ஆயுசு பூரா காத்திருக்க தயார். I'm ready to fall in love with her all over again. அவ மனசு பாதிக்காம நடந்துக்கணும். இத்தனை வருஷத்துல எனக்கு கொஞ்சமும் அவ மேல இருந்த காதல் குறையல, அதிகமா தான் ஆகியிருக்கு. அவளை நேர்ல பாக்க முடியாம, அவ பக்கத்துல இருக்க முடியாம, ஒரு நடை பிணம் மாதிரி இருந்தேன். அப்பா வாழ்ந்த வீட்டை விட்டு வர மாட்டேனுட்டாங்க அம்மா, டிப்ரெஷன் வேற...இவ்வளவு வருஷம் டெல்லியிலேயே இருக்கும்படி ஆயிடுச்சு".

அறையில் முனகல் சப்தம் கேட்க, உள்ளே விரைந்தனர். பூரணி மெல்ல கண் திறக்க முயன்று மீண்டும் அமைதியாக உறங்கிவிட்டாள்.

'செல்லம்மா போதும் டீ, என் கிட்ட வந்துரு, முடியலடா. மொத்த வாழக்கையுமே யூஸ்லெஸ்ஸா பீஸ் ஆகுது.'

🍁🍁🍁🍁

🎶 மறுவார்த்தை பேசாதே
மடி மீது நீ தூங்கிடு
இமை போல நான் காக்க
கனவாய் நீ மாறிடு

மயில் தோகை போலே
விரல் உன்னை வருடும்
மனப்பாடமாய்
உரையாடல் நிகழும்

விழி நீரும் வீணாக
இமைத்தாண்ட கூடாதென
துளியாக நான் சேர்த்தேன்
கடலாக கண்ணானதே

மறந்தாலும் நான் உன்னை
நினைக்காத நாளில்லையே
பிரிந்தாலும் என் அன்பு
ஒருபோதும் பொய்யில்லையே🎶




Bạn đang đọc truyện trên: Truyen2U.Pro