💝👀காற்றாய் வருவேன்👣 உன்னோடு கதை பேச-28

Màu nền
Font chữ
Font size
Chiều cao dòng

அழகாய் விரிந்த இயற்கை காட்சிகளை வேடிக்கை பார்த்து கொண்டு வந்தவள் மீண்டும் தொடர்ந்தாள்.

"மதனை நான் முதல் முதலா அங்க தான் பார்த்தேன். அப்பாவும் அப்போ தான் அண்ணனும் அவனும் கொஞ்ச நாளைக்கு முன்ன தான் ஏதோ புதுசா பிசினஸ் ஆரம்பிச்சிருக்காங்கன்னு சொன்னார். எனக்கு ரொம்ப குழப்பமா இருந்தது.

அண்ணனுக்கு எப்பவுமே அப்பாவோட பிசினஸ்ல ஹெல்ப் பண்ணி ப்ர்ஸ்ட் ப்லெஸ்க்கு எடுத்துட்டு போகணும்னு தான் சொல்வான். அப்படி இருக்கும் போது எனக்கு நினைவு தெரிஞ்ச நாளில் இருந்து புது பிசினஸ் ஆரம்பிக்க போறேன் ஆர் அது மாதிரி ஒரு ஐடியா இருக்குன்னு சும்மா பேச்சுக்கு கூட சொன்னது இல்ல.

சோ, அந்த இடத்துல ஏதோ தப்பு இருக்குமோன்னு டௌப்ட் ஆரம்பிச்சுது. பட்... எதுவுமே தெரியாம நாம எந்த முடிவும் எடுக்க கூடாது அண்ட் யாரையும் தப்பாவும் நினைக்க கூடாதுன்னு ஒரு சந்தேக கண்ணோடு அவனை லிஸ்ட்ல வச்சுருந்தேன்." என்றாள்.

அவ்வளவு மன கஷ்ட்டத்திலும் அவளின் நுணுக்கமான யோசித்து பார்க்கும் திறனை கண்டு ஒரு நொடி மெச்ச தான் தோன்றியது வருணுக்கு.

"நமக்கு நம்ம இருக்க பிஸ்னெஸ் பார்த்துக்கவே நேரம் போதலை... அப்படி இருக்கும்போது எதுக்கு அண்ணா இவன் கூட சேர்ந்து புது பிஸ்னெஸ் ஆரம்பிக்கணும்? இந்த கேள்வி தான் என் மனசில அறிச்சுகிட்ட இருந்த கேள்வி... என்ன பிஸ்னஸ் ஆரம்பிச்சாங்கன்னு கேட்டதுக்கு அப்பாக்கு அதுல விருப்பம் இல்லாததால நான் கேட்கலைன்னு சொல்லிட்டார். இதுல என்ன இருக்குன்னும் தெரிஞ்சுகனும் அண்ட் நான் சந்தேக படறேன்னும் அவனுக்கு தெரிய கூடாது... என்ன பண்றதுன்னு யோசிச்சேன்...

அப்பாகிட்ட நம்ம பிஸ்னெசை நானும் பார்க்கிறேன் பா.. எவ்ளோ நாள் தான் நீங்க மட்டும் பார்ப்பிங்கன்னு சொன்னப்ப அவர் சொன்ன பதில் எனக்கு ரொம்ப அதிர்ச்சியா இருந்தது.

அண்ணன் காணாம போனப்ப அவனை தேடுறதிலையும் அவன் காணாம போன வருத்தத்துலையும் ரொம்ப நொந்து போயிருந்தவங்க கிட்ட... இப்போதைக்கு உங்களால ஆஃபீஸ் ஒர்க் பார்க்க முடியுமான்னு தெரியலை உங்களுக்கு ஓக்கேனா பவர் மட்டும் கொடுங்க அங்கிள் என்னால முடிஞ்ச வரைக்கும் மேனேஜ் பண்றேன்னு அவருக்கே தெரியாம தந்திரமா பேசி சைன் வாங்கிருக்கான்.

அப்போ தான் அவன் மேல சந்தேகம் ஸ்ட்ராங்கா உருவாச்சு. அவனுக்கே தெரியாம அவனோட ஹிஸ்டரிய ஆராய்ச்சி செய்ய ஆரம்பிச்சேன்." என்றாள் தாரணி.

"வாவ்... தாரும்மா... அப்புறம் என்னாச்சு?" என்றான் வருண்.

"இந்த ஆராய்ச்சி முடியறதுக்குள்ள அவனே மறுபடியும் அப்பாகிட்ட வந்து பேச ஆரம்பிச்சான்... 'அங்கிள் எனக்கு தாரணியை ரொம்ப பிடிச்சிருக்கு. கல்யாணம் பண்ணிக்க விருப்பப்படறேன். நீங்க ஓகே சொன்னா அம்மா அப்பாவை வந்து பேச சொல்றேன்.' என்றான் மதன். அவன் கூறியதை கேட்டு உள்ளுக்குள் அதிர்ச்சி அடைந்தாலும் வெளியே காட்டி கொள்ளாமல்.. 'எனக்கு கொஞ்சம் டைம் வேணும்... அதோட தாரணிகிட்டயும் பேசிட்டு சொல்றேன்.' என்று அனுப்பி வைத்த அப்பா, உடனே என்னை ஊருக்கு வர சொல்லி சொன்னார்.

எனக்கும் எதுக்குன்னு தெரியலை யோசிச்சிட்டு வந்தேன். வந்ததும் அப்பா சொன்ன விஷயம் ரொம்ப யோசிக்க வச்சுருச்சு. ஆரம்பத்துலர்ந்து நடந்ததை யோசிச்சு பார்த்தா இந்த கல்யாணத்துக்கு அதுக்கும் கூட சம்பந்தம் இருக்க மாதிரி தோணுச்சு. அதனால அப்பாகிட்ட மட்டும் எனக்கு இருக்க சந்தேகத்தை சொன்னேன். அவருக்கும் சந்தேகமா இருக்குன்னு  சொன்னப்ப தான். ஏன் இந்த கல்யாணத்துக்கு சம்மதம் சொல்லி அது மூலமா ஏதாவது உண்மை தெரிஞ்சுக்க முடியுதான்னு பார்க்க கூடாதுன்னு தான் இந்த பிளான் பண்ணேன்." என்று நிறுத்தினாள்.

வருணுக்கு வந்ததே கோபம்... "அறிவிருக்கா உனக்கு? எவ்ளோ பெரிய  ரிஸ்க் எடுத்திருக்க? உனக்கு ஏதாவது ஒண்ணு ஆகியிருந்தா என்ன பண்றது தாரு?" என்றான் வருத்தமாக.

எதுவும் பேசாமல் லேசாக சிரித்தவள் மீண்டும் தொடர்ந்தாள்.

"அப்பா ஓகே சொன்னார். ஆனா கல்யாணம் ஒரு வருஷம் கழிச்சு தான்னு சொல்லிட்டார். அதனால அந்த மதன் கொஞ்ச்ம கோபமானான். அப்பா ஓகே சொல்லிட்டார்னு தெரிஞ்ச பிறகு என்கிட்ட பேசினான். நானும் சும்மா என்னன்னா என்னன்னு பேசிட்டு வச்சுருவேன். என்னோட சந்தேகபடி இங்கயும் என்னை கண்காணிக்க ஆள் போட்ருக்கான்னு தெரிஞ்சுக்கிட்டேன். என்னை பத்தி தெரியாம கொஞ்ச நாளில் என்கிட்ட பேசும் போது எதுக்காவது என்னை மட்டம் தட்டணும்னே பார்ப்பான். அவன் ஏதோ எனக்கு ஓரிய மனசு பண்ணி வாழ்க்கை தரான்னு நான் நினைக்கணும்னு ஏதாவது ஒண்ணு சொல்லிட்டே இருப்பான். எனக்கு என்னோட வேலை முக்கியம்...

அதனால அவன் பேசுறதை எல்லாம் கண்டுக்கவே மாட்டேன். அப்போ தான் எனக்கு சில விஷயம் தெரிய வந்துச்சு. அவன் ரொம்ப சாதாரண குடும்பத்தை சேர்ந்தவன். அதோட ஸ்கூல் முடிச்ச பிறகு ரொம்ப வருஷம் கழிச்சு தான் அண்ணன் கூட பேசிருக்கான். அதோட ..." என்று பேச முடியாமல் குரல்வளை அடைத்து கொள்ள விழிகள் கலங்கியது.

"தாரு.." என்று அவளின் கரத்தை பற்றி கொண்டான்.

"அவன் எங்கேயோ என்னை பார்த்துருக்கான். என்னை பிடிச்சு போனதால் என்னை பத்தி விசாரிக்க போய் தான் அண்ணன் பத்தி தெரிஞ்சு மறுபடியும் பிரென்ட் ஆனது. நாம விரும்புறதும் தெரிஞ்சுருக்கு. நமக்கு கல்...யா... ணம் ஆனதும் தெரிஞ்...சுரு..க்கு..." என்று முகத்தை மூடி கொண்டு அழ ஆரம்பித்தாள்.

பதறியவன், "தாரு அழாதடா... முடிஞ்சதை பத்தி இப்போ வருத்தப்படாத.." என்று வருடினான்.

விழிகளை துடைத்தவள், "எப்படியாவது என்னை அடையனும் அதோட சொத்தையும் சேர்த்து வாங்கணும்... அதுக்கு பிளான் போட்டு சங்கீதாவை ஏமாத்தி செத்த மாதரி டிராமா பண்ணி, அவன் பிரென்ட் வச்சு கல்யாண மேடை வரைக்கும் கொண்டு வந்து நிறுத்தி உன்னை லாக் பண்ணி  எல்லா வேலையும் செஞ்சு உன்னையும் என்னையும் பிரிச்சுட்டான்." என்றவள் நொடியும் தாமதியாமல் வருணை அணைக்க தடுமாறி நிறுத்தினான்.

"சாரி வரு. ரொம்ப சாரி. என்னால தான் சங்கீ லைஃப் ஸ்பாய்ல் ஆகிட்டு. உன்னோட வாழ்க்கையும் பாதிச்சு நான் உன்னை ரொம்ப கஷ்டப்படுத்திட்டேன்." என்றாள்.

"டேய்.. தாரும்மா... விடுடா. நடந்தது நடந்திருச்சு... அழாதடா." என்று மென்மையாய் நெற்றியில் இதழ் பதித்து அவளை அணைத்தவாறு ஓட்ட தொடங்கினான்.

"அவன் எதிர் பார்க்காத ஒண்ணு.  நான் ஊரை விட்டு வந்தது. என்னை கல்யாணம் பண்ண அண்ணன் சம்மதிக்க மாட்டான்னு நல்லா தெரிஞ்சு தான் பராவல்லன்னு அண்ணனை அடுத்து குறி வெச்சு தூக்கிருக்கான்னு ரொம்ப டௌப்ட் வந்துருச்சு.

மறுபடியும் எவ்ளோ தேடியும் அண்ணனை பத்தி எந்த ஒரு விஷயத்தையும் என்னால கண்டுபிடிக்க முடியலை. உன்னை மறுபடியும் பார்த்தபோ... ஒரு பக்கம் சந்தோஷம் இன்னொரு பக்கம் சொல்ல முடியாத வலி. நீ எனக்கானவன் இல்ல. இன்னொரு பொண்ணோட கணவன்னு என்னால தாங்கிக்க முடியலை. உங்க வீடுன்னு தெரியாமையே உங்க வீட்டுக்கு வந்தேன். அப்ப தான் சங்கீதா இறந்த விஷயம் தெரிஞ்சுது. அதை கேள்வி பட்டவுடனே என்னோட மனநிலையை சொல்ல முடியலை. அவ்ளோ வலிச்சுது. ரொம்ப குற்ற உணர்வா இருந்தது. இப்போவுமே சங்கிய நினைச்சா..." எனும் பொழுதே அவளை சுற்றி குளிர் பரவ தொடங்கியது.

அவளின் தோளில் யாரோ அழுத்துவது போல் தெரிய ஒரு நொடி அரண்டு விட்டாள்.

"வரு... இங்க.. என்னை... யாரோ... தொடறாங்க... " என்று பயத்தில் வார்த்தைகள் தடுமாறின.

வருணுக்கும் புரிந்தது.

"சங்கீ..." என்றான் மென்மையாய்.

காரிற்குள் குளிர் இன்னும் அதிகமாக.

"சங்கீதா... நீ... தாருவ... பய முறுத்துறடா.." என்றான் லேசாய் புன்னகைத்து.

மறுநொடி அவளை சூழ்ந்திருந்த குளிர் விலக விழி விரித்து பார்த்தாள் தாரணி.

"அப்படின்னா... வீட்ல இவ்ளோ நாள் இருந்தது சங்கீதாவா?" என்றாள் மெதுவாய்.

"ஆமாம்." என்றான் வருண்.

"உனக்கு மதன் மூலமா எதுவும் ஆபத்து வருமோன்னு பயந்து உன்கூடவே இருந்தா... அதோட அவளுக்கு உன்னை என்கூட சேர்த்து வைக்கணும். அதான்.." என்று வலியோடு சிரித்தான் வருண்.

"நான் சங்கியோட பேச முடியுமா என்கூட பேசுவாளா?" என்றாள் விழிகள் மின்ன ஆர்வத்தோடு.

"ம்ம்ம்... கண்டிப்பா உன்கிட்ட பேசுவா.. அவளுக்கும் உன்கூட பேச ஆசை..." என்று சிரித்தான் வருண்.

"எனக்கு அவகிட்ட பேசணும். என்னால அவ வாழ்க்கை பாழாகிடுச்சி. அது ரொம்ப வருத்தமா இருக்கு எனக்கு." என்றாள் விழிகளில் நீர் துளிர்க்க.

Bạn đang đọc truyện trên: Truyen2U.Pro