பகுதி 5

Màu nền
Font chữ
Font size
Chiều cao dòng

ஒரு நிமிடம் யாருக்கும் ஒன்றும் புரியவில்லை. அதே சமயம் அங்கு வந்த வசிகரன் "மாப்ள என்னாச்சு ? வனிதா வாழ்க்கை என நெஞ்சைப் பிடித்து கிழே விழுந்தார்.

விக்ரம் அங்கு வந்த ஒரு ஆம்புலன்சில் வசிகரனை ஏற்ற துணையாய் கீதாவை அனுப்பி வைத்தான்.

மற்றொரு ஆம்புலன்சில் விக்கி மற்றும் வர்ஷாவை ஏற்றி மற்ற அனைவரும் காரில் பின் தொடர்ந்து மருத்துவமனை அடைந்தனர்.

விக்கி இறந்து விட்டார் என டாக்டர் கூறினார். வர்ஷாவை காப்பற்ற முயற்சி செய்து கொண்டு இருந்தனர்.

வர்ஷா இறுதி சுவாசம் இருக்கும் போது வனிதாவிடமும் வருணிடமும் பேச வேண்டும் என்று கூறினாள்.

தான் மீளாத துயரில் இருந்தாலும் தன் தோழியின் உயிரைக் காப்பாற்ற மற்றும் தன் விக்கிக்கு என்ன நேர்ந்தது என்று அறிய அங்கு சென்றால் வனிதா.

" நான் விக்கிய காப்பாற்ற முயற்சி பண்ணி தோற்றேன். ஆனால் நீ என் அண்ணனா காப்பாற்றும் சத்தியம் பண்ணு அண்ணா தங்கையா நான் ஒன்னு கேட்டா நீ கண்டிப்பா செய்வ இல்ல அண்ணா.. வனிதாவும் நீயும் கல்யாணம் பண்ணிக்கணும் விக்கி ஒட கடைசி ஆசை.என் ஆசையிம்....ராஜேஷ் குற்றவாளி.. சத்தியம் பண்ணுங்க.. பிளீஸ்" என் கண் முட

" உன் ஆசை நாங்கள் நிறைவேற்ற டிரை பண்றோம் பட் நீயும் என்ன விட்டு போய்ட்டாத டா.. " என வனிதா அழ

" நீ இல்லாம நான் இல்ல டா எழுந்து வா டா" என வருண் கதற

வர்ஷா கோமா நிலைக்கு சென்றால்.

டாக்டர் " அவங்களுக்கு ரொம்ப. பிடிச்ச விஷயத்தை நீங்கள் அவங்களுக்கு நியபக படுத்த முயற்சி பண்ணுங்க அவங்க கண் விழிக்க வாய்ப்பு இருக்கு ஆனா கண் விழிக்காம போகவும் வாய்ப்பு இருக்கு" என் கூறினார்.

இடையில் வசீகரனின் நிலையை கூற டாக்டர் அவர்களை அழைத்தார்.

" உங்கள் தந்தை ஏதோ மன அழுத்ததில் இருக்கிறார். இது அவருக்கு இரண்டாவது அட்டாக். அவர் பிழைத்தது அதிசயமே. கொஞ்சம் பாத்து நடந்ததுக்கோ"

இருவரும் வசீகரனை காணச் சென்றனர். " வருண் என் பொண்ணு வாழ்க்கை இப்படி ஆகிடுச்சு .. எனக்கும் எதுவும் ஆகிட்ட வனிமாவ யாரு பாத்துப்பா?" என அழ..

ஏதோ நினைவு வந்தவராக " என் பொண்ணை கல்யாணம் பண்ணிக்க முடியுமா பா.. உன்ன தவிர யாரும் அவள புரிஞ்சுக்க முடியாது... "

" அப்பா நோ வொர்ரி வருண் இருக்கும் போது நீங்க வொர்ரி பண்ணலாமா ... நீங்க வீட்டுக்கு வந்ததும் எங்க மேரேஜ்... " என வருண் கூற
வசிகரன் வனிதாவை பார்க்க

"அப்பா எனக்கும் சம்மதம்.. நீங்க கவலைப் படாமல் ரெஸ்ட் எடுங்கள்" தன் தந்தை மட்டுமாவது தனக்கு வேண்டும் என எண்ணி அவ்வாறு கூறினால் வனிதா.

ராணி மகனின் நிலை அறிந்து துடித்து போனாள்.. வனிதாவே இதற்க்கு காரணம் என்று எண்ணி அவளை வெறுக்க தொடங்கினாள்.

யாருக்கும் கூறாமல் விக்கியின் உடலை பெற்று சொந்த ஊருக்கு காரியம் செய்ய சென்று விட்டாள்..
அனைவரும் துக்கத்தில் இருந்ததால் அதை கால தாமதமாகவே அறிந்தனர்.


வனிதா வருணிடம் " நான் கடைசியாக ஒரு தடவை அவர பார்க்கனும்"
என கூற அவன் அவளை அங்கு அழைத்துச் செல்வதற்குள் அனைத்தும் முடிந்தது.

அழது கரைந்தால் வனிதா.
வருணே அவளை சிறுது தேற்றினான்.

‌ஒரு வாரத்திற்குள் அவர்கள் திருமணம் சில நண்பர்கள் மற்றும் வசீகரம் முன்னிலையில் ரெஜிஸ்டர் ஆபீசில் நடந்தது.

இதை கேள்விப்பட்ட ராணி வெடித்தால் " இத முன்னமே செய்து இருந்தால் என் பையனாவது உயிரோடு இருந்திருப்பான்."

வசீகரனே தன் மகனை கொன்றதாக சந்தேகம் இருப்பதாக காவல் துறையினரிடம் கூறினால்.

ஆனால் அவர்கள் அதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.

விக்ரம் தானே இந்த கேஸை விசாரிப்பதாக கையில் எடுத்தான். அவன் எடுத்த எந்த வழக்கிலும் தோற்றதில்லை. தன் காதலியை கோமாவில் தள்ளியவர்களை சும்ம விடுவனா?

யோசித்து யோசித்து அவனுக்கு தலையே வெடித்து விடும் போல இருந்தது யார் இந்த ராஜேஷ். என்னை பார்கில் வெயிட் செய்ய சொல்லி இவள் எங்கு சென்றால் என ஆயிரம் விடை தெரியாத கேள்விகள்.

15 நாள் டிரெய்னிங் சென்றதால் கேஸில் கவனம் செலுத்த முடியவில்லை இப்போது கீதா திருமணம் . இது முடிந்தால் விசாரணையை முழுமையாக ஆரம்பிக்க வேண்டும்.

நிகழ்காலம் ‌‌..‌.

(விக்ரம் வர்ஷா ஓட flashback கொடுக்கவா இல்ல வேணாமா... அடுத்து ud பெரிய பகுதியா தர டிரை பண்ணுறேன்.. அதனால் வெள்ளிக்கிழமை அடுத்த பகுதி .... )

Bạn đang đọc truyện trên: Truyen2U.Pro