😘 சக்கர 22 😘

Màu nền
Font chữ
Font size
Chiều cao dòng

மனமகன் அறையில் மாப்பிள்ளைக்குறிய அத்துனை அம்சமும் பெற்று தயாராகிக்கொண்டிருந்தான் சக்தி ....

மணமகள் அறையில் அழகு பதுமயாய் அமைதியின் மறு உருவமாய் மாறி மணமகளுக்கே உரிய சிறிய நாணத்துடன் சற்று மெருகேற்றிய உடல் ...
முகப்பொழிவுடன் தயாராக அமர்ந்திருந்தாள் நிருபமா ....

சிறிது நேரத்தில் அனைவரும் வந்துவிட
நல்ல நேரமும் கைகூட சக்தி சிறு படபடப்புடன் உதட்டில் சிறு சிரிப்பு குடிகொள்ள நிருபமா கழுத்தில் திரு மாங்கள்யத்தை கட்டினான் ...
அவள் கண்களில் கண்ணீருடன் எதுவும் பேசாமல் அவன் கட்டிய தாலியை ஏற்றுக்கொள்கிறேன் என்றவாரு அமர்ந்திருந்தாள் ...

( எப்படி இந்த மாற்றம் அந்த நாலு வருசத்துல என்ன நடந்தது போய் பாத்துட்டு வந்தர்லாம் வாங்க ...
எல்லாரும் கல்யாண பிஸில இருக்காங்க ... அவங்க வரதுக்குள்ள சின்ன பிளேஸ் பேக்..... )

நிருபமாவை மன நலம் பாதிக்கப்பட்டோர் மருத்துவமனையில் சேர்த்தனர் ...
முதல் மூன்று மாதங்கள் மிகவும் சிரமமாக இருந்தது ...
அவளின் பிடிவாத குணமம் அவளின் அலறல் சத்தமும் அங்கிருந்த அனைவரையும் கதிகலங்க வைத்தது ....
அவளை கட்டுபாட்டில் கொண்டு வர மயக்க மருந்தையே கிட்ட தட்ட மூன்று வாரங்கள் வரை பயன்படுத்தினர் ....

தினமும் சரியாக சாப்பிடாமல் தூக்கம் இல்லாமல் அவள் முகமும் உடலும் மிகவும் சோர்ந்து போனது ....

நான்கு மாதங்கள் கடந்த நிலையில் ....
அடிக்கடி இரவு நேரங்களில் தன் அன்னையை நினைத்து அழுது வடிந்தாள் ......
சில நேரங்களில் கைக்கு கிடைத்ததை எடுத்துக்கொண்டு தேவாவை கொல்லபோவதாக மருத்துவமனையை விட்டு ஓடினாள் ....

அவளை பூட்டிவைக்கவும் முடியாமல் சரிசெய்யவும் முடியாமல் அவளை சுற்றி இருந்த அனைவரும் திணறிபோனார்கள் .....
அவளின் ஆட்டத்தை கண்ட அந்த மருத்துவமனை இன்று ஏதோ சற்று அமைதியாக இருந்தது அவள் நடவடிக்கைகளில் முன்னேற்றம் இல்லாவிட்டாலும் சிறிது மாற்றம் இருந்தது ....

எப்பொழுதும் கத்திக்கொண்டே சுற்றி திரிந்தவள் கடந்த மாதங்களில் மணிக்கணக்காக எதையோ யோசித்துக்கொண்டே இருந்தாள் ...
முழுமையாக பத்து மாதங்களுக்கு பிறகு விஸ்வநாதன் வீட்டிற்க்கு அழைத்து வர பட்டாள் ....
தொலைத்த இடத்தில் தானே தேட முடியும் ...
அவள் தந்தையின் அன்பை மறுபடியும் தேடினாள் ...

தினம் தினம் அவர் முகத்தை பார்க்க பார்க்க அவள் மனதில் சிறு மாற்றங்கள் ஏற்பட துவங்கியது ...
அவள் மனதின் ஆழத்தில் இருந்த அந்த தந்தை பாசத்தின் ஏக்கம் வெளிவர ஆரம்பித்தது ....

ஒரு நாள் அவர் சட்டையை பிடித்துக்கொண்டு வெடித்தழுதாள் ...
அவளின் கடந்த காலத்தின் மொத்த பாசம் ஏக்கம் கோபம் என்று அனைத்தும் அவர் மேல் இறக்கினாள் ....

நிருபமா : ஏப்பா என்ன விட்டு போன ...
ஏப்பா அம்மாவயும் என்னையும் விட்டு போன ....
(அவர் சட்டையை கொத்தாக பிடித்து உழுக்கினாள் )
அவள் தந்தையிடம் சிறு பிள்ளையாகவே மாறி போனாள்.....

அம்மா நீ இல்லாம ரொம்ப அழுதாங்கப்பா ....
என்ன அனாதையாக்கிட்டு ஏப்பா போன ...

(தான் பெற்ற பிள்ளையின் நிலையை கண்டு வருத்தம் கொள்ள கூட தகுதியில்லாமல் குற்றஉணர்வில் தவித்தார் ...)

நிருபமா : பேசுப்பா ...
இப்போவாச்சு பேசுப்பா ...

விஸ்வநாதன் : அப்டிலா இல்ல மா ....
உன்ன இந்த நெலமைல பாக்குற ஒவ்வொரு நிமிசமும் உள்ளுக்குள் துடிச்சுட்டு இருக்கேன் மா ...
இந்த பாவிய மன்னிச்சுரு மா...
மன்னிச்சுரு ...
(அவள் கைகளால் தலைதலையாய் அடித்துக்கொண்டார் ..... )

அவளும் தன்னை மீறி அழுதாள்
அழுது அழுது மயக்கம் கொண்டாள்...

அடுத்து வரும் நாட்களில் திடீரென்று நடு இரவில் அழுவதும் , வார கணக்கில் அறையை விட்டு வராமல் இருப்பதும் , ஒரு விளிம்பில் அணைத்து பொருட்களும் உடைத்து தன் கோபத்தை வெளிபடுத்துவதும் என்று வருடம் ஓடியது ....

அவள் மாற்றம் மாதத்திற்க்கு மாதம் வெவ்வேறாக இருந்தது ...
அவளை சரி செய்வதற்கான முயற்சிகள் தீவிரமாக நடந்து வரும் வேளையில் தேவா அவளை காண வந்தாள் கார்த்தியுடன் ...

தேவா வருகையை எவ்வாறு ஏற்றுக்கொள்ள போகிறாள் என்று
சற்று அச்சம் கொண்டாலும் நிருபமாவை முழுவதுமாக குணபடுத்த இதுவும் ஒரு வழியே......

தேவாவை பார்த்ததும் அதுவரை அமைதியாக இருந்த நிருபமா அவளை பிடித்து கன்னம் கன்னமாக அறைய துவங்கிவிட்டாள் ....

நிருபமா : ஏன்டி எங்கள பிரிச்ச ...
என்னோட அப்பாவ பிரிச்ச என்னோட அம்மாவையும் பிரிச்ச என்னோட சந்தோஷத்தையும் எடுத்துகிட்ட ...
என்னோட சக்தியையும் என்ட இருந்து எடுத்துட்ட இன்னு என்ன பண்றதுக்கு வந்துருக்க ...
போ டி போ.....
என் கண்ணு முன்னாடி நிக்காத...
போ ...
போ...
( அவள் மீதே விழுந்து அழுதாள்... )

தேவா : சாரி நிரு ....
நீ சொன்ன எதுவும் உன்ன விட்டு போல நிரு ....
அப்பா , சக்தி எல்லாரும் உன்கூட தான் இருக்காங்க ...
உன்னோட அம்மாவ என்னால தர முடியாது ஆனா ஒரு அம்மாவா இருந்து பாத்துக்க முடியும் ....
அழதா நிரு...
(அவள் மீது விழுந்தவளை அனைத்துக்கொண்டாள் .... )

நடந்ததெல்லா மறந்துடலாம் டா....
இது வரைக்கும் நீ வாழ்ந்ததெல்லாம் வாழ்க்கையே இல்ல ....
இனி தான் உன்மையான பாசம்னா என்னனு நீ தெருஞ்சுக்க போற ...
புதுசா லைஃப்ப ஸ்டார்ட் பண்ணலாம் நிரு ....

(நிருபமாவின் அழுகை நின்றபாடில்லை .... )

இதுக்கு மேலயும் என்மேல உனக்கு கோபம் போகலன என் உயிர எடுத்துக்கோ ....

தேவாவின் அம்மா : தேவா....
வயித்து புள்ளகாரி என்ன பேசுற ...

கார்த்தி : நில்லுங்க அவ பேசட்டும்...

தேவா : நிரு..
உன்னோட இடத்துல நான் இருந்தாலும் தேவ மேல கோபம் வந்துருக்கும் தான் ...
இனியாச்சும் நீ சந்தோஷமா இருக்கனும் ...

(அங்கு ஒரே அமைதி நிலவியது ...
தேவாவை ஏற்றுக்கொள்ள மணம் துடித்தாலும் அவளின் மூளை மட்டும் அதை ஏற்றுக் கொள்ளவில்லை ......
அவளை உதறி விட்டி விருட்டென்று எழுந்து அவள் அறையில் அடைந்துக்கொண்டாள் ....)

தேவாவிற்க்கு நிரு செயல் ஏமாற்றத்தை தந்தாலும் அவள் நிலையை புரிந்து அவளுக்கான நேரத்தை கொடுத்தாள் ....

அதன் பின் சிறிது சிறிதாக அவள் நடவடிக்கையில் மாற்றம் ஏற்பட்டது ...

சிறிது நாளிலே சக்தியும் நிருபமாவிற்க்கு துணையாக அவளுடன் இருந்தான் ...

சிறு வயதில் அவள் இழந்த ஒவ்வொன்றும் திரும்பி கிடைப்பதை அவள் உணராமல் இல்லை ....

தேவாவும் விஸ்வநாதன் மீது கொண்ட கோபம் மாறாமல் பேசாமலேயே இருந்தாள் ....

அடிக்கடி அவளை வந்து பார்த்து சென்றாள் ஆனாலும் நிரு அவளை ஏற்றுக்கொள்ளவில்லை....

காலத்தால் மாற்ற முடியாதது எதுவும் இல்லை..

கிட்டதட்ட இரண்டறை வருடங்களுக்கு பிறகு ....

சக்தி : டாக்டர்..
இப்போல முன்னமாறி இல்ல டாக்டர் நல்ல பேசுறா ...
டைம்க்கு தூங்குறா ..அழறது கூட இல்ல ...
ஆனா அப்போ அப்போ அவளுக்கு பயங்கரமா தலை வலிக்குதுனு சொல்றா டாக்டர் ...

டாக்டர் : அது ஒன்னும் மிஸ்டர் . சக்தி அவங்களுக்கு கொடுத்துருக்கிற டேலெட்ஸ் அப்டி ...
டேப்ளட்ஸ் கொஞ்சம் கொஞ்சம் கம்மி பண்ணி மொத்தமா ஸ்டாப் பண்ணிட்டா வலி வரதும் கம்மி ஆகிடும் .....

முழுமையாக குணமடைந்த நிருபமாவை மேலும் தன் திகட்டாத அன்பினால் சக்தி மனதளவிலும் அணைத்து உறவையும் ஏற்றுக்கொள்ளும் படி செய்தான் ....

நிருபமாவின் நண்பனும் கூட இப்போது நல்ல வேளையில் சேர்ந்து குடும்ப வாழ்க்கையை துவங்கி இருந்தான் ....

அணைவரின் நல்லாசி பெற்று இதோ இன்று நிருபமா சக்தியின் திருமணமும் முடிந்து விட்டது ....

கடைசியாக நிருபமாவிற்க்கு அவள் இழந்த தந்தை பாசமும் தேவாவின் மூலமாக தாயின் பாசமும் சக்தியினால் தன் கணவனுக்கு மேலான ஓர் அக்கரை என்று தன் வாழ்வின் அர்தத்தை உணர்ந்தாள் நிருபமா ....

கார்த்தி தேவா...
தவின் அஞ்சலி...
சக்தி நிருபமா...
அணைவரின் சார்பாக மிகப்பெரிய நன்றி....

சுபம் .

................................................................

ஒரு வலியா கதைய முடிச்சுடேன் ...
உங்களுடைய கருத்துக்கள் வரவேற்க்கபடுகின்றன ....

அடுத்து ஒரு கதை எழுதிட்டு இருக்கேன் ஆனா கண்டிப்பா முடிச்சதுக்கு அப்றம் தான் வெளியிடுவேன் ..
கொஞ்ச நாளைக்கு என்னோட தொல்லைகள் இல்லாமல் இருக்கலாம் ....

அப்றம் என்னோட கதைக்கு காத்திருந்து என்னை எழுதும் படி ஊக்கபடுத்திய அணைத்து நல்ல உள்ளங்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள் 🍫🍫🍫🍫🍫🍫🍫🍫

நிறையபேர் கேட்டாங்க இந்த ஸ்டோரிக்கு எதுக்கு சக்கரனு பேர் வெச்சிங்கனு ...
சத்தியமா எனக்கே தெரியாது ...
சும்மா வெச்சது தான் .... ஆனா கதைகளத்துக்கும் பேருக்கும் சம்மந்தமே இல்ல ....
இப்போ பேர் மாத்துற எண்ணம் இல்லை கொஞ்சம் அட்சஸ் பண்ணிக்கோங்க ....

எதாச்சும் மிஸ் பண்ணிருந்தா கமென்ட் பண்ணுங்க ...
ஒரு epilogue போடலாம் (தேவைபட்டால் மட்டும் ) ...

ரொம்ப பேசிட்டேன் ....
சந்திப்போம் விரைவில் ......

மீண்டும் ஒரு முறை என்னை ஊக்கபடுத்தி உற்சாகபடுத்திய எனதருமை தோழமைகளுக்கு மிகப்பெரிய நன்றிகள் .....
😊😊😊😊😊😊

Bạn đang đọc truyện trên: Truyen2U.Pro