😘 சக்கர 5 😘

Màu nền
Font chữ
Font size
Chiều cao dòng

அவளை பளாரென்று அறைந்ததும் அவன் அறைக்குள் சென்று விட்டான்....

இப்போது இங்கு என்ன நடந்தது என்று புரிந்து கொள்ள முடியாமல்
வலி மட்டும் நன்றாக உறைத்தது ....
கன்னத்தில் கை வைத்தவாறே அவன் பின்னாடியே சென்றாள்....

தேவா : எதுக்கு மாமா அடுச்ச..
சாயங்காலமே நீ சரியா பேசல...
இப்போ எதுக்குனே தெரியாம அடிக்குற...
என்ன நெனச்சுட்டு இருக்க மனசுல....
எனக்கும் கோவம் வரும்...
என்று கண்கள் கலங்க கேவிக்கொண்டே அவனை முறைத்துக்கொண்டிருந்தாள்...

கார்த்தி : அதே கோபத்தோடு...
வீட்டுக்கு சீக்கிரமா வரனுனு தெரியாதா டீ உனக்கு...
உன்ன தேடி ரோடு ரோடா அலஞ்சுட்டு வர.....
எதுக்கு அந்த மானங்கெட்ட போன வெச்சிருக்கியோ..
போன் பண்ணா நாட் ரீச்சபிள்...
சரி வீட்டுல ஒருத்தன் இருக்கானே அவ இன்னு வரலயேனாச்சு கூப்ட்டியா....
12 மணிக்கு சவகாசமா கூப்ட்ற..
அப்போ மட்டு எதுக்கு கூப்ட இருக்கானா செத்துட்டானானு தெரிஞ்சுக்க  கூப்டியா....
(என்று ஒவ்வொரு வார்த்தையும் பதட்டம் தவிப்பு என கூற முடியாத உணர்ச்சிகளோடு வந்து விழுந்தது...)

தேவா : நீங்க வர லேட் ஆகு..... (அவனது தவிப்பை நன்றாக புரிந்துக்கொள்ள முடிந்தது தேவாவினால்....)

அவள் பேசி முடிப்பதற்குள்...

கார்த்தி : போது தேவா போய் தூங்கு தேவையில்லாம பேசி கோவத்த கெலராத....
என்று கட்டிலில் படுத்துக்கொண்டான்....

தேவா : அவன் மனநிலையை சரியாக யூகிக்க முடிந்தது...
ஆனால் அவன் பேசிய வார்த்தைகளை மட்டும் தாங்கிக்கொள்ள முடியவில்லை........
(கொட்டிய வார்த்தைகளின் வலி தீக்காயம் போன்றது காயம் ஆறினாலும் வடுவை மாற்ற இயலாது....)

அவனை அப்படியே விட்டு செல்ல மனமில்லை..
சாப்பிடவும் இல்லை என்ன செய்வதென்று தெரியாமல் அந்த அறையிலே அங்கும் இங்குமாய் நடந்து கொண்டிருந்தாள்....

கார்த்திக்கும் தூக்கம் வர வில்லை அவளை வேறு அடித்து விட்டான் என்று அவன் மீதே கோபம் ஏற்பட்டது ..

கார்த்தி : தேவா..
அவள் கவனிக்கவில்லை..
மறுபடியும்.
தேவாா.... ( சற்று உறக்கமாக.....)

தேவா : சற்று பதட்டமாக ..
என்ன மாமா பசிக்குதா??
எதாச்சும் வேனுமா ....
சாப்பாடு ஊட்டி விடவா...
என்று அவன் அழைத்ததே போதும் என்று படபடவென்று கேட்டாள்....

கார்த்தி : ( செ...
எவ்ளோ திட்டிடோம்...
அடிக்க வேற செஞ்ச ஆனா என்னபத்தியே நெனச்சுட்டு இருக்கா.... உனக்கு அறிவே இல்லயாடா யாரோ மேல இருக்க கோவத்த அவ மேல காட்ற Mind voice)
(அவள் கண்களை பார்த்து )
நீ சாப்டியா ??(வார்த்தைகள் வெளியே வர மறுத்தது தொண்டை அடைத்தது)

தேவா : இல்ல...
நீங்க வராம எப்டி ???
என்று குனிந்துக்கொண்டாள்...

கார்த்தி : அவள் அருகில் வந்து அவள் முகத்தை கையில் ஏந்திக்கொண்டு....

Sorry டா மல்கோவா ...
மதியத்துல இருந்து ரொம்ப டென்சன்...
வீட்டுக்கு வந்தா நீ இல்ல...
புத்தி ஒன்னு சொல்து.  மனசொன்னு சொல்லுது...
பைத்தியமே பிடிக்குது டீ..
அதா அடுச்சுட்ட..
என்ன மன்னிச்சுரு தேவா...
(என்று அவளை கட்டிக்கொண்டி அழுக ஆரம்பித்துவிட்டான்.....)

தேவா : மாமா.. சரி அழாத...
எனக்கு ஒன்னு இல்ல (அவளது கண்களில் வழியும் நீ பேசியது அவளது வலிகளை பற்றி)...
நீ அடிச்சது கூட எனக்கு வலிக்கல ஆனா இப்டி அழுகாத மாமா என்னால தாங்க முடில...
என்னதான அடிச்ச ரோட்ல போறவங்கலயா அடிச்ச...
விடு மாமா..
பசிக்குது வா சாப்டலாம்....
(என்று தன்னால் இயன்ற வரை அவள் வலிகளை மறைத்து அவனை சமாதானப்படுத்தினாள்...)

ஆண்களில் அழுபவன் கோழையுமல்ல....
அனைவரையும் கட்டுபாட்டில் வைத்திருப்பவன் வீரனுமல்ல........

அவன் சிரிப்பு உனக்கு சொந்தம் என்றால் அவன் அழுகையும் உனக்கு சொந்தமே....

அவனது சொல்லும் செயலும் உன்னை காயபடுத்தி விட்டதென்று அவன் உணர்தாலே மறுமுறை அவனிடத்தில் வார்த்தைகள் கவனமாகிவிடும் அவனைஅறியாமலே.....

மனைவி என்பவள் கணவனின் இன்பத்தில் மட்டுமல்ல துன்பத்திலும் பங்கு கொள்பவள் ...
தன் வலிகளை மறைத்து தன்னவனுக்காக தன்னை மாற்றிக்கொள்பவள்...

நீ ஐந்தடி பாய்ந்தால் நான் ஐம்பதடி பாய்வேன் என்று அவனுக்கு சரிசமமாக நின்றால் அதுதான் இன்று விவாகரத்திற்க்கு முதல் அடி....

ஒரு முறை நீ விட்டு கொடுத்து போனால் அடுத்த முறை அவன் விட்டு கொடுப்பான்...

உன் வலிகளை அவனுக்கு புரியும் படி விளக்கச்சொல்
அவன் வலிகளை கேட்டால் உன் வலிகள் தானாக மறைந்துவிடும் ....

சில பொய்கள் சொல்லி உன்னை சமாதானப்படுத்திகிறாள்...
அவள் சொல்வது பொய் என்று தெரிந்தும் அவள் ஆருதலுக்காக நீ சமாதானமடைவதே காதலின் விளக்கம்.....

தேவா : (தோசையை எடுத்து அவனுக்கு ஊட்டியவேறே.. )
மாமா...
நா உன்னவிட்டு போய்டனா நீ என்ன பண்ணுவ....

கார்த்தி : நீ..... என்ன விட்டு...
நா கூட நீ இல்லாம இருந்திருவ...(இதை சொல்லும் போதே அவன் சிரித்துக்கொண்டான்...)
ஆனா உன்னால முடியாது மல்கோவா....

தேவா : நா செத்து....

கார்த்தி : அவளை பேச விடாமல் தோசையை வாயில் தினித்தான்....
லூசி எனக்கு தூக்கம் வருது தப்பு தப்பா பேசாமா சீக்கிரமா வா.....

தேவா : நீ ஏத்துப்ப மாமா நா இல்லாமா உன்னால வாழ முடியாது..
ஆனா நீ கத்துட்டு தா ஆகனும்..உன்ன விட்டு நா ரொம்ப தூரம் போய்டுவ....
என்று தன் மனதில் யோசித்தவள் அது நடக்காமல் இருக்க ஆயிரம் முறை இறைவனை வேண்டினாள்....

அவளது கன்னத்தில் இவன் கைதடம் நன்றாகவே பதிந்திருந்தது....
அதை வருடும் போதே கண்கள் மேலும் மேலும் கண்ணீரை தத்தெடுத்து கொண்டது....

அவளுக்கு வலிக்காதவாரு மெல்ல வருடி தன் அணைப்பில் அவளை உறங்க வைத்தான்...

அவன் மார்பை விட பாதுகாப்பான இடம் வேறெது என்பதை போல அவனுள் அவளை தேடினாள் தேவா...

மெல்ல அவனிடம்..
தேவா : மாமா இனி அந்த மாறி பேசமாட்டேன் சத்தியம் பண்ணு...

கார்த்தி : எந்த மாறி....

தேவா : நீ என்ன பேசுனியோ நீ மறக்க மாட்ட...
ஆனா இனி அப்டி பேசாதா....

கார்த்தி : சின்ன தலை அசைப்பை பதிலாக அளித்தான்....

.................................................................

Eni poga poga update long ah podren Kojam adjust pannikonga my Dr frs and thanks for ur support.....

Plz share ur votes and valuable comments 😊😊😊😊😊😊😊😊

Bạn đang đọc truyện trên: Truyen2U.Pro