நோய் தாக்கி
நரை தூக்கி
தலை தூக்கி
இமை தூக்கி
வாய் தூக்கி
சொல் தூக்கா
நிலை தூக்க,
உனை நோக்கி
கரம் தூக்கி
எனை காக்கும்
மகன் உருவில்
பரம்பொருளே
நீயே வேண்டும்.
கரம் கோர்த்து
குடி பெயர்ந்த
என் குழந்தை
உடல் நொந்து
புண் சூழ்ந்து
நான் கிடக்க
அவள் வந்து
பணி செய்து
எனை பார்க்கும்
மகள் வடிவில்
பரம்பொருளே
நீயே வேண்டும்
வலு இழந்து
உடல் படுத்து
தினம் இருக்க
உயிர் மூச்சாய்
உடன் இருந்து
எனை ரசிக்கும்
கிழ வயது
கண் அழகி;
என் மனைவி
அவள் உருவில்
பரம்பொருளே
நீயே வேண்டும்
Bạn đang đọc truyện trên: Truyen2U.Pro