2050 இந்தியா

Màu nền
Font chữ
Font size
Chiều cao dòng

விண்ணை கிழிக்கும் மாடிகள்;
காடே இல்லா பாரதம்;
வானில் புகையும் மேகம்,
தெருவில் ஊரும் இயந்திரம்,
வீட்டில் வீழும் மனிதம்.

திரும்பும் திசைகள் எங்கும்
பணவான் காட்சி மட்டும்.
ஏழை எளியவன் எல்லாம்
மாண்டுப் போனது மாயம்.

விலங்குகள் விலங்கினில் எல்லாம்
துடிக்க விளங்கா மனிதம்
வீட்டுக் கூட்டில் பூட்டிக்
கொண்டு பணிகள் செய்வான்.

காதல் பெயரில் காதல்
இல்லா பற்பல திருமணம்

அன்பு இல்லா உலகம்;
பண்புகள் மறந்த மனிதம் :

கற்பனை உணர்த்திய பாடம்;-
ஈரா யிரத்து ஐம்பது,
உயிர்கள் வாழும் சுடுகாடு.

-சகோ(முகமது சல்மான்)

Bạn đang đọc truyện trên: Truyen2U.Pro