அத்தியாயம் (24)

Màu nền
Font chữ
Font size
Chiều cao dòng

அதன் பின்னர் மேலும் சில நிமிடங்கள் அங்கு தாமதித்து விட்டு இருவரும் கீழே சென்று படுத்துக் கொண்டனர். சஞ்சனா நேரத்தை அடிக்கடி பார்த்தவாறு விழித்தே இருந்தாள். மறு நாள் காலை ஐயா மருத்துவமனைக்கு செல்ல, சஞ்சனா சின்னாவுடன் கூட க்ளினிக்கிற்கு சென்றாள். போக வேண்டிய கட்டாயத்தின் பெயரில் தான் சென்றாலே தவிர அவள் நினைவு எல்லாம் ஷக்தியைப் பற்றியதாகவே இருந்தது. எபொழுது மணி அடிக்கும் என்று பார்த்துக் கொண்டு இருக்கும் பள்ளிக்கு செல்லும் சிறுமி போல எப்பொழுது வீட்டுக்கு சென்று ஷக்தியைப் பார்க்கலாம் என்று அவள் மனம் அடித்துக் கொண்டது.

ஐயாவும் வாசுகியும் ஷக்தியை மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்து வீட்டுக்கு அழைத்து வந்து இருந்தனர். ஷக்தியின் உடலில் இருந்த வீக்கங்கள் ஓரளவுக்கு அமர்ந்து இருந்ததே தவிர அவன் பூரண குணம் அடைந்து இருக்கவில்லை. ஓரிரண்டு நாட்களுக்கு நீராகாரங்கள் மட்டுமே உட்கொள்ள வேண்டும் என மருத்துவர் வலியுறுத்தியிருக்க கொடுக்கப்பட்ட மருந்துகளுக்கும், சரியான உணவு இல்லாமலும் அவன் மிகவும் சோர்ந்து போய் இருந்தான். அவன் முன்பு போல தேறி வர குறைந்தது இன்னும் நான்கைந்து நாட்களேனும் தேவைப்படும் போல இருந்தது.

ஷக்தயை டிஸ்சார்ஜ் செய்து அழைத்து வர ஐயா சென்றிருந்த பொழுது செய்தி கேள்வி பட்டு சுந்தரம் குடும்பமும் மருத்துவமனைக்கு வந்திருந்தனர். அனைவரும் மருத்துவமனையிலேயே ஷக்தியை பார்த்து விட்டு கிளம்ப அபி மட்டும் ஐயா மற்றும் வாசுகியுடன் துரை பங்களாவிற்கு கிளம்பினாள். ஷக்தியை வீட்டுக்கு அழைத்துக் கொண்டு சென்று அவனுக்கு ஓய்வு எடுக்க வசதி செய்து கொடுத்துவிட்டு அவனுக்கான பகல் உணவை தயார் செய்ய வாசுகி கீழே செல்ல அதன் பின்னர் ஷக்தியின் பர்சனல் நர்ஸ் போல அபி அவன் அருகிலேயே அமர்ந்து இருந்து பார்த்துக் கொண்டாள்.

ஷக்தியோ அவன் அருகில் இருப்பது யார் என்ன என்று கவலை படும் உடல் நிலையில் இல்லை. நித்திரை செய்வதும், புகட்டும் உணவை தலையை மட்டும் உயர்த்தி உட்கொள்வதும், உண்டதை சில சமயங்களில் வெளியே எடுப்பதுமாக அவன் நிலை இருந்தது. ஆனால் அவன் அருகில் சஞ்சனா இல்லை என்பது மாத்திரம் அவனுக்கு தெளிவாகப் புரிந்தது. அதற்காக கவலைப் படும் நிலையில் தான் அவன் உடலோ மனமோ இல்லை.

நேரம் மாலை ஐந்தைத் தாண்ட சஞ்சனா ஓட்டமும் நடையுமாக வீடு வந்து சேர்ந்தாள். ஆனால் வழியெல்லாம் அவளுக்கு எப்படி ஷக்தியை நேருக்கு நேராக சந்திப்பது என்ற கேள்வியே இருந்து கொண்டு இருந்தது. அவனை வாய்க்கு வந்த படி பேசிவிட்டு, அவனை பாடாய் படுத்தி விட்டு இப்பொழுது அவன் இருக்கும் நிலைக்கும் அவளே காரணமாய் இருக்கையில் அவள் எந்த முகத்தை வைத்துக் கொண்டு அவனைப் பார்ப்பது என்று அவளுக்கு தயக்கமாய் இருந்தது.

சஞ்சனா வீட்டுக்கு வந்த சமயம் வீடு அமைதியாய் இருந்தது. ஹாலில் யாரும் அமர்ந்திருக்கவில்லை. அவரவர் அறைகளில் அனைவரும் இருந்திருக்க வேண்டும். வேகவேகமாக படியேறி மாடிக்கு சென்றாள். ஷக்தியின் அறைக் கதவு திறந்து இருந்தது. வாசல் வழியாக எட்டிப் பார்த்த பொழுது ஷக்தி கட்டிலில் கிடையாக படுத்து இருந்தான். அபி முதுகு காட்டி ஷக்தியின் முகம் பார்த்து குத்தங்காலிட்டு அமர்ந்து எதோ செய்து கொண்டு இருந்தாள். அதற்க்கு மேல் சஞ்சனாவுக்கு எதுவும் தெளிவாகத் தெரியவில்லை.

அந்த நெருக்கத்தை தப்பாக என்னும் அளவுக்கு சஞ்சனா குறுகிய புத்தி படைத்தவள் அல்ல ஆனால் அந்த அருகாமை அவளுக்கு சொந்தமானது என்று அவள் உள்மனது சொல்ல அதை அவள் இழந்து விட்டால் என்பது அவளுக்கு சம்மட்டியால் அடித்ததைப் போல உரைக்க அவளால் அதற்க்கு மேல் அந்த இடத்தில் தாமதிக்க முடியவில்லை. வந்த வேகத்தில் தன் அறைக்குள் புகுந்து கொண்டு கதவை சாத்திக் கொண்டாள்.

அதன் பின் சஞ்சனாவுக்கு இருப்பு கொள்ளவில்லை. எதிலும் நிதானமாக கவனம் செலுத்த முடியவில்லை. ஒரே ஒரு முறை அவன் அருகில் சென்று அவனை பார்த்து விட்டு, அவன் இருக்கும் நிலையை அறிந்து விட்டு வந்தாள் பரவாயில்லை என்று தோன்றியது. ஆனால் ஷக்தி எழுந்து இருக்கையில் அதை செய்யும் துணிவு அவளிடத்தில் கொஞ்சம் கூட இல்லை. என்ன செய்வது என்று புரியாமல் தவித்தாள். தன் அறையில் இருந்த வண்ணம் பக்கத்துக்கு அறையில் நடப்பவற்றை நோட்டம் விட்டபடி இருந்தாள்.

இரவு 9:30 மணி இருக்கும். ஷக்தி இரவு ஆகாரத்தை அருந்தி விட்டு ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தான். அபி இன்று துரை பங்களாவில் தான் தங்கி இருந்தாள். ஆனால் அப்பொழுது வாசுகியோ அபியோ ஒருவரும் ஷக்தியின் அருகில் இருக்கவில்லை. சஞ்சனா ஷக்தியை சென்று பார்க்க அது தான் சரியான நேரம் என்று குறித்துக் கொண்டு ஷக்தியின் அறைக்குள் நுழைந்தாள். ஷக்தி ஒரு வெள்ளை காட்டன் வேட்டி மட்டும் அணிந்து கட்டிலில் விட்டம் பார்த்த படி படுத்து இருந்தான். அவனது உடம்பெங்கும் சிவப்பாக சிவந்தும் சில இடங்கள் கன்றிப் போயும் இருந்தது. அதையும் தாண்டி உருண்டு திரண்ட புஜங்களுடனும், அகன்ற மார்புடனும் ஆணழகனாய் படுத்து இருந்தான் அவளுக்கு மட்டுமே சொந்தமான அவன்.

சஞ்சனா ஷக்தியின் கட்டிலின் விளிம்பில் அமர்ந்து கொண்டாள். சலனமின்றி உறங்கிக் கொண்டிருக்கும் தன் காதல் கணவனை கண் இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தாள். அனிச்சையாக அவள் கரம் அவன் காயங்களைத் தடவிப் பார்த்தது. ஒரு நிமிடம் அவன் உடலின் திண்மையை அவள் கரங்கள் உணர அதை வலுக்கட்டாயமாக உதறிவிட்டு அவன் காயங்கள் மீது தன் கவனத்தை திருப்பினாள். அவனது அருகாமையும், அவனது உடல் நிலையும் அவளை ஏதோ செய்ய எதைப் பற்றியும் யோசனை செய்யாமல் அவன் மீது சாய்ந்து அவன் கழுத்தைக் கட்டிக் கொண்டு அவள் உதடுகள் சொல்ல மறுத்த பல உண்மைகளை அவள் கண்ணீர் மூலம் அவனுக்குத் தெரிவித்தாள்.

பின்னர் உடனடியாக சுதாகரித்துக் கொண்டவள் அவனை உச்சி முகர்ந்து விட்டு இது தான் கடைசி என்று மனதிற்குள் எண்ணி ஒரு பெருமூச்சை விட்டுக் கொண்டு எழுந்து கொண்டாள். ஓரிரு வினாடிகள் தான். அவள் செய்கை ஷக்தியின் உறக்கத்தை கலைக்கும் முன்னர் எழுந்து கொண்டாள். ஆனால் சஞ்சனா ஷக்தியின் கழுத்தைக் கட்டிக் கொண்டு அவன் மேல் சாய்ந்துகொண்ட போதே அறை வாசலில் அபி வந்து விட்டாள். சஞ்சனா ஷக்தியின் மீது கிடந்ததைக் கண்டதும் அபிக்கு தூக்கி வாரிப் போட்டது. சஞ்சனா ஏன் ஷக்தியை வந்து பார்க்கவில்லை என்று அபி யோசனை செய்து கொண்டு தான் இருந்தால். ஆனால் ஷக்தியையும் சஞ்சனாவையும் இந்த கோலத்தில் அவள் காணப் போகிறாள் என்பது அவளுக்கு அப்பொழுது தெரியாது.

அவர்கள் இருவரையும் அந்த நிலையில் காண அபிக்கு தலையில் இடி விழுந்ததைப் போல இருந்தது. ஷக்தி அவள் காதலை மறுத்த போதும் கூட அவளுக்கு இவ்வளவு அதிர்ச்சியாக இருக்கவில்லை. ஆனால் ஷக்தி சஞ்சனாவின் நெருக்கம் அவளை புரட்டிப் போட்டது. நாம் அதிகமாக நேசிக்கும் ஒருவர் நம்மை விட்டுப் பிரிந்து போகும் சோகத்தைக் கூட நம் மனம் ஏற்க்கும் ஆனால் அவர்களை இன்னொருவருடன் சேர்ந்து காணும் வலிமை இங்கு யாருக்கும் இல்லை. அதற்க்கு அபியும் விதிவிலக்கல்ல. ஆனால் அப்பொழுது என்ன செய்வது என்பது தான் அந்த வெகுளிப் பெண்ணுக்குத் தெரியவில்லை. அவள் அவர்களைப் பார்த்ததை அவர்கள் இருவரும் பார்த்து விடாத படிக்கு வேகமாக அந்த இடத்தை விட்டு நகர்ந்து சென்றாள்.

அபி தங்களை பார்த்து விட்டாள் என்று தெரியாமலேயே சஞ்சனாவும் தனது அறைக்கு சென்று விட்டாள். அதன் பின்னர் வாசுகி சென்று ஷக்தியுடன் துணைக்கு படுத்துக் கொண்டாள். அதற்க்கு மேல் அபியாள் அங்கு தாமதிக்க முடியவில்லை. உடனேயே அங்கு இருந்து தன் வீட்டுக்கு ஓட வேண்டும் போல இருந்தது அவளுக்கு. தன் அறையை பூட்டிக் கொண்டு கதறி அழ வேண்டும் போல இருந்தது. மறுநாள் காலையே வீட்டுக்கு புறப்பட்டு சென்றாள் அவள். சஞ்சனாவும் எப்பொழுதும் போல க்ளினிக்கிற்கு சென்று வந்து கொண்டிருக்க நாட்கள் சென்றது. ஆனால் அதன் பின்னர் ஒருமுறையேனும் சஞ்சனா ஷக்தியை சென்று பார்க்க முயற்சிக்கவில்லை. ஷக்தியின் உடல் நிலை கொஞ்ச கொஞ்சமாக தேறத் தொடங்கியது.

ஷக்தி மருத்துவமனை வரை சென்று வந்திருந்த பொழுதும் ஒரு முறையேனும் சஞ்சனா தன்னை வந்து பார்க்கவில்லையே என்ற கவலை ஷக்திக்கு நாளுக்கு நாள் அதிகரித்தது. சஞ்சனா அவனை அவ்வளவு தூரம் வெறுக்கும் அளவுக்கு அவன் அவளுக்கு என்ன தீங்கு செய்தான் என்று அவன் எண்ணி எண்ணி மனம் நொந்த வண்ணம் இருந்தான். சஞ்சனாவின் கழுத்தில் அவளது சம்மதம் பெறாமல் தாலி கட்டியது வேண்டுமானால் தவறாக இருக்கலாம். ஆனால் அவள் சம்மதம் கிடைக்காததால் அதை இதுவரை அவன் ரகசியமாக தானே காத்து வருகிறான்.

சஞ்சனா அவன் மீது இவ்வளவு தூரம் வன்மம் வைத்து இருக்கிறாள் என்றால் ஒருவேளை அவள் இன்னும் சமர்த்தை மறக்கவில்லையோ. அவன் தான் அது புரியாமல் முட்டாள் தனமாக அவள் கழுத்தில் தாலி கட்டி விட்டானோ.. இந்த எண்ணம் அவனுக்குள் தோன்ற ஷக்தி திடுக்கிட்டு எழுந்தான். அவன் யூகம் மாத்திரம் உண்மையாக இருப்பின் அதற்க்கு மேல் அவனால் கற்பனை கூட செய்து பார்க்க முடியவில்லை. ஆக மொத்தத்தில் சஞ்சனா மீது எந்த தவறுமே இல்லை. அவள் இன்னுமும் சமர்த்தை தான் காதலிக்கிறாள். இது புரியாமல் இவ்வளவு தூரம் இதை கொண்டு வந்து விட்ட அவன் தான் கிறுக்கன். ஷக்தி முடிவு செய்து விட்டான்.

அவன் அன்று பேசியதை கேட்டு சஞ்சனா உடனே சமர்த்தை மறந்து விட்டால் என்று எதிர்பார்த்தது எவ்வளவு பெரிய முட்டாள்த்தனம். சஞ்சனா மனதில் யார் இருக்கிறார்கள் என்று கூட தெரியாமல் அவள் கழுத்தில் தாலி கட்டியது எவ்வளவு பெரிய தவறு. ஷக்திக்கு தன் பிழைகள் ஒவ்வொன்றும் கொஞ்ச கொஞ்சமாக புரியத் தொடங்கின. இதற்க்கு மேலும் அவன் சஞ்சனாவை தொந்தரவு செய்தால் அது பெரும் பாவம் என்று அவனுக்குத் தோன்றியது. அவன் பொதுவாகவே பெண்களை மதிக்கும் ரகம். அவன் நேசிக்கும் பெண்ணின் மனம் கோண அவன் மனம் என்றுமே இடம் தராது.

சஞ்சனா எடுத்த முடிவு தான் சரியானது. அவர்கள் இருவருக்குள்ளும் அன்று கோயிலில் நடந்த சம்பவம் யாரும் அறியாத ஒரு நிகழ்வாகவே போகட்டும். காதலும் வேண்டாம் கல்யாணமும் வேண்டாம் முன்பு போல செய்யும் தொழிலுக்கு உத்தமமாக இருந்து விடுவது என்று ஷக்தி முடிவு செய்து கொண்டான். அவன் எடுத்த முடிவில் அவன் ஸ்திரமாகவும் இருந்தான். அதன் பின்னர் வந்த நாட்களில் ஷக்தி பூரண குணம் அடைந்து வழமை போல தொழிற்சாலைக்கு சென்று வர ஆரம்பித்தான். நாளின் பெரும் பகுதியை அங்கேயே கழித்தான்.

எப்பொழுதேனும் ஒரு முறை அவனும் சஞ்சனாவும் நேருக்கு நேர் சந்திக்க நேரிடும். ஆனால் அப்படிப் பட்ட சந்தர்பங்களில் இருவரும் பேசாமல் தத்தம் வழிகளைப் பார்த்துக் கொண்டு சென்று விடுவது வழக்கம். நாள் முழுவதும் வேலை வேலை என்று அலைந்த போதிலும் இரவின் தனிமையில் இருவரும் ஒருவரை ஒருவர் நினைத்துக் கொள்வது வழக்கம். ஆனால் அவர்கள் நினைவுகள் தான் அபத்தமாய் இருக்கும். சஞ்சனா சமர்துடன் சேர்ந்து வாழ வழியே இல்லையா என்று ஷக்தி நினைத்துக் கொள்வதும், ஷக்திக்கு வேறு நல்ல வாழ்க்கை அமைய வேண்டும் என்று சஞ்சனா நினைத்துக் கொள்வதுமாக இந்த கண்ணாமூச்சி ஆட்டம் தொடர்ந்து கொண்டு இருந்தது. அந்த பெருந்தன்மைக்கு அவர்கள் இருவரும் சூட்டியிருந்த பெயர் காதல்.

Bạn đang đọc truyện trên: Truyen2U.Pro