பகுதி - 2

Màu nền
Font chữ
Font size
Chiều cao dòng

சுதந்திரா என்ற குரலில் திரும்பிப் பார்த்தவள் உதடுகளோ "பூச்சி" என்று முணுமுணுத்தது.

அவள் உதட்டசைவில் கூற வந்ததைப் படித்தவள் முறைத்துக் கொண்டே சுதாவை நெருங்கினாள்.

"என்ன சொன்ன? கம் அகைன் " என்றவளைப் பார்த்து நக்கலாகச் சிரித்துக் கொண்டே "பூச்சி" எனக் கூறி கண்ணடித்துச் சிரித்தாள்.

பற்களை நறநறவென்று கடித்துக் கொண்டே " ஐ யம் பூஜிதா நாட் பூச்சி , கேவலமா இருக்கு சிரிக்காத" என்று கூறிய பூஜிதாவைப் பார்த்து "நீ கேவலப்படணும்னு தான் சிரிக்கிறேன் " என்ற சுதாவோ இன்னும் சத்தமாக நகைக்க ஆரம்பித்தாள்.

"நீ சிரிக்கிறது கேவலமா இருக்கு டி" என்ற பூஜி இப்போது சிரிக்க
" நினைச்சேன் ! அதிகமா படம் பார்க்காத சொன்னா கேட்கிறீயா? எப்போ பார்த்தாலும் படம் பார்க்க வேண்டியது ,அதைப் பார்த்துட்டு வந்து குழி தோண்டி பொதைச்ச காமெடிக்கெல்லாம் உயிர் கொடுத்து இங்கே மொக்கை போட வேண்டியது ! சுயமா யோசி டி, அப்புறம் உன் மூஞ்சிக்கு அந்த சிரிப்பே போதும் டி பூச்சி " என்றவாறே நடக்க ஆரம்பித்தாள்.

புன்னகை முகமாக நின்றிருந்தவளின் முகம் இப்போது வாடிப் போக திரும்பிப் பார்த்த சுதாவோ ஓடிவந்து அணைத்துக் கொண்டாள்.

"சும்மா ,சும்மா பூச்சி!" என்றவள் அவள் முறைப்பதைப் பார்த்து "அய்யோ" என தன் நாக்கைக் கடித்து "இந்த வாய் இருக்கே இந்த வாய், இது தான் உனக்கு ஏழரை சனி! " என்று மனதில் தன்னைத் தானே புகழ்ந்தவாறு "பூஜி !! பூஜி!!" என்று அனைத்துப் பற்களையும் காட்டி இளித்தாள்.

"ம்ம் அது ,நான் நல்ல தானே காமெடி பண்ணேன்" என்ற பூஜியை ஓரக்கண்ணால் பார்த்தவள்
"பார்ரா பூச்சிக்கு கொழுப்பை" என மனதில் அவளை அர்ச்சித்தவாறே
"எருமைக் குட்டிலாம் ஏரோபிளேன் ஓட்டுதாம், எறும்புலாம் ஸ்கர்ட் அன்ட் டாப் போட்டுட்டு சுத்துதாம், என் அம்மா என்னைத் திட்டுறதை வேற ஸ்டாப்  பண்ணிட்டாங்களாம்" என்று சுதா உளறிக்கொண்டே செல்ல

"என்னடி உளறுற" என்று கேட்ட பூஜியை விட்டு பத்து அடி தள்ளி நின்றவள் "இதுக்கு முன்னாடி நான் சொன்னதெல்லாம் எப்படி நடக்காதோ! அதே மாதிரி தான்  நீ நல்ல காமெடி பண்ணுறதும் " என்றவாறே ஓடிவிட்டாள்.

"அடியேய் பேம்பூ" என்று கத்தியவள் வகுப்பிற்கு நேரமாவதை உணர்ந்து வேகமாக நடந்தாள்.

வகுப்பினுள் நுழைந்தவளின் கண்கள் சுதாவைத் தேட அவள் வந்ததிற்கான தங்கு தடையங்களே இல்லை என்பது போல் யாரைக் கேட்டாலும் அவள் இன்னும் வரவில்லை என்று தான் பதிலலித்தனர்.

ஒரு நொடி யோசித்தவள் "டி இன்னைக்கு என்ன டே?" என்று அருகில் இருந்தவளிடம் கேட்க "ஆப்பு டே டி " என்று கூறிய லாவண்யாவைப் பார்த்து சிரித்தவள் " ஓஓ அதுனால தான் அந்த பேம்பூ கேண்டீன்ல பதுங்கிட்டாளா" என்று சிரித்தவாறே
இருக்கையில் அமர்ந்தாள்.

இன்டர்னல்ஸ் முடிந்து இன்று தான் அதற்கான மதிப்பெண்களை வழங்குவதாக இருந்தது.
அதற்காக தான் நம் சுதா பதுங்கிவிட்டாள்.

"அண்ணா ஒரு ப்ளேக் கரண்ட் ஐஸ் க்ரீம் " என்றவளின்  கண்கள் நொடிக்கொரு முறை கைக்கடிகாரத்தையும், கேண்டீன்
நுழைவு வாயிலையும் பார்த்துக் கொண்டிருந்தது.

ஐஸ் க்ரீமுடன் கடைசி இருக்கையில் அமர்ந்தவள் அதை ரசித்தவாறே உண்ண ஆரம்பிக்க  "பேம்பூ" என்றவாறே அவளருகில் வந்தாள் பூஜிதா.

"சொல்லு டி பூச்சி எத்தனை?" என்ற கேள்வியில் சிரித்தவள் 
" கண்டிப்பா போயிருக்கும்னு முடிவே பண்ணீட்டியா?" என்று கேட்க தோளைக்குலுக்கியவாறே சாப்பிட ஆரம்பித்தவள் "எழுதுனது நானேச்சே!! அதுல மட்டும் டவுட்டே இல்லை " எனக் கூறிப் புன்னகைத்தாள்.

பூஜியின் பதிலில் திகைத்தவள் மனமோ "கடவுளே பாருவை எப்படி சமாளிக்கப் போறேனோ" என்ற யோசனையில் அமர்ந்திருக்க
"கஷ்டமா இருக்கா டி , விடு பாத்துக்கலாம் " என்று  கூற அவளைக் கூர்ந்து கவனித்தவளோ "என்ன பாத்துக்கலாம்" என்று கேட்டாள்.

"அடுத்த தடவை பாஸ் ஆகிக்கலாம்னு சொன்னேன் " என்று கூற சத்தமாக சிரித்தவளோ
"பாஸா? நானா? நடக்குறதை பேசு டி! நான் பாருவை எப்படி சமாளிக்குறதுனு யோசிச்சுட்டு இருக்கேன். அதுக்கப்புறம் இந்த மாதிரி கெட்ட வார்த்தைலாம் பேசுறதை இன்னையோட நிறுத்திக்கோ" என்க,
அதில் அதிர்ந்தவளோ "நான் எங்கே டி பேசுனேன் " என்று கேட்க

"பாஸ் ஆகிக்கலாம் சொல்ற, அதைச் சொன்னேன் " என்றவாறே எழுந்து நடக்க ஆரம்பித்தாள்.

"நீ லாம் ஒரு விசித்திர ஜென்மம் டி,உன்னை மாதிரி யாரும் இருக்கமாட்டாங்க "
என்று கூறியவாறே தன் அருகில் வந்தவளின் தோள்மீது கை போட்ட சுதா " விடு டி நானே முதலும் கடைசியுமா இருந்துக்கிறேன் " எனக் கூறிக் கண்ணடித்தாள்.

அந்த நாள் முழுவதும் இருவரும் மாற்றி மாற்றி தங்களை வாரிக் கொள்வதிலே கழிய, மாலை தீபுவிற்காக காத்திருந்தாள் சுதா.

டியோவின் மீது  சாய்ந்து  வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தவள் "வளர்ந்துக் கெட்டவளே" என்ற குரலில் திரும்பிப் பார்த்தாள்.

"சொல்லு டா பப்ளிமாஸ் , எங்கே அந்த இரண்டு வானரங்களைக் காணோம் ?" என்றவள் அந்த வானரங்களைத் தேட அவள் தங்களுக்கு வைத்த பெயர் சரிதான் என்பது போல் பின்னாலிருந்து அவள் முன் பே என்று கத்தியவாறே குதித்தனர்.

"அட வானரங்களா " என்று கத்தியவள் இருவர் காதையும் பிடித்துத் திருக " அய்யோ வி.கே வலிக்குது " என இருவரும் கத்திக் கொண்டே குதிக்க ஆரம்பித்தனர்.

"அதென்ன வி.கே?" என்றுக் கேட்டு முறைத்தவளை விட்டு தள்ளி நின்றவர்கள் கைகளை பிசைந்துக் கொண்டே வளர்ந்து கெட்டவள் என்று கூற "அடிங்கு வானரங்களா" என அவர்களைத் திட்டியவாறே துரத்த ஆரம்பித்தாள்.

இந்த இரண்டு வானரங்களும் தீபுவின் நண்பர்கள்.
ஒருவன் சிவா ,மற்றொருவள் மதுமிதா.

இந்த நாலு வானரங்களும் சேர்ந்துக் கொண்டால் அந்த இடத்தையே ரணகலப் படுத்திவிடும்.
சுதாவை அக்கா என்றே அழைக்கமாட்டார்கள், அவளும் இவர்களுள் ஒருத்தி அந்த மாதிரி தான் நடத்துவார்கள்.

மாலை கல்லூரி முடிந்து  ரோட்டுக்கடையில் ஏதாவது உண்டால் தான் அந்த நாள் இவர்களுக்கு முற்றுப்பெறும்.

மது மற்றும் சிவா ஒரு வண்டியிலும், தீபு மற்றும் சுதா ஒரு வண்டியிலும் எப்பொழுதும் தாங்கள் செல்லும் கடைக்கு செல்ல, சுதா மட்டும் வண்டியை நிறுத்தி விட்டு கடைக்குள் நுழைந்தாள்.
மற்ற மூவரும் அங்கேயே நின்று பானிபூரி சாப்பிட ஆரம்பிக்க சுதாவோ அந்த மூவரையும் வேற்றுகிரக வாசி போல் பார்த்துக் கொண்டிருந்தாள்.

பானிபூரியை ஒரு கட்டு கட்டிவிட்டு சுதாவிடம் செல்ல அவளோ எப்பொழுதும் கூறும் டைலாக்கை ஒரு வார்த்தை விடாமல் அப்படியே கூற ஆரம்பித்தாள்.

"அந்த ஆளு எங்கெல்லாம் கையை வெச்சுட்டு அதை பிசைஞ்சு தராரோ...உவ்வேக் " என்றவள் முகம் போன போக்கில் இவர்களுக்கே வயிறு ஒரு மாதிரி செய்ய பிசைய ஆரம்பித்துவிட்டது.

"அடியேய் வி.கே! ப்ளீஸ் உன் மூஞ்சில காட்டுற அந்த கன்ட்ராவி எக்ஸ்பிரசனை ஸ்டாப் பண்ணு" என்று தீபு கத்த , அவர்கள் முகம் போன போக்கைப் பார்த்து மனம் நிறைந்தவள் சிரித்துக் கொண்டே தலையசைத்தாள்.

ஆளுக்கொரு காளானை ஆர்டர் செய்தவர்கள் மாற்றி மாற்றி கலாய்த்துக் கொண்டு ஒரு மணி நேரம் அங்கு செலவு செய்த பின்னரே வீட்டிற்கு திரும்பினர்.

எப்பொழுதும் உள்ளே நுழைந்தும் வீட்டை இரண்டாக்குபவள் இன்று அமைதியாய் சுற்ற அதிலே பாரு கண்டறிந்துக் கொண்டார்.

முகம் கழுவி திருநீற்றால் பட்டைப் போட்டுக்  கொண்டவள் சமையலறைக்குள் நுழைந்து "பாரு உனக்கு ஹெல்ப் பண்ணவா?" எனக் கேட்க

"அப்புறம் சுதா டார்லிங் எத்தனை சப்ஜெக்ட்ல போச்சு " என்ற திடீர் கேள்வியில் அதிர்ந்தவள்  மூடியிருந்த கையை விரித்து ஒவ்வொரு விரலாய் காட்டிக் கொண்டே வந்தவள் கடைசியில் காட்டிய விரல்களின் எண்ணிக்கைக் கண்டு திகைப்பது இப்போது பாருவின் முறையாயிற்று.

"மொத்தம் இருக்கிறதே ஐந்து தான்! எல்லாமேவா போச்சு " என்று கேட்டவரைப் பார்த்து தலையை வேகமாக ஆட்டியவள் பின் மெதுவாக தலையசைத்து ஆம் என்றாள்.

"ப்ராக்டிகல்ஸ் கூட போச்சா? பிராக்டிகல்ஸ் நல்லா பண்ணனும்னு தானே டி பின்னாடி தோட்டம்னு ஏதேதோ போட்டு வெச்சிருக்க" எனக் கேட்டவரைக் கண்டு கொள்ளாமல் கேரட்டை எடுத்து வாயில் வைத்தவள் "உன்னால தான் நான் பெயில் ஆகிட்டேன் பாரு! நான் உன்கிட்ட வொய்ட் ஹைபிஸ்கஸ் கேட்டா, நீ ரெட் வாங்கிட்டு வந்துட்ட! எக்ஸாம்ல அவன் வொயிட் கலர் குடுத்துட்டான்.
நான் என்ன பண்ண! நீ  தான் நான் பெயில் ஆக ரீசன் ,அடுத்த முறையாவது வொயிட் வாங்கிட்டு வா " எனக் கூறியவாறே அவள் வெளியே செல்ல

"அப்போவும் பெயில் ஆகிட்டு வந்து அந்த பூ நீ ஏன் வாங்கித் தரலனு கேட்ப டி நீ " என அவர் கத்தியதெல்லாம் அவள் காதில் விழவே இல்லை.

இங்கே அலுவலகத்தில் காலையிலிருந்து அஸ்வின் பலமுறை கெஞ்சியும் யுவி மலை இறங்கவே இல்லை.
'உன் வேலையை நீ தான் பார்க்கணும்" இது தான் அவன் பதிலாக இருந்தது.

"பூர்ணிக்கு பீவர் டா " எனக் கூறியும் அவன் ஒத்துக்கொள்ளவில்லை.
"ஷீ வில் டேக் கேர் ஹேர் செல்ஃப்" எனக் கூறி முடித்துக் கொண்டான்.

அவனுக்கு அப்படி ஒன்றும் முக்கியமான வேலை அந்த வாரத்தில் இல்லை.
உடலில் உள்ள ஒவ்வொரு அணுக்களிலும் இரத்தம் கலந்திருக்கிறதோ இல்லையோ, திமிர் கலந்திருக்கிறது இவனுக்கு.

"அவன் வேலையை அவன் தான் செய்யணும் " என்று மனதில் பதிந்துவிட அஸ்வின் எவ்வளவு கெஞ்சியும் அதை கண்டுகொள்ளவில்லை.

மணி ஏழானதும் சிஸ்டமை ஆப் செய்துவிட்டு வெளியே வந்தவன் தன் ராயல் என்பீல்டில் வீட்டை நோக்கிப் பயணித்தான்.
அலுவலகத்திலிருந்து இருபது நிமிட தொலைவில் தான் அவனது இல்லம் இருக்கிறது.

வண்டியை நிறுத்திவிட்டு உள்ளே நுழைந்தவன் அங்கு நடந்த காட்சியைக் கண்டு அவர்களை முறைத்துக் கொண்டே அவனது அறைக்குள் நுழைந்தான்.

ப்ரெஸ்ஸாகி வெளிய வந்தவன்
"மானு " என்று கத்த "என்ன அண்ணா" எனக் கேட்டு அறையை விட்டு வெளியே  வந்தவளோ அடுத்த நொடி கன்னத்தில் கை வைத்திருந்தாள்.

"தோளுக்கு மேல வளர்ந்த புள்ளையை எதுக்கு டா கை நீட்டி அடிக்கிற" எனக் கத்திய அன்னை அவனது உஷ்ணப் பார்வையில் அமைதியாகி விட
" அதான் தோளுக்கு மேல வளர்ந்த புள்ளைனு சொல்றீங்கள்ள!! அவளுக்கு என்ன கையா இல்லை...
ஏன் மகாராணி அவங்களே சாப்பிட மாட்டாங்களா? ஒருத்தர் ஊட்டி விடணுமா?" முறைத்துக் கொண்டே  கேட்க

"அவ படிச்சுட்டு இருந்தா டா அதான்" என்றவருக்கோ மானுவின் முகத்தைப் பார்க்க சங்கட்டமாக இருந்தது.

"படிச்சு முடிச்சதும் சாப்பிடு  இல்லைனா சாப்பிட்டு முடிச்சதும் படி, நீ என்ன குழந்தையா இன்னும் ஊட்டிவிட்டுட்டு இருக்க !" என்று மிரட்டிய தமையனுக்கு பதில் சொல்லாது கண்ணீர் சிந்திக் கொண்டிருக்க "இன்னொரு சொட்டு கண்ணீர் வந்தா இந்த கன்னமும் பழுத்துரும் மானு " என்றவனின் குரலில் வெளியே வந்த கண்ணீரையும் உள்ளே இழுத்துக் கொண்டாள்.

"சரிண்ணா " என்றவள் உள்ளே செல்ல எத்தணிக்க அவள் கைகளைப் பிடித்து வேகமாக வெளியே இழுத்துக் கொண்டு வந்தவன் அங்கிருந்த பூந்தொட்டிகளைச் சுட்டிக் காட்டி முறைத்தான்.

அவனுக்கு வீட்டைச் சுற்றி மரம், செடி, கொடியெல்லாம் இருப்பது அறவே பிடிக்காத ஒன்று.

வீடு பார்க்க அழகாக, சுத்தமாக இருக்க வேண்டும்.
மரம், செடியெல்லாம் இருந்தால்  அதிலிருந்து விழும் இலைகளால் குப்பை அதிகமாகிவிடுமாம்.

"அழகா இருக்கேனு வாங்குனேன் அண்ணா " மென்று முழுங்கி கூறி முடிப்பதற்குள் அந்த  பூந்தொட்டி நிலத்தை அடைந்து தூள் துளாக சிதறி கிடந்தது.

அதிர்ந்து அவனை நோக்கியவள் பயத்துடன் எச்சிலை முழுங்க "இது என் வீடு என் இஷ்டப்படி தான் இருக்கணும் " என்று கூறிவிட்டு விருவிருவென்று உள்ளே நடந்தான்.
"அம்மா " என்று அழ ஆரம்பித்த மானுவை ஆதரவாக அணைத்துக் கொண்டார் ராதா.

"பாரு போதும் " டிவியைப் பார்த்துக் கொண்டே மறுத்தவளை முதுகில் ஒரு அடி கொடுத்து உணவினை ஊட்டிக் கொண்டிருந்தார் பார்வதி.

"வயிறு வெடிச்சிடும் பாரு " என்று சிணுங்கியவளைப் பார்த்து சிரித்தவர் " நீயா சாப்பிட்டா இரண்டு தோசை தான் சாப்பிடுற, இப்போ பாரு நான் ஊட்டி விட்டதும் மூனு உள்ளே போயிடுச்சு " என்றவர் மடிமேல் படுத்தவள் "அம்மா ஊட்டுனா அப்படிதான்! உள்ளே இறங்கிட்டே இருக்கும் ,உன் கை செய்யும் மாயம் பாரு!! " என்றவள் தலையை வருடியவாறே அருகில் வந்து அமர்ந்தார் சிவராமன்.

அப்பாவைக் கண்டதும் அவர் மடிமேல் தலை வைத்துக் கொண்டவளைப் பார்த்து சிரித்த தம்பதியினர் ஒருவரை ஒருவர் பார்த்து தங்கள் பார்வையை பரிமாறிக் கொண்டர்.

"என்ன லவ் பேர்ட்ஸ்  ஒரே ரொமாண்டிக் லுக்கா இருக்கு" எனக் கேட்டு சிரிக்க அவளைக் கிள்ளிய
பாருவோ " நான் என் புருஷனை பாக்குறேன்...நீயும் சீக்கிரம் கல்யாணம் பண்ணிட்டு போய் உன் புருஷனை பாரு டி எனக்கென்ன?"
எனக் கூற எழுந்து அமர்ந்தவளோ
" நான் பாப்பேன்,இப்படி அவன் மடிமேல படுத்துப்பேன், அவனை ஊட்டிவிட சொல்லுவேன், இரண்டு பேரும் வீடு சுத்தி பூச்செடி நட்டு வைப்போம் இப்படி நிறைய நிறைய" எனக் கூறியவளைப் பார்த்து புன்னகைத்தவர்
"கனவுல தான் நடக்கும் இதெல்லாம்" என்றவாறே சமையலறையை நோக்கி நடந்தார்.

"போங்க பார்வதி போங்க! இதெல்லாம் நிஜத்துலையும் நடக்கும் , நடத்திக் காட்டுவேன்" என்று சவால் விட்டவாறு எழுந்து நிற்க

"அதுக்கு முதல்ல உனக்கு கல்யாணம் நடக்கணும்! அப்பா சீக்கிரம் நல்ல பொண்ணா பாருங்க" என்ற தீபுவை முறைத்தவள் அவனை அடிக்க வர

"உனக்கு வீட்டு வேலை ஒன்னும் தெரியாது அப்போ உனக்கு பொண்ணைத் தானே பார்க்கணும்...ஓஓ நீயும் பொண்ணுதான்ல மறந்துட்டேன்" என்று சிரித்தவனை அடிக்க துரத்த அவனும் இவளுக்கு போக்கு காட்டிக் கொண்டே ஓடினான்.

"என்னாச்சு சுதாப்பா " எனக் கேட்டவாறே அருகில் அமர்ந்த பாருவை பார்த்தவர்
"எப்படி பாரு மா என் முகத்தைப் பார்த்தே என் மனநிலையைக் கண்டுபிடிக்கிற ?" எனக் கேட்க
அதற்கு மெலிதாக புன்னகைத்தவரோ " உங்களைப் பத்தி தெரியாதா சுதாப்பா " என்றார்.

"கிருஷ்ணன் இருக்காருல அவர் பையனுக்கு ஜாதகம் பாக்க போனாரு அப்படியே என்னையும் பாக்க சொன்னாரு, நானும் பார்த்தேன் டா!" என்றவர் நிறுத்த,
மனதில் ஒரு வித பயத்துடன் ஏறிட்ட பார்வதியை "பயப்பட ஒன்னுமில்ல டா! இன்னும் நாலு மாசத்துக்குள்ள நம்ம அம்முவுக்கு கல்யாணம் பண்ணனுமாம், இல்லைனா 27ல தான் நடக்கும்னு சொல்லிட்டாரு டா " என்று கூறி நெற்றியைத் தேய்த்தவரை புரியாது பார்த்தார் பார்வதி.

இங்கே யுவியின் இல்லத்திலோ "உனக்கு இப்போ 27 ஆச்சு டா யுவி, எப்போ தான் கல்யாணம் பண்ணிக்கலாம்னு இருக்க? ஓரளவு செட்டில் ஆயாச்சு தானே அப்புறம் என்ன ? இன்னும் மூனு மாசத்துல 27 வேற முடியப் போகுது, இப்போ விட்டுட்டா 29ல தான் பண்ணனும்.
சீக்கிரம் யோசிச்சு ஒரு முடிவைச் சொல்லு"  என்று கூறிய தந்தையை என்ன பதில் சொல்ல என்பது போல் பார்த்துக் கொண்டிருந்தான்.

யுவராஜ் ஒருவருக்கு பணிந்து செல்வான் என்றால் அது அவன் தந்தை கிருஷ்ணனுக்கு மட்டும் தான்.

"கடவுளே அண்ணனுக்கு வரப்போற பொண்ணு பாவம் அந்த பொண்ணுக்காக நான் இப்போ வேண்டிக்கிறேன்...என்ன பாவம் பண்ணுனாங்களோ !! " மானு மனதில் நினைத்ததைப் படித்த அவளின்  அன்னை ராதா "உன் மனதை நான் அறிவேன் " எனக் கூறி அவள் கையை கிள்ள அவரைப் பார்த்து வாயை மூடி சிரித்தவளோ யுவியின் பார்வையைக் கண்டு அமைதியாகி விட்டாள்.

"உங்க இஷ்டம் பா " என்றவனோ கண்டிப்பா மூனு மாசத்துல கல்யாணம் நடக்கிறதெல்லாம் கஷ்டம் என மனதில் நினைத்தவாறே அறைக்குள் நுழைந்தான்.

ப்ரியமுடன்
தனு❤

Bạn đang đọc truyện trên: Truyen2U.Pro