பகுதி - 9

Màu nền
Font chữ
Font size
Chiều cao dòng

எங்கும் உன் முக பிம்பம் நெஞ்சில் வந்தது தாங்கும்
வெற்றிடத்தில் என்னை விட்டு சென்றதேனடி
கண்ணில் நீரது பொங்கும் காதல் வந்தது அங்கும்
சற்று முன்பு புன்னகைத்த முகம் எங்கடி

மாலில் இருந்து வந்ததிலிருந்து அறைக்குள் அடைந்து கிடக்கும் தன் அண்ணனின்  நிலையைக் கண்டு மிகவும் பரிதாபமாக இருந்தது பூஜிதாவிற்கு.

அவளுக்குத்தான் தெரியுமே தன் அண்ணனுக்கு சுதாவின் மீதான காதலைப் பற்றி...

சொல்லாத காதல்!
நான்கு வருட காதல்!
தூரத்தில் இருந்தே சுதாவை ரசிக்கும் காதல்!
அவளுக்காக என்ன வேண்டுமானாலும் செய்யும் அளவு காதல்!
அவளுக்குப் பிடித்ததை மட்டுமே செய்யும்  காதல்!
அவளை ராணியாக பார்த்துக் கொள்ளும் அளவு காதல்!

"அன்பு கதவைத் திற" கணக்கே இல்லாத அளவு  அவளும் பிடிவாதமாக
தட்டிக் கொண்டே இருக்கிறாள் அவனும் பிடிவாதமாக திறக்க மாட்டேன் என்கிறான்.

"அன்பு என்ன பண்ணுற? கதவைத் திற? நானும் எவ்வளவு நேரம் தான் தட்டிட்டே இருக்கிறது? திறக்க போறியா இல்லையா" வெளியே நின்று தனக்காக கத்திக் கொண்டிருக்கும் தங்கையின் வார்த்தைகளெல்லாம் அவன் செவிகளுக்கு கேட்கவே இல்லை...

அவன் செவிகளுக்குள் ஒலித்துக் கொண்டிருப்பதெல்லாம் "மை பியான்சி" என்ற சுதாவின் குரல் மட்டும் தான்.

அவளின் படிப்பு கெடக் கூடாது,தன் மேல் இருந்த அபிப்ராயம் பாழாகிவிடக் கூடாது என்பதற்காகத் தான் இவன் இந்த நான்கு வருடங்களில் தன் காதலைத் தெரியப்படுத்தவே இல்லை.

பெற்றோரின் பேச்சை மீறி அவள் எதுவும் செய்ய மாட்டாள் என்பது நன்றாகவே தெரியும் அதற்காகத் தான் அவள் படிப்பு முடிந்ததும் பெற்றோரிடம் தன் ஒருதலைக் காதலைப் பற்றிக் கூறி அவளைத் தன் மகாராணியாய் மாற்றிக் கொள்ளலாம் என்று எண்ணியிருக்க இப்படி ஆகும் என அவன் கனவிலும் நினைக்கவில்லை.

முதல் சந்திப்பிலேயே தன் மனதுக்குள் வந்த அவளை எப்படி அவன் வெளியே போ என்று விரட்ட முடியும்.
அன்புவுக்கு அவளை மட்டும் பிடிக்கவில்லை!!
அவளுக்கு பிடித்த எல்லாமே அவனுக்கும் பிடிக்கும்!!

அன்புவின் வீட்டில் இருக்கும் ஒவ்வொன்றும் அவளை நியாபகப்படுத்துமே!!
இனி என்ன செய்ய? மனம் நொந்தவாறு அமர்ந்திருந்தவன் அவளுக்குப் பிடித்த அதே விநாயகரின் முன் தான் அமர்ந்திருந்தான்.

அன்பு மற்றும் பூஜிதா இருப்பது இரண்டு படுக்கை அறை கொண்ட அபார்ட்மெண்ட்.

அங்கு தோட்டத்திற்கு வழி இல்லை என்பதால் பால்கனியையே தோட்டமாக மாற்றி ஒரு விநாயகரையும் வைத்து விட்டான்.

சுதாவைப் போல இவனும் இன்பம்,துன்பம் என எல்லா நேரங்களிலும் வினுவைத் தான் நாடுவான்.

வெள்ளை ரோஜாக்களுக்கு மத்தியில் வீற்றிருந்த விநாயகரையே கண் இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தவன் என்ன தோன்றியதோ அங்கேயே சுவற்றில் சாய்ந்து  கண்களை மூடி அமர்ந்து விட்டான்.

அவனுக்கு இதற்கு மேல் இதைப் பற்றி யோசிக்கும் அளவு மன தைரியம் இல்லை!!
பெற்றோர்களை விபத்தில் இழக்க நேரிட்ட போது கூட வராத கண்ணீர் இன்று அணை போல ஊற்றெடுக்க அதைத் தடுக்க தான் கண்களை மூடியது.

அன்று பெற்றோர்களின் இழப்பில் வெளியே வந்த கண்ணீரைக் கூட அழுது கொண்டே இருக்கும் தன் தங்கைக்காக உள்ளே இழுத்துக் கொண்டவன் அதற்கு பிறகு அழவே இல்லை.தேக்கி வைத்த கண்ணீரெல்லாம் இன்று ஒட்டுமொத்தமாக வெளியேறும் என அவன் என்ன  கனவா கண்டான்...

பூஜிதாவுக்கு நன்றாகத் தெரியும் அன்பு இங்கு தான் இருப்பான் என்று...
பக்கத்து வீட்டு பால்கனியில் இருந்து இங்கே குதித்தவள் கண்களை மூடி சுவற்றில் சாய்ந்து இருப்பவனைக் கண்டு மனது வலித்தாலும் தனக்கு அம்மா, அப்பாவாக இருக்கும் அண்ணனுக்கு இப்போது அவள் முற்றிலுமாய் மாறிப்போனாள்.

அன்புவை தன் மடிமீது படுக்க வைத்தவள் தலையைக் கோதிக் கொண்டே இருக்க தாயின் ஸ்பரிசத்தைக் கண்ட அந்த வளர்ந்த குழந்தையும் அப்போதைக்கு இருந்த மன வலிகளையெல்லாம் மறந்து கண் அயர , தாயாய் உருமாறியவளும் அப்படியே உறக்கத்தை தழுவினாள்.

வீட்டில் சுதாவை இறக்கிவிட்டவன்
"பாய்" என்று கூறி கிளம்பிவிட
"டாடா" என்று இவள் காற்றுக்கு தான் கை அசைத்தாள்.

"பாய் சொன்னா அடுத்தவங்க அதை சொல்லுற வர காத்திருக்கணும் ,அந்த பேசிக் மேனர்ஸ் கூட இல்லை!! இவர் நமக்கு மேனர்ஸ் சொல்லி கொடுக்கிறார், போடா போடா போடா" என்று முணுமுணுத்தவள் வீட்டினுள் நுழைந்ததும் தாயின் சுப்பிரபாதம் தான் அவளை வரவேற்றது.

"இங்கே பாருங்க சுதாப்பா, யுவா கூட வெளியே கூட்டிட்டு போறேனு பர்மிஷன் கேட்கிறார்! இந்த சுதா ஒரு வார்த்தை சொல்லல... யுவா கூப்பிட்டதும் அம்மாவை மறந்தாச்சு! அவளுக்குத்தான் ரோஜா பறிக்க தோட்டத்துக்கு போனேன் வந்து பார்த்தா அவளைக் காணோம்!! இந்த பொண்ணுங்களையே நம்பக் கூடாது" என்று கூறியவரைப் பார்த்து புன்னகைத்துக் கொண்டிருந்தார் சிவராமன்.

"நானா டா சொல்ல மாட்டேனு சொன்னேன்" மனதில் தன் நிலையை நொந்தவாறே பாவமாக பாருவைப் பார்க்க

"இருபத்திரெண்டு வருஷம் வளர்த்த என்னை மூன்றே நாளுல வந்த யுவாவுக்காக மறந்துட்டியே சுதா மா" பாரு விளையாட்டுக்காக தான் அப்படிக் கூறினார் ஆனால் சுதாவால் தான் அப்படி எடுத்துக் கொள்ள முடியவில்லை...

"நான் அப்படி நினைப்பேனா ம்மா " என்றவள் அவரை அணைத்துக் கொண்டு அழ ஆரம்பிக்க

" அடியே அழுமூஞ்சி நான் சும்மா சொன்னேன்" என்று பாரு கூறியதெல்லாம் அவள் எங்கே கேட்டாள்.

ஓவர் எமோஷனல் ஆகும் பொழுது மட்டுமே அவள் வார்த்தைகளில் ம்மா என்ற வார்த்தை வரும்.
அதிலே கண்டுகொண்டவர் அவர் முதுகை வருடிக் கொடுக்க

"ம்மா நீ இல்லாம என்னால இருக்கவே முடியாது மா! பொண்ணுங்க அப்பா செல்லம், அப்பா மாதிரி இருக்காங்க அதெல்லாம் ஒருபக்கம் இருந்தாலும்
பொண்ணுங்க அதிகமா தேடுறது அம்மாவை மட்டும் தான்!!அம்மா ஒருநாள் வீட்டுல இல்லைனாலும் , அம்மாகிட்ட திட்டு வாங்கலைனாலும் அந்த நாளே நல்லா இருக்காது மா, எவ்ளோ சுவையான சாப்பாடு சாப்பிட்டாலும் அம்மா செஞ்ச சாப்பாடு மாதிரி இருக்கவே இருக்காது மா...
அப்பா ஜாடைல பொண்ணு இருக்கானு சொல்லுறது பெருமைனா , அம்மா கைப்பக்குபவம் அப்படியே பொண்ணுக்கும்னு சொல்லுறது கூட பெருமை தான் மா...
நீ எப்படி பாரு அப்படி சொல்லலாம்? போ பாரு ...என் கூட பேசாத" என்று கோபித்துக் கொண்டு அவர் மடியிலேயே படுத்துக் கொண்டு வயிற்றில் முகம் புதைத்து அழும் குழந்தையை நினைத்து அவருக்கும் கண்கள் கலங்கத் தான் செய்தது.

"எப்படி சுதாப்பா இவளை விட்டுட்டு இருப்போம்? இன்னும் இரண்டு மாதம் தான் இங்கே இருப்பால" என்று பாரு கூறியதும் அதை ஆமோதிப்பதைப் போல் தலையசைத்தவருக்கும் மனது வலிக்கத் தான் செய்தது.

மன பாரத்துடனே அந்த நாள் இரவைக் கடத்தியவள் இந்த நிகழ்வால் யுவாவையே மறந்திருந்தாள்.

எப்பொழுதும் இருக்கும் கலகலப்பு இல்லாமல் கடனே என்று கல்லூரிக்குக் கிளம்பியவள் தொணதொணவென்று பேசிக்கொண்டே வரும் தீபுவையும் கண்டுகொள்ளவில்லை.

"ஓய் வளர்ந்துக் கெட்ட சுதாக்கா, கல்யாணப் பொண்ணு ஆகப் போறியாம்? அதுனால தான் அமைதியா இருக்கியா? ஓஓ பொண்ணா மாற டிரை பண்ணிட்டு இருக்கியா?"  என்று கூறிய சிவாவை நார்மலாக இருந்திருந்தால் அடி பிண்ணியிருப்பாள் இப்போது தான் ஜென் மோடுக்கு போய் விட்டாளே!!

"போடா " என்று கூறி அவள் பூஜிதாவைத் தேடிச் செல்ல

"வானரமா சுத்திட்டு இருந்த என் அக்காவை இப்படி மாத்திட்டியே டா " என சிவா தான் தீபுவிடம் சண்டை போட்டுக் கொண்டிருந்தான்.

"ஒருவேளை அக்காவுக்கு யுவா மாமாவை பிடிக்கலையோ?" என்ற எண்ணம் உதித்தும் அக்காவைத் தேடிச் சென்றவன் அவள் பூஜூதாவிடம் பேசியது , பூஜிதா சுதாவிற்கு தெரியாமல் அன்புவிடம் பேசியது  என அனைத்து கேட்டு விட
அடுத்த நொடியே வானரப்படை ஒன்றாக கூடி திட்டம் தீட்ட ஆரம்பித்தது.

என்ன திட்டம்🚶‍♀🚶‍♀நாளைக்குப் பார்க்கலாம்

ப்ரியமுடன்
தனு❤

Bạn đang đọc truyện trên: Truyen2U.Pro