19

Màu nền
Font chữ
Font size
Chiều cao dòng

மீனாக்‌ஷி அடாவடியாக க்ரிஷ்ஷிடம் தன் காதலை கூறிவிட்டாள். இருந்தாளும் ஒரு பொண்ணாக அவளுக்கும் இனி க்ரிஷ்ஷை எப்படி எதிர்கொள்ள போகின்றோம் என்று படபடப்பு இருந்தது. எது எப்படி ஆயினும் காதலை கூறியபின் வரும் அடுத்து சில நாட்கள் காதலர்களுக்கு ஒரு சுகமன அவஸ்த்தை என்பது காதலித்த எல்லோருக்குமே தெரியும். பசி எடுக்காது, நண்பர்களை கண்டாள் பிடிக்காது, எப்போதும் முகத்தில் ஒரு குறு நகை, எந்த பொருளை பார்த்தாலும் அது நாம் காதலிப்பவரை நினைவு படுத்தும் ஒன்றாக இருக்கும்.

வீட்டில் இருப்பர்கள் காதலில் விழுந்தவர்களை இலகுவில் அடையாளம் கண்டு கொள்வார்கள். ஆனால் மீனாக்‌ஷியின் வீட்டில் இருப்பர்களுக்கு அவளின் மனமாற்றத்தை கண்டு கொள்ளும் அளவுக்கு நேர அவகாசமோ அல்லது மனநிலையோ இல்லை.

காலேஜில்...

" மீனாக்‌ஷி, அங்க இருக்குற பெஞ்ச்ல உட்கார்ந்து பேசிகிட்டு இருக்கலாமா?" என்று க்ரிஷ் கேட்க மீனாக்‌ஷியும் தயக்கத்துடன் சரி என்றாள். தனியாக இருந்து பேசலாம் என வந்துவிட்டார்களே அன்றி இருவரில் யார் முதலில் பேச்சை தொடங்குவது என்ற குழப்பம் இருந்தது.சிறிது நேரம் அமைதியாகவே இருந்தனர்.

" மீனாக்‌ஷி, நைட் நான் அனுப்பின மெசேஜ்கு ஏன் நீ ரிப்ளை பண்ணல?" என்று கேட்க காதலிக்க ஆரம்பித்த பின் முதலில் அவன் பேசிய விடயம் அவளுக்கு சிறிது ஆச்சரியமாக இருந்தது. அவள் பதில் எதுவும் கூறவில்லை.

" நான் உன்கிட்ட சில விசயம் சொல்லிடனும்னு இருக்கேன் மீனாக்‌ஷி.  என்னோட பத்தாவது வயசுல எங்கம்மா இறந்துட்டாங்க. எங்கப்பாக்கு என்ன பிடிக்காது. எப்போமே என்மேல ரொம்ப கண்டிப்பா நடந்துக்குவாறு. எனக்கு எல்லாமே எங்க அக்காதான். அவதான் என் உலகம். தப்பா சொல்ரேன்னு நினைச்சுக்காத, அவ உன்ன லவ் பண்ண வேணாம்னு சொன்னா நான் உன்ன லவ் பண்ண மாட்டேன். ஏன்னா எனக்கு எங்க அக்காவ ரொம்ப பிடிக்கும். நாங்க பெரிய வசதியான குடும்பம் எல்லாம் இல்லை. தேவைகள தீர்த்துக்கொள்ளக்கூடிய வசதிகள் எங்க வீட்டுல இருக்கு.

அப்புறம் நான் இதுவரைக்கும் யாரையும் காதலிச்சது இல்ல. எனக்கு அந்த எண்ணம் வந்ததே இல்லை. படிச்சது முழுக்க பாய்ஸ் ஸ்கூல்ல. எனக்கு ரொம்ப முன் கோபம் வரும். அதுவும் எனக்கு பிடிச்சவங்க மேல ரொம்ப கோபம் வரும். ஏன்னா நமக்கு பிடிச்சவங்க மேலதானே உரிமையோட கோவிக்க முடியும்.

சிகரட், டிரிங்க்ஸ் இது எந்த பழக்கமும் இல்லை. எங்கப்பா டெய்லி இரண்டு பாக்கட் சிகரட் பிடிப்பாரு. அதனாலேயே எனக்கு சிகரட் பிடிக்காது. வேற என்னப்பத்தி சொல்ரதுக்கு எதுவுமே இல்லை. உனக்கு ஏதும் சொல்லனும்னா சொல்லு" என்று கூறினான்.

க்ரிஷ் இப்படி வெளிப்படையாக பேசுவான் என்று அவள் நினைக்கவில்லை. அதுவும் அவனின் பேச்சில் இருந்த எதார்த்தம் அவளை சற்று தடுமாற செய்தது. மற்ற காதலர்கள் போல தன் காதலியிடம்  பேசாமல், அவன் வீட்டை பற்றியும் அக்கா மீது அவன்  வைத்திருக்கும் அபரிதமான அன்பையும் அவளுக்கு கூறியது அவள் மனதை ஒரு கணம் ஆட்டம்கான செய்தது. அவள் க்ரிஷ்ஷை விரும்ப ராதா மீது அவன் வைத்த பாசமும் ஒன்று. ஆனால் அவன் ராதாவுக்காக தன்னையும் தூக்கி எறிய தயங்க மாட்டான் என்று அவளிடமே கூறியது அவளுக்கு பயமாக இருந்தது.

" க்ரிஷ் நம்ம ஒருவாட்டி உங்க அக்காகிட்ட பேசலாமா?" என்று தயங்கி தயங்கி கேட்க அவனுக்கு சிரிப்பு வந்துவிட்டது.

" ஹேய் லூசு, நான் அல்ரெடி எங்கக்காகிட்ட சொல்லிட்டேன். அவ என் காதலுக்கு சரி சொல்லிட்டா. பட் ஒரே ஒரு கண்டிசன் போட்டா. நம்ம ஏடாகூடமாக எதுவும் பண்ணிட கூடாதாம்" என்று கூற அவள் வெட்கத்தில்

" ச்ச்சீ போடா, லவ்வ சொல்லி முழுசா ஒரு வாரம் கூட ஆகல்ல. அதுக்குள்ள பேசுற பேச்ச பாரு. கெட்ட பையண்டா நீ" என்று மீனாக்‌ஷி முன் போன்று அவனிடம் கலகலப்பாக பேசுவது அவனுக்கு மிகவும் சந்தோசமாக இருந்தது.

" ஆமா நீ எதுக்கு இப்போ வெட்கப்படுற. நான் சொன்னது, எங்கக்கா நம்ம காதல் மத்தவங்களுக்கு தெரியிற மாதிரி நடந்துக்க கூடாதாம்.  அதைத்தான் நான் ஏடாகூடமா  நடந்துக்க வேணாம்னு சொன்னாங்கன்னு சொல்ல வர்றதுக்குள்ள நீ என்ன திட்ற. ஆமா அப்படி நீ என்னதான் நினைச்ச" என்று கேட்க அவள் அவனை பார்த்து முறைத்தாள்.

" போடா பொடிப்பயளே" என்று அவனை திட்ட க்ரிஷ்

"ஹேய் முன்னாடிதான் என் வயச காட்டி என்ன தம்பினு சொல்வ. இப்போ அந்த விளையாட்டெல்லாம் இல்ல. ஒழுங்கா மரியாதை கொடுத்து பேசனும். வாங்க, போங்க, உட்காருங்க இப்படி வார்த்தைக்கௌ வார்த்த ங்க போட்டு பேசனும்" என்று கூற அவனுக்கு தனது உதட்டை துருத்திக்காட்டி பழித்தவள்

" ஹாஹா அதெல்லாம் முடியாது தம்பி. நான் உன்ன தம்பின்னுதான் சொல்வேன். உன்னால முடிஞ்சத பார்த்துக்க" என்று கூற மீனாக்‌ஷியின் மொபைல் அடித்தது.

" ஹேய் சொல்லு ரேஷ்மா"

................................

" எப்போ?"

................................

" சரி விடு பார்த்துக்கலாம்" என்று கூறி காலை கட் செய்தாள்.

" க்ரிஷ் அடுத்த மாசம் நம்ம காலேஜ் கல்ச்சரல்ஸ் நடக்க போகுதாம். ஆர்கனைஸிங்க் கம்மிட்டில நம்ம பேட்ச் சார்ப்பா என்னையும் சாலமனையும் போட்டிருக்காங்கலாம். இப்போதான் நோட்டீஸ் போர்ட்ல மேனேஜ்மண்ட் அன்னவுன்ஸ் பண்ணிருக்காங்க" என்று கூற அவன்

" கங்க்ராட்ஸ். கலக்குப்பா. எனக்கு கிரிக்கட் விட்டா வேற எதுலயுமே இண்ட்றஸ்ட் இல்லை. நீ ஆர்கனைசிங்க்ள கலக்கு. உனக்கு பக்க பலமா நான் இருக்கேன்" என்று கூறினான்.

" ஹாஹா நீ எந்த குழப்பமும் பண்ணாம இருந்தாலே போதும். மத்தது எல்லாம் நாங்க பார்த்துக்குவோம். சரி க்ரிஷ் இப்போ எனக்கு போகனும். இன்னும் கொஞ்ச நேரத்துல ஏதோ மீட்டிங்க் இருக்காம். நம்ம அப்புறமா பார்க்கலாம். பாய்" என்றவள் அவனின் பதிலுக்கு கூட காத்திராமல் தனது மொபைலை எடுத்து யாருக்கோ கால் செய்து கொண்டு சென்றாள்.

இங்கு க்ரிஷ்ஷிற்கு மீனாக்‌ஷி தன்னிடம் எந்த விதத்தில் பழகுகின்றாள் என்பது புரியவில்லை. சில நேரங்கள் ஒரு பெண்ணாக வெட்கப்படுபவள் அடுத்த கனமே அவனை டாமினேட் பண்ணுவது போல அவனுக்கு தோன்றுகின்றது. ஆனால் அது ஒன்றும் க்ரிஷ்ஷிற்கு கஷ்டமாக தோன்றவில்லை. காரணம் அவனுக்கும் ஒரு பெண்ணால் டாமினேட் செய்யப்படுவது பிடித்தமான ஒன்று.

ராதாவுடன் என்னதான் அவன் கேளி பேசி விளையாடினாலும் அவள் ஏதும் வேலைகளை ஏவினாலோ அல்லது எதையும் கட்டளையாக இட்டாலோ அவன் உடனே செய்து முடித்துவிடுவான். ராதா அவனை டாமினேட் செய்வது அவனுக்கு மிகவும் பிடித்தமான ஒன்று. ஒரு ஆண் தான் பெண்ணை டாமினேட் செய்ய வேண்டும் என்பது கிடையாது. ஒரு பெண்ணின் அன்பினால் ஒரு ஆணை டாமினேட் செய்ய முடியும். அதைத்தான் ராதா சிறு வயதில் இருந்து க்ரிஷ்ஷிற்கு செய்து வந்தாள். அதனால்தான் என்னவோ க்ரிஷ்ஷால் சுயமாக எந்த ஒரு முடிவும் எடுக்க முடிவதில்லை. அப்படியே முடிவெடுத்தாலும் அதை தன் அக்காவிடம் கூறி அவளின் அனுமதியை பெற்றுவிடுவான்.

மீனாக்‌ஷியின் சமீபத்திய செயல்கள் அவனுக்குக்கு ராதவை அதிகமாக ஞாபகபடுத்தியது. அவனுக்கு அது சந்தோசமாகவும் இருந்தது. காரணம் தனக்கு மிகவும் பிடித்த தன் சகோதரி போலவே ஒரு பெண் தனக்கு காதலியாக கிடைத்தாள் எந்த ஆண்தான் சந்தோசப்படமாட்டான்.

மீட்டிங்க் முடித்து வந்த மீனாக்‌ஷி வக்குப்புக்கு சென்றாள்.

" ஹாய் கைஸ், கல்ச்சரல்ஸ்கு இந்த வருசம் மொத்தமா 12 காலேஜ் கலந்துக்குறாங்க. நம்மதான் ஆர்கனைசிங்க் பண்ண போறோம். எல்லா போட்டிக்க்கும் ஜட்ஜர்ஸ போடுறதுக்குன்னு எல்லா காலேஜ்ல இருந்தும் ஒவ்வொரு ஆளா செலக்ட் பண்ணி ஒரு கமிட்டி போட்டிருக்காங்க. சோ இந்த வருசம் ரிசல்ட்ஸ்ல எந்த ப்ராப்ளமும் வராது. அப்புறம் முக்கியமான ஒரு விசயம் இந்த வருச கல்ச்சரல்ஸ நம்ம பேட்ச் மட்டும்தான் முன்னுக்கு நின்னு பண்ண போறோம். மூணாவது வருச ஸ்டூடண்ட்ஸ் டிரைனிங்காக கேம்ப் போயிருக்குறதால நம்மதான் பண்ண போறோம். நாலாவது வருச ஸ்டூடண்ட்ஸ் நமக்கு ஹெல்ப் பண்ணுவாங்க" என்று கூறி முடிக்க சாலமன்

" லெட்ஸ் டூ திஸ் கைஸ். நம்ம யாருன்னு காட்டுவோம்" என்று கூறினான்.

எல்லோரும் தங்களால் ஆன வேலைகளை செய்யலாம் என முடிவெடுக்க சாலமன் மொத்த மாணவர்களையும் மூன்று கேட்டகரி ஆக பிரித்து வேலைகளை சரியான முறையில் பகிர்ந்து கொடுத்தான். இவர்கள் எதிர்பார்த்ததை விட சாலமன், மீனாக்‌ஷியின் தலைமையில் கல்ச்சரல்ஸ்கான ஏற்பாடுகள் எந்த   தடையும் இன்று சுமூகமாக சென்றுகொண்டிருந்தது.

-----------------

Bạn đang đọc truyện trên: Truyen2U.Pro