23

Màu nền
Font chữ
Font size
Chiều cao dòng

வேலை முடித்து மீனாக்‌ஷி கலைப்பாக வீடு வந்து சேர்ந்தவள் அசதியாக சோபாவில் ஓய்வெடுத்துக்கொண்டிருந்தாள். சிறிது நேரத்தில் வீட்டின் காலிங்க் பெல் அடிக்க மெதுவாக எழுந்து  கதவை திறந்தவளுக்கு ஆச்சரியம்.

" ஹேய் ரேஷ்மா எப்படி இருக்க. நீ எப்போ பெங்களூரு வந்த" என்று கேட்க எப்போதும் போல புன்னகைத்தவள்

" என்ன டாக்டர் மேடம் உள்ள கூப்பிட மாட்டீங்களா?" என்று கேட்டாள். தன் தோழியை கண்ட அதிர்ச்சியில் இருந்த மீனாக்‌ஷி அசடு வழிந்தவள்

" ஹேய் சாரிடி, ரொம்ப நாள் கழிச்சி உன்ன பார்க்குறேனா, அதான் அதிர்ச்சியில என்ன பண்றதுன்னே தெரியல. உள்ள வா ரேஷ்மா" என்று அவளை வீட்டினுள் அழைத்து சென்றாள். வீட்டை சுற்றி தன் விழிகளை ரேஷ்மா சுழள விட்டவள்

" என்னடி சொந்த வீடா?" என்று கேட்டாள். அதற்கு புன்னகைத்த மீனாக்‌ஷி

" என்னடி கிண்டலா, உன் அப்பா அளவுக்கு எல்லாம் எங்க அப்பா வசதியானவரு இல்லம்மா" என்று தன் தோழியை கலாய்த்தவள் தொடர்ந்து

" இல்லடி வாடகை வீடுதான். வந்து இரண்டு மாசம்தான் ஆகுது" என்றாள். வீட்டில் யாருமில்லாமல் இருப்பதை கண்ட ரேஷ்மா

" வீட்ல யாருமே இல்லையா?" என்று கேட்க

" தொடர்ச்சியா மூன்று நாளா எனக்கு நைட் ஷிஃப்ட். அதனால நான் கொஞ்சம் ரெஸ்ட் எடுக்கட்டும்னு பட்டம்மா பையன கூட்டிக்கிட்டு வெளியில போயிட்டாங்க" என்று கூறியவளை நோக்கிய ரேஷ்மா

" ஷக்தி எங்க?" என்று கேட்க மீனாக்‌ஷி என்ன பதில் கூறுவது என்று தெரியாமல் முழித்துக்கொண்டிருந்தாள். இதுவே தன் கல்லூரி தோழி ரேஷ்மாவாக இருந்திருந்தால் தன் வாழ்வில் நடந்த எல்லாம் கூறியிருப்பாள். ஆனால் இப்போது வந்திருப்பது எப்படியான ரேஷ்மா என்று மீனாக்‌ஷியால் கணிக்க முடியவில்லை. காரணம் ஷக்தியை அவள் காதலித்தது கல்லூரி நாட்களிலேயே மீனாக்‌ஷிக்கு தெரியும். கல்லூரி நாட்களின் பின் ஒவ்வொருவரின் வாழ்க்கையும் யாரும் எதிர்பாராத சுழலில் சிக்கி சின்னாபின்னமாகியது மட்டுமன்றி கடந்த சில நாட்களாக மீனாக்‌ஷி வாழ்வில் சுனாமியும் வந்துவிட்டது. மரத்தில் இருந்து விழுந்தவனை மாடு முட்டிய கதையாகியது அவள் வாழ்க்கை.

திருமணம் முடித்த அன்று இரவு.....

கையில் பாலுடன் முதல் இரவு அறைக்குள் மீனாக்‌ஷி செல்ல அவளின் பெற்றோர் நிம்மதி பெருமூச்சு விட்டனர். முதல் மகளின் வாழ்க்கை என்னவாகியது என்றே அவர்களுக்கு தெரியவில்லை. இரண்டாவது மகளின் வாழ்க்கையும் அந்தரத்தில் நின்று விடுமோ என்று பயந்தனர். ஆனால் கடவுளின் அருளால் ஷக்தி மீனாக்‌ஷியை திருமணம் செய்ய விருப்பப்படுவதாக அவனின் பெற்றோர் மூலம் மீனாக்‌ஷியின் வீட்டாருக்கு தெரிவித்தனர். இரண்டு வீட்டினரின் சம்மதத்துடனும் ஷக்தியின் ஒரு தலை காதலுடனும் அந்த திருமணம் இனிதே நடந்தது.

முதல் இரவு அறைக்குள் வந்தவளை நிமிர்ந்து பார்க்க ஷக்திக்கு தைரியமில்லை. அதற்கான காரணம் அவன் மட்டுமே அறிவான்.

" உட்காரு மீனாக்‌ஷி" என்று அவன் கூற அவள் கட்டிலின் ஓரத்தில் அமர்ந்தாள். அவளை மேலும் சங்கடமாக்க விரும்பாமல் கட்டிலை விட்டு எழுந்தவன்

" உன் வாழ்க்கையில என்னன்னமோ நடந்து போயிடிச்சி. நான் யாருமேல தப்புனு இங்க பேச வரல்ல. இப்போ நீயும் நானும் கணவன் மனைவி. நீ இதுக்கு முன்னாடி எப்படி இருந்த, யாரை காதலிச்ச, அந்த நேரத்துல எங்க போன, என்ன பண்ண இது எதுவுமே நான் கேட்க போறதில்ல. ஏன்னா அது என் பொண்டாட்டி மீனாக்‌ஷி இல்லை. இதோ இந்த கட்டில் ஓரத்துல உட்கார்ந்து இருக்காளே அவதான் என் பொண்டாட்டி. நீ இப்போ எங்க போற, என்ன பண்ற என்பதுதான் எனக்கு முக்கியம்.

நான் என்ன சொல்ல வர்றேன்னு உனக்கு புரியும்னு நினைக்கிறேன். சிம்பிளா சொல்ரதுன்னா எனக்கு இந்த நிமிசத்துல இருக்குற மீனாக்‌ஷி மட்டும்தான் தேவை. அவளோட பாஸ்ட் லைஃப் எனக்கு வேண்டாம். தேவையும் இல்லை. ஏன்னா மீனாக்‌ஷிய பார்த்த முதல் நாள்ள இருந்தே ஐ லவ் மீனாக்‌ஷி. பொண்ணுங்ககிட்ட அதிகமா பேசாதது என்னமோ தெரியல. என் காதல உன்கிட்ட சொல்ற தைரியம் எனக்கு வரல்ல. மனசுக்குள்ளயே வெச்சிக்கிட்டேன். ஆனா கடைசில என் காதலோட சக்தி ஜெயிக்க வெச்சிடிச்ச" என்று கூற மீனாக்‌ஷி வேட்டையாடப்பட்ட மானாக துவண்டாள். காரணம் ஷக்தி அவனின் காதல் ஜெயிச்சதாக சந்தோசமாக கூறியதில் அவளின் காதல் தோல்வி உள்ளடங்கியிருந்தது. அவளின் ஒரு நொடி நேர முகமாற்றத்தை கண்டவன் அவள் காலடியில் அமர்ந்து

" மீனாக்‌ஷி, சத்தியமா நான் உன் காதல கொச்சைபடுத்த அப்படி சொல்லல. ஐயோ என்ன பேசுறேன்னு எனக்கே தெரிய மாட்டேங்குது. ப்ளீஸ் மீனாக்‌ஷி என்ன மன்னிச்சிடு. இனிமே உன் வாழ்க்கையில எந்த ஒரு நொடியும் உன் மனசு கஷ்டபடுற மாதிரி நான் நடந்துக்க மாட்டேன். இது என் காதல் மேல சத்தியம்" என்று கூற அவளின் காயம் பட்ட மனதுக்கு அவனின் ஆறுதல் வார்த்தைகள் நிம்மதியை கொடுத்தது.

" நான் தான் உங்களுக்கு நன்றி சொல்லனும். அந்த போட்டோ ரேஷ்மா மொபைலுக்கு போகாம வேற யாரும் மொபைலுக்கு போய் இருந்தா என்னாகியிருக்கும். க்ரிஷ் ஏன் அப்படி பண்ணான்னு எனக்கு இன்னைக்கு வர தெரியல. என்னால அதுக்கு அப்புறம் அவன்கிட்ட பேச கூட முடியல்ல. இப்போ எங்க இருக்கான்னும் தெரியல" என்று கூறினாள்.

" இங்க பாரு மீனாக்‌ஷி, இப்போதானே சொன்னேன். உன் கடந்த காலம் எனக்கு வேணாம்னு. அதை மறந்துடு. அப்புறம் ஒரு விசயம் உன்கிட்ட சொல்லனும். ஏன்னா நாளைக்கு உனக்கு தெரிய வந்து ஏன் சொல்லலன்னு கேட்டிட்டீன்னா" என்றவளை அவள் என்ன என்பது போல பார்த்தாள்.

" உன் ஃப்ரெண்ட் ரேஷ்மா என்ன ப்ரபோஸ் பண்ணா. ஆனா நான் வேறொரு பொண்ண காதலிக்கிறேன்னு சொல்லிட்டேன். அந்த பொண்ணுதான் யாருனு உனக்கு தெரியுமே" என்று கூற இந்த சம்பாசனைகள் மூலம் அவள் மனது சிறிது லேசாகியது போன்ற உணர்வு வர அவனின் காதலி அவள்தான் என்பது தெரிந்ததால் அவளின் முகம் சிறுது வெட்கத்தை அப்பிக்கொண்டது. இருந்தாலும் ரேஷ்மா ஷக்தியை காதலித்தது அரசல் புரசலாக மீனாக்‌ஷிக்கு தெரிந்ததே.

முதலிரவன்று இவ்வளவு கண்ணியத்துடத்துடன் நடந்துகொண்ட ஷக்தி அவன் காதல் வெற்றி பெற இப்படி ஒரு கேவலமான காரியத்தை செய்வான் என்று அவள் கனவிலும் நினைக்கவில்லை. அந்த காரியம்தான் என்ன??

இன்று ரேஷ்மாவின் " ஷக்தி எங்க?" என்ற கேள்விக்கு மீனாக்‌ஷி பதில் கூற முடியாமல் தவிக்க

" எனக்கு எல்லாம் தெரியும் மீனாக்‌ஷி. உன்னோட அந்த போட்டோ என் மொபைலுக்கு எப்படி வந்திச்சி, நீயும் க்ரிஷ்ஷும் பிரிய காரணம் யாரு இதெல்லாமே தெரியும். அது தெரிஞ்சதாலதான் உன்ன பார்க்கலாம்னு வந்திருக்கேன். அப்புறம் நான் ஷக்திய காதலிச்சது கூட உனக்கு தெரியும்னு எனக்கு தெரியும். இது எல்லாம் எனக்கு எப்படி தெரியும்னு யோசிக்கிறியா? ரொம்ப சிம்பிள். அது எப்படின்னு நான் சொல்லமாட்டேன். அதை நீ தெரிஞ்சிக்கனும்னா நான் சொல்ல போற விசயத்துக்கு நீ சம்மதம் சொல்லனும்" என்று கூற மீனாக்‌ஷி என்ன என்பது போல பார்த்தாள்.

மீனாக்‌ஷியின் அருகில் வந்து அமர்ந்த ரேஷ்மா அவள் கைகளை பற்றி இதமாக தடவியவள்

" உன்ன ஏமாத்தின ஷக்தி உனக்கு வேணாம்டி. அவனோட லவ் நிஜம் இல்லை. உன் காதல பிரிச்சவன் அவன். நீயும் க்ரிஷ்ஷும் தான் மேட் ஃபார் ஈச் அதர். உங்கள காலேஜ்ல வெச்சி பார்த்தப்போவே எனக்கு அது தெரியும். என்ன அடிக்கடி டாம் அண்ட் ஜெர்ரி மாதிரி சண்ட போட்டுக்குவீங்க. காதல்ல வராத சண்டையா. நீயே சொல்லு பார்க்கலம். ஆனா ஏதோ நடக்க கூடாதது நடந்து க்ரிஷ்ஷோட வாழ்க்கை இப்போ அந்தரத்துல நிற்குது. அவனால இனிமே டாக்டராக முடியாது. அட்லீஸ்ட் அவன் காதலிச்ச பொண்ணாவது அவனுக்கு கிடைக்கட்டும்டி. நீங்க எல்லோரும் அவனுக்கு பண்ண கெடுதலுக்கு இது ஒரு நல்ல மருந்தா இருக்கும்" என்று கூற ரேஷ்மாவின் கைகளுக்குள் இருந்த தனது கையை மெதுவாக உருவியவள் தன் தோழியை ஒரு வெற்று பார்வை பார்த்தாள்.

அவளின் பார்வையின் வீரியம் ரேஷ்மாவை பயம் கொள்ள செய்தது. காரணம் அவளின் பார்வை அப்படி. அவளின் பார்வையில் ஒரு கேள்வியும் இருந்தது. அதுதான் நான் க்ரிஷ்ஷுடன் சேர்ந்தால் ஷக்தி என்னாவான் என்பது. அவளின் பார்வையில் இருந்த கேள்வி ரேஷ்மாவிற்கும் புரிந்தது. அவள் அதற்கான பதிலை கூற தயாரானாள்.

-------------------
ஹாய் வட்டீஸ்...
கடந்த சில நாட்களாக நேரம் என்பதே கிடைக்கவில்லை. எப்போதும் காமண்ட்ஸ்கு உடனே ரிப்ளை செய்யும் என்னால் இப்பொழுது சரியாக வாட்பெட் வர முடிவதில்லை. பல எழுத்தாளர்களின் கதைகள் படிக்காமல் வோட் மட்டும் போட்டு கிடப்பில் உள்ளது. இந்த அப்டேட்டை எழுத்து பிழை பார்க்கவே எனக்கு இரண்டு நாளானது. காரணம் முன்னாடியே கூறிவிட்டேன்.

எப்பொழுதும் நான் எழுதும் கதைகளின் கருவில் எனக்கு சந்தேகம் வந்ததில்லை. ஆனால் இந்த கதை மிகவும் ஆட்டம் காட்டுகின்றது. ஒரு வேலை என்னால் நான் விரும்பியபடி லாஜிக் மற்றும் ரியாலிட்டியுடன் கதையை கொண்டு செல்ல முடியாமல் போனால் இந்த கதை முடிவில்லாமல் இடைநிறுத்தப்படும் என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கின்றேன். உங்களுக்கே தெரிந்திருக்கும் கடைசி இரண்டு அப்டேட்களில் நான் முன் எழுதிய சில லாஜிக் தவறுகளை மாற்றியிருந்தேன்.  29 அப்டேட் வரை எழுதிவிட்டேன். இன்னும் ஆறு அப்டேட்கள் கைவசம் உள்ளன பதிவிட.

இதை நான் இங்கு கூற காரணம் உண்டு. ஒரு கதையை எடுத்தால் தொடர்ச்சியாக அப்டேட் போடுவது என் வழமை. அதில் விதிவிலக்கானதி " ஆடப்பிறந்த அலையிவள்". கதையின் முடிவை கூட நான் முன்கூட்டியே தீர்மானித்துவிடுவேன். ஆனால் இந்த கதையில் அப்படி முடியவில்லை. முன் எல்லாம் மல்டி காஸ்ட் ஸ்டோரி எழுதுபவர்களை பார்த்து நகைப்பதுண்டு. காரணம் மல்டி காஸ்ட் கதை எழுதுவது மிக எளிது என நினைத்திருந்தவன் நான். ஆனால் எழுதும் போதுதான் தெரிகின்றது அதன் கஷ்டம். முடிந்தவரை இந்த கதையை முழுமைப்படுத்த முயலுவேன். அப்படி முடியாமல் கூட போகலாம் என்பதற்கு கூட சாத்தியம் உள்ளது என்பதற்கே இந்த குட்டி பதிவு..

நன்றி.

Bạn đang đọc truyện trên: Truyen2U.Pro