26

Màu nền
Font chữ
Font size
Chiều cao dòng

அன்று......

காலேஜில் மீனாக்‌ஷி, க்ரிஷ் மற்றும் ரேஷ்மாவுக்கு இடையில் நடந்த கலவரத்தில் மிகவும் பாதிப்படைந்தது ஷக்திதான். அன்று மீனாக்‌ஷி தன்னைத்தான் காதலிக்கின்றாள் என்பது புரியாமல் க்ரிஷ் அவளிடம் " ஷக்தியதானே காதலிக்கிற " என்று கூறியதை அங்கு வந்த ஷக்தி கேட்டுவிட, இந்த நொடி வரை அவன் அவள் தன்னை காதலிப்பதாக கூறுவாள் என்று காத்திருந்தான். ஆனால் இன்று டூயட் சாங்க் பாடியதில் இருந்து அவனால் காதலை மனதுக்குள் வைத்து கட்டுப்படுத்த முடியவில்லை. அணையை உடைத்து வெளிவரும் காட்டாற்று வெள்ளம் போல அவனுக்குள் இருந்த காதல் வெளிவர, அந்த காதலை இன்றே மீனாக்‌ஷியிடம் கூறலாம் என வந்தவன் அவர்களுக்குள் நடந்த சம்பாசனை கேட்டு அப்படியே அவன் காதல் மனம் சுக்கு நூறாக உடைந்தது. தன் உடைந்த மனதை பொறுக்க மனமின்றி தனது பைக்கை எடுத்துக்கொண்டு பீச்சுக்கு சென்றவன் யாருமில்லாத ஒரு இடதை தெரிவு செய்த அழ ஆரம்பித்தான். சிறுது மனம் ஆசுவாசப்பட்டதும் தன் நண்பனுக்கு கால் செய்தான்.

" ஹலோ...." என்றவன் மறுமுனையில் தன் நண்பனின் குரல் கேட்க அழ ஆரம்பித்துவிட்டான்.

" டேய் ஷக்தி ஏண்டா அழுற. என்னாச்சு? அப்பாக்கு ஏதும் ஆச்சா?" என்று மறுமுனையில் ஷக்தியின் நண்பன், ராதாவின் காதலன், க்ரிஷ்ஷின் மாமா சுரேஷ் பதறினான்.

" சுரேஷ், நான் அன்னைக்கு சொன்னேன்ல ஒரு பொண்ணு என்ன காதலிக்கிறான்னு. ஆனா இன்னைக்கு..." என்றவன் அவன் க்ரிஷ் மற்றும் மீனாக்‌ஷிக்கு இடையில் நடந்த உரையாடலை கூறினான். சிறிது நேரம் மறுமுனையில் சுரேஷ் அமைதியாக எல்லாவற்றையும் கேட்டுக்கொண்டிருந்தான். அவன் மனதுக்குள் ஆயிரம் யோசனைகள். தன் நண்பனின் காதலை எப்பாடு பட்டாவது சேர்த்து வைக்க வேண்டும் என்ற எண்ணம் அவன் உள்ளத்தில் உதித்தது. நட்புக்குத்தான் நியாய தர்மங்கள் புரியாதே. தன் நண்பன் யாராவது ஒருவனை கைகாட்டி அடிக்க சொன்னால் அவனை அடித்த பின் ' ஏன் அவனை அடிக்க சொன்னாய்' என்று கேட்கும் ரகம் சுரேஷ். ஆனால் இங்கு அவனுக்கு ஆரம்பத்தில் இருந்தே க்ரிஷ் மீது ஒரு கோபம் இருந்ததால் மிக நிதானமாக யோசித்தான். இதில் மீனாக்‌ஷியின் வாழ்க்கையும் சம்பந்தப்படுவதால் அவளின் வாழ்க்கையிலும் சிறு கசப்பு வந்துவிடாத வகையில் தன் நண்பனின் காதலை சேர்த்து வைக்க வேண்டும் என்று எண்ணியவன் அந்த ஒரு சில நொடிகளுக்குள் ஒரு முடிவுக்கும் வந்தவன், தன் காதலியின் அன்பில் பங்கு போடும் க்ரிஷ்ஷை பழிவாங்க ஒரு சந்தர்ப்பம் அமைந்ததாகவும் எண்ணினான். இங்குதான் அவனின் துல்லியமாக திட்டமிடும் ஆற்றல் சறுக்கியது எனலாம்.

" டேய் முதல்ல அழுறத நிறுத்து. இங்க பாரு ஷக்தி, உன் ஃப்ரெண்ட் சுரேஷ் நான் இருக்கேன். இங்க ப்ராப்ளம் மீனாக்‌ஷியும் க்ரிஷ்ஷும் காதலிக்கிறாங்க அதானே. அதுக்கு நான் ஒரு ப்ளான் சொல்றேன். அந்த காதல நம்ம கலைச்சி விட்றலாம். ஆனா எனக்கு ஒரு சத்தியம் நீ பண்ணிக்கொடுக்கனும்" என்று கேட்டான்.

" என்ன சத்தியம் சொல்லு" என்று ஷக்தி கேட்க

" உன்னையும் மீனாக்‌ஷியையும் சேர்த்து வைக்கிறது என் பொறுப்பு. ஆனா அதுக்கு ரெண்டு கண்டிசன் இருக்கு. முதலாவது இன்னையில இருந்து உன் காதல் சம்பந்தமா நான் எது சொல்றேனோ அத அப்படியே பண்ணனும். நான் இந்தியால இருந்திருந்தா நானே பண்ணியிருப்பேன். ஆனா இந்த நேரம் பார்த்து நான் வேற வெளி நாட்டுக்கு வந்துட்டேன். அது பரவாயில்லை. இரண்டாவது எந்தக் காலத்துலயும் மீனாக்‌ஷி மனசு நோகும்படி நீ எதுவுமே சொல்ல கூடாது. அவ க்ரிஷ்ஷ காதலிச்ச வெச்சி நீ அவள குத்தி காட்ட கூடாது. நீ உன் காதலால அவ க்ரிஷ்ஷ மறக்குற மாதிரி பண்ணனும். இது ரெண்டும் தான் முக்கியம். முதலாவது வேணா கூட காம்ப்ரமைஸ் பண்ணிக்கலாம். ஆனா ரெண்டாவது கண்டிசன்ல நோ காம்ப்ரமைஸ். ஏன்னா இதுல மீனாக்‌ஷியோட வாழ்க்கையும் இருக்கு. இதுக்கு ஓக்கே சொன்னின்னா நான் என்ன செய்யனும்னு இன்னும் ரெண்டு நாள்ள சொல்ரேன்" என்று கூறினான். தன் காதல் ஜெயிக்க ஏதோ ஒரு வழி இருப்பதாக தன் நண்பன் கூறுவதை கேட்ட ஷக்திக்கு மனதில் வேறு எதுவும் தோன்றவில்லை. உடனே அவன் சரி என்று கூறிவிட்டான்.

ஷக்தி போனை வைத்ததும் சுரேஷ் மனதில் ஆயிரம் யோசனைகள். வெளி ஆள் ஒருவனுக்கு இப்படி செய்து ஏதும் பிரச்சினை வந்தால் கூட இலகுவாக தப்பித்து விடலாம். ஆனால் தன் சொந்த மச்சானான க்ரிஷ்ஷின் காதலை கலைத்துவிட்டது தான்தான் என்பது ராதாவுக்கு தெரியவந்தால் என்ன செய்வது என்று யோசித்தான். தன் காதலின் எதிர்காலமா அல்லது நண்பனின் காதலா என்று சில நிமிடங்கள் அவன் உள்ளத்தில் ஒரு பட்டி மன்றம் நடந்தது.

' நம்ம பண்ண போறத யாருக்கு தெரியாம பண்ணோம்னா எந்த ப்ராப்ளமும் யாருக்கும் இல்ல. க்ரிஷ் ஒரு விளையாட்டு பையன். அவனுக்கு இந்த காதல் இல்லைன்னா இன்னொரு காதல். முன்னாடியே ஷக்தி, மீனாக்‌ஷி பத்தி சொல்லும் போது அவளுக்கும் ஷக்திக்கும் ஒரே வயசுன்னு சொன்னான். அப்போ எப்படியும் க்ரிஷ் மீனாக்‌ஷி காதல் புட்டுக்கத்தான் போகுது. அதுக்கு பதிலா நம்ம ஷக்திய இடையில கோர்த்து விட்டோம்னா நம்ம நண்பன் காதலாச்சும் ஜெயிச்ச மாதிரி இருக்கும். நாளைக்கு இது ராதாவுக்கு தெரிய வந்தா கண்டிப்பா என்ன மன்னிக்கவே மாட்டா. எங்களுக்குள்ள கல்யாணம் ஆகியிருந்தா கூட அவ என்ன விட்டு போயிடுவா. ஆனா என் காதலா இல்லை நண்பனோட காதலான்னு வந்தா எனக்கு எப்போமே நண்பந்தான்' என்று மனதுக்குள் பேசிக்கொண்டவன்
" என் ஃப்ரெண்ட போல யாரு மச்சான்" பாடலை முனுமுனுத்துக்கொண்டு அடுத்து என்ன செய்வது என்று திட்டம் போட தயாரானான். ஆனால் அவனுக்கு அப்போது ஒன்று புரியவில்லை. தன் நண்பனின் காதலை சேர்த்து வைக்க சென்று அவன் தன் வாழ்வில் மன நிம்மதியை இழந்து ஒரு புழுவை போல க்ரிஷ் முன் நிற்க போகின்றான் என்று.

சில நாட்களின் பின்...

" ஹேய் மீனு, மீனாக்‌ஷி ஒரே ஒரு வாட்டிடி. ரேஷ்மா இல்லாம நீயும் நானும் மட்டும் சினிமாக்கு போகலாம். ப்ளீஸ்டி" என்று க்ரிஷ் கெஞ்ச அவனை முறைத்தவள்

" அவ வந்தாளே நீ சும்மா இருக்க மாட்ட. இதுல தனியா வந்தா நீ என்னன்ன பண்ணுவியோன்னு பயமா இருக்கு. நான் உன்கூட தனியா வரமாட்டேன்பா" என்று கூறினாள்.

" ரொம்ப பிகு பண்ணிக்காத. நான் உன்ன டச் பண்றது உனக்கு பிடிக்கலன்னு சொல்லு பார்க்கலாம்" என்று கூற அவளுக்கு தலையில் அடித்துக்கொள்ள வேண்டும் போல இருந்தது. சிறிது யோசித்தவள்

" இங்க பாரு க்ரிஷ். ஒரு பையன ஒரு பொண்ணு நம்பிட்டான்னா அவன் என்ன கேட்டலும் அவ செய்வா. சந்தர்ப்பம் அமையாத வரைக்கும்தான் எல்லோரும் நல்லவங்க. சந்தர்ப்பம் அமைஞ்சிதுன்னா கண்டிப்பா 90% ஆனவங்களால நல்லவங்களா இருக்க முடியாது. நம்ம காதலுக்கு அப்படி ஒரு சந்தர்ப்பத்த நான் கொடுக்க விரும்பல்ல க்ரிஷ். நம்ம காதலுக்கு புனிதமா இருக்கனும்னு நினைக்கிறேன். முதல் தடவை ஒரு விசயத்த பண்ணுறப்போதான் நமக்கு படபடப்புய் பயம் எல்லாம், இருக்கும். ஆனா அதுவே இரண்டாவது தடவை பண்ணுறப்போ படபடப்பு இருக்காது. ஆனா பயம் இருக்கும். மூன்றாவது தடவை பண்ணுறப்போ பயம், படபடப்பு எதுவுமே இருக்காது. உனக்கு புரியிதுள்ள நான் என்ன சொல்ல வரேன்னு. ப்ளீஸ் டா. உங்க அக்கா சொன்ன மாதிரி நம்ம காலேஜ் முடியிரவரைக்குமாச்சும் கண்ட்றோலா இருக்கலாம்" என்று கூற அவனுக்கு கோவம் வந்த்தது.

" நான் எப்போ எது கேட்டாலும் நீ இப்படித்தான் மீனாக்‌ஷி சொல்ர. நம்ம லவ் பண்றோம்னு காலேஜ்ல ரேஷ்மாவ தவிற வேற யாருக்குமே தெரியாது. நம்ம தனியா தியேட்டர் போனா கூட யாருமே கண்டுக்க மாட்டாங்க. ஆனா நான் எது சொன்னாலும் நீ அதுக்கு மாற்றமாவே சொல்லிகிட்டு இருக்க. எப்பவுமே என்னோட ஆசைகளுக்கு நீ முக்கியத்துவம் கொடுக்குறதே இல்லை. ஏன்னா எப்பவும் சண்டை போட்டா நாந்தானே முதல்ல இறங்கி வர்றேன். அந்த இலக்காரம்தான் உனக்கு. நான் போறேன் மீனாக்‌ஷி. உனக்கு என்ன இஷ்டமோ பண்ணிக்க. இந்த வாட்டி நானா வந்து பேசுவேன்னு நினைக்காத. ஐஅம் டயர்ட் வித் யூ" என்று அவளை தனியாக விட்டு சென்றான்.

மீனாக்‌ஷியும் மனதுக்குள்

' கோச்சிக்கிட்டா போற. எப்படியும் நைட்டு "சாரீ மீனாக்‌ஷின்னு" மெசேஜ் பண்ண போற. பார்க்கலாம் தம்பி நீயா நானா என்று' என்று மனதுக்குள் நினைத்தாள். மீனாக்‌ஷி கூறியது சரி என்பதை அவன் மனது ஏற்க தவறியதுதான் இவர்கள் காதலில் விரிசலுக்கு முதல் வித்தாகி போனது.ஆனால் அவளுக்கு அந்த நேரத்தில் தெரியவில்லை, இந்த சண்டைக்கு பிறகு அவள் க்ரிஷ் கூறியதை கேட்க போகின்றாள் என்று.

Bạn đang đọc truyện trên: Truyen2U.Pro