4

Màu nền
Font chữ
Font size
Chiều cao dòng

கதை ப்ளாஷ்பேக்கிற்கும் நிகழ்காலத்திற்கும் மாறி மாறி பயணிக்கும். நிகழ்காலம் " இன்று" எனவும் கடந்த காலம் " அன்று" எனவும் இனி குறிப்பிடப்படும்.

இன்று......

வீட்டிற்கு வந்த க்ரிஷிற்கு எதையாவது போட்டு உடைக்க வேண்டும் போலிருந்தது. வீடு என்றதும் இரண்டடுக்குகளை கொண்ட மாடி வீடு என கற்பனை செய்து கொள்ள வேண்டாம். பெங்களூரில் மிகவும் ஒதுக்குப்புறமாக இருந்த ஒரு பகுதியில், மிடில் கிளாஸ் மனிதர்கள் கூட வசிக்க விரும்பாத ஒரு வீட்டில், அதை வீடென்று கூறினால் உண்மையான வீடுகள் கோபித்துக்கொள்ளும். 3*2 அடியில் பாத்ரூமும் 3*4 அடியில் ஒரு கிட்சன் போல ஏதோ ஒன்றும் இருக்க அவனது தூங்கும் இடம் 12* 10 அடியில் இருந்தது. வீட்டிற்குள் மடித்து வைக்கும் இரண்டு கதிரைகள் மற்றும் தூங்குவதற்கு ஒரு மெட்றஸும் காணப்பட்டது. ஆங்காங்கே கரப்பான் பூச்சிகளும் மூட்டை பூச்சிகளும் ஓடி விளையாடிக்கொண்டிருந்தன.

க்ரிஷின் கோபத்தை தீர்க்க அவன் வீட்டில் உடைப்பதற்கு கூட ஒன்றும் இல்லை. உடனே தனது மொபைலை எடுத்தவன் யாருக்கோ கால் செய்தான். முதல் அழைப்பு முழுவதும் ரிங்க் ஆகி கட் ஆக, மீண்டும் கோபத்துடன் அழைத்தான்.இந்த கால் கட் ஆகும் முன்பே மறுமுனையில் அழைப்பு ஏற்கப்பட

" ஹலோ ரூபினி, நான் க்ரிஷ் பேசுறேன்" என்று கூற மறுமுனையில்

" ஹேய் என்னப்பா எப்போமே மாசம் ஆரம்பிச்சதும்தான் கூப்பிடுவ. இன்னைக்கு என்ன, இருபதாம் திகதி கூப்பிட்டு இருக்க" என்று கேட்க அமைதியா இருந்த க்ரிஷ்

" இன்னைக்கு நீ வேணும். வர முடியுமா?" என்று கேட்டான்.

மறுமுனையில் சிறிது யோசனைக்கு பின்

" தப்பா எடுத்துக்காத க்ரிஷ், நான் ஒன்னும் இந்த வேலையை டெய்லி பண்றவ கிடையாது. எனக்கு காசு தேவைப்படும் போது மட்டும்தான் பண்ணுவேன். உன்னோட அப்ரோச் எனக்கு ரொம்ப பிடிச்சதாலதான் ஒவ்வொரு மாசமும் நீ கூப்பிடுறேன்னு வர்றேன். நான் எந்த கஸ்டமர்கிட்டயும் கண்டினியூவா போக மாட்டேன். என்னால இப்போ வர முடியாது" என்று கூற கோபம் வந்தாலும் பொறுமையாக இருந்தான். இவனின் அமைதியை கண்ட ரூபினி

" வேணும்னா என்னோட ப்ரெண்ட வர சொல்லட்டா?" என்று கேட்க அதற்கும் அவன் மறுமுனையில் அமைதியாக இருக்க க்ரிஷின் பிடிவாதம் அறிந்த அவள்

" சரி நான் வர்றேன். ஆனா டபுள் பேமண்ட் கொடுக்கனும். உனக்கு அதுக்கு ஓக்கேன்னா நான் வர்றேன்" என்றாள். உடனே க்ரிஷ் மறுமுனையில்

" சரி நான் டபுள் பேமண்ட் கொடுக்குறேன், நீ ஈவ்னிங்க் வந்திடு" என்று கூற

" க்ரிஷ் இன்னைக்கு என்னால கண்டிப்பா முடியாது. அப்பாக்கு ஹாஸ்பிட்டல்ல ஒரு அப்பாய்ன்மண்ட் இருக்கு. நான் நாளைக்குத்தான் வர முடியும்" என்று கூற அவனும் "சரி" என்று கூறி காலை கட் செய்தான். தனது பர்ஸை எடுத்து பார்த்தவன் அதில் பதின் மூவாயிரம் ரூபாய் மட்டுமே இருந்தது. ரூபினிக்கு பத்தாயிரம் போனால் இருக்கின்ற ஒன்பது நாட்களையும் சமாளிக்க அவனுக்கு இருப்பது என்னமோ வெறும் மூவாயிரம் மாத்திரமே.

——————

" அண்ணி நான் க்ரிஷ பார்த்தேன்" என்று கூற மறுமுனையில் ராதா

" என்ன சொல்ற மீனாக்‌ஷி? நிஜமாவா. எங்க பார்த்த? அவன் கூட பேசினியா? நான் எப்படி இருக்கேன்னு கேட்டானா? என் மேல கோவமா இருக்கானா?" என்று கேள்விகளை அடுக்கிக்கொண்டு செல்ல மீனாக்‌ஷி

" அண்ணி கொஞ்சம் பொறுமையா இருங்க. ஏன் இவ்வளவு கேள்வி. நான் உங்க க்ரிஷ பார்த்தேன்னு மட்டும்தான் சொன்னேன். என்ன அவன் பார்த்துட்டான். அவன்கிட்ட போறதுக்கிடையில மாயமா மறைஞ்சிட்டான்" என்று கூறினாள்.

" மீனாக்‌ஷி, என்னால இப்போதைக்கு அங்க வர முடியாது. ஒரு பத்து நாள்ள இங்க இருக்குற வேலை எல்லாம் முடிச்சிட்டு வர்றேன். அப்பாவோட பதினாறாம் நாள் காரியத்த முடிச்சதும் முதல் வேலயா நான் அங்கதான் வருவேன். உன்னால முடிஞ்சா அவன்கிட்ட பேச பாரு. இல்லைன்னா அவன் இருக்குற இடத்த மட்டுமாச்சும் கண்டுபிடிச்சி வெச்சிக்க" என்றவள் மேலும்

" சரி உன் உடம்பயும் பார்த்துக்க. பாப்பா எப்படி இருக்கான்? வேலை எல்லாம் எப்படி போகுது" என்று கேட்டாள்.

" வேலை எல்லாம் நல்லாதான் போகுது. பாப்பா பட்டம்மாகிட்ட எந்த பிரச்சினையும் இல்லாம இருக்குறான். அவங்க இருக்குற தைரியத்துலதான் நான் ஹாஸ்பிடல்ல எந்த ஒரு டென்சனும் இல்லாம வேலை செய்ய முடியுது. அக்கா எனக்கு பயமா இருக்குக்கா. என் மனசுக்கு ஏதோ ஒன்னு சரியில்லாம இருக்குதுன்னு தோனுது" என்று கூற ராதா

" நீ ஒன்னும் யோசிக்காத. என்ன இருந்தாலும் அவன் என் தம்பி. நான் வாடான்னு சொன்னா என்கூட வந்துடுவான். என்ன என் மேல கொஞ்சம் கோவத்துல இருப்பான். அன்னைக்கு நடந்த பிரச்சினையில நான் அவனுக்கு சப்போர்ட்டா பேசலைன்னு" என்று கூற மறுமுனையில் விசும்பிய மீனாக்‌ஷ்

" அக்கா க்ரிஷ் என்கூட பேசுவானா? அவன் வாழ்க்கையே இப்படி மாறிப்போக நாந்தானே காரணம். அதனால ஒருவேல என்ன வெறுத்துடுவானா?" என்று ஆதங்கமாக கேட்டவளை ராதா

" மீனாக்‌ஷி நடந்தது நடந்து போச்சி. அத யாரலயும் மாத்த முடியாது. அப்புறம், அவன் உன்ன உயிருக்கு உயிரா காதலிச்சான். சோ உன்மேல கோவம் இருக்குமே தவிற அவனுக்கு வெறுப்பு எல்லாம் இருக்காது" என்று கூறி காலை கட்செய்தாள்.

விடியும் காலை இவர்கள் யாருக்கும் நிம்மதியை தரப்போவதில்லை என்று கங்கனம் கட்டிக்கொண்டு விடிந்தது. வேலை விடயமாக க்ரிஷ் கோயம்புத்தூரில் இருந்த KY ஹாஸ்பிடலுக்கு சென்றான். அங்குதான் மீனாக்‌ஷி டாக்டராக கடமையாற்றுகிறாள். மதியம் மூன்று மணி அளவில் வந்தவனை கண்டு கொண்டவள் அவனிடம் செல்லவில்லை. அவனுக்கு சர்ப்ரைஸாக அவன் வீட்டிற்கு செல்லலாம் என் நினைத்தாள். ஹாஸ்பிடல் பார்மசியில் பொருட்களை காட்டிக்கொண்டிருந்தவன் அங்கு இருக்கும் ஒரு பெண்ணுடன் சிர்த்து பேசிக்கொண்டிந்ததை கண்டவளுக்கு கொஞ்சம் பொறாமையுடன் கூடிய கோபம் வந்தது. இருந்தாலும் அந்த பொறாமைக்கு தான் உரித்துடயவளா? என்று நினைத்த பொழுது மீனாக்‌ஷியின் கண்களில் இருந்து கண்ணீர் வந்தது.

ஒரு வழியாக க்ரிஷின் வீட்டு அட்றஸை ஹாஸ்பிடல் பார்மசியில் இருந்தவர்களிடம் கேட்டு மீனாக்‌ஷி மாலை ஏழு மணிஅளவில் அவனின் வீட்டை அடைந்தாள். அவன் வீட்டை தட்டலாம் என நினைத்த தருணம் வீட்டிற்குள் இருந்து ஒரு பெண்ணின் சினுங்கல் ஒலி வர, தான் வேறு யாருடைய வீட்டிற்கும் வந்து விட்டோமோ என்று தோன்றியது. உடனே அந்த இடத்தில் இருந்த ஒரு இளவயது பையனிடம்

" தம்பி, இங்க க்ரிஷ் வீடு எது?" என்று கேட்க அவளை ஏற இறங்க பார்த்தவனின் பார்வை கொஞ்சமும் சரி இல்லை என்று புரிந்தது.

" இதோ இந்த வீடுதான் க்ரிஷோடது. இன்னைக்கு செம்ம ஜாலிதான் போல. அட் டைம்ல ரெண்டு பொண்ணுங்க. குடுத்து வெச்ச ஆளுய்யா இந்த க்ரிஷ். எங்க இருந்துதான் இப்படி பொண்ணுங்கள பிடிக்கிறானோ தெரியல" என்று தன் நண்பனிடம் பேசியவ அந்த இளவயது பையனை பார்த்து மீனாக்‌ஷி முறைக்க

" ஏய் என்ன ரொம்ப முறைக்கிற. கிராக்கிதானே நீ. என்ன கொஞ்சம் விலை ஜாஸ்த்தியான கிராக்கி மாதிரி தெரியுது. உனக்கு எதுக்கு முறைப்பு. உன் ரேட்ட சொல்லிட்டு போ. காசு செட் ஆனதும் உன்ன மாதிரி ஒருத்திய ஒரு நாளைக்காச்சும் பார்த்துடனும்னு இருக்கேன்" என்றவனை இந்த இடத்தில் இதற்கு மேல் நின்றாள் தனக்குத்தான் அவமானம் என க்ரிஷின் வீட்டுக்கதவை தட்ட முயன்றவள் மனதில் ஏதோ தோன்ற கதவை தட்டாமல் பக்கத்தில் இருந்த ஜன்னல் வழியாக எட்டிப்பார்த்தாள். ஜன்னல் சீலை விலகிய அந்த இரண்டு இன்ச் இடைவெளியில் அறைக்குள் இருக்கும் இருவரின் நிலையையும் கண்டு மீனாக்‌ஷி அழுகையுடன் கூடிய வாந்தி வந்தது. தன் வாயை பொத்திக்கொண்டு அந்த இடத்தை விட்டு மீனாக்‌ஷி அவசரம் அவசரமாக தனது வீட்டிற்கு சென்றவள் சத்தமிட்டு அழ ஆரம்பித்தாள்.

இங்கு க்ரிஷோ மீனாக்‌ஷி வந்தது தெரியாமல் ரூபினியுடன் இருந்தவன், நேரம் முடிந்ததும் ரூபினி பணத்தை வாங்கி கொண்டு செல்ல பார்க்க க்ரிஷ்

" ரூபினி ஒரு ஹெல்ப் பண்ண முடியுமா?" என்று கேட்டான். அவள் அவனை பார்வையாலேயே என்ன என்று கேட்க

" உன் மடியில கொஞ்சம் தூங்கிக்கட்டுமா?" என்றான். அவன் வேண்டுகோளை அவளால் நிராகரிக்க முடியவில்லை. அவள் மடியில் தலை வைத்தவன் கண்களில் இருந்து தாரை தாரையாக கண்ணீர் ரூபினியின் மடியை நனைத்தது. க்ரிஷின் தலையை கோதியவள்

" உனக்கு அழனும் போல இருந்தா வாய்விட்டு அழுதிடு" என்று கூறியதும்தான் தாமதம் அவள் மடியில் நிமிர்ந்து படுத்திருந்தவன் அவள் புறமாக திரும்பி அவளின் இடையை கட்டிக்கொண்டு வாய்விட்டு அழ ஆரம்பித்தான்.

-------
ஹாய் வட்டீஸ், இந்த கதை ஒரு raw material story. மற்ற கதைகளில் வரும் உத்தம புத்திர ஹீரோக்கள் யாருமே இந்த கதையில் இல்லை. நிஜ உலகில் இப்படி ஒரு சம்பவம் நடந்தால் எப்படி இருக்கும் என்பதை ஒரு சில கடந்த கால நிகழ்வுகளை வைத்து எழுத முற்படுகிறேன். பிடிக்காதவர்கள் இப்பவே வேறு நல்ல கதைகளை நோக்கி நகரலாம். காரணம் இது ஒரு புதிய வகை முயற்சி. புதுப்பேட்டை படம் பார்த்திருந்தால் புரியும் அதில் வரும் காரக்டர்கள் பற்றி. அது மாதிரி ஒரு கதை,என்னால் முடிந்ததை எழுத முயற்சிக்கின்றேன். இதை இங்கு நான் கூற காரணம் 10 எபிசோட் படித்துவிட்டு என்னை திட்டுவதை விட பிடிக்காதவர்கள் இப்பவே திட்டிட்டு ஓடிடலாம். வித்தியாசமான ஒரு கதை வேண்டும் என நினைப்பவர்கள் பொறுமையாக படிக்கலாம்.

Bạn đang đọc truyện trên: Truyen2U.Pro