47

Màu nền
Font chữ
Font size
Chiều cao dòng

இரவு தூங்கும் நேரம் வரைக்கும் ரம்யாவும் சிவாவும் அரட்டை அடித்துக்கொண்டே இருந்தனர். ரம்யாவை தன் முறைப்பெண் என்பதைவிட ஒரு நல்ல தோழியாக, வால் அறுந்த தங்கையாகவே சிவா எப்போதும் பார்ப்பேன். ரம்யாவும் நல்ல அழகிதான். அதுவும் அவளின் தாய்க்கும் மாமாவிற்கும் இருக்கும் டிரேட்மார்க் கன்னக்குழி இவளுக்கும் இருந்தது. பதினேழு வயதிலேயே அவளிடம் அரை டஜனுக்கு மேலான காதலை ஏற்றுக்கொள்ளும்படி வந்த கடிதங்கள் இருந்தன.

சிவாவுக்கு ரம்யாவுடன் பேசிக்கொண்டிருக்கும் போதுதான் ஒரு விடயம் தோன்றியது. அப்பாவுடைய சகோதரியின் மகளை திருமணம் செய்ய முடியும் என்றால் ஏன் அப்பாவுடைய தம்பியின் மகளை திருமணம் செய்ய முடியாது என்று. ரம்யாவை தங்கை போல் பார்க்க முடியும் என்றால் ஏன் பார்வதியை முறைப்பெண் என்று நினைக்க முடியாது? என அவன் மனதில் ஏடாகூடமான ஆசை வந்தது. ஷக்தியின் மகனாச்சே. இப்படி தோன்றாமல் விட்டால்தான் ஆச்சரியம்.

" ஏன் ரம்யா, க்ரிஷ் சித்தப்பா ஒரு வேலை பொண்ணா இருந்திருந்தா பார்வதியும் எனக்கு முறைப்பொண்ணுல்ல" என்று கேட்க ரம்யாவுக்கு திக் என்றது. தான் எதுவோ பேசிக்கொண்டிருக்க இவன் என்ன திடீரென்று சம்பந்தமில்லாமல் எதுவோ கேட்கின்றான் என யோசித்தால். இல்லை இவன் சம்பந்தம் இல்லாமல் கேட்கவில்லை. வந்ததில் இருந்து இவன் பார்வதியை பார்க்கும் பார்வை சரியில்லை என்பது அப்போதுதான் அவளுக்கு உரைத்தது.

பார்வதியும் ரம்யாவும் நல்ல தோழிகள். பார்வதிக்கு இந்த குடும்பத்தில் நடந்த குளறுபடிகளை க்ரிஷ் கூறிய போது அவள் அதை ரம்யாவின் அப்படியே ஒப்புவித்துவிட்டால். ஆனால் ரம்யாவுக்கு ராதா என்றால் மிகவும் பயம். அவளுக்கு எது தேவை என்றாலும் சுரேஷிடம் சொல்லியே பெற்றுக்கொள்வாள். இந்த குடும்பத்தில் போன தலைமுறையினரால் நடந்த குழப்பங்கள் தெரிந்த ரம்யாவின் மனதில், சிவாவால் இன்னுமொரு குழப்பம் இந்த குடும்பத்துக்குள் வந்துவிட கூடாது என்ற எண்ணம் ஓடியது.

" சிவா என்ன பேசுர. அவ உனக்கு தங்கச்சி முறை. நீ இப்படி பேசுறத க்ரிஷ் மாமா, இல்லைன்னா ரூபினி அத்தை கேட்டா என்ன நினைப்பாங்க. முதல்ல இப்படி யோசிக்கிறத நிறுத்து. அவ உனக்கு தங்கச்சி முறை" என்று கூற அவன் அதை காதில் வாங்கியதாக தெரியவில்லை. சிவா இந்தியா வருகின்றான் என்றதும் மற்ற எல்லோரைவிடவும் ரம்யாதான் அதிகமாக சந்தோசப்பட்டால். அவளுக்கு மீனாக்‌ஷி அத்தையை மிகவும் பிடிக்கும். சிவா வந்தால் எப்படியும் மீனாக்‌ஷியும் இந்தியா வருவால் என்ற நம்பிக்கை அவளுக்கு. ஆனால் இப்போது சிவா செய்வதை பார்க்கும் போது இவனை எப்படி சீக்கிரத்தில் கனடாவுக்கு அனுப்புவது என்ற எண்ணமே அவள் மனதில் ஓடியது.

தூங்கும் நேரம் வர பார்வதியின் அறையில் சிவாவும் மற்றைய அறையில் ரூபினி, பார்வதி, ரம்யா மூவரும் அடைக்கலமாக க்ரிஷ் ஹாலில் தூங்குவதற்கு தயாரானான். சித்தப்பா ஹாலில் தூங்குவதை கண்ட சிவாவுக்கு ஒரு குற்றனர்ச்சி ஏற்பட்டது.

" சித்தப்பா நம்ம ரெண்டு பேரும் உள்ளயே தூங்கலாமே. நீங்களும் வாங்க அந்த கட்டில்ல தூங்கலாம்" என்று கூற அவனை பார்த்து புன்னகைத்த க்ரிஷ் " இல்ல சிவா, அது சிங்கிள் பெட். ஒருத்தர்தான் தூங்கலாம். அப்புறம் இது ஒன்னும் எனக்கு புதிசில்லப்பா. எங்க வீட்டுல வாரத்துல நாலு நாள் பார்வதி தனியா தூங்க பயமா இருக்குன்னு ரூபினி கூட தூங்க எங்க ரூமுக்கு வந்திடுவா. அப்போலாம் நான் கீழதான் தூங்குவேன். அப்புறம் எனக்கும் கீழ தூங்குறது பிடிக்கும்" என்று கூற இதை சிவா நம்பவில்லை.

" சரி அப்ப வாங்க. இன்னைக்கு நம்ம ரெண்டு பேருமே கீழ தூங்கலாம்" என்றவன் அவனும் ஹாலுக்கே வந்துவிட்டான். இருவரும் இரவு வெகுநேரம் வரை பேசிக்கொண்டிருந்தனர். சிவாவுக்கு தலையில் ஒரே ஒரு கேள்விதான் ஓடிக்கொண்டிருந்தது. பார்வதி யார்? அவனுக்கு அது மில்லியன் டாலர் கேள்வி. ஆனால் அதை எப்படி க்ரிஷ்ஷிடம் கேட்பது என்ற தயக்கம்.

" சித்தப்பா கேட்குறேன்னு தப்பா நினைக்காதீங்க. உங்களுகு குழந்தைங்க இல்லைன்னு அத்தை சொல்லி கேட்டிருக்கேன். ஆனா பார்வதி உங்கள அப்பான்னு கூப்பிடுறா. அப்போ பார்வதி......" என்று அவன் பேச்சை முற்று பெறாமல் இழுத்தான்.

" பார்வதி உங்க அத்தையோட ஃப்ரெண்டு பொண்ணு. அத்தையோட ஃப்ரெண்ட் பூர்ணினு ஒருத்தங்க. பார்வதிக்கு ஒன்பது வசயசா இருக்கும் போது தவறிட்டாங்க. அதுக்கு அப்புறமா நாங்கதான் அவளுக்கு கார்டியன். பிறந்ததுல இருந்தே பார்வதிய எங்களுக்கு ரொம்ப பிடிக்கும். அவளுக்கும் நாங்கன்னா உயிர். என்ன முன்னாடிலாம் அங்கிள், ஆண்டினு கூப்பிடுவா. ஒரு வழியா அவள திட்டி இப்போ அப்பா, அம்மானு கூப்பிட வெச்சிருக்கோம்" என்று கூற இப்போதுதான் சிவாவுக்கு மூச்சு சீராகியது. அவன் மனதில் ஏஆர் ரகுமானின் தாஜ்மஹால் படத்தில் இருக்கிம் மேல்காட்டு மூலையில பாடலின் " சுன்னாம்பு கேட்க போயி சொக்கத்தங்கம் வாங்கி வந்தேன்" வரிகள் ஞாபகம் வந்தது.

திடீரென்று அவனின் முகம் பிரகாசமானதை க்ரிஷ் கவனிக்கவில்லை. சிவாவுக்கு இப்போது தனிமை தேவைப்பட்டது. தனிமை என்பதைவிட ரம்யாவுடன் இதை எப்படியாவது பகிர்ந்து கொண்டு அவளின் உதவியுடன் பார்வதிக்கு தன்னை பிடிக்கும் படி செய்ய வேண்டும் என்ற ஆசை எழுந்தது. ஆனால் இந்த நேரத்தில் எப்படி ரம்யாவை எழுப்புவது என்ற யோசனை அவனுக்கு. க்ரிஷ்ஷும் சிவாவும் இரவு இரண்டு மணி வரை பேசிக்கொண்டிருந்தனர். இப்போது எப்படி ரம்யாவை எழுப்ப என்று அவன் யோசித்தான்.

" சித்தப்பா உள்ள அவங்க மூணு பேரும் தூங்கி இருப்பாங்களா?" என்று கேட்க க்ரிஷ் அவனை அதிசயமாக பார்த்தான். "இப்போ இரண்டு மணி. ரூபினிக்கு லேசில தூக்கம் வராது. அவ அரண்டு அரண்டுதான் தூங்குவா. மத்த ரெண்டும் நல்லா தூங்கியிருக்கும்ங்க" என்று கூற அவன் என்ன செய்வது என்று முழித்தான்.

" சித்திய கொஞ்சம் கூப்பிட்டு ரம்யா தூங்கலைன்னா என்னோட லாப்டாப்ப அவ எங்க வெச்சான்னு கேட்க முடியுமா? எனக்கு அவசரமா ஒரு ஈமெயில் செண்ட் பண்ணனும். அவசரமா ஈமெயில் அனுப்பவேண்டிய ஃபைல் என்னோட லாப்டாப்ல இருக்கு. ஆனா லாப்டாப் பேக்க எங்க வெச்சான்னு தெரியல. பகல் நேரம் ரம்யாதான் என் லாப்டாப்ப நோண்டிக்கிட்டு இருந்தா. கொஞ்சம் கேட்டு பார்க்க சொல்லுங்க சித்தப்பா" என்று கூற க்ரிஷ் ரூபினியிடம் இதை கூறினான். அவளும் சிவா கூறிவிட்டான் என்பதற்காக கும்பகர்னியாக தூங்கிய ரம்யாவை எழுப்பினால்.

" இந்த சூரியன் ஏந்தான் இவ்வளவு நேரத்தோட வருதோ தெரியல. அத்தை இன்னும் கொஞ்ச நேரம் தூங்குறேனே. எங்க வீட்டுல எங்கம்மாதான் என்ன தூங்க விட மாட்டாங்க. இங்க நீங்களுமா?" என்று கேட்க ரூபினிக்கு சிரிப்பு வந்தது.

" ரம்யா, இன்னும் விடியல. இப்போதான் ரெண்டு மணி. சிவா தம்பியோட லாப்டாப் பேக்க நீதான் பகல் எங்கயோ வெச்சிட்டியாம். தம்பிக்கு அவசரமா இப்போ லாப்டாப் வேணுமாம்" என்று கூற தூக்க மயக்கதில் இருந்தவள் சட்டென்று எழுந்தால்.

" எது ராத்திரி இரண்டு மணிக்கு லாப்டாப்பா. அவனுக்குத்தான் அறிவில்லன்னா உங்களுக்கு எங்க போச்சி. பேய் உலாத்துற நேரத்துல அவனுக்கு எதுக்கு லாப்டாப். இப்போ நான் மட்டும் அங்க போனேன். அவன என் கையாலாயே கொன்னுடுவேன். போத்திக்கிட்டு அவன தூங்க சொல்லுங்க. இல்லன்னா குடும்பத்தோட சேர்த்து எல்லோரையும் கொன்னுடுவேன்" என்று சத்தமிட இதை கேட்ட க்ரிஷ் அமைதியாக சிவாவை பார்க்க அவன் தனக்கும் இதற்கும் சம்பந்தம் இல்லை என்பது போல கட்டிலுக்கு சென்றான்.

காலை ஐந்து மணி,

ரூபினி எழுந்து அன்றைய நாளுக்கான வேலைகளை ஆரம்பித்திருந்தால். கிட்சனில் ஏதோ சத்தம் கேட்க பார்வதியின் மேலிருந்த மயக்கத்தில் சிவா இரவு முழுவதும் தூங்காமல் இருந்தவன் அவனும் அங்கு சென்றான்.

" என்ன சித்தி, இவ்வளாவு ஏர்லியா உங்க டிபார்ட்மண்டுக்கு வந்துட்டீங்க. வீட்டுலதான் ரெண்டு பெருச்சாலிங்க இருக்குதே. அதுங்கள எழுப்பி செய்ய சொல்றதுதானே" என்று கூற ரூபினி அவனை பார்த்து புன்னகைத்தால்.

" பாவம் தம்பி அந்த பிள்ளைங்க, இன்னும் எத்தனை நாளைக்கு இப்படி தூங்க போகுதுங்க. கல்யாணம் பண்ணி இன்னொரு வீட்டுக்கு போகும் வரைக்கும்தானே" என்றால்.

" அப்படில்லாம் சொல்லாதீங்க, ரம்யா எப்படியோ தெரியல. ஆனா பார்வதி உங்க கூடதான் இருப்பான்னு தோனுது" என்றவன்,

" அதான் விடிச்சிருச்சில்ல. ப்ளீஸ் சித்தி ரம்யாவ வந்து என்னோட லாப்டாப்ப எடுத்து தர சொல்லுங்களேன்" என்று கூற அவனது ப்ளீஸில் கவிழ்ந்த ரூபினி " சரி நான் போய் சொல்ரேன்" என்று ரம்யாவை எழுப்ப தயாரானால்.

--------
ஹாய் வட்டீஸ்

இன்னுமொரு அப்டேட் ஸ்டோரி முடிஞ்சிடும்.

அடுத்த கதைக்கான டீசர் ரெடி மக்களே... ஆனால் 4 மாதம் ஆகிம் கதை அப்டேட் வர.

( பட உதவி - vaanika-nawin )

" ஹேய் சைலண்ட் சைலண்ட். சாரதா மிஸ் வர்றாங்க. எல்லோரும் அமைதியா இருங்க" என்று வகுப்பின் மாணவத்தலைவி எல்லோருக்கும் எச்சரிக்கை விடுத்தாள். அவள் கூறியதும்தான் தாமதம் வகுப்பில் இருந்த அனைத்து மாணவ மாணவியரும் தங்கள் இருக்கையில் அமர்ந்து தங்கள் கைகளில் தமிழ் இலக்கிய புத்தகத்தை குரான், பகவத் கீதை, பைபிள் போல பய பக்தியுடன் வைத்திருந்தனர்.

யார் இந்த சாரதா? ஐம்பது வயதை அடைந்த தலைமை ஆசிரியரா? எல்லா மாணவர்களையும் கண்டிப்புடன் நடத்தும் ஆசிரியையா?

அடர் சிவப்பு நிற ஜாக்கடுக்கு பச்சை நிற புடவையில் மெரூன் நிறத்தில் பூ வேலைப்பாடு செய்த சேலை அணிந்து, இடை வரை இருக்கும் கூந்தலை அப்படியே கொண்டை இட்டு, கண்களுக்கு லேசான காஜல் பூசி, உதட்டுக்கு உதட்டுச்சாயம் பூசியுள்ளாரா இல்லையா என்று விவாதம் நடத்தும் அளவுக்கு உதட்டு சாயமும் இட்டு பத்தாவது வகுப்பு வந்தார் அந்த சாரதா டீச்சர்.

வகுப்புக்குள் வந்ததுமே எல்லோரும் " காலை வணக்கம் மிஸ்" என்று கூற எல்லோரின் வரவேற்புக்கும் புன்னகையுடன் சேர்த்த ஒரு வணக்கத்தை வைத்தால் அழகு பதுமை சாரதா. அழகுப்பதுமையா? என்று கேட்டால் ஆம் அழகுப்பதுமைதான். அவள் அழகு என்பது ஆரவாரம் இல்லாத அமைதியான ஒரு தெளிந்த நீரோடை. அந்த நீரோடையின் அமைதியில் ஒரு தடவை லயித்தவர்கள் அங்கிருந்த நகர விரும்பமாட்டார்கள்.
தமிழ் இலக்கிய ஆசிரியையான அவளை வைத்து அழகுக்கே இலக்கனம் எழுதலாம்.

பத்தாவது படிக்கும் மாணவர்கள் வெறுக்கும் பாடங்களில் ஒன்று தமிழ் இலக்கியம். அதையே இந்த மாணவர்கள் இவ்வளவு பயபக்தியுடன் படிக்க காரணம், சாரதா பழகிய சில நொடிகளிலேயே பல வருட பிணைப்பை ஏற்படுத்தும் ஆற்றல் உள்ளவள். ஆண் மாணவர்கள் மட்டுமன்றி பெண் மாணவிகளும் அவரின் நெருக்கத்துக்குரிய மாணவர்களாகிட வேண்டும் என்று தவம் இருக்கின்றார்கள்.
கண்களை உருட்டி அவள் பேசும் அழகுக்கு, இவள் இலக்கியம் படிப்பிக்கின்றாலா அல்லது கண்களால் இசை கச்சேரி நடத்துகின்றாலா என்ற சந்தேகம் மனதில் எழாமல் விட்டால்தான் அதிசயம். சிரிக்காமலேயே அவள் கன்னத்தில் குழி விழும். அந்த குழி படுகுழி அல்ல.

எல்லா மலரினிலும் ஒரு வாசம் இருக்கும். ஆனால் மகரந்தம் தாங்கும் மலரில் தனி ஒரு வாசம்.
எல்லா ஆசிரியருக்கும் ஒரு தாயின் குனம் இருக்கும். சாராதாவின் குனமும் மகரந்த மலரின் வாசம் போல தனியாக தெரியும். அதை உணர்ந்தவர் அதில் இருந்து வெளிவர விரும்பமாட்டார்கள்.

அந்த பாடசாலைக்கே செண்டர் ஆப் அட்றாக்சன் சாரதாதான். அவளின் உடைகளில் அவள் காட்டும் ளினமும், அவள் பேச்சில் இருக்கும் தெளிந்த நேர்மையும் ஆசிரியர்கள் மத்தியில் அவளுக்கு நல்ல ஒரு பெயரை எடுத்துகொடுத்திருந்தது. அதனாலாயே அந்த பாடசாலையின் எந்த ஒரு விடயமாக இருந்தாலும் சாரதாவின் அங்கம் அதில் கண்டிப்பாக இருக்கும். ஏதும் போட்டிக்கு அவர்கள் பாடசாலை சென்றால் கூட அதற்கு பொறுப்பாக அவளே செல்வாள். ஒரு சிலர் அறிவை காட்டி தங்களின் இடத்தை உறுதி செய்து கொள்வார்கள். அறிவுடன் சேர்த்து அழகும் இருக்கும் சாரதா சென்றால் அந்த போட்டி நிகழ்வுக்கு வந்த எல்லோருமே சாராதாவையே பார்த்துக்கொண்டிருப்பார்கள்.
-------

" ஓஹ் சார் அப்போ எங்களுக்கெல்லாம் கிட்டார் கத்துக்கொடுக்க மாட்டீங்களா?" என்று தன் காதோரம் அசைந்தாடிய முடிக்கற்றை தன் விரல்களால் ஒதுக்கியவளை அவன் கண் இமைக்க மறந்து பார்த்துக்கொண்டிருந்தான். " சொல்லுங்க சார், கத்துக்கொடுக்க மாட்டீங்களா?" என்று மறுபடியும் கேட்க அவன் சுய நிலைக்கு வந்தான்.

கையில் கிட்டாரை எடுத்தவன் அவள் கைகளில் கொடுத்து " ஃப்ரட் இரண்டுல இடது கைய கொண்டு வாங்க . ஐந்து மற்றும் நாலவது ஸ்ட்றிங்க இப்போ உங்க ஆட்காட்டி விரல் மற்றும் நடுவிரலால அழுத்துங்க. இப்போ ஸ்ட்றம் பண்ணுங்க. இதுதான் கிட்டாரோட பேசிக் chord Em. அத மைனர் நு சொல்வாங்க" என்று கூற அவன் கூறியதை அப்படியே செய்தால்.

பல தடவைகள் அவள் அதை செய்ய முயற்சித்த போதும் அந்த ஒலி சரியாக வரவில்லை. கதிரையில் இருந்து எழுந்தவன் அவளின் பின்னால் சென்று கிட்டாரை அவளை அனைத்துகொவது போல பிடிக்க, அவளுக்கு அது ஒரு புதுவித அவஸ்த்தையாக இருந்தது.

அவள் கொஞ்சம் புஷ்டியான பெண். அதுமட்டுமில்லாமல் இன்று அவள் அணிந்திருந்த பட்டு சேலையால் அவன் கிட்டாரை அவள் பின்புறம் இருந்து பிடித்தது, அவளை முழுவதும் பின்னால் இருந்து அணைத்தது போல இருந்தது. எத்தனையோ வருடம் கழித்து.... இல்லை... முதல் முறையாக ஒரு ஆணின் மெல்லிய அணைப்பு அவளை ஏதோ செய்தது. இப்படியே சில நொடிகள் கழிய திடீரென்று வாயில் கதவு பக்கம் அரவம் கேட்க அங்கு சாரதாவின் தம்பி அனல் கக்கும் கண்களுடன் நின்று கொண்டிருந்தான்.

என்ன வட்டீஸ் சாரதா டீச்சருடன் நாமும் பயனிக்கலாமா?
------------

எனது comfort zone விட்டு எழுதும் இந்த கதைக்கு முழு உதவியும் செய்வதாக கற்பூரம் அனைத்து சத்தியம் செய்த vaanika-nawin  Maayaadhi  இரண்டு பேருக்கும் நன்றிகள்..

பேர் போட்டாச்சு. இனி தப்பிக்க முடியாது.😁😁

Bạn đang đọc truyện trên: Truyen2U.Pro