24

Màu nền
Font chữ
Font size
Chiều cao dòng

உறவுகளும் பொய்த்து
உண்மை காதலும் கனவாகி
நிற்கிறேன்...
🌷🌷🌷🌷🌷🌷

மிருத்திகா வின் அண்ணன்களை கோயிலுக்கு வரச் சொல்லிவிட்டு, கோயிலுக்கு புறப்பட்டனர், மேகன், மிருத்திகா, செண்பகம், சிபி.

சாமி தரிசனம் முடித்து விட்டு, வாசலைப் பார்த்தவாறு ஒரு மண்டபத்தில் அமர்ந்தனர் நால்வரும்.

"அண்ணனிடம் என்ன பேசப் போகிறாராம் செண்பா?" என்று மிருத்திகா தன் விரல் நகங்களைக் கடித்தவாறு கேட்டாள்.

"கோயிலுக்கு வந்து அசைவம் சாப்பிடக் கூடாது செண்பா" என்றான் மேகன், மிருத்திகா வைப் பார்த்து சிரித்தபடி.

"ஏய் என்ன இது புது பழக்கம் மிருத்திகா?" என்று செண்பகம் கண்டிப்பான குரலில் கேட்க,

"கைய எடுத்துடு மா... இல்லைனா நங்ங்குனு கொட்டிடுவா ரௌடி பேபி." என்று சிபி மிருத்திகா விற்கு அறிவுருத்துவது போல செண்பகத்தை கலாய்க்க,

"என்னை ரௌடிபேபி னு சொல்லாத டா வளர்ந்து கெட்டவனே. ஒழுங்கா மரியாதை யா பேசுடா லைட்ஹவுஸ்!"

"ஓகே ஆஃபீஸர்! தாங்கள் மட்டும் என்னை அன்போடு லைட்ஹவுஸ் என்று அழைக்கலாமா மேம்? அதோட நான் வளர்ந்து இருக்கிறதால உங்களுக்கு என்ன மேம் கெட்டு போச்சு?" என்று எழுந்து நின்று, நெஞ்சில் கைகளைக் குறுக்கே கட்டி, சற்றே குனிந்து கேட்டான் சிபி.

"சிபி!" என்று அழைத்தாள் சிறிது கோபமாக மிருத்திகா .

"இது யாரு?" என்று கூறியபடி மிருத்திகா வை பார்த்தவன், "சிஸ்டர் நீங்களுமா?" என்று கேட்டான் சிபி.

"பின்ன இருக்காதா சிபி?... அவங்க லவ் பண்ண வந்த இடத்தில நீங்க கலாட்டா பண்ணினா கோபம் வரும்." என்றான் மேகன் சிரித்தபடியே.

"நான் ஒன்னும் அப்படி இல்ல... இவரு தான் இங்க நடக்குற எதையும் கண்டுக்காம என்னையே பார்த்துக்கிட்டிருக்கார்." என்றாள் மிருத்திகா அவசரமாக.

"நான் பார்த்து கிட்டே இருக்கிறது அவளுக்கு எப்படி தெரிஞ்சதுடா சிபி? அங்கயும் அதான நடந்தது.. என்ன ஒரு வித்தியாசம், நான் தொடர்ந்து பார்த்து கிட்டு இருக்கேன். அவ நிமிர்ந்து பாக்குறது ... குனியுறது. .. அப்புறம் நான் பாக்கிறேனானு மெல்ல தலையே நிமித்தி பாக்குறது..." என்று மேகன், மிருத்திகா வை பார்த்தபடியே சொல்லிக் கொண்டிருக்கும் போது,

"உஷ்... உஷ்..."என்று வந்த சப்தத்தையும் கண்டுகொள்ளாமல்

"......இதுக்கு பேர் என்ன டா சிபி?" என்று முடித்துவிட்டு மேகன் மிருத்திகா வைப் பார்த்தவாறே சிரிக்க,"

"மேகனைப் பார்க்க முடியாமல் தலையைக் கவிழ்ந்து கொண்டே போன மிருத்திகா வை மெல்ல கிள்ளினாள் செண்பகம்.

"ஷ்ஷ்ஆஆ! ஏன் எரும கிள்ற?" என்று கூறியபடி செண்பகத்தை பார்த்தவள், தன் அருகில் நின்று கொண்டிருந்த அண்ணன் களைப் பார்த்து விட்டாள்,,,

ஆனால் மேகன்! ம்ம்ஹூம்! அப்பொழுதும் மிருத்திகா வையே பார்த்துக் கொண்டிருக்க,

"சரிடா! அப்ப நாங்க கிளம்புறோம். .. "
என்று கதிர் (சின்ன அண்ணன்) மிருத்திகா விடம் கூறிய பிறகே சட்டென்று திரும்பி பார்த்த மேகன்,

கதிர் (சின்ன அண்ணன்.)

"வ்வ்வாங்க! வாங்க! வந்து. .. என்ன பேசுறது ன்னு பாத்துகிட்டு... இல்லயில்ல! கேட்டுக்கிட்டு இருந்தோம். இல்லையா செண்பா?"
என்று செண்பகத்தை சப்போர்ட்டுக்கு அழைத்தவனிடம்,

"அப்போ நீங்க இதுவரை செண்பகத்தை தான் பாத்துகிட்டு.. இல்லயில்ல பேசிகிட்டு இருந்தீங்களாக்கும்?" என்ற கதிரை ஒரு பார்வை பார்த்த விக்னேஷ் (பெரிய அண்ணன்)

விக்னேஷ்வரன் (பெரிய அண்ணன்)

"எல்லோரும் இப்படியே உக்காருவோமா? என்று விக்னேஷ் பொதுவாக கேட்டான்.

மூச்சே விடாமல் அனைவரும் தலையை அசைத்தபடி அமர்ந்தனர்.

"மீரா! இவர் எப்படி இங்க? " என்று மிருத்திகா விடம் விக்னேஷ் கேட்க,

"சுத்தம்! மறுபடியும் முதல்ல இருந்தா?" என்று மேகன் கிசுகிசுத்தபடி சிபியைப் பார்க்க,

'என்ன செய்றது? அண்ணன் இருக்கும் பொண்ணுங்கள லவ் பண்ணா லே இப்படிதான்." என்றான் சிபி.

"அண்ணா வேணான்டா உனக்கிது செட் ஆகல.... ஹா ஹா ஹா!" என்று கதிர் கூறியதும் அடக்கி வைத்திருந்த சிரிப்பு வெடித்து வெளிவர விக்னேஷும் கதிரைப் பார்த்து சிரித்தான்.

"இங்க என்னடா நடக்குது? அவனுங்க ளா பேசி சிரிச்சுக்கிறானுங்க?" என்று கேட்டபடி மேகனும் சிபியும், மிருத்திகா வை பார்க்க,

அவள் நிலை அதைவிட மோசம். சிரிப்பதா? பயந்தது போல இருப்பதா? என்று மாறி மாறி பாவனை காட்டிக் கொண்டிருந்தாள்.

செண்பகம் 'இவ்வளவு நாள் நல்லாதானே இருந்தாங்க? என்று அதிர்ச்சியுடன் பார்த்துக் கொண்டிருந்தாள்.

ஒரு வழியாக இரு அண்ணன்களும் சிரித்து முடித்து விட்டு மற்றவர்களைப் பார்த்தனர்.

"சும்மா விளையாட்டா பேசினேன்." விக்னேஷ்.

'ஓ! இதுதான் விளையாட்டா?' என்று மேகனும்... 'எனக்கு சிரிப்பு வரல' என்பது போல் சிபியும் பார்க்க... மிருத்திகா இருவரையும், 'இனியாவது அடங்கி உட்காருங்க டா! ' என்று அவளுக்குள் இருந்த டீச்சர் வெளி வந்து முறைத்தாள்.

"எப்ப ஊருக்கு வந்தீங்க?" என்று விக்னேஷ், மேகனிடம் கேட்க,

"பத்துநாள் ஆகுது."

"பத்த்துநாள்! மீரா வ பார்க்க வர உங்களுக்கு பத்துநாள் ஆனதா?"

'மேகன் எப்படி விளக்க?' என்று யோசிக்கவும்,

"அவங்க எங்க இருக்காங்கன்னு எங்களுக்கு தெரியல... நீங்க முன்னாடி இருந்த வீட்ட கண்டுபிடிக்கவே எங்களுக்கு நாளாயிடுச்சு... அங்க போயி விசாரிச்சா அவங்க தவறான பதில் சொன்னாங்க... அதற்கு பிறகு நர்ஸ் மூலமாக தான் மிருத்திகா பற்றி தெரியாமலே வந்தது. அப்புறம் மிருத்திகா வ பார்க்க, வீட்டு பெரியவங்களான மேகனோட அம்மாவும், ஆச்சியும் போய் பேசி, இன்னைக்கு விருந்துக்கு இவங்க ரெண்டு பேரும் வந்தாங்க..." என்று கூறி முடித்தான் சிபி.

தாத்தா ஏன் மிருத்திகா வை யும் மேகனையும் தனித்து விடாதீர்கள்... என்று தன்னையும், சிபியையும் துணையாக அனுப்பினார் என்று நன்கு புரிந்தது செண்பகத்திற்கு. பிரச்சனைக்கு வெளியில் இருப்பவர்களால் தான் தெளிவாக பேசமுடியும் என்பதை கண்கூடாக அறிந்தாள்.

"அஞ்சு வருஷத்துக்கு முன்னாடி என்னதான் நடந்தது?" என்று விக்னேஷ் கேட்டான்.

நடந்தது அனைத்தையும் மேகன் சுருக்கமாக நர்ஸை சந்தித்தது வரை கூறினான்.

விக்னேஷும் கதிரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர். பிறகு மிருத்திகா வைப் பார்த்தனர். அவள் முகத்தில் மேகனை தங்களுக்கு பிடிக்க வேண்டுமே! என்ற பயம் தெரிய,

"சரி பழச விட்டுடுவோம்... சும்மா தெரிஞ்சுக்க தான் கேட்டோம். எங்களுக்கு மீரா வாழ்க்கை தான் முக்கியம்... இத்தனை நாள் அவள் கடந்த பாதை மிகவும் கொடூரம்... ஆனால் அவளுடைய வைராக்கியம் தான், நீங்க நல்லவராதான் இருப்பீங்க ன்னு எங்களுக்கு புரிய வச்சது... ரொம்ப வருஷத்துக்கு பின்னாடி இன்னைக்கு தான் அவ சிரிக்கறத பார்த்தோம்... அதெல்லாம் பெரிய கொடுமை. .. நமக்கு வேண்டிவங்க கஷ்ட படும் போது ஒன்னும் பண்ண முடியாம வேடிக்கை பார்க்குறது... என்று விக்னேஷ் சொல்லவும்,

"ஏன் பாத்துகிட்டு இருந்தீங்க? மேகன தேடி போயிருக்க லாமே?" என்று சிபி கேட்டான்.

மிருத்திகா வைப் பார்த்த இரு அண்ணன்களும், "நீங்க ரெண்டு பேரும் இன்னும் நடந்த விஷயங்களைப் பற்றி பேசிக்கலையாடா?" என்று ஒன்றாக கேட்டனர்.

"ஆரம்பிச்சுட்டாங்க.'

"இல்ல."

'அவங்க பேச ஆரம்பிக்கும் முன் தான், நீங்க ரெண்டு பேரும் கரடி போல வந்துட்டீங்களே?' என்று சிபி நினைக்கும் போதே,

இரு அண்ணன்களும், "ஓ! இவங்க ரெண்டு பேரும் தான் கரடி யா?" என்று சிபியையும், செண்பகத்தை யும் கரடி என்று கூறி சிரித்தனர்.

இரு அண்ணன்கள் தவிர, நால்வரும் ஒவ்வொரு மனநிலையில் இருக்க. மீண்டும் மேகனிடம்,

"நீங்க ரெண்டு பேரும் பேசிட்டு சொல்லுங்க... நாங்க ரெண்டு பேரும் எங்கள் மனைவியுடன் உங்க வீட்டு பெரியவங்கள பாக்க வர்றோம். என்னைக்கு அவங்களுக்கு வசதியா இருக்கும் னும் கேட்டு சொல்லுங்க... அப்புறம் எங்கள பெத்தவங்க ட்ட பேசி நல்ல முடிவோட வர்றோம்".என்றான் விக்னேஷ்.

அனைவரும் "சரி "என்று சொன்னதும்,
மிருத்திகா வை யும், செண்பகத்தை யும் அழைத்துக் கொண்டு அண்ணன்கள் நகர, மேகனும் சிபியும் வீடு நோக்கி சென்றனர்.

"அடுத்து மேகன பாக்கும் போது நடந்தத சொல்லிடுடா" என்றான் கதிர்.

"நீ என்னம்மா அமைதியா வர்ற?" என்று செண்பகத்தைப் பார்த்து கேட்டான் விக்னேஷ்.

"மிருத்திகா விற்கு திருமணம் ஆச்சா? இல்லையா?" என்று குழம்பி போய் கேட்டாள் செண்பகம்.

"இல்ல செண்பா." என்றவள். அவளும் மேகனும் சந்தித்ததில் ஆரம்பித்து, நடந்ததை சுருக்கமாக கூறியவள்,

நான் ஆஸ்பத்திரில கண்ண திறந்து பாக்கும் போது என் அண்ணன்களும் அப்பா வும் இருந்தாங்க. அவங்கட்ட எப்படி, எதை பேசுறது ன்னு தெரியாமலும், பேச சக்தியும் இல்லாம கண்ண மூடிக்கிட்டேன்.

நான் மருந்து மயக்கத்துல இருக்கிறதா நர்ஸ் சொன்னதும்..எங்கம்மா யாரையோ திட்டுறதும், நர்ஸ் அவங்கள வெளிய அனுப்புறதும் தெரிந்தது. மெல்ல கண்களைத் திறந்து பார்த்த போது நர்ஸ் மட்டும் அவர் இருக்கையில் அமர்ந்து இருந்தவர், எழுந்து வந்து, "என்ன வேணும்?" என்று கேட்டார். எனக்கு அந்த நேரத்தில, என் பெரிய அண்ணி மட்டும் தான் என் மனசு புரிஞ்சவங்களா இருந்தாங்க... அவங்கட்ட தான் நடந்தத நான் கேட்டு தெரிஞ்சுக்க முடியும். . அதனால, எங்க அண்ணியை பாக்கனும் னு கேட்டேன்.

தீபா (பெரிய அண்ணி)

"உங்க அண்ணியை, உங்கம்மா வந்ததுல இருந்து, பொது இடம்னு கூட பாக்காம திட்டிக்கிட்டே இருக்காங்க... நா எப்படி அவங்க கூப்பிட முடியும்? னு" நர்ஸ் சொல்லிக்கிட்டிருக்கும் போதே கதிர் அண்ணா வந்தான், அவன் எங்கிட்ட அவனுக்கு தெரிஞ்சு நடந்த விஷயங்களை சொல்லி, அம்மா எம்மேல ரொம்ப கோபம் இருக்காங்கன்னும், பேசாம தூங்கி ஓய்வெடுத்துக்க, வீட்ல போயி பேசிக்குவோம் னும், அவனும், பெரியண்ணணனும் என் விருப்பப்படி தான் நடப்பாங்கன்னும், தைரியம் சொல்லிட்டுப் போயிட்டான்.

பாலசௌந்தரி (அம்மா)

டிஸ்சார்ஜ் ஆகி வேறு ஒரு வீட்டிற்கு அழைத்துச் சென்றனர். ஊரோட பேர்கூட எனக்குத் தெரியல, உள்ள வந்தா வீடே போர்க்கலமாக இருந்தது... நான் வாயைத் திறந்தாலே வீடு ரெண்டு பட்டது. எனக்கு ஆதரவா அண்ணன்களும், எனக்கு எதிரா அம்மாவும், எதுவும் செய்ய முடியாமல் அண்ணியும், அப்பாவும்...மாற்றி மாற்றி வீட்டில் சண்டை...இப்படியே ஒரு மாசம் ஒடியது. அப்புறம் எங்க கதிர் அண்ணனுக்கு பெண் குடுக்க வந்தவங்க, மறுபடியும் சொல்லி அனுப்ப, வீடு இருக்கிற நிலையில எனக்கு இப்ப கல்யாணம் வேணாம்னு அண்ணன் சொல்லிடுச்சு. அவனுக்கு பயம் அவனும் , பெரிய அண்ணனும் இல்லைனா எங்கம்மா என்னையும் அண்ணியை யும் கொன்னே போட்டுடுவாங்களோ ன்னு... ஏன்னா எங்கம்மா சொந்த புத்தில எதுவும் பண்ணல, அவங்களுக்கு பிடிச்சவங்கள, நாங்க வேண்டாம் னு சொன்னது அவங்களுக்கு எங்க மேல கோபத்தில் உண்டாக்கியது. கதிர் கல்யாணத்த வேணாம்னு சொன்னதும், பிரச்சனை இன்னும் பெரிசா ச்சு. .. அதுக்கும் நானும் அண்ணியும் தான் காரணம்னு எங்கம்மா எங்களை திட்டாத நேரமில்லை... அந்த பொண்ணு வீட்டுக்காரங்க கிட்ட போயி, நான் தான் அண்ணா, கல்யாணம் வேணாம்னு சொல்ல காரணம் னு சொல்லி புலம்ப, அந்த பொண்ணோட ஒன்னு விட்ட அண்ணனுக்கு என்னைய கேட்டானுங்க. .. பிரச்சனை பூதாகரமாக மாறுச்சு... நானும் கல்யாணம் வேணாம் னு சொன்னதும் எங்கம்மா பத்ரகாளியாவே மாறிட்டாங்க. .. அடி பின்னிட்டாங்க. . நினைச்சு நினைச்சு அடிச்சாங்க.. கல்யாணத்துக்கு நான் சம்மதிக்கலைனு என் கால் ல சூடு போட்டாங்க. இதையெல்லாம் பார்த்து பொறுக்க முடியாம கதிர், அந்த பொண்ணு வீட்ல போயி,
"எங்க ரெண்டு பேருக்குமே கல்யாணம் பண்ணிக்க இஷ்டமில்லை... எங்கள விட்டுடுங்க" ன்னு சொல்லிட்டு வந்துட்டான். அவங்களும் கதிர் சொன்னத எங்கம்மா ட்ட சொல்ல.... வீடு வீடாவே இல்லை... என்னை ஒரு தாய் பேசக்கூடாத வார்த்தையெல்லாம் பேசினாங்க... யார் தடுக்க வந்தாலும் அவங்க கூடவும் சண்டை, கடைசில ஒரே அழுகை... ஒரு நாள் பொறுக்க முடியாம எங்க அண்ணி,
"அவள நீங்க தான் பெத்தவங்களா? னு கேட்க, பக்கத்துல இருந்த துடைப்பக் கட்டைய எடுத்து, அசிங்க, அசிங்க மா திட்டிக்கிட்டே என்னையும் அண்ணியை யும் அடிச்சு,
"இவள இழுத்துட்டுப் போனவன் இனி வருவானா என்ன? இந்த மூஞ்சிய பாத்து தானே வருவான்னு நம்புறீங்க?" னு சொல்லிட்டு, கரண்டியை அடுப்பில் வைத்து, என் முகத்தில் சூடு போட வரவும், எங்க அண்ணியும், நானும் தடுக்க, சத்தம் கேட்டு, பக்கத்து வீட்டில் உள்ளவர்கள் எங்கப்பாவுக்கு ஃபோன் பண்ணி, எங்கப்பா, நான் , அண்ணி மூணு பேராலுமே எங்கம்மா கையில் இருந்த கரண்டி யை வாங்க முடியல... மூணு பேருக்குமே அங்கங்கே சூடு பட்டது... கடைசீல

"உங்களுக்கு என் முகத்தை தானே சூடு போடனும்? போடுங்க!" ன்னு முன்னாடி போன நேரத்துல சரியா, வேலைக்குப் போயிருந்த எங்கண்ணா வந்துட்டான்.

"ஏம்மா உனக்கு பெத்த பாசந்தான் இல்ல, அறிவுமா இல்லாம போயிடுச்சு? இவள எவந் தலையிலயாவது கட்டிவிட தானே நினைக்கிற? முகத்துல சூடு போட்டா, யாருக்கு கட்டிக் கொடுக்க முடியும்?"

"நான் சொல்ற பையன் தங்கம்டா. . சொக்கத் தங்கம்... இவ ஓடுகாலி னு தெரிஞ்சும், "கெட்டே போயிருந்தாலும் நான் கட்டிக்கிறேன் அத்தை!" ன்னான். .. அவன் கட்டிப்பான்." என்றதும் அனைவருமே அருவருப்பில் மூஞ்சியை சுழித்தனர்.

அன்று இரவு இரு அண்ணன்கள், அப்பா மூவரும் சேர்ந்து ஒரு முடிவெடுத்தனர்.

அது என்ன முடிவு?

அடுத்த அத்யாயத்தில் பார்ப்போம் ...

❤❤❤❤❤❤

Bạn đang đọc truyện trên: Truyen2U.Pro