தீண்டல் 21

Màu nền
Font chữ
Font size
Chiều cao dòng

அருண் வீட்டை விட்டு சென்றதும் வசுந்ராவால் தன் அழுகையை கட்டுப்படுத்த முடியவில்லை.வாய் விட்டு கதறி அழுதவள்

"ஏன் அருண் இப்போ என் லைப்ல வந்த .ஒரு 4 வருசம் முன்னாடி வந்திருந்தா உன்னோட உண்மையான அன்புக்கு நான் தகுதியானவளா இருந்திருப்பேனே.ஆனா விதிவசத்தால ஒரு கெட்டவனுக்கு வாக்கப்பட்டு என் உடம்பு புண்ணாகி இருக்குடா"என்று தன் உடலை பார்த்தவளுக்கு அவளின் உடல் முழுவதும் சிகரட்டால் சுட்ட தழும்பு இருந்தது.

"அருண் இந்த தழும்பெல்லாம் பார்த்த உனக்கு என்னோட பழைய வாழ்க்கை ஞாபகம் வரும்டா.இப்படி ஒருத்தி உன் வாழ்க்கைக்கு தேவை இல்ல.நீ இன்னைக்கு என்கிட்ட என்ன கேட்டிருந்தாலும் நான் தந்திருப்பேன்.ஆனா நீ அப்படியான ஆளு இல்லடா.உன்கிட்ட நேர்ல இதெல்லாம் சொல்ல முடியாத பாவியா நான் நிட்கிறேன்.நான் உன்ன அணைச்சிக்கிட்டப்போ என்ன நீ தப்பா நினைச்சிருப்பேல.பரவால்லடா.என்ன நீ தப்பா நினைச்சாலும் பரவாயில்லை.உன் வாழ்க்கை சந்தோசமா இருக்கனும்"என்று வாய்க்கு வந்ததை உளறியவள் நிமிர்ந்து பார்க்க மேசையில் வைத்த துப்பாக்கியை எடுக்க வந்த அருண் அவள் தன்னை மறந்து தனக்குதானே உளறிக்கொண்டிருந்ததை கேட்டவன் ,அவளை கண்களில் கண்ணீருடன் பார்க்க அவளோ அவனின் முகத்தை பார்க்க முடியாமல் தலை குணிந்து நின்றாள்.

"இப்பொ எதுக்கு வசுந்ரா நீ தலை குணியிர.அதான் உன் மனசுல உள்ள எல்லாத்தையுமே வெளிப்படையாவே சொல்லிட்டியே.நாந்தாண்டி தலை குணியனும்,உன்ன 4 வருசம் முன்னாடி பார்த்திருந்தா இன்னேரம் நீ என்னுடையவளா இருந்திருப்ப.இப்பவும் ஒன்னு கெட்டு போகல"என்று கூறியவன் என்ன நடக்கின்றது எனபதை அவள் உணர முன் கொஞ்ச நேரம் முன்பு அவள் கலட்டி வீசிய தாலியை வசுந்ரா கழுத்தில் அருண் கட்டினான்.

இதை கொஞ்சமும் எதிர்பார்க்காதவள்

"என்ன பண்றீங்க அருண்"என்று பேசி முடிப்பதற்குள் அவள் கழுத்தில் அவன் மூன்று முடிச்சு இட்டு முடித்திருந்தான்.

தன் ஆற்றாமையை என்னிய வசுந்ரா மீண்டும் அழுது கொண்டே இருந்தால்.அவளின் அழுகைய கண்ட அருணுக்கு அப்போதுதான் கோவத்தில் தான் செய்தது நினைவு வர

"வசுந்ரா ப்ளீஸ் அழாதீங்க"என்று கூற அவள் அவனை இந்த முறை உரிமையாக அணைத்துக்கொண்டாள்.இம்முறை அவளாகவே அவனை விட்டும் விலகும்வரை அவளை விலக்குவதில்லை என உறுதியாக இருந்தவன் முதன் முதலில் ஒரு பெண்ணின் ஸ்பரிசம் தன்னில் பட அவனால் உணர்வுகளை கட்டுப்படுத்த முடியவில்லை.அதுவும் அவள் தன்னை காதலிக்கின்றால்,தனக்காக எதுவும் செய்ய தயாராக இருக்கின்றால் என்பதை நினைக்கும் போது அவனுக்கு பெருமையாக இருந்தது.அவனை அணைத்து விசும்பிக்கொண்டிருந்தவள் திடீரென்று அவன் முகம் எங்கும் முத்தமிடத்தொடங்கினால்.அந்த முத்தம் ஆவேசமாக மாற அருண் தன் சுய கட்டுப்பாட்டை இழந்து கொண்டிருத்தான்.ஈருடல் ஓருடலாக இருவரும் கணவன் மனைவியாகினர்.சில நாழிகைகளின் பின்

பக்கத்தில் இருந்த அருணை பார்த்த வசுந்ராவுக்கு என்னவென்று தெரியாத ஒரு உணர்வு அவளை ஆட்கொண்டது.இவளின் மன ஓட்டத்தை அறிந்த அருண்

"வசுந்ரா நீ ஒன்னும் நினைக்க வேணாம்.எனக்கு ஒன் வீக் டைம் கொடு.உன்ன எங்க வீட்டுக்கு மூத்த மருமகளா கூட்டி போறேன்"என்று அவளின் நெற்றியில் இதழ் பதித்தான்.அவனை நெருங்கி அவனை கட்டிக்கொண்டவள்

"ஹ்ம்ம் சரி அருண்"என்று கூற அவனோ

"ஏண்டி பொண்டாட்டி.புருசனுக்கு பசிக்குதுடு.சாப்பாடு கொடுக்க மாட்டியா"என்று அவளின் மன நிலையை மாற்ற விளையாட்டாக கேட்டவனுக்கு

"அதான் விருந்து ரெடியா இருக்கே.தேவையானவங்க போட்டு சாப்பிட்டுக்கலாம்"என்று கூறினால்.அவன் எதை கேட்டானோ அவளும் அதையே பதிலாக கூற
அவன் அவளை மென்மையாக அனைத்து அவளின் கூந்தல் வாசத்தில் எதை தேடினானோ தெரியவில்லை. ஆனால் அவன் எதையோ கண்டு கொண்ட வெற்றிக்களிப்பில் அவளின் கழுத்தில் தன்னுடைய டிரிம் செய்யப்பட்டிருந்த தாடியால் அழுத்த அவள் கூச்சத்தில்

"அருண் என்ன பண்றீங்க. எனக்கு ரொம்ப கூச்சமா இருக்கு "என்று சினுங்கியவளை பேசவிடாமல் அவளின் உதடுகளை சிறைசெய்து விடுதலை செய்த பின் அவளின் உடலை பார்க்க வசுந்ராவுக்கோ வெட்கம் பிடுங்கித்தின்றது. ஆனால் அருணுக்கோ கண்களில் கண்ணீர் வழிந்தோடியது.. வசுந்ரா கூறியது உண்மைதான். ஒரு பெண்ணால் தன் தந்தை, தாய்க்கு கூட காண்பிக்க முடியாத இடங்களில் எல்லாம் தழும்புகள் நிறைந்து இருந்தது. அருணின் மன ஓட்டத்தை மாற்ற விரும்பிய வசுந்ரா

"என்ன சார், என்ன சாப்பாட்ட பார்த்துக்கிட்டே இருக்குற ஐடியாவா.கவனம் அப்புறம் சாப்பாடு ஆறிட போகுது" கண் சிமிட்டியவளை இறுக அனைத்தவன்
இவர்களது காதல் நாடகத்தை மீண்டும் அரங்கேற்றினான்.

அன்றையா நாள் முழுவதும் அவளுடன் இருந்தவன் இரவானதும் அவனின் வீடு செல்ல தயாரானான்.

"வசுந்ரா நீ ஒன்னும் யோசிக்காத இன்னும் ஒன் வீக்தான் .உன்ன எங்க வீட்டுக்கு மருமகளா கூட்டிட்டு போயிடுவேன்.அது வரைக்கும் கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்கோடா" என்றவன்

"உனக்கு எவ்வளவு சீக்கிரத்துல டைவோர்ஸ் வாங்கனுமோ அவ்வளவு குயிக்கா வாங்கிடலாம்.எனக்கு தெரிஞ்ச பேமஸ் லாயர் ஒருத்தங்க இருக்காங்க.அவங்க கிட்ட விசயத்த சொன்னா கணவன் மனைவிக்கு கொடுக்குற அந்த 6 மாசம் டைம் கூட இல்லாம அவசரமா கிடைச்சிடும்,அதுக்கு அப்புறமா நம்ம சட்டப்படி கல்யாணம் பண்ணிக்கலாம்.மோர் ஓவர் அதுவரைக்கும் நீ தனியா இங்க இருக்க வேணாம்.எப்படியும் ஒன் வீக்குல்ல நான் அம்மாகிட்ட பேசி சம்மதம் வாங்கிடுவேன்.அது வரை கொஞ்சம் பொறுத்துக்கோ.ஓக்கே"என்றவனை இதழில் புன்னகையுடன்

"சரி"என்றால்.

வீட்டிற்கு வந்தவன் யாரிடமும் எதுவும் பேசாமல் தன் அறைக்குள் நுழைய பார்க்க பரவதம்

"என்னப்பா அருண் ரொம்ப பிசியா.சாப்பிட்டு போப்பா"என்றவரை

"இல்லம்மா எனக்கு பசியில்ல.நீங்க சாப்பிடுங்க "என்று கூறி தன் அறைக்குள் சென்றவன் தன் கைபேசியை எடுத்து தன் காதல் மனைவிக்கு கால் செய்ய அது நாட் ரீச்சப்பிள் என்று வந்தது.ஒரு வேலை அவளின் போனில் சார்ஜ் இல்லாமல் போய் இருக்கும் என் நினைத்தவன் அவளின் அபார்ட்மண்ட் லேண்ட்லைண்ட் நம்பர் தெரியாததால் 'சரி காலையில் அவளை பார்க்கலாம்'என்று மனதுக்குள் என்னி அப்படியே தூங்கி போனான்.

காலையில் எழுந்ததும் நேற்று நடந்தவைகளை நினைத்த போதுதான் அருணுக்கு தோன்றியது வசுந்ராவிடம் தன் குறையை இது வரை கூறாதது அவனுக்கு ஒரு மாதிரி இருந்தது.நேற்று நடந்த கலோபரத்தில் அது மறந்திருக்க சரி இன்று அவளிடன் தன் உடல் நிலையை எடுத்துக்கூறலாம் என நினைத்தவன் வசுந்ரா எப்படியும் தன்னை தவறாக நினைக்க மாட்டாள் என்று தனக்குதானே சமாதானம் கூறிக்கொண்டான்.

காலையில் வசுந்ராவின் அபார்ட்மண்டை அடைந்தவன் காலிங்க் பெல்லை அடிக்க கதவு திறக்காமல் இருப்பதை கண்டவன் கொஞ்சம் கலவரமானான்.அருணை கண்ட அந்த அபார்ட்மண்டின் செக்கியூரிட்டி அவனிடம் வந்து

"சார்,அம்மா நேத்தைக்கே நீங்க போய் கொஞ்ச நேரத்துலேயேந ப்ளாட்ட காலி பண்ணி போயிட்டாங்க.போக முதல்ல இந்த கடிதத்த உங்க கிட்ட கொடுக்க சொன்னாங்க"என்று உறையில் இடப்பட்டிருந்த கடிதத்தை அவனிடம் நீட்டினான்.

ஏதோ ஒன்று சரியில்லை என மனதுக்குள் நினைத்த்து கைகள் நடுங்க அந்த கடிதத்தை எடுத்து படித்தவனுக்கு கண்ணீரை கட்டுப்படுத்த முடியாமல் இருக்க அப்படியே தன் ஜீப்பிற்கு வந்தவன் கடிதத்தை மீண்டும் படிக்க ஆரம்பித்தான்.

"அன்பின் அருணுக்கு,

துரதிஷ்டத்தை மட்டும் வாழ்க்கையில் கண்ட வசுந்ரா எழுதுவது.

உங்க கூட பழகி 2 வாரம்தான் ஆச்சு அருண்.ஆனா நீங்க என்மேல காட்டிய கள்ளமில்லா அன்பும் ஆதரவும் என்னோட வாழ்நாளிலேயே நான் பார்க்காதது.ஒரு சில கணம் நான் நினைத்திருந்தேன் உங்கள கல்யாணம் பண்ணிக்காம ஜஸ்ட் லிவ் இன் ரிலேசன்சிப்ல வாழ்ந்திடுவமா என்று.ஏனென்றால் ஏற்கனவே கல்யாணமான ஒரு ஆணை ஒரு பெண் கல்யாணம் பண்ணா அத சமூகம் எதுவுமே சொல்லாது.ஆனா அதுவே ஒரு கல்யாணமான பொண்ண கல்யாணமாகாத ஆண் திருமணம் செய்தால் இந்த சமூகம் எப்படி எல்லாம் கேலி பேசும் என்று எனக்கு தெரியும்.அந்த கஷ்டத்த நான் உங்களுக்கு கொடுக்க விரும்பல்ல.உங்க கூட ஒரு நாள் நான் வாழ்ந்திருந்தாலும் என் ஆயுள் முழுவதும் அது மட்டும் போது. நேத்தைக்கு நீங்க என் கழுத்துல கட்டிய தாலி ஒன்னு போதும் என் வாழ் நாள நான் கடத்திடுவேன்.

அருண் நேத்தைக்கு நீங்க கேட்காமலே என்ன தந்ததால ஒரு மட்டமான பொண்ணா நினைச்சிடாதீங்க ப்ளீஸ்.உங்கள மனசால நான் என்னோட கணவனா நினைச்சதாலதான் நான் என்னையே உங்களுக்கு கொடுத்தேன்.என்னால உங்க மனைவி என்ற அந்தஸ்தோட இந்த சமூகத்துல வாழ்ந்து உங்களையும் உங்க குடும்பத்தையும் மத்தவங்க கேலி பேசுரத நான் விரும்பல்ல.உங்க கிட்ட நேர்ல இத சொன்னா நீங்க ஏற்றுக்கொள்ள மாட்டீங்க.அதான் உங்கள விட்டு தூரமா போகலாம்னு இந்த கடிதத்த எழுதுறேன்.

இதுக்கு மேல என்ன எழுதுறதுன்னு தெரியலல்.இதோட வசுந்ரா என்ற காரக்டர் உங்க லைப்ல வந்தத மறந்துட்டு ஒரு நல்ல பொண்ணா பார்த்து கல்யாணம் பண்ணிக்கோங்க.இன்னொரு முக்கியமான விசயம் நீங்க என்ன தேட டிரை பண்ணீங்கன்னா உங்கள விட்டு தூரமா போயிருக்குற நான் இந்த உலகத்த விட்டே தூரமா போயிடுவேன்.இது நான் உங்க மேல வெச்சிருக்குற காதல் மேல சத்தியம்.நான் இந்த உலகத்துல வாழ்றதும் வாழாம போறதும் இனி உங்க கைல .

இப்படிக்கு

உங்கள் நினைவுகளுடன்

வசுந்ரா. "

-------
என்னுடைய வாசகர்கள் எவ்வளவு எனக்கு ஆதரவு தருகிறார்கள் என்று கடந்த அப்டேட்டில் என்னால் உணர முடிந்தது..( எல்லோருமா சேர்ந்து என் கண்ண வேர்க்க வெச்சிட்டீங்கப்பா)..
எல்லோருடைய கருத்துக்களும் வித்தியாசமாகவும், புதிய கருவைக்கொண்டதாகவுன் இருந்தது. நன்றிகள்....

ஆனால் நான் அப்டேட் போட்ட 10 நிமிசத்துலேயே ஒரு சகோதரர் எனக்கு மெசேஜ் பண்ணியிருந்தார்.... நான் நினைத்ததை அப்படியே கூறியிருந்தார்.அதை மட்டும் இங்கே பதிவிடுகின்றேன்.. இதே கருத்தை வேறு யாரும் கூறியிருந்து நான் மறந்திருந்தால் மன்னிக்கவுன்.
gautamr822

Bạn đang đọc truyện trên: Truyen2U.Pro