தீயாய் சுடும் என் நிலவு 42

Màu nền
Font chữ
Font size
Chiều cao dòng

"இன்னும் ரெண்டு நாள்ல அவளுக்கு ஆப்ரேஷன். அதுக்கு நீ தான் அவளை ரெடி பண்ணனும்." என்று தன் பாக்கெட்டில் இருந்து சீட்டை எடுத்து தந்தான்.

"இந்த ரெண்டு நாளும் அவ சாப்பிட வேண்டியது. அப்புறம் அவளுக்கு என்ன தரலாம் எது தரக்கூடாது எல்லாம் எழுதி கொடுத்திருக்காங்க. பார்த்துக்கோ " என்றான்.

"சரி ஸ்ரீ இதெல்லாம் செஞ்சுடுவா. அடுத்து என்ன தீரன்?" என்றான் அமுதன்.

"நாளை மறுநாள் வெள்ளிக்கிழமை நீ பத்து மணிக்கு மிருவை ஹாஸ்ப்பிட்டல்கு கூட்டிட்டு வரணும்" என்றான் தீரன்.

"நானா?" என்றாள் விக்கித்து.

"ஆமா நீயே தான்" என்று ஆழமாய் நோக்கினான் தீரன்.

"மாமா நான் எப்படி அக்காவை கூட்டிட்டு வரது? நான் கூப்பிட்டா உடனே வந்துடுவாங்களா? ஏன் எதுக்குன்னு என்னை போட்டு ஒரு வழி செஞ்சுடுவா. போங்க மாமா" என்றாள் நம்பாமல்.

"அதெல்லாம் கூட்டிட்டு வரலாம். உன் பிரென்ட் வலை பார்க்கிற ஹாஸ்ப்பிட்டல்ல பிளட் டோனேட் கேம்ப் போகணும். கண்டிப்பா நீங்களும் வாங்க. ரெண்டு பேரும் போலாம்னு சொல்லு. நிச்சயம் வருவா. அவளுக்கு பிளட் டோனேட் பண்ற பழக்கம் இருக்கு." என்று லேசாய் புன்னகைத்தான்.

"சரி மாமா. ட்ரை பண்றேன்" என்றாள் ஸ்ரீ.

"இந்த ட்ரை எல்லாம் வேண்டாம். கண்டிப்பா உன்னால முடியும்" என்றான் லேசாக புன்னகைத்து.

"அங்க வந்த பிறகு அவளுக்கு தேவையான எல்லா டெஸ்டும் எடுப்பாங்க. மயக்க ஊசியும் போடுவாங்க. அதுவரைக்கும் நீ தான் கூட இருக்கணும்." என்றான் கண்டிப்பாக.

"ஹ்ம்ம்" என்று தலையசைத்தாள் ஸ்ரீ.

வாசலில் அழைப்புமணி கேட்கவும் ஸ்ரீ யாரென யோசிப்பதற்குள்.
"போம்மா! உங்க அக்கா இல்ல. என்னை பார்க்க தான் வந்துருக்காங்க" என்றான் தீரன்.

"என்னை மட்டும் இல்ல.. உங்களையும் தான். சரி இரு நானே கதவை திறக்கிறேன்" என்று வாயிற் கதவை திறந்தான்.

"ஹாய் டா!" என்றான் வாசலில் இருந்தவன்.

"வாடா" என்று உள்ளே அழைக்க.

வந்தவனும் புன்னகைத்தான்.

"எப்படிடா இருக்கு உடம்பு?" என்று கேட்டதும், "எனக்கென்ன? நல்லா தான் இருக்கேன்" என்றான் தீரன் சுரத்தே இல்லாமல்.

"என்னடா இவ்ளோ விரக்தியா பேசுற?" என்றதும் நண்பனை முறைத்த பின், "எல்லாம் என் நேரம் டா?" என்றான் தலையில் அடித்துக்கொண்டு.

"ஸ்ரீ, அமுதன் இவன் என் பிரென்ட் பரசு. இங்க தான் சைபர் க்ரைம் ல இருக்கான்." என்று "டேய் நல்லவனே! இவர் அமுதன் இவங்க ஸ்ரீஷா." என்றான்.

"வணக்கம்!" பரஸ்பர அறிமுகம் முடிந்ததும், "அமுதன் ஏன் இன்னைக்கு இவ்ளோ அவசரமா பேசனும்னு கேட்டிங்கள்ல?" என்றான் தீரன்.

எதுவும் பேசாமல் அமுதனும் தலையசைக்க.

"இப்போ சொல்றேன் அதுக்கான காரணத்தை. பரசு தான் எனக்கு ரொம்ப ஹெல்ப் பண்ணாரு. இப்போவும் ஹெல்ப் பண்ணிருக்காரு" என்று பரசுவிடம் கைநீட்ட ஒரு வெள்ளை கவரை கொடுத்தான்.

"இந்தாங்க. இதையும் அப்டியே கொஞ்சம் பாருங்க" என்று அந்த கவரை அமுதனிடம் கொடுத்தான் சிறிய தயக்கத்தோடு பிரித்து பார்த்தவனின் விழிகள் அப்பட்டமான அதிர்ச்சியை வெளிப்படுத்தின.

"தீரன்" என்று அவனை பார்க்க, "சொல்லுங்க. சத்தியமா எனக்கும் இதுக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. உங்க அருமை தீ தான் இந்த முடிவு எடுத்திருக்கா" என்றான் தீரன் முகம் மிகவும் கடினமாக.

"என்ன பண்ணிருக்காங்க அக்கா." என்றாள் ஸ்ரீ தீரனை நோக்கி.

"ஹ்ம்ம் நீ கூட தான இருக்க ஆனா ஒன்னும் தெரியல உனக்கு... இந்தா பாரு உங்க பாசக்கார அக்கா என்ன செஞ்சு வச்சிருக்கான்னு" என்று ஸ்ரீயை முறைத்தபடி தாளை நீட்டினான்.

"ஸ்ரீ மேல எந்த தப்பும் இல்ல அமுதன். மிருதி எல்லாமே ஸ்ரீ இல்லாத நேரமா தான் செஞ்சுருக்கா." என்றான் தீரன்.

"நான் என்ன செஞ்சேன். எனக்கு எதுவும் தெரியலை. அக்கா என் முன்னாடி எதுவும் செய்றதில்லை. இப்போ அப்படி என்ன தான் செஞ்சு வச்சிருக்கா?" என்று அந்த தாளை பிடித்து படித்தவள் கண்கள் கலங்கி நாற்காலியில் அப்படியே அமர்ந்துவிட்டாள்.

"ஸ்ரீ" என்றான் மென்மையாய் அமுதன்.

"ஏன் அக்கா இப்படி ஒரு முடிவு எடுத்திருக்காங்க?" என்று முகத்தை முடிகொண்டு அழ தொடங்கினாள்.

தன் நிலையே இங்கு இவ்வாறு இருக்க, இவர்களை காண மேலும் வருத்தமாய் இருந்தது.

இப்படி தங்களை பாடாய் படுத்தும் மிருதியின் மேல் ஒரு நொடி பெரும் கோபம் உருவானது.

'இவளுக்கு எப்பவும் தான் செய்றது தான் கரக்ட்ன்னு நினைப்பு. நாங்களாம் மனுஷங்களா தெரியலையா அவளுக்கு? இருக்கட்டும் இருக்கட்டும்.. இந்த ஆப்ரேஷன் நல்லபடியா முடியட்டும். அப்புறம் இருக்கு அவளுக்கு' என்று மிருதியை மனத்திற்குள்ளேயே திட்டி கொண்டிருந்தான் தீரன்.

"டேய் தீரா!" என்று நண்பன் தன் தோளை  பற்றி உலுக்க சுய நினைவுக்கு வந்தவன் எதுவும் பேசாமல் 'என்ன?' என்பது போல் பார்த்தான்.

"டேய். எவ்ளோ நேரமா கூப்பிட்டுட்டு இருக்கோம். என்ன கனவு கான்றியா? உன் பொண்டாட்டி கூட டூயட் எல்லாம் அப்புறம் பாடிக்கலாம். இப்போ இங்க கவனி" என்று கிண்டல் செய்யவும் நண்பனை கொலைவெறியோடு கோபமாய் முறைத்தான் தீரன்.

"சரி சரி.. சும்மா விளையாட்டுக்கு சொன்னேன். அப்படி முறைக்காத" என்று பேசிக்கொண்டே வேறெங்கோ வேடிக்கை பார்த்தான் அவனின் நண்பன்.

சரியாக அந்நேரம் ஸ்ரீயின் போன் அடிக்கவும் எடுத்து பார்த்த அமுதன் ஸ்ரீயிடம் நீட்டினான்.

"யாரு?" என்று கேட்டபடி வாங்கியவள் மிருதியின் எண்ணை கண்டதும் எதிரே இருக்கும் மூவரின் முகத்தையும் மாற்றி மாற்றி பார்த்தாள்.

"என்ன அப்படி முழிக்கிற? உங்க பாசக்கார அக்கா தான? எடுத்து பேசு" என்றான் அமுதன் நக்கலாய் புன்னகைத்து.

"ஹுக்கும்.. முதல்ல யாருக்கு உயிரோட ஒட்டியிருக்க பிரெண்ட்னு மறந்து போச்சோ?" என்று இவளும் நக்கலாக கேட்க...

இருவரும் ஒருவரை ஒருவர் முறைத்து கொண்டு முகத்தை திருப்பி கொண்டனர்.

இவர்களின் சண்டையை கண்ட தீரன் தலையில் அடித்து கொண்டு அவர்கள் இருவர் தலையிலும் தட்டினான்.

"என்ன இங்க யார் அதிகமா முறைக்கிறாங்கன்னா போட்டி வச்சிருக்காங்க? முதல்ல போன் அட்டெண்ட் செஞ்சு பேசு" என்றான் ஸ்ரீயிடம்.

"சரி மாமா" என்று அட்டெண்ட் செய்ய சரியாக அலைபேசியின் ஒலி நின்றது.

"அதானே பார்த்தேன்" என்று சிரித்தான் அமுதன்.

"நீ வேற ஏன்டா?" என்று முறைத்தான் தீரன்.

மீண்டும் அலைபேசி ஒலிக்க, எடுத்து " ஹலோ!" என்றாள்.

"எங்க இருக்க?" என்றாள் மிருதி.

"ஏன்கா இங்க தான் அமுதன் வீட்ல. என்னாச்சு?" என்றாள் ஸ்ரீ.

"ஹ்ம்ம். எதுவும் ஆகலை." கோபமாக.

"அப்போ சரி போன் வைக்கட்டுமா?" என்றாள் ஸ்ரீ வேண்டுமென்று.

"அடியே நக்கலா உனக்கு?"

"இல்லையே" என்றாள் ஸ்ரீ பாவமாக.

"ஏன் சொல்லமாட்ட? எனக்குன்னு வந்து வாய்க்கிறது எல்லாம் அப்டி தானே இருக்கு" என்று மிருதி புலம்பினாள்.

புன்னகையை அடக்கி கொண்டே, "அக்கா நான் என்ன பண்ணேன்?" என்று ஸ்பீக்கரில் போட.

"நீ எதுவும் பண்ணலை. உங்க மாமாக்கு உடம்பு சரி இல்லை. எங்க போனார்ன்னே தெரியலை. நீயோ இல்ல அந்த தடி மாடோ இங்க இருந்தா கூட இருந்திருக்கலாம்ல" என்றாள் லேசான வருத்தமான குரலில்.

"அக்கா உனக்கு தான் மாமா வேணாம்னு டைவோர்ஸ் வாங்கிடல்ல? அப்புறம் எதுக்கு இந்த அக்கறை? மாமா எப்படி இருந்தா உனக்கென்ன? அவரை பார்த்துக்க அவருக்கு தெரியும்" என்றாள் ஸ்ரீ வெடுக்கென்று.

"அயோ! உனக்கு போய் போன் பண்ணேன் பாரு. எல்லாமென் தலை எழுத்து" என்று வைத்தாள் மிருதி.

எல்லோரையும் பார்த்து பெரு மூச்சு விட்டவன்.

'மனசுக்குள்ள இவ்ளோ காதலை வச்சுக்கிட்டு எல்லாத்தையும் மறைக்கிறது? உன்னை..' என்று பொருமினான்.

"சரி ஸ்ரீ. நான் சொன்ன மாதிரி கரெக்ட்டா செஞ்சுடு" என்றான்.

"மாமா! அக்கா.." என்று இழுக்க.

"கவலையே படாத ஸ்ரீ. அந்த எமலோகத்துக்கே அனுப்ப முடியாதுன்னு ஒற்றை கால்ல நிக்கிறேன். இதுல வெளிநாட்டுக்கா போகவிடுவேன். அவ எடுத்து வைக்கிற ஒவ்வொரு அடியும் நான் கவனிச்சிட்டு தான் இருக்கேன். அதனால திங்கள் தான் அவளுக்கு பிளைட். ஆனா ஆப்ரேஷன் வெள்ளியே முடிஞ்சிரும். பார்ப்போம். எல்லாம் நல்லத்துக்கே. நான் கிளம்புறேன். கொஞ்சம் வேலை இருக்கு. திஷாவை நீ கூட்டிட்டு போய்டு. " என்றான்.

"அய்யய்யோ திஷா எல்லோரும் இங்க தான் இருந்தோம்னு சொல்லிட்டா" என்றாள் ஸ்ரீ.

"இல்லடா. அவளுக்கு நீ வந்ததும் இப்போ இங்க நடந்தது எதுவும் தெரியாது. நான் பாரக்க வந்தேன்னு மட்டும்  சொல்லி சாமளிச்சுக்க"என்று நண்பனுடன் கிளம்பி சென்றான் தீரன்.

Bạn đang đọc truyện trên: Truyen2U.Pro