தீயாய் சுடும் என் நிலவு 6

Màu nền
Font chữ
Font size
Chiều cao dòng

"எந்திருடி! புருஷன் வேலைக்கு போய்ட்டு வரும்போது சமைச்சு வைக்கணும்னு தெரியாதா? இப்படி பொறுப்பே இல்லாம தூங்கிட்டு இருந்தா என்னடி அர்த்தம்?" என்றான் தீரன்.

எதுவுமே அறியாமல் மிருதி உறங்கி கொண்டிருக்க இன்னும் கோபம் அதிகமாகியது.

"எத்தனை தடவை கூப்பிட்டுட்டு இருக்கேன். எதுவுமே கேகாத மாதிரி படுத்திருந்தா என்ன நினைச்சிட்டு இருக்க நீ? வீட்ல இருக்கிறதே சமைக்கிறது மட்டும் தான். அதையும் செய்ய முடியாதா உன்னால? இப்போ எந்திரிக்க போறியா இல்லையா?" என்றான் குடிபோதையில் என்ன பேசுகிறோம் என்று அறியாமல்.

"இல்ல நான் பேசுறது கேட்டும் சும்மா படுத்திருக்கியா? எந்திருடி" என்று ஓங்கி வயிற்றில் காலால் எட்டி உதைத்தான்.

இதை எதுவும் அறியாமல் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தவளுக்கு திடீரென்று வயிற்றினில் ஏற்பட்ட தாக்குதலில் நிலைகுலைந்து அலறினாள் மிருதி.

"அ..ம்..மா.." என்று வயிற்றை பிடித்து கொண்டு அலற தொடங்கினாள் மிருதி.

"வீட்ல இருக்க ஒரு வேலைய கூட செய்ய முடியலைன்னா அப்புறம் எதுக்கு என்னை தான் கல்யாணம் பண்ணிப்பேண்ணு எதுக்குடி ஒத்த கால்ல நின்ன? வேலை செய்யாம இருக்கிறதுக்கு இது என்ன புது நடிப்பா?" என்று தீரன் கேட்க.

உடலில் ஏற்பட்ட ரணத்தை காட்டிலும் மேலும் ரணமாய் அவனின் வார்த்தைகள் இதயத்தை தைக்க மேலும் இரண்டும் சேர்ந்து தாள முடியாமல் அழுதாள் மிருதி.

"நான் வேற பொண்ண காதலிக்கிறேன்னு தெரிஞ்சும், நான் கல்யாணாம்னு பண்ணா மாமாவை தான் கல்யாணம் பண்ணிப்பேண்ணு ஒத்தைகால்ல நின்னு அடம் பிடிச்சியாமே? வெக்கமால்ல உனக்கு. உன்னால தான் என்னோட வாழ்க்கை இப்படி தலைகீழா ஆகிடுச்சு. எங்கம்மா எங்க... பையன் வெள்ளைக்காரிய கல்யாணம் பண்ணி கூட்டிட்டு வந்துட போறான்ன்னு இதான் நேரம்னு என்னை பிளாக்மெயில் செஞ்சு உன்னை என் தலைல கட்டி வச்சிட்டாங்க. பிடிக்காத ஒரு பொண்ணுகூட வாழு வாழுன்னா எப்படி வாழ்றது? என் வாழ்க்கை இப்படி ஆகுறத்துக்கு நீ தான் காரணம். உன்னை என்னைக்கும் நான் மன்னிக்கவே மாட்டேன்" என்று விருட்டென்று வெளியே சென்றான்.

அவன் கூறிய வார்த்தைகள் எதுவும் புரியாமல் போக வலி இன்னும் அதிகமாகியது.

'எனக்கு இந்த கல்யாணமே இப்போதைக்கு வேணாம்னு சொன்னேன் நான். அப்புறம் இவர் வேற மாதிரி சொல்றார். ஏதோ இருக்கு' உள்ளுக்குள் புகைந்தாலும் வலி எல்லாவற்றையும் மறக்க வைக்க அகிலாவிற்கு போன் செய்து உடனே வர சொன்னாள்.

பதறியடித்து ஓடி வந்த அகிலா மிருதி துடிப்பதை பார்த்து பயந்து போனாள்.

'அயோ மிருதி! என்னம்மா ஆச்சு? " என்றாள் பதறியபடி.

"அக்கா பிளிஸ். எனக்கு ரொம்ப வலிக்குது. ஹாஸ்ப்பிட்டல் கூட்டிட்டு போங்க" என்று அழுதாள்.

விரைந்து மருத்துவமனையில் மிருதியை சேர்த்த பின் மனம் கனக்க வெளியில் நின்றிருந்தாள் அகிலா.

'கடவுளே! அந்த பொண்ணு ரொம்ப பாவம். காப்பாத்துப்பா' என்று வேண்டினாள்.

'என்ன ஆனாலும் யாருக்கும் சொல்லக்கூடாது' என்று வரும் வழியில் கூறி மிருதி மயக்கமாகிட 'என்னவாக இருக்கும்?' என்று ஒன்றும் புரியாமல் தவித்தாள் அகிலா.

"இங்க மிசஸ்.மிருதி கூட வந்தவங்க யாரு?" என்று நர்ஸ் கேட்க, "நான் தான் சிஸ்டர்." என்றாள் அகிலா.

"உங்களை டாக்டர் கூப்பிடறாங்க" என்று சென்றுவிட்டாள்.

பதற்றத்துடன் உள்ளே சென்ற அகிலா.

"டாக்டர்! இப்போ மிருதி எப்படி இருக்கா?" என்றாள் அகிலா.

"நீங்க என்ன வேணும்? அவங்க வீட்டுக்காரர் எங்க?" என்றார்.

"நான் அவங்க அக்கா. அவர் இப்போ ஊர்ல இல்ல" என்றாள் அகிலா.

"சாரி. வயித்துல பலமா அடிப்பட்டதால அவங்களுக்கு அபார்ஷன் ஆகிடுச்சு." என்றார் டாக்டர்.

"கடவுளே. மிருதிக்கு ..." என்று இழுக்க.

"அவங்க நல்லா இருக்காங்க. மாத்திரை எழுதி கொடுத்திருக்கேன். நல்லா சத்தானதா சாப்பிட  கொடுங்க. ஒரு வாரம் கழிச்சு கூட்டிட்டு வாங்க" என்றார் டாக்டர்.

"சரிங்க டாக்டர்." என்றாள் அகிலா.

"கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுக்கட்டும். அப்புறம் நீங்க அவங்கள வீட்டுக்கு கூட்டிட்டு போகலாம்" என்றார் மருத்துவர்.

மிருதியிடம் வந்த அகிலா, "மிருதி! என்ன ஆச்சு? எப்படி இப்படி நடந்தது?" என்றார் வேதனையாய்.

"எல்லாம் என் தலையெழுத்துக்கா." என்று அழுதாள் மிருதி.

"சரி. எல்லாம் சரியாகிடும். வீட்டுக்கு போலாமா?" என்றார் அகிலா.

'இல்ல. இனி அங்க போகமாட்டேன். என் வாழ்க்கையை நாசம் பண்ணிட்டாங்க. இவங்க யாரையும் நான் மன்னிக்கவே மாட்டேன்.' என்று நினைத்தவள்.

"அக்கா. ஏன்னு கேக்காதீங்க. ஆனா, நான் இங்க இருக்கிறதையோ, எனக்கு நடந்ததையோ, நான் இனி எங்க போறேன்றது முதற்கொண்டு யார்கிட்டயும் சொல்லமாட்டேன்னு சொல்லுங்க அக்கா. " என்றாள் மிருதி.

"ஏன் மா?" என்றார் அகிலா.

"அக்கா. இப்போதைக்கு என்னால எதையும் சொல்ல முடியாது. ஆனா, கண்டிப்பா அந்த வீட்டுக்கு போகமாட்டேன். எங்க அப்பா அம்மாகிட்ட கூட சொல்லாதீங்க. உங்களுக்கு என்னை பத்தி எதுவும் தெரியாது சரியா? அப்படி தான் சொல்லணும்." என்றாள் மிருதி.

"நீ ரொம்ப கஷ்டபடறன்னு மட்டும் தெரியுது. சரி டா. நான் யார்கிட்டயும் சொல்லமாட்டேன். ஆனா, என்கிட எப்பவும் நீ பேசணும் சரியா?" என்றாள் அகிலா.

"சரிக்கா. எனக்கு ஒரு உதவி பண்ணனும்" என்றாள் மிருதி.

"என்னம்மா?" என்றார் அகிலா.

"இப்போ வீட்ல யாரும் இருக்க மாட்டாங்க. நீங்க போய் கொஞ்சம் சில திங்ஸ் மட்டும் எடுத்து வந்துடுங்க." என்றாள் மிருதி.

சிறிது நேரம் யோசித்த அகிலா, "சரி" என்றார்.

"அக்கா! கண்டிப்பா யார்கிட்டயும் சொல்லக்கூடாது. சொன்னிங்கன்னா. உங்ககிட்டக்கூட சொல்லாம நான் போயிடுவேன்" என்றாள் மிருதி.

"இல்ல மிருதி. நான் யார்கிட்டயும் சொல்லமாட்டேன். நீ என்னை நம்பலாம்" என்றார் அகிலா உடனே.

வீட்டிற்கு சென்று மிருதிக்கு தேவையானவற்றை ஒரு சூட்கேஸில் எடுத்து வந்தாள் அகிலா.

"அக்கா வீட்ல நீங்க போகும் போது.." என்று மிருதி முடிக்கும் முன், "இல்ல யாரும் வீட்ல இல்லை" என்றாள் அகிலா.

"தாங்க்ஸ்கா. ரொம்ப பெரிய வேதனைல இருக்கேன் நான். என் குழந்தை வயித்துல வளருதுன்னு தெரிஞ்சு ஒரு நாள் கூட முழுசா அந்த சந்தோஷத்தை அடையமுடியலை." என்று அழுகையை கட்டு படுத்தியவள் தான் எங்கே செல்வது என்று யோசிக்க தொடங்கினாள்.

Bạn đang đọc truyện trên: Truyen2U.Pro