தாரகை 12

Màu nền
Font chữ
Font size
Chiều cao dòng

அவள் அந்த ஆசிரியரை பார்க்க அவரோ விக்னேஷுடன் நின்று பேசிகொண்டிருந்தார்.. நீண்ட நாட்களுக்கு பின் அவனை கண்டவள் அதிர்ந்தாள்..அந்த ஆசிரியர் விக்னேஷ் செயலுக்கு மறைமுகமாக உதவி செய்து கொண்டிருந்தார்..விக்னேஷ் அபிநயனை கொள்ள ரவுடிகளை ஏற்பாடு செய்திருக்க..
மாணவர்கள் போல் வந்து அவர்கள் அபிநயனை கொள்ள திட்டம் தீட்டியிருந்தனர்...அவன் அதிலிருந்து தப்பித்து விட்டால் அவனுக்கு லேபில் கரண்ட் ஷாக் வைக்க திட்டமிட்டு கொண்டிருந்தான் விக்னேஷ்..இது அனைத்தையும் அந்த ஆசிரியரிடம் கூறியவன் சத்தமாக நகைத்தான்..

இதை கேட்டு கொண்டு நின்ற ஜானவி அதை கேட்டு அதிர்ந்தவள் விழியில் கண்ணீர் தேங்கியது..
கையில் இருந்த புத்தகங்கள் சரிந்து கீழே விழவும்...... அந்த சத்தம் கேட்டு அவர்கள் யாரென பார்க்க ஜானவியோ அங்கிருந்து ஓடி ஓரிடத்தில் ஒளிந்து கொண்டாள்..

அவர்களும் யாரும் இல்லாததை பார்த்து விட்டு அங்கிருந்து சென்று விட்டனர்..

மறுபுறம் அபிநயன் சண்டையிட்டு கொண்டிருக்கும் மாணவர்களிடம் பேசிக்கோண்டிருக்க அவர்கள் அவன் பேச்சை கேட்பதாக ... சில ரவுடிகள் சில மாணவர்களை லேபிள் வைத்து அடிப்பதாக கூற அவனும் கோபமுடன் அங்கு நகர்ந்தான்.

அவன் அந்த கதவின் அருகில் செல்லும் முன் அவன் கரம் பற்றி ஜானவி தன்னுடன் இழுத்து கொண்டு செல்ல அவன் பை வேகமாக அந்த கதவில் விழுந்தது...

விழுந்த அடுத்த நொடியே அந்த கதவு வெடிக்கவும் அவர்கள் இருவரும் அங்கிருந்து சற்று தூரம் சென்று விழுந்திருந்தனர்..

அபிநயன் அதிர்ச்சியுடன் அங்கு நடப்பதை பார்த்தவன் ஜானவியையும் பார்த்தான்..

சில நிமிடங்களில் இருவரும் நிதானித்து கொண்டு எழுந்து நிற்க
ஜானவி அவன் முகத்தை தன் கரத்தால் பற்றியவள் அவன் நலமா என உறுதி செய்து கொள்ள இருவரும் ஒருவரை ஒருவர் கட்டிக்கொண்டு நின்றனர்...

அவனிடமிருந்து விலகி நின்றவள் "உனக்கு ஒன்னுல்லயே அபி" என்றாள் ஜானவி கண்ணீர் கண்களுடன்..

"ஐயம் ஓகே ஜானவி.."என்றான் புன்னகையுடன்.

அவள் கண்களில் தெரிந்த அக்கறையை கண்டவன் அவள் கையை பிடித்து "நீ இப்போ என்ன எந்த விதத்துல என்ன காப்பாத்துன..பிரண்ட்டா இல்லை என் ஒய்பா, " என்றவனை பார்த்து மெல்லிய புன்னகையை வீசியவள் அவனை கட்டி கொண்டாள்..

"உன் பிரண்ட் உன் லவர் உன் ஒய்ப்.. ஏனா நான் உன்னை காதலிக்கிறேன் அபி.." என்றாள் அவள் கண்ணீருக்கிடையில்.

அவன் ஒரு நிமிடம் இன்பத்தில் உறைந்தவன் அவன் காண்பது கனவா நிஜமா என ஆச்சர்யத்தில் நின்றிருந்தான் அவளும் அவனை காதலிப்பதை எண்ணி..

அவனும் அவளை கட்டி கொண்டான் இருக்கமுடன்..

அவளை அணைத்து கொண்டு நின்றவன் கண்களில் இருந்து கண்ணீர் சிந்த அவர்கள் இருவரும் இதற்கு முன்பிலிருந்து எப்படி எல்லாம் சண்டையிட்டு கொண்டனர் என்பதை நினைத்து சிரித்து கொண்டனர் மனதிற்குள்..

அவள் முகத்தை தன் கரங்களில் பற்றி அவள் கண்களை நோக்கியவன் "ஐ லவ் யூ டி பிசாசு இந்த அழகான பிசாசு மேல நானும் காதலில் விழுந்துட்டேன்" எனவும்

அவள் உதட்டை சுருக்கியவள் அவனை பொய்யாக அடிக்க அவன் மீண்டும் அவளை இழுத்து அணைத்து கொண்டான்.

திடீரென அவர்கள் அருகில் ஒரு உருவம் வந்து நிற்க்க..

அவர்கள் அணைப்பில் இருந்து வெளியில் வந்தவர்கள் அந்த நபரை பார்த்த இருவரும் அதிர்ச்சியுடன் நின்றனர்..

"இங்க என்ன நடக்குது" என்றாள் நிக்கிதா...

"நிக்கிதா அது வந்து..."என ஜானவி கூறும் முன் "ஜானவி உனக்கு தான் அபிநயன பிடிக்கவே பிடிக்காதே.. நீ எப்படி இங்க அதுவும் அவன ஹக் பண்ணிக்கிட்டு நிக்கிற" என்றவளை பார்த்த ஜானவி பெருமூச்சு விட்டவள்
"நிக்கிதா..அது வந்து சாரி நிக்கிதா அபிநயன் என் ஹஸ்பண்ட்.." எனவும் விழிவிரித்து அதிர்ச்சி அடைந்தாள் நிக்கிதா..

"ஆமாம் நிக்கிதா" என்ற ஜானவி அவர்களுக்கு திருமணமானதையும் இதுவரை நடந்தத்தையும் கூற அவளோ அதிர்ச்சி அடைந்தவள் "ஏய் ஜானவி அந்த விக்னேஷ் கொலை பண்ற அளவுக்கு போயிருக்கான் அவனையெல்லாம் சும்மா விட கூடாது பிரின்சிபல் கிட்ட கம்பளைண்ட் பண்ணனும் வாங்க இப்போவே போகலாம்" என்றழைத்தாள் அவள்..

"நிக்கிதா.. ஸ்டாப்" நிக்கிதாவை தடுத்த அபிநயன் "நோ நிக்கிதா இப்போ போய் நம்ம அவனுக்கு எதிரா கம்பளைண்ட் பண்ணா அவனால ஜானவிக்கு தான் ஏதாவது ப்ரோப்லேம் வரும் வேண்டாம்..ப்ளீஸ்" என்க...

"இல்லை அபி எனக்கு எந்த பிரச்சனையும் வராது நம்ம கம்பளைண்ட் கொடுக்கலாம்" என்றாள் ஜானவியும் ...

"என்னால முடியாது ஜானவி.." என்றவனை பார்த்து நின்றவள் "அபி எனக்கு எந்த பிரச்சனையும் வராது.. நீ தான் என் கூடவே இருக்க போறல?.."

"என் கடைசி மூச்சு வரைக்கும் .." என்றவனின் வார்த்தையில் புன்னகை மலர்ந்தாள் ஜானவி.

"ஓகே பிரண்ட்ஸ் கேர்புள்ளா இருங்க.."

"ஓகே நிக்கி இந்த விஷயத்தை யாருகிட்டயும் சொல்லாத ப்ளீஸ்." அபிநயன் கூறவும்

"டோன்ட் வரி ப்ரண்ட்ஸ் நான் யாரு கிட்டயும் சொல்லமாட்டேன்" என்றவள் அங்கிருந்து சென்று விட்டாள்..

ஜானவி அபிநயன் கையை பார்க்க லேசான காயம் ஏற்பட்டு ரத்தம் வழிந்து கொண்டிருந்தது..
"அபி ரத்தம் வருது பாரு வா நான் உனக்கு பஸ்ட் எய்ட் பண்றேன்" என்றவள் அக்கறையுடன் அவனை அங்கிருந்து அழைத்து கொண்டு நர்சிங் அறைக்கு சென்று விட்டாள்..

மறுபுறம் விக்னேஷ் அபிநயன் தன் வைத்த வலையில் இருந்து தப்பித்து விட்டான் என அறிந்தவன் கோபத்தில் கொந்தளித்து கொண்டிருந்தான்..

அவன் காயத்திற்கு மருந்து வைத்து கட்டு கட்டியவள் அவனை வீட்டிற்கு அழைக்க இருவரும் அங்கிருந்து கிளம்பினர்..

அபிநயன் அவன் இருசக்கர வாகனத்தில் அமர்ந்தவன் அதை ஸ்டார்ட் செய்ய ஜானவியோ தயங்கி கொண்டு நின்றிருந்தாள்.

இதுவரை அவர்கள் இருவரும் பைக்கில் எங்கேயும் சென்றதில்லை..

அபிநயன் அவள் தயக்கத்தை புரிந்து கொண்டவன் அவள் கையை பற்றி இழுக்க அவளோ அவன் மார்பில் வந்து விழுந்தாள்..

இருவரின் விழியும் நேருக்கு நேர் சந்தித்து கொண்டிருக்க அவனின் காதல்❤ பார்வையை உணர்ந்தவள் கண்ணத்தில் தாமரை மலர்ந்தன..

அவன் உதட்டால் அவள் தேகத்தை தீண்ட அவளோ அவன் சட்டையை இறுக பற்றி கொண்டு நின்றாள் வெட்கம் கொண்டு..

"எதுக்கு என் கூட வர தயங்குற மை டியர் ஒய்பி" அவள் செவியில் அவன் கிசுகிசுக்க அவளோ நாணம் கொண்டு நின்றவள் "அபி நம்ம ரெண்டு பேரும் பைக்ல போறத யாராவது பாத்தா என்ன நினைப்பாங்க.." என்றாள் மெல்லிய குரலில்.

"எனக்கு இனிமேல் அதப்பத்திலாம் கவலை இல்லை டைம் வேஸ்ட் பண்ணாம வந்து உட்காரு ஜானவி" என்றவனை பார்த்து தலையை அசைத்து விட்டு அவன் பின் சென்று அவன் தோள் மீது கையை வைத்து கொண்டு அமர்ந்தாள்.

அவனும் சிறு புன்னகையை சிந்தியவன் கண்ணாடியை அவள் முகம் தெரியும்படி திருப்பி வைத்து கொள்ள அகன்ற முத்துக்களை சிந்தினாள் ஜானவி..

அவனோ வண்டியை ஓட்ட தொடங்கிய சில நொடிகளில் வேகத்தை கூட்ட அவளோ அவன் இடையை இருக்கி பிடித்து கொண்டவள் அவனை நெருக்கமாக கட்டி கொண்டு அவனுடன் சென்றாள்..

இருவரும் வீட்டிற்கு சில
நிமிடங்களிலேயே சென்றடைந்தனர்..

ஜானவி பைக்கில் இருந்து இறங்கியவள் அபினயனுக்காக காத்திருக்க அவனும் கீழே இறங்கியவன் அவளை காதலுடன் பார்த்து கொண்டு நின்றான் சில நிமிடம்..

"உள்ளே போகலாம்" என்றவனை பார்த்து தலையை ஆட்டியவள் அவனுடன் உள்ளே சென்றாள் அவன் கையை பற்றி கொண்டு..
இருவரின் முகத்திலும் புன்னகை பூத்திருக்க..

பிரசாந்த் ஷேக்கர் இருவரும் நுழைவு அறையில் அமந்திருந்தவர்கள் தங்கள் பிள்ளைகளை ஒன்றாக பார்த்து அதிசயித்தனர்..அவர்கள் முடிவு தவறாகவில்லை என்பதை நினைத்து இருவரும் முகமலர்ந்தனர்.

ஜானவி அவள் தந்தை ஷேக்கரை கண்டவள் "அப்பா.." என அழைத்தவள் அவர் அருகில் ஓடி அவரை கட்டி கொண்டாள் அன்புடன்..

அவர் தன் மகளின் நெற்றியில் முத்தமிட்டவர் " நல்லாருக்கியா மா " என்று வினவ ஜானவி அபிநயனை பார்த்தவள் "ரொம்ப நல்லாருக்கேன் பா" என்றாள் முகமலர்ச்சியுடன்..

அபிநயனும் அவளை புன்னகை முகமாய் பார்த்து நின்றவன் ஷேக்கர் அருகில் சென்று அவர் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கி கொண்டான்...
"எப்படி இருக்கீங்க அங்கிள் உங்க ஹெல்த் எப்படி இருக்கு" என்றவன் வார்த்தையில் ஆச்சர்யம் அடைந்தவள் அவள் தன் தந்தையிடம் இதை கேட்க மறந்திருந்தாள் என்பதை அவன் நினைவு படுத்திவிட்டான்.. அபிநயன் அவள் வாழ்க்கையில் கிடைத்ததை நினைத்து மகிழ்ச்சி பூத்தாள் அவள்..

"நான் இப்போ ரொம்பவே நல்லாஇருக்கேன்..." என்றார் ஷேக்கர் புன்னகை குறையாமல்.

ஷேக்கர் அபிநயனின் காயத்தை பார்த்தவர் "அபிநயன் என்னப்பா இது கையில காயம்" என வினவவும்

அபிநயன் ஜானவி இருவரும் திருதிருவென முழித்து கொண்டு நிற்க்க. "அது... வந்து" என வார்த்தைகளை இழுத்தான் அபிநயன்..

அபிநயனை நினைத்து பயந்தவள் "இது எல்லாமே என்னால தான்" என்றாள் சத்தமாக...ஒவ்வொன்றாக அவர்கள் பெற்றோரிடம் அவள் கூற அபிநயனோ அவளை முறைத்து கொண்டு நின்றான்..

"என்ன சொல்ற ஜானவி இதெல்லாம் உண்மையா" என்றார் பிரசாந்த் அதிர்ச்சியுடன்..

"அப்பா அதெல்லாம் ஒன்னு இல்லை அவ ஏதோ ஒளறிட்டுருக்கா" என்றான் அபிநயன்...

"மாமா அவன் உங்க கிட்ட இதெல்லாம் மறைக்கணும் நினைக்கிறான்..நான் எல்லாத்தையும் உங்க கிட்ட சொல்றேன்" என்றவள் "ஐ யம் சாரி அபி...என்னால் இந்த விஷயத்துல ரிஸ்க் எடுக்க முடியாது அபி எனக்கு உன் உயிர் தான் முக்கியம் மாமாவால மட்டும் தான் நமக்கு உதவ முடியும்" என்றவளை சோகமாக பார்த்து கொண்டு நின்றான் அபிநயன்.

"ஜானவி நீ சொல்லுடா என்ன நடந்ததுனு?.." என்ற பிரசாந்த்தை பார்த்தவள் கல்லூரியில் நடந்த அனைத்தையும் கூறியவள் லோக்கல் எம்பி மகன் விக்னேஷ் அபிநயனை கொலை செய்ய பார்த்தது முதல் அனைத்தையும் கூறி முடித்தாள்..

இதை அனைத்தையும் கேட்டு கொண்டிருந்த பிரசாந்த் ஷேக்கர் இருவரும் அதிர்ச்சி அடைந்தவர்கள் "என்னது இவ்வளவு நடந்துருக்கு நீங்க இதுவரைக்கும் எதுவுமே என் கிட்டு சொல்லல என்ன தைரியம் அவனுக்கு என் மகனையே கொள்ள நினைச்சிருப்பான்.." என்ற பிரசாந்த் சத்தமாக கத்தியவர் சரி அதெல்லாம் நான் பாத்துக்குறேன் நீங்க உங்க ரூம்க்கு போக என்று கூறவும் அபிநயன் ஜானவி இருவரும் அவர்கள் அறைக்கு சென்றனர்..

ஷேகர் அவர் அறைக்கு சென்று விட பிரசாத் சில நொடிகளில் கோபமுடன் வெளியில் கிளம்பி சென்று விட்டார்..

அறைக்கு சென்ற அபிநயன் கதவை தாழ் போட்டவன் அவள் கையை பிடித்து "ஜானவி நீ எதுக்கு இதெல்லாம் அப்பா கிட்ட சொன்ன.. இப்போ பாரு அவர் எவ்வளவு கவலைபடுறாருனு" என்றான் முகத்தை சுருக்கி கோபமுடன்..

ஜானவி அவன் முகத்தை தன் கரங்களில் ஏந்தியவள் "ப்ளீஸ் அபி என்ன தப்பா நினைக்காத எனக்கு தெரியும் மாமா இத நினச்சு கொஞ்ச நாள் கவலை படுவாருனு.. ஆனால் உனக்கு ஏதாவது ஒன்னு ஆகிருச்சுனா என்னுடைய நிலைமை என்ன ஆகும்னு கொஞ்சம் யோசிச்சு பாரு..நான் அவருக்கு என்ன பதில் சொல்லுவேன்... அபி நீ இல்லாம என்னால கஷ்ட பட முடியாது டா ப்ளீஸ்.நான் நினைக்கிறேன் மாமா சீக்கிரம் இந்த பிரச்சனைய சரி பண்ணிடுவாருனு.."என்றவள் அவன் கரம் பற்றி "என்ன மன்னிச்சுரு அபி" என்றாள் கெஞ்சலாக..

அபிநயன் அவள் மீது புன்னகையை வீசியவன் அவளை இழுத்து அணைத்து கொண்டான் இறுக்கமாக...

சில நிமிடங்களுக்கு பின்

ஜானவி கட்டிலில் அமந்திருந்து புத்தகத்தை படித்து கொண்டிருக்க முகத்தை கழுவி கொண்டு வெளியில் வந்தவன் அவளை நோக்கிய கணம் அவன் இதழ் சற்றே மலர்ந்தது..

முகத்தை துடைத்து கொண்டு அவனும் அவள் அருகில் சென்று அமர்ந்தவன் அவள் மடியில் தலை சாய அவளோ ஆச்சர்யமுடன் அவள் கணவனை நோக்கினாள்.

"அபி..." என அவள் சினுங்க....

"ஜானவி எனக்கு ரொம்ப போர் அடிக்குது என் கூட கொஞ்ச நேரம் பேசலாம்ல இந்த புக்க அப்புறம் படிச்சிக்க வேண்டியது தான.." என்றான் சலிப்பு நிறைந்த குரலில்.

"அபி இந்த சேப்டர்ல இது தான் லாஸ்ட் பேஜ் பை செகண்ட்.. ப்ளீஸ்" என அவள் கெஞ்ச ஓகே என அவனும் தலையை அசைத்தான்..

புத்தகத்தை படித்து கொண்டே அவன் தலை முடியை வருடி கொண்டிருந்தாள் ஜானவி..

அவள் செயலில் மகிழ்ந்தவன் புத்தகத்தின் இடையில் இருந்த இடைவெளியில் அவள் கண்களையே நோக்கி கொண்டிருந்தவன் அவள் அழகில் மயங்கி இருக்க..

அவன் கைபேசி சத்தமாக சினுங்க சட்டென படுக்கையில் இருந்து எழுந்து அமர்ந்தவன் எரிச்சல் குரலில்! "யாரு தான் எனக்கு போன் பண்றங்களோ" என்றவன் கைபேசி அழைப்பை ஏற்றான்..

"ஹலோ.."...

தொடரும்...

Bạn đang đọc truyện trên: Truyen2U.Pro