தாரகை 3-4

Màu nền
Font chữ
Font size
Chiều cao dòng

இருவரின் காதலின் ஸ்பரிசதிர்கிடையில் இருவரும் கண்ணீருடன் நின்று தங்கள் கடந்த கால நிகழ்வுகளில் நிலைத்திருந்தனர்..

அந்த நிமிடம் கதவு தட்டும் சத்தம் கேட்கவும் சட்டென தங்கள் முத்ததிலிருந்து வெளியில் வந்த இருவரும், அவர்கள் கண்ணீரை துடைத்து விட்டு ஒருவரை ஒருவர் பார்த்து கொண்டு நின்றனர்...

"ஆர் யூ ஓகே" என அவன் அவள் செவியில் மெல்லிய குரலில் வினவ "ம்ம்" என தலைசைத்தவள் யாரு வந்துருக்காங்கன்னு பாரு எனவும்..

அவன் தன்னவளின் நெற்றியில் லேசாக இழழை ஒற்றி எடுத்தவன் பின் "எஸ் கமின்" என குரல் கொடுக்க அடுத்த நிமிடமே உள்ளே வந்தார் மானேஜர்....

"சார் அந்த ஒர்க்க முடிச்சிட்டேன்..இதோ அந்த ப்ராஜெக்ட் பைல்" அவனிடம் பணிவுடன் நிட்டினார் மானேஜர்..

அவரை சற்றே நிமிர்ந்து பார்த்த அபிநயன்  "மிஸ்டர் ரமேஷ் இனிமேல் இவங்க தான் என்னுடைய நியூ பிஏ....இவங்கள நம்ம ஸ்டாப்ஸ்குலாம் இன்ட்ரோடியூஸ் பண்ணுங்க..ப்ரீத்தி கிட்ட நான் பேசிக்கிறேன் ..." எனவும்

அபிநயன் பேச்சிற்கு மறுவார்த்தை பேசாத மானேஜரும் "ஓகே சார்.." என்க...

"ஒன் ஹவர் ல இவங்களோட கேபின் என் ரூம்ல என் டேபிள்க்கு ஆப்போசிட்ல இருக்கனும்..ஓகே இப்போ நீங்க போகலாம்.." என அபிநயன் இறுகிய குரலில் கூறி நின்றான்...

"ஓகே சார்..என்றவர் பணிவுடன் வாங்க மேம்" என்று ஜானவியை அழைக்கவும்  சரி என தலையை அசைத்தாள் ஜானவி...

அவர் முன்னே செல்ல ஜானவி பின்னால் சென்றவள் வெளியில் செல்வதற்கு முன் தன் தலையை திருப்பி தன்னவனை பார்க்கவும் அவன் சிரித்த முகமாய் நின்று கொண்டிருந்தான்...

ஜானவியும் புன்னகை முகமாய்  அங்கிருந்து செல்ல அபிநயன் சென்று தன் இருக்கையில் அமர்ந்து  கொண்டான்...

நீண்ட நாட்களுக்கு பின் தன் இருக்கையில் நிம்மதியுடன் அமர்ந்தவன் டேபிள் மேல் இருந்த அவளின் புகைப்படத்தை புன்முறுவலுடன் பார்த்தான் ஒரு நிமிடம் "உன்னை இனிமே இந்த போட்டோல தான் பாக்கணும்ன்ற எந்த அவசியமும் எனக்கு இல்லை.. ஏன்னா நீ தான் இனிமேல் எப்பவும் என் கூடவே இருக்கப்போறியே ஜானு.." என்று மனதிற்குள் மகிழ்ந்தவன் அருகில் இருந்த டெலிப்போனை கையில் எடுத்து ப்ரீத்தியை அவன் கேபினுக்கு வருமாறு அழைக்கவும் அவன் அழைத்த அடுத்த நிமிடமிடமே பறந்து ஓடி வந்து அவன் முன் நின்றாள் அவள்....

"பாஸ் .." என்று அவள் அவனை நோக்கவும்...

அவன் அவளை சற்று நிமிர்ந்து பார்த்தவன் "மிஸ் ப்ரீத்தி.. இன்னையிலருந்து நான் உங்கள மானேஜர்க்கு பிஏ வா மாத்திட்டேன்...நான் எனக்கு வேற ஒரு  பிஏ வ அப்பாய்ன்ட் பண்ணீட்டேன்.." என்றான் அவன் சிறிதும் தயக்கம் காட்டாமல்...

அவன் சொல்லில் சற்றே அதிர்ந்தவள் "சார்... " என அதிர்ச்சியுடன் அவனை பார்த்து "சார் நான் ஏதாவது தப்பு செஞ்சிட்டேனா... எதுக்கு சார் என் வேலைய மாத்திட்டிங்க.."புரியாமல் வினவியவளின் விழியில் நீர் கோர்த்தது...

"மிஸ் ப்ரீத்தி.. வேலை மட்டும் தான் மாறுது.. பட் உங்க சேலரி சேம் தான்..டோன்ட் ஒர்ரி..நீங்க உங்க ரெகுலர் கேபின்ல இருந்தே ஒர்க்க கன்டினியூ பண்ணலாம்.. டவுட் ஏதாவது இருந்தாளும் மானேஜர் கிட்ட கேட்டு கிளியர் பண்ணிக்கோங்க.. இப்போ நீங்க போகலாம்" என்றான் அபிநயன் அவனது இரும்பு குரலில்..

எந்த கேள்வியும் அவனை எதிர்த்து கேட்கமுடியாதவள் பொறுமையான குரலில் "தேங்க் யூ சார்" என்றவள் கண்ணீருடன் அங்கிருந்து சென்று விட்டாள்....

மறுபுறம் மானேஜர் ஜானவியை அனைத்து ஸ்டாப்ஸ்களுக்கும் அறிமுகப் படுத்த அழைத்து சென்றவர் "குட் மார்னிங் ஸ்டாப்ஸ்.." என்று உரக்க குரலில் கூறவும் அனைவரும் ஒரே முகமாக அவரை நோக்கி "ஹலோ சார்...."என்றனர் அவர்களும்..

"ஸ்டாப்ஸ்...இவங்க தான் நம்ம ஆபீஸ்ல புதுசா ஜாயின் பண்ணிருக்க நியூ ஸ்டாப்.. நேம் மிஸ் ஜானவி..." என்று அவளை அறிமுகப்படுத்தினார் ரமேஷ்....

"ஒஹ்ஹஹ்....." என்ற அனைவரும் ஜானவியை புன்னகையுடன் பார்க்க...

"ஹாய்" என்றாள் ஜானவி இதழில் புன்முறுவல் பூத்தவளாக....

அவளின் வார்த்தைக்கு மறுமொழியாக மற்றவர்களும் "ஹாய்.." என்க...

"நான் தான் சொன்னேன்ல" என லலிதா பொறுமையாக அவள் நண்பர்களிடம் கூறினாள்..

"ஹேய்... சூப்பர்..அவ சிரிச்சா இன்னும் ரொம்ப அழகா இருக்காளே டா ..." என மெய் மறந்து சிரித்தான் பிரபாகரன்..

"ரொம்ப சந்தோசப்படாத" என்ற ஷாமிலா முகத்தை திருப்பிகொண்டு நின்றாள் கோபமுடன்....

மானேஜர், " அதோட முக்கியமான விஷயம்.. இனிமேல் இவங்க தான் நம்ம அபிநயன் சேரோட பர்சனல் அசிஸ்டன்ட்...ப்ரீத்தி இல்லை.."

என்ன என அதிர்ச்சியடைந்த அனைவரும் ஒருவரை ஒருவர் பார்த்து ஏன் என குழம்பி நின்றனர் அந்த அலுவலகத்தின் பணியாளர்கள்....

யாருக்கும் தெரியாமல் அனைவரையும் கண்காணிக்க தொடங்கினாள் ஜானவி அந்த நிமிடம் ஒரு முதலாளியாக அவ்விடத்தில் நின்று...

அங்கிருந்த ஒரு பணியாளர் மட்டும் கைபேசியில் கண்களை திளைத்திருக்க ஜானவி சற்று விழி குறுக்கினாள்...

இங்க எல்லோரும் இவ்ளோ ஷாக் ஆகுறாங்க... இவன் மட்டும் கேஷுவலா மொபைல பாத்துகிட்டுருக்கான் அதுவும் ஆபிஸ் டைம்ல என்று மனதிற்குள் சந்தேகித்தவள் அதை வெளி காட்டி கொள்ள வில்லை...

தன் அறையில் அமர்ந்திருந்த அபிநயன் சிசிடிவி கேமராவின் மூலம் அங்கு நடப்பதை பார்த்து கொண்டிருந்தான் புன்னகையுடன்..

இதுவரை அவனிடம் வேலை செய்பவர்களை பற்றி எதுவும் அறிந்து கொள்ளாதவன் அன்று தான் அவர்களின் முகத்தை முழுவதும் கண்டான்...

தன்னவளின் முகத்தில் உள்ள மகிழ்ச்சியை அவன் முகத்தில் வெளிகாட்டியவன் "என் முகத்துல இந்த சிரிப்பை நீ மறுபடியும் கொண்டு வந்துட்ட ஜானு நான் இந்த மாதிரி சந்தோசமா இருந்தே பல நாட்கள் ஆகுது ஜானு " என உள்ளம் மகிழ்ந்தான் அபிநயன்.

மானேஜர், "ஓகே நீங்க உங்க வேலைய கன்டின்யு பண்ணுங்க" என கூறியவர் திரும்பி ஜானவியிடம் "தேங்க் யூ மேம் நீங்க போகலாம்" எனவும்

"ஒன் மினிட்..." என்றாள் ஜானவி....

அவர் அவளை நோக்கி "மேம் சொல்லுங்க மேம்.." என்று வினவ
ஜானவியோ , "இல்லை சார் அது... என்று முதலில் தயங்கியவள் அபிநயன் சார் எப்படி?.. என்ன மாதிரியான கேரக்டர்...ஏன் கேக்குறேன்னா இது என் பஸ்ட் டே.. அவர பத்தி தெரிஞ்சு வெச்சுகிட்டா ஒர்க்ல யூஸ் புல்லா இருக்கும்ல அதான்.." என்று சமாளித்தாள் ஜானவி..

"ஓ மேம் சார் ரொம்ப கோபக்காரர், யாருகிட்டயும் அவ்வளவு சீக்கிரம் பேசிட மாட்டாரு... எல்லோரும் இந்த ஆபிஸ்ல பயப்படுறது சார்க்கு மட்டும் தான்... அவரோட
கேரக்ட்டர் அப்படி.. அவர் இது வரைக்கும் சிரிச்சு கூட நாங்க யாரும் பாத்ததில்லை..வேலைனா அவருக்கு பெர்பேக்டா இருக்கனும் சின்ன தா மிஸ்டேக் ஆகிட்டாலும் அவங்கள வேலைய விட்டு தூக்க கொஞ்சமும் யோசிக்க மாட்டாரு.."

"ஓ..." என பாவமாக முகத்தை வைத்து கொண்டவள் அவன பத்தி முழுசா தெரிஞ்சு வெச்சவ நானா மட்டும் தான் இருக்க முடியும்...என் அபி கோபப்பட முடியாத ஒரே ஆளும் நான் தான்....என சிரித்து கொண்டாள்  ஜானவி....

"மேம் அதுக்காக அவர் மோசமானவர்லாம் இல்லை.. சார் ரொம்ப நல்லவர் .. ஹி இஸ் சோ ஜெனியூன் பேர்சன்.. பெண்கள எந்த விதத்துலயும் எப்பவும் தவறான பார்வை பார்க்க மாட்டாரு.. ஆபிஸ்லயும் சரி வெளியவும்...பெண்களுக்கு ரொம்பவே மரியாதை கொடுக்க தெரிஞ்சவர்..ரொம்ப நல்லவர்....

மானேஜர் வார்த்தைகளை கேட்டு உள்ளம் குளிர்ந்தவள் என் அபி எப்பவும் பெண்களுக்கு மரியாதை கொடுக்குறவன் தான். ..இதுவரைக்கும் அவனோட பார்வை எந்த பொண்ணு மேலயும் தப்பா விழுந்ததில்ல.. அவன் என்ன காதலிக்க ஆரம்பிச்ச அந்த நிமிஷத்துலருந்து இப்போ வரைக்கும் நான் தான் என் அபிக்கு எல்லாமே..அவன் என்னை அவ்வளவு காதலிக்கிறான் என மனதிற்குள் எண்ணி கன்னம் சிவந்தாள் அவள்...

அபிநயன் அவன் அறையில் கேபின் அமைப்பத்துடன் வேலை ஆட்களை வைத்து சில வசதிகளையும் செய்து முடித்தான்..

சில நிமிடங்களுக்கு பின் அவன் அறையில் அமர்ந்து ஜானவியை கண் காணித்து கொண்டிருந்தவனுக்கு சிறிது எரிச்சல் தோன்றியது.."எவ்வளவு நேரம் தான் பேசிட்டுருப்பா.." என்றவன் தன்னவளுக்கு கைபேசியில் அழைப்பு விடுத்தான்.

"சரிங்க மேம் நீங்க  போய்ட்டு உங்க ஒர்க்க ஸ்டார்ட் பண்ணுங்க ஆல் தி பெஸ்ட்" என்ற மானேஜர் அங்கிருந்து சென்று விடவும் ஜானவியின் செல்பேசி லேசாக சினுங்கியது..

அவள் அதை எடுத்து பார்க்க தன்னவன் என்று அறிந்தவள் அவனது அழைப்பை ஏற்காமல் அவன் கேபின் வெளியிலிருந்து கதவை தட்ட அடுத்த நிமிடம் "கம் இன்" என்று குரல் கொடுத்தான் அபிநயன்..

ப்ரீத்தி மறுபுறம் அவள் இருக்கையில் அமர்ந்திருந்தவள் அவள் பணி மாற்றத்தை எண்ணி அழுது கொண்டிருந்தாள்...

"என்ன ஆச்சு இந்த பாஸ்க்கு.. திடீர்னு ஏன் என் வேலைய மாத்தணும்.. நான் என்ன தப்பு பண்ணேன்... என்னால பாஸ் கிட்ட எதிர்த்து எந்த கேள்வியும் கேக்க முடியல.. என்ன காரணம் அவர் என்ன மாத்தினதுக்கு..." என்று அவள் அழுது கொண்டிருக்க...

"ஏய் என்ன ஆச்சு.. ஏன் அபிநயன் சார் ப்ரீத்திய மாத்திட்டாரு... அவ என்ன பண்ணா" என திவ்யா அவள் நண்பர்களிடம் விசாரித்தாள்..

"எங்களுக்கும் தெரியல.. ஏன் ப்ரீத்திய மாத்திட்டு அந்த பொண்ண பிஏ வா போடணும்.. அதுவும் அவர் கேபின்லயே அந்த பொண்ணுக்கும் கேபின்.." என்றாள் பிரவீனா..

"ச்ச.. நான் கூட நம்ம கூட தான் ஒர்க் பண்ண போறான்னு நினைச்சேன்.. பட் அவள் சாருக்கு பிஏ அவர் ரூம்லயே ஒர்க் பண்ணுவா.. என்னால அவள பாக்கவே முடியாது" என சோகமாக புலம்பினான் பிரபா..

"இதுக்கு தான் ஓவரா ஆடக்கூடாது" என அவனை கிண்டலடித்தாள் ஷாமிலா..

"இருந்தாலும் அந்த பொண்ணு பாவம்.. நம்மளால கொஞ்சம் நேரம் கூட  சாரோட கோவத்தை தாங்க முடியாது... ஆனால் அவ இனிமேல் ஒரு டே முழுக்க அவர் கிட்ட கஷ்ட பட போறா..அவர் சிரிக்க கூட மாட்டாரு பாவம் தான் அவ" என்று கூறிய லலிதா சரி சரி எல்லோரும் வேலைய பாருங்க என்றபடி அவள் பணியை தொடங்கினாள்...

ஜானவி அபிநயனின் அறையின் உள்ளே நுழைந்ததும் அவள் எதிர்பாரா நேரம் அவளை பின்னால் இருந்து அணைத்து கொண்டான் அவளின் அவன்..

அவள் லேசாக உதட்டில் முத்துக்களை உதிர்த்தவளோ அபி விடு என்று முனகவும்...

தொடரும்...

Bạn đang đọc truyện trên: Truyen2U.Pro