17

Màu nền
Font chữ
Font size
Chiều cao dòng

அவன் கூறியது போலவே அங்குள்ள ஒரு கேந்திரிய வித்யாலயா பள்ளியில் இருவரும் சேர்ந்தனர் .அதிதி அவனை விட்டு நகரமாட்டாள் என்பதால் hostelலில் தங்காமல் சாரு அவள் பேரில் வாங்கி இருந்த வீட்டில் தங்கினர் .வாசுகி அவர்களின் வீட்டிற்கு பக்கத்துக்கு வீட்டிற்கு மாறி போனால் .அவள் உணவு மட்டும் சமைத்து கொடுப்பதோடு சரி அதிதியை எழுப்புவது முதல் அவளுக்கு சாரு தலை பின்னுவதை பார்த்து வைத்திருந்தவன் அவளுக்கு தலை பின்னுவது ,பாடம் சொல்லி கொடுப்பது ,கதை வாசிப்பது ,உணவூட்டுவது ,உறங்க வைப்பது என்று அவளுக்கு ஓர் அன்னையாகவே மாறி போனான் வித்யுத் .

அதிதியை சாரு விருப்பப்பட்டது போலவே தைரியமாய் வளர்க்க முற்பட்டவன் அவளுக்கு நீதி கதைகளையும் வீர பெண்களின் சரித்திரத்தையும் கற்று கொடுத்தவன் அவனுக்கு football பயிற்சி கொடுக்கும் இடத்திலேயே அவளுக்கு கராத்தே பயிற்சியை ஏற்பாடு செய்தான் அவளுடன் தானும் கற்றான் .அதிதி எதையும் எதிர்க்கும் வலிமையுடன் பெண்ணின் உருவிலும் ஆணின் தைரியத்துடனும் வளர்ந்தால் அவளுக்கு வயது 14ஆகும் பொழுது அவளிடம் அனைத்து உண்மையையும் கூறினான் அவன் அப்பொழுது வாசுகியின் கணவனுக்கு வெளிநாட்டில் வேலை உயர்வு வர மனமே இல்லாமல் அவர்களை விட்டு விட்டு சென்றால்.

அவன் football மிகவும் திறமையாக விளையாட நேஷனல் லெவல் ப்லயேரானான் அவனிற்கு ஆதலால் படிப்பு செலவு ஒன்றும் இல்லை அனைத்தையும் அவன் பள்ளியே ஏற்று கொண்டது.12thil நல்ல மதிப்பெண் எடுத்தவன் அய்ய்ம்ஸ் தேர்வு எழுதி அம்மாநிலத்திலேயே முதல் மாணவனாய் தேர்ச்சி பெற்றவன் மருத்துவம் படிக்க துவங்கினான் . 18 வயதானதும் அவளின் guardianaaga அவன் மாறினான் .

அவள் 14 வயதில் வயதிற்கு வர அன்று தன் அன்னையை நினைத்து மிகவும் வருந்தினான் .அவன் கண்ணீரை துடைத்த அதிதி தானாய் தோழிகளிடம் இருந்து அறிந்ததை வைத்து அவனிடம் தேவை ஆனதை வாங்க கூறியவள் அவளே அனைத்தையும் பார்த்து கொண்டால் .அண்ணனும் தங்கையும் ஒருவர் அன்றி இன்னொருவர் இல்லை எனும் நிலையில் வளர்ந்தனர்.

அதிதி இப்பொழுது டெல்லியின் school of planning and architectureil முதலாமாண்டு கட்டிடவியல் படித்துக் கொண்டிருந்தாள்.

இவ்வாறு தெளிந்த நீரோடை என சென்றஅவர்கள் வாழ்வை மாற்றுவதற்கு அமைந்தது அவளின் விபத்து . கல்லூரி முடிந்து வெளியே வந்த அதிதி போனில் "டேய்ய் அண்ணா எங்கடா இருக்க ?"என்றாள்

வித்யுத் "அதிதிமா அப்டியே உன் கண்ண தெறந்து முன்னாடி பாரு பாப்போம் "என்றான் அவள் முன்னே பார்க்க அவனோ சாலையின் அந்த புறம் தன் வாகனத்துடன் நின்றிருந்தான் "அண்ணா"என்று சிரித்த முகமாய் சாலையை கடந்தவள் தாறுமாறாய் ஒட்டப்பட்ட ஒரு மகிழ்வுந்து அடித்து தூக்க அந்த இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் அவன் கண்முன் விழுந்தாள் .அவனின் "அதிதிஈஈ"என்ற கூவலில் அந்த இடமே அதிர்ந்தது .................

ரத்த வெள்ளத்தில் கிடந்தவளை நோக்கி பாய்ந்து சென்றவன் தன் கரங்களில் தூக்கி கொண்டு அருகில் இருக்கும் மருத்துவமனைக்கு சென்றான் .அங்கே உள்ளே அனுமதிக்கப்பட்ட அதிதிக்கு தீவிர சிகிச்சை நடக்க நேரம் போனதே தெரியாமல் அதே இடத்தில மருத்துவரின் வருகைக்காக கிட்ட தட்ட 5 மணி நேரமாய் நின்றுகொண்டே இருந்தான்.

வெளியே வந்த மருத்துவரிடம் விரைந்தவன் "டாக்டர் என் தங்கச்சிக்கு என்னாச்சு is she fine .பின் மண்டைல அடிபட்டருந்துச்சு பிளட் லாஸ் வேற ஜாஸ்தியா இருந்துச்சு .trauma எதுவும் ஆகலேயே ?"என்று அவன் ஹிந்தியில் வினவ

அவனை பார்த்த மருத்துவர் "சாரி சார் உங்க தங்கச்சிக்கு ரொம்ப பலமா பின் மண்டைல அடிபற்றுக்கு.ஆர் யு எ டாக்டர் ?"என்று ஹிந்தியில் கூற

அவனோ "studying 4th இயர்"என்றான்

உடனே அவர்"ஓகே skull fracture ஆய்ருக்கு அதுனால RAS அஃபக்ட் ஆய்ருக்கு"என்க

அவன் நடுங்கும் குரலில்"யு mean ஷி இஸ் in கோமா ?"என்க

அவரோ மெலிதாய் தலை அசைத்தவர் "கிரிட்டிகள் தான் ஆனா முழிக்கவே மாட்டாங்கன்னு னு சொல்ல முடியாது .நாட்கள் ஆகலாம் ,மாதம் ஆகலாம் ,வருடங்கள் கூட ஆகலாம் .நம்பிக்கை கைவிடராம அவங்கள்ட மோட்டிவேஷனல்லாஹ் பேசுங்க "என்றவர் நீங்க விருப்பப்பட்டா வீட்டுல வச்சு கூட பாத்துக்கலாம் வித் ப்ரொபேர் பாசிலிட்டிஸ்.என்க அவனும் அதை ஆமோதித்தான் .

அவன் கல்லூரியில் இருந்து 1மாதம் விடுப்பு எடுத்தான் .அவளை வீட்டிற்கு கொண்டு வந்தான் .அவளுக்கு அனைத்தையும் அவனே செய்தான் .பேச வேண்டும் என்று ஒவ்வொரு முறையும் அருகே செல்வான் ஆனால் ஓயாமல் பேசி அவனுடன் சண்டை இழுத்து அண்ணா அண்ணா என்று காலையில் இருந்து இரவு வரை தன் பின்னே சுற்றி கொண்டிருந்த தான் குழந்தையாய் வளர்த்த தன் தங்கையை அந்நிலையில் கண்டவனுக்கு கண்ணீர் அன்றி வேறேதும் வராது .

தன்னுள்ளே மேலும் உறைந்து போனான் வித்யுத் .ஒரு நாள் அவளுக்கு உடை மாற்றி விட்டு அவன் சமைத்து கொண்டிருக்க வீட்டு கதவை யாரோ தட்டும் சத்தம் கேட்டது .பால்காரன் என்று நினைத்து திறந்தவன் முதலில் கண்டது 6வருடத்திற்கு முன் தன்னை விட்டு சென்ற தன் தந்தையையும் அவர் அருகில் திமிரான பாவனையுடன் நின்றிருந்த ரம்யாவயும் தான் .

ரத்த நாளங்கள் கொப்பளிக்க நின்றிருந்தவன் வீட்டிற்கு வந்தவரை வெளியே அனுப்ப கூடாது என்ற மனிதாபிமானத்தில் வா என்று கூட கூறாமல் உள்ளே செல்ல வழி விட்டு நின்றான்.

விஷ்வா அதிகம் மாறி இருந்தான் ஆங்காங்கே நரைத்த தலை முடி ,கண்ணை சுற்றி கருவளையம் ,சற்றே மெலிந்த தோற்றமாய் இருந்தான் .ஆனால் அவனை கண்ட வித்யுதிற்கு தன் தாயின் பிணம் தான் நினைவிற்கு வந்தது அவர்கள் உள்ளே சென்றதும் அமர அவன் முன் வந்த வித்யுத்தை நோக்கிய விஷ்வா "எப்படி இருக்க வித்யுத் ?"என்க

அவனோ "ஏன் சார் தெரிலயா உயிரோட தான் இருக்கேன் .இப்போ வரைக்கும் ரொம்ப்ப்பா நல்லாருக்கேன் சிலரை பாக்காம .இப்போ எதுக்கு இங்க வந்தீங்க சார்.இன்னும் எதையாவது மிச்சம் இருக்கா எங்கட்ட அத வாங்கிட்டு போக வந்தீங்களா?" என்க அவன் தன்னை சார் என்று அழைத்ததில் சற்றே வருத்தமுற்றவன் மேலும் பேசுமுன்

அவனை இடை வெட்டிய ரம்யா திமிராய் "என்னடா உன் அப்பண்ட இப்டி தான் பேசுவியா ?ஏதோ போனா போகுதே பொண்ணு அடிப்பற்றுக்கா இங்க இருந்து தனியா கஷ்டப்படுவியேனு கூட்டிட்டு போலாம்னு பெரிய மனசு பண்ணி வந்தா ரொம்ப துள்ளுற "என்க

அவள் பேச்சில் உள்ளிருந்த சாத்தான் வெளி வர "எது தனியா இருந்து கஷ்டப்படுறோம்னு கூட்டிட்டு போலாம்னு பெர்ர்ர்ர்ர்ய்ய்ய மனசு பண்ணி கூட்டிட்டு போக வந்தீங்களோ .11வயசு குழந்தய 15வயசு சின்ன பையன்ட எக்கேடோ கேட்டு போங்கன்னு தனியா விட்டுட்டு போகேல வராத பாசம் ,கட்டுன பொண்டாட்டி செத்து போன 16 ஆம் நாள் காரியம் பண்றதுக்குள்ள கல்யாணம் பண்ணிக்கிட்டு நின்னப்போ இல்லாத பாசம்,14 வயசுல அவ பெரிய மனிஷி ஆனபோ கூட நாதி இல்லாம அவளுக்கு என்னனு சொல்லவும் முடியாம நா தவிச்சப்போ வராத பாசம் இப்போ திடீர்னு மழைல மொளச்ச காலானா மொளச்சுச்சோ .என்ன எதுவும் சொத்து வரணும்னா நாங்க உங்க கூட ஒரு குறிப்பிட்ட காலத்துக்கு இருக்கணும்னு எங்க தாத்தா எதுவும் எழுதி வச்சுருக்காரா ?"என்க தாங்கள் வந்த நோக்கத்தை சரியாய் புரிந்து கொண்டவனின் புத்தி கூர்மையை பார்த்த ரம்யா ஆடியே தான் போனால்.

விஷ்வாவிற்கோ தன் மாமனாரின் பிரதி பிம்பத்தை தன் மனைவியின் முகஜாடையில் பார்ப்பதை போல் இருந்தது .சுதாரித்த ரம்யா"ஆமாடா நீங்க ரெண்டு பேரும் எங்க கூட 6 மாசமாச்சும் இருந்தா தான் சொத்துல எதுனாலும் விற்க முடியும்னு இருக்கு .இது நாள் வரைக்கும் எதையும் விற்க போகாததுனால அது தெரில இப்போ ஒரு நிலத்தை வித்தே ஆகணும் வர முடியுமா முடியாதா?என்று அவள் மிரட்டும் தோணியில் அவன் முன் நிற்க, அவளுக்கு சரிக்கு சமமாய் நின்றவன் அக்னி பார்வை பார்க்க அவள் நீட்டிய விரலை சடாலென்று பயத்தில் மடக்கி கொண்டால் .

அவள் முகத்திற்கு முன் கையை நீட்டியவன் "பொம்பளையாச்சேன்னு பாக்குறேன் இல்ல நீ பண்ண வேலைக்கெல்லாம் எந்நேரமோ உன்ன கொன்னு பொதச்சுருக்கணும் .எல்லாத்துக்கும் காரணம் நீதான்."என்றவன் அங்கே இருந்த விஷ்வாவின் முகத்தை நேராய் பார்க்காமல் "இப்போ கூட ஏதோ பாசத்துல வந்தீங்களோனு நெனச்சேன் மறுபடியும் உங்க புத்தியை காமிச்சுடீங்கள்ல .செய் உங்களுக்கு தான் பொறந்தேனு நெனைக்கேல அருவருப்பா இருக்கு நல்ல வேல உங்க முக ஜாடை எனக்கோ என் தங்கச்சிக்கோ வரல .வந்துருந்தா என் முகத்தை கண்ணாடில பாக்க நானே தயங்கிருப்பேன் .உங்க முகத்தை கூட பாக்க புடிக்கல போயிருங்க." என்க விஷ்வாவிற்கு கண்ணீர் கண்ணை மறைத்தது தலையை தாழ்த்தி கொண்டான் .

அவனை பார்த்து முறைத்த ரம்யா "நீ சொன்னணுலாம் போக முடியாது எங்கிட்ட கோர்ட் ஆர்டர் இருக்கு நீ வந்தே தான் ஆகணும் இலை போலீஸ் வச்சு கூட்டிட்டு போவோம் "என்றால் அவள் கையிலிருந்த orderai பார்த்தவன் ஏதும் செய்ய இயலாது அதை கசக்கி ஒரு மூளையில் இருந்தவன் கோபத்தை கட்டு படுத்த முடியாமல் அவன் அறைக்குள் சென்று கதவை ஓங்கி அறைந்தான் .

அவன் அன்னையின் புகைப்படம் அவன் படுக்கைக்கு எதிராய் பெரிதாக்கி மாட்டப்பட்டிருந்தது .அதில் மாலை மாட்டப்பட்டிருந்தது அதன் அருகில் சென்றவன் அதை கையால் வருடியவன் "ஏன்மா போன .பாருமா இப்போ கூட சொத்துக்காக தான் வந்துருக்காரு .இப்டி பட்ட ஒருத்தன எப்டிமா லவ் பண்ண .கோர்ட் orderoda வந்து நிக்கிறாங்க ஒரு தகப்பனா தன் புள்ளைங்களோட அவ சரி ஆகுறவரைக்கும் இருக்க ஆசைப்படுறதா கோர்ட்ல கேஸ் போட்டு மனிதாபிமான அடிப்படையில வாங்கிட்டாரேமா நாங்க அங்க அவரோட இருக்கணும்னு.அந்த மனுஷனை பாத்தாலே நீ செத்து போய் இருந்தது தானம்மா ஞாபகம் வருது .எப்டிமா 6 மாசம் இருப்பேன் அங்க போறதால என்னம்மா எங்களுக்கு நல்லது நடத்துற போது"

"என்றவன் அறிந்திருக்கவில்லை அவனுக்கும் அவன் தங்கைக்கும் அனைத்து நல்லதும் அங்கு சென்ற பின் தான் நடக்க போகிறதென்று .

கண்களை துடைத்தவன் அவளின் புகைப்படத்தில் அவள் முகத்தை நேராய் பார்த்தவன் "நா போணுமா இல்லையானு நீயே சொல்லுமா நீ என்ன சொன்னாலும் நா செய்றேன் என்று அவன் கண்களை மூட அவன் கையில் விழுந்தது அவள் புகைப்படத்தில் இருந்த மாலையிலிருந்து ஒரு ரோஜா .அதை அவள் கட்டளையாய் ஏற்றவன் கண்களை ஒரு முறை மூடி திறந்தவன் வெளியே சென்று தாங்கள் வருவதாய் கூறினான் .

பின் அங்கிருந்து இங்கே கல்லூரி மாறி வந்தான் .வாசுகியிடம் தெரிவித்த போது அவளுக்கு அவன் முடிவு சுத்தமாய் பிடிக்க வில்லை எனினும் அவன் ஒன்றை செய்தால் அதில் நிச்சயம் ஒரு விஷயம் இருக்கும் என்று நம்பியவள் அவனை அனுப்பி வைத்தால்.அதிதிக்கு அனைத்தும் அங்கே ஓரறையில் கொண்டு வந்து வைக்க பட்டது.அங்கே வந்ததும் ரம்யா அவனிடம் அவ்வப்போது ஏதாவது திமிரு தனமாய் பேசி வாங்கி கட்டி கொள்வதும் விஷ்வா அவனிடம் பாசமாய் பேச வருவதும் அவன் முகத்தை திருப்பி கொண்டு செல்வதும் வாடிக்கையானது.

ஒரு நாள் ரம்யா அதிதியின் முகத்தின் அருகில் தலையணை கொண்டு சென்றதை பார்த்தவன் அவளின் கையை பிடித்திழுத்து அவளை அடிக்க கையை ஓங்கி விட அதன் பின் முழுதாய் அரண்ட ரம்யா அதிதியின் அறை பக்கமே செல்லவில்லை .செல்லவில்லை என்பதை விட வித்யுத் அங்கேயே கண்கொத்தி பாம்பாய் காத்திருந்தான் .

அடுத்த நாள் உள்ளே வந்தவன் அங்கே ஹாலில் இருவரும் உள்ளே இருக்க அங்கே சென்றவன் விஷ்வாவின் முன் இருந்த மேஜையில் இரண்டு கட்டு பணத்தை வீசினான் .அவன் புரியாது பார்க்க "இங்க பாருங்க மிஸ்டர் விஷ்வா ஏதோ கோர்ட் ஆர்டெர்னால வேற வழி இல்லாம இங்க இருக்கேன் ஆனா இங்க இருக்குற வரைக்கும் என் தங்கச்சியும் நானும் உங்க செலவுல ஒரு நிமிஷம் கூட இருக்க விரும்பல இதுல 2 லட்சம் இருக்கு மாசா மாசம் இது உங்களுக்கு நாங்க இங்க இருக்குறவரைக்கும் அதாவது என் தங்கச்சிக்கு குணமாகுற வரைக்கும் நான் குடுத்துருவேன்.என் தங்கச்சி மேல நா இல்லாத நேரத்துல சிலர் கை வைக்க பாக்குறாங்க இனிமே எனக்கோ அவளுக்கோ ஒரு கீறல் விழுந்தா கூட அவுங்க ஜெய்ல்க்கு உள்ள போவாங்க" என்றவன் அவன் புரியாமல் பார்க்க கோர்ட்டில் அவன் வாங்கிய நோட்டீசய் அவன் முன் எறிந்தான் .

ரம்யா முழுவதும் அரண்டு விட்டால்.அவளின் அரண்ட முழியை பார்த்தே விஷ்வா இவள் ஏதோ செய்தால் என்று புரிந்து விட அவளை எரிக்கும் பார்வை பார்த்தவன் பணத்தை எடுத்து கையில் வைத்தவன் "விது..."என்க அவனை முறைத்த வித்யுத் "don 't எவர் கால் மீ விது i am just வித்யுத் for you mr .விஷ்வா ."என்றான் .

தலை கவிழ்ந்த விஷ்வா"வித்யுத் நீ என் பையன் நா பண்ணது தப்பு தான் ப்ளீஸ் என்ன மன்னிச்சுருனு நா கேக்க மாட்டேன் ஏன்னா நா மன்னிக்குற மாறி செயலை செய்யல ஆனா ப்ளீஸ் இங்க இருக்குற வரைக்குமாச்சும் என்ன உன் அப்பாவா....."என்று

அவன் கூறி முடிக்கும்முன் "அப்பாவா அப்டி ஒருத்தர் எனக்கு 15வயசாகேலேயே செத்துட்டாரு .ஒரு மூணாவது மனுஷனோட வீட்ல இருக்கேல தங்குறதுக்கும் சாப்பிடுறதுக்கும் பணம் குடுத்து தான் தங்க முடியும் .இதை நீங்களே வச்சுக்கோங்க மிஸ்டர் அண்ட் இந்த வீட்ல நீங்க யாரோ நான் யாரோ இனி ஒரு தடவ என்ட பேச முயற்சி பண்ணாதீங்க அப்பறோம் இப்போ குடுக்குற மரியாதையும் இல்லாம போய்டும்"என்றவன் மளமளவென மாடி ஏறி போய்விட்டான்.

அவன் செல்வதை வலியுடன் பார்த்த விஷ்வா ரம்யா வை எரிக்கும் பார்வை பார்த்தவன் "இப்போ சந்தோஷமா "என்று விட்டு உள்ளே சென்றான் .அதன் பிறகு அவன் வழியில் இவனோ இவன் வழியில் அவர்களோ குறுக்கிடவில்லை .

(பிளஷ்பக் ஓவர் )

இவை அனைத்தையும் சைந்தவி மடியில் படுத்தவாறே வித்யுத் கூறி முடிக்க அவன் மனதிற்குள் இத்தனை வலியா என்று நினைத்தவள் கண்களில் இருந்து நீர் சுரந்தது .

அவன் அறியுமுன் அதை மறைத்தவள் அவன் எங்கோ வெறித்து பார்ப்பதை பார்த்து அவனின் சிந்தனையை மாற்ற விரும்பியவள் குனிந்து அவனின் நெற்றியில் இதழ் பதித்தவள் "விது..."என்று காதலாய் கூப்பிட்டால் அவள் அழைப்பில் மேலே நிமிர்ந்தவன் அவள் தன் கையால் அவன் கண்ணை துடைத்து விட அவள் மடியில் இருந்து எழுந்தவன் தலையை கவிழ்த்து அமர அவன் தலையை தன் இரு கைகளிலும் ஏந்தியவள் "விது என்ன பாரு "என்க அவனும் அவளை பார்த்தான் .

பின் அவள் பேச ஆரம்பித்தாள்"விது உன் வாழ்க்கைல எத்தனையோ கஷ்டத்தை நீ அனுபவிச்சுருக்கடா .உன் கண்ணுல அந்த வலி தெரியுது .அம்மாவை தொலைக்குறதுங்குறது அவ்ளோ சின்ன விஷயம் இல்ல அதுவும் அந்த சின்ன வயசுல .ஆனா ஒன்னு சொல்றேண்டா இனிமே உன் lifela எல்லாமுமா நா இருப்பேன்டா.உனக்கு ஒரு அம்மாவா ஒரு அப்பாவா ஒரு wifeaah எப்போவும் உன்ன பிரியாம நா இருப்பேன்."என்க அவளை இழுத்து அணைத்து கொண்டான் வித்யுத் .

சிறிது நேரம் அதே அணைப்பில் இருந்த இருவரும் பின் விலக அவளின் இதழை நோக்கி குனிந்தவனின் வாயை போத்தியவள்"அய்ய ஆச தான் அதுவும் என் மாமியார் முன்னாடி பிச்சு புடுவேன் பிச்சு கல்யாணம் ஆற வரைக்கும் முத்தம் கொடுக்குறேன் அது இதுனு பக்கத்துல வந்தேனா "என்க

முகத்தை பாவமாய் வைத்தவன்" கல்யாணம் வரைக்குமா நா பாவம்டி "என்க

அவளோ "ஒன்னும் பாவம் இல்ல இன்னும் கொஞ்ச நேரம் இருந்தா நீ என்ன பண்ணுவண்ணே தெரில கெளம்புடா "என்க

அவனோ "அதுக்குள்ளயா...."என்க

அவளோ "அதுக்குள்ளயாவா மணி என்னனு தெரியுமா ?"என்று அவள் கேட்க

அவனோ "என்ன ?"என்று கேட்க

தலையில் அடித்து கொண்டவள் "மணி 3 டா வயிறு என்னைய வாட்டி எடுக்குது காலைல வேற நீ பண்ண களோபரத்துல நா ஒழுங்காவே சாப்பிடல "என்க

அவனோ "அதுனால "என்று சிரித்துக்கொண்டே கேட்க

கடுப்பானவள் "நா என்ன கதையாடா சொல்லிட்ருக்கேன் வீட்டுக்கு கூட்டிட்டு போடா "என்க

அவளின் இடையை பிடித்து இழுத்து தன்னோடு நிற்க வைத்தவன் அவள் கன்னத்தை வருடிக்கொண்டே "அப்பறோம் " என்க அவளுக்கு வார்த்தைகள் வாய்க்குள்ளேயே ,அடங்கி விட்டது.

அவள் காதருகில் குனிந்தவன் "சது.."என்று மிகவும் மென்மையாய் அழைக்க அவள் காற்றிற்கும் கேட்காத அளவிற்கு "ம்ம் "என்க

மேலும் அவள் காதிற்கு அருகில் குனிந்தவன் "இனிமே சாரீ காட்டாத "என்க அவனிற்காக பார்த்து பார்த்து கட்டியவளுக்கு ஏமாற்றமாய் இருக்கு முகம் சுருங்க "ம்ம்"என்றவள்

முகத்தை நிமிர்த்தியவன் "ஏன்னு கேக்க மாட்டியா ?"என்க

அவள் ஏன் என்பது போல் பார்க்க அவள் நெற்றியில் முத்தமிட்டவன் "ஏன்னா என்னால ரொம்ப நேரம் என்ன கண்ட்ரோல் பண்ண முடியாதுடி செம்ம அழகா இருக்க அப்பறோம் உனக்கு தான் கஷ்டம் "என்று அவன் கூறி முடிக்க அவன் கூறியதில் செம்மையுற்றவள் போடா என்று அவனை தள்ளிவிட்டு கீழே ஓடி வந்து விட்டால் .அவள் தள்ளியதும் நில்லுடி என்று கத்திகொண்டே அவள் பின் ஓடி சென்றான் வித்யுத் .இதை பார்த்து கொண்டிருந்த சாருவின் புகைப்படத்திலிருந்த சாருவின் பிம்பம் மேலும் சிரிப்பதை போன்றிருந்தது . ............ 

Bạn đang đọc truyện trên: Truyen2U.Pro