19

Màu nền
Font chữ
Font size
Chiều cao dòng

பின் அடுத்த நாள் காலையிலேயே கால் செய்த வித்யுத் அவள் உடல் நலனை பற்றி விசாரித்தான் .பின் மாலை நேரம் வர ஹரியிடம் வந்த சைந்தவி "தம்பி...."என்க

அவனோ "என்ன திடீர்னு தம்பின்னு பாசமா கூப்டுற என்ன விஷயம் "என்க

அவளோ "அது ஒன்னும் இல்லடா விது வீட்டுக்கு போனும் வண்டி இன்னும் சரி ஆகி வரலேல என்ன கொஞ்சம் கூட்டிட்டு போறியா ?"என்க

அவளை வம்பிழுக்க நினைத்தவன் "அதெல்லாம் முடியாதுப்பா எனக்கு படிக்கணும்" என்று புத்தகத்தை எடுக்க

அவளோ "இது என்ன நியூ way of learningaah டா ?"என்க

புரியாமல் அவன் பார்க்க அவளோ "இல்ல portfolio bookkah (portfolio booknaa அந்த செமெஸ்டர்ல architecture படிக்குற ஸ்டுடென்ட்ஸ் பண்ணுற ஒர்கசஹ் எல்லாம் கடைசில external practicalsku சப்மிட் பண்ணுவாங்க ஒரு புக் மாறி .2 சுப்ஜெக்ட்க்கு .இப்டி பண்ணுவோம் இதுல externalta மார்க் வாங்குறதுக்குள்ள நாங்க படர பாடிருக்கே எப்பா பங்கமா வச்சு செய்வாங்க. )அதுவும் 1st year புக்கஹ் தல கீழா வச்சு பார்க்குறியே அதான் கேட்டேன்.உன்ன depromote எதுவும் பண்ணிட்டாங்களோனு "என்க

மானசீகமாக தலையில் கொட்டிக்கொண்டவன் அவளிடம் திரும்பி "நாங்க பழசயெல்லாம் மறக்க மாட்டோம் உன்ன மாறி நெனச்சியா படிச்சதும் தூக்கி போட.நான் என்னோட படைப்புகளை ரசிச்சுகிட்டு இருக்கேன்" என்றவன்

அவள் முறைப்பதை பார்த்து ."அசடு வழிய வீடு எங்கக்கா இருக்கு?"என்று கேட்க

அவளும் சிரித்து கொண்டே"அப்டி வா வழிக்கு" என்று நினைத்து கொண்டவள் அவனுடன் வித்யுதின் வீட்டிற்கு சென்றால்.

சைந்தவியை பார்த்திருந்தமையால் அவ்வீடு காவலாளியும் அவர்களை உள்ளே அனுமதிக்க ஹால்லில் இருந்த வித்யுத் அவர்கள் வந்ததை பார்த்தவன் "ஹே சது என்ன திடீர்னு ?.என்ன பாக்காம இருக்க முடிலயா "என்று ஒற்றை புருவம் உயர்த்தி கேட்க

அவளோ "ஐய ஆச தான் நா ஒன்னும் உன்ன பாக்க வரல என் அதிதிய பார்க்க வந்தேன் நகரு நகரு "என்றவள் உள்ளே அதிதியை பார்க்க சென்றுவிட

அவளுடன் வந்த ஹரி "மாமா வீடு சூப்பராக இருக்கு மாமா

என்க அவனோ "தேங்க்ஸ் மச்சான் வா சுத்தி காட்றேன் "என்றவன் அவனுக்கு வீட்டை சுற்றி காட்ட பின் கீழே வந்ததும் சைந்தவியின் கையை பற்றிய வித்யுத் ஹரியிடம் திரும்பி "ஹரி ஒரு 5 minutesda உங்கக்காட்ட கொஞ்சம் பேசிக்குறேன் அது வரைக்கும்....."என்று இழுக்க

அவனும் "டேக் யுவர் own time மாமா நா வெயிட் பண்றேன் என்றவன் அங்கே sofaavil அமர்ந்து கொள்ள இதற்காகவே காத்துக்கொண்டிருந்தவன் சைந்தவியை அழைத்து கொண்டு (தள்ளி கொண்டு )தோட்டத்திற்குள் சென்றான்.

சிறிது நேரம் அங்கிருந்த நாழிதல்களை புரட்டி கொண்டிருந்த ஹரி அதிதியின் அறையின் வாசலில் மாட்டப்பட்டிருந்த பொம்மை காற்றில் ஆடி சத்தம் எழுப்ப ஏதோ தோன்றியவன் அவ்வறைக்குள் சென்றான்.உள்ளே சென்றவன் கண்டது வட்ட வடிவ முகம் செதுக்கி வைத்தார் போன்ற மூக்கு,பிறை நெற்றி ,வெளுத்த தோல் ,பிரியாமல் சேர்ந்திருந்த பிங்க் உதடுகள் நிர்மலமாய் உறங்குவதை போல் இருந்தவள் உடலோ 3 மாதமாய் கோமாவில் இருந்ததற்கான அடையாளமாய் மெலிந்திருந்தது .மெல்ல அடி எடுத்து அந்த அறைக்குள் சென்றவன் முகம் அப்பட்டமாய் அதிர்ச்சியை காட்ட அவன் சத்தியமாக அவளை அந்த நிலையில் எதிர்பார்க்கவில்லை என்பதை அவன் அதிர்ந்த தோற்றமே காட்டிகொடுத்தது .

கால்கள் லேசாய் தடுமாற அவளின் அருகில் விரைந்து சென்றவன் அவள் கைகளை பற்றிக்கொள்ள வாய் தானாக ராங்கி என்று முணுமுணுத்தது . மனதில் இலக்கில்லாத காட்சிகள் பல விரிந்தது .தன் கைகளைஅவள் கைகளோடு கோர்த்துக் கொண்டவனின் நினைவுகள் ஐந்து மாதங்களுக்கு முன்பயணித்தது .

Nit திரிச்சி வருடா வருடம் கட்டிடவியல் பயிலும் மாணவர்களுக்காக மூன்று நாள் பயிற்சி வகுப்புகளும் கலைநிகழ்ச்சிகளும் நடைபெறும்.

அதில் அனைத்து கல்லூரிகளிலிருந்தும் குறிப்பிட்ட அளவு மாணவர்கள் கலந்துகொண்டு தங்கள் கலைதிறமையை வெளிப்படுத்தி பயிற்சிகூடங்களில் தாங்கள் கற்றுக்கொண்டும் தங்களுக்கு தெரிந்ததை கற்றுக்கொடுத்துக்கொண்டும் இருப்பர்.

ஹரிவிக்னேஷ் ஐஐடி சென்னையில் இரண்டாம் வருஷம் கட்டிடவியல் பயிலும் நம்பர் ஒன் மாணவன் .தனது 18 வயதிலேயே 4 கின்னஸ் சாதனையை தன் பெயரின் கீழ் வைத்திருந்தான் .

மாடல்மேக்கிங் இல் அவனை மிஞ்சஆளில்லை என்று கூறுமளவுக்கு இச்சிறுவயதிலேயே திறமையை வளர்த்திருந்தவன்.வெறும் முடிக்கற்றைகளையும் கலைநயமாக ஓவியமாய் செதுக்கும் அளவிற்கு திறமை வாய்ந்தவன்.

அவனை அந்த கல்லூரியின் பயிற்சி வகுப்புகளில் களிமண்ணால் மாடல் செய்யும்பயிற்சிக்காக மாணவர் சிறப்புபகுதியில் நியமித்திருந்தனர் .

தனது பயிற்சியினை துரிதமாய் ஆரம்பித்தவன் களிமண்களின் தன்மையையும்அதன் வகைகளையும்அதை பயன்படுத்தும்முறை பற்றியும் விளக்கிக்கொண்டிருக்க "சோ நௌ லேட்ஸ் டாக் அபௌட் செராமிக் clay அண்ட் இட்ஸ் ப்ரொபேர்ட்டிஸ் .,...."என்ற அவனது குரல் கூட்டத்தில் ஏதோ சலசலப்பு ஏற்பட சட்டென நின்றது .

ஏதோ ஒன்று உந்த தனது காலர் மைக்கை கழற்றிவிட்டு அவ்விடத்தில் சென்று நின்றவன் கண்டதென்னவோ காளியின் மறுபிம்பமென கண்ணில் உக்கிரத்துடன் ஒரு பேராசிரியரை போட்டு வெளுத்து வாங்கிக்கொண்டிருந்த ஒரு பெண்ணைதான் .

பேராசிரியரை அடிக்கிறாள் என்று கோபம் வர உள்ளே சென்றவன் அவள் ஓங்கிய கையை பிடித்து நிறுத்தியவன் "அறிவிருக்கா உனக்கு ஒரு ப்ரோபஸ்சர போட்டு இந்த அடி அடிச்சுகிட்டு இருக்க.இது என்ன programme நடக்குற இடம்னு நெனச்சியா இல்ல சந்தைக்கடைனு நெனச்சியா "என்று

அவன் பொரிந்துகொண்டே செல்ல அவள் அருகில் அழுதபடி நின்ற பெண் ஏதோ கூற வர அவளோ கையை பிடித்து நிறுத்தியவன் "என்ன நடந்ததுன்னு தெரியாம பேசாத மிஸ்டர் "என்க

அவனோ தவறையும் செய்துவிட்டு திமிர்த்தனமாய் தன்முன்னே நிற்கிறாளே என்று கோபத்தில்" ஐடோன்ட் வாண்ட் எனி of யுவர் ப்ளடி explanation ஜஸ்ட் லீவ் திஸ் ஹால் ரைட் நௌ "என்க

அவளோ எனக்கென்ன என்பதுபோல் தோளை அலட்சியமாய் குலுக்கிவிட்டு"டு ஹெல் ஆப் வித் யுவர் ஒர்க்ஷாப் "என்று முணுமுணுத்துவிட்டு அந்த பேராசிரியரை அவன் முன்னே இன்னொரு அரை வைத்துவிட்டு இலவச இணைப்பாய் அவனையும் முறைத்துவிட்டு சென்றுவிட்டாள்.

அவளிற்கு இணையாய் அவளது முதுகை பார்வையால் எரித்தவன் அங்கே நின்றிருந்த தனது நண்பனின் ஸ்பரிசத்தில் தன்னை கட்டுக்குள் கொண்டுவந்தவன் அந்த பேராசிரியரை மெடிக்கல் யூனிட்டுக்கு அனுப்பிவிட்டு தனது பயிற்சியை தொடர்ந்தான் .

அனைத்தையும் முடித்துவிட்டு அவன் அவனிற்கு ஒதுக்கப்பட்ட அறைக்குவர அவனுடன் தங்கி இருந்த அவனின் இன்னொரு நண்பனோ " மச்சான் காலைல என்ன நடந்ததுதெரியாம ஏன்டா நீ அவ்ளோ ரியாக்ட் பண்ண ?"என்று கேட்க

]

அவனோ "ப்ரோபஸ்சர போட்டு அடிப்பா சும்மா போக சொல்றியா ?"என்று கேட்க

அவனின் நண்பனோ கோபத்தில் முகம் சிவந்தவன் "ப்ரோபஸ்ஸர் பண்ற காரியத்தை அந்த ஆளு பண்ணலையே "என்க ஹரி புரியாமல் பார்க்க அவனோ காலையில் அந்த ப்ரோபஸ்ஸர் பயிற்சி கூடத்தில் நின்று கொண்டிருந்த அந்த பெண்ணின் தோழியை உடைமாற்றும் பொது வீடியோ எடுத்து அதை தனியாக அந்த பெண்ணை அழைத்து சென்று போட்டுக்காட்டி தன்னுடன் ஒருநாளை கழிக்காவிட்டால் அதை இணையதளத்தில் வெளியிட்டுவிடுவதாய் அவளை பயமுறுத்தியதாகவும் அதை கேட்டு அந்த வழியே வந்த அந்த பெண்ணின் தோழியான அதிதி அந்த பயிற்சிக் கூடத்திற்கு அந்த பேராசிரியரை இழுத்து வந்து அவனின் மாணவர்களின் முன்னே அவனை அடித்து விளாசியதாகவும் கூற ஹரியோ தான் நடந்ததை அறிந்துகொள்ளாமல் முகம் தெரியாத பெண்ணை மிகவும் கொடிய வார்த்தைகளால் திட்டி விட்டோமே என்று வருந்தினான் .

அடுத்தநாள் அவளை தேடியவன் அன்று முழுக்க முழுக்க கலை நிகழ்ச்சிகள் மட்டுமே இருப்பதால் கூட்டம் அலைமோத அவளை காணமுடியாது தவித்தான் .

எங்கே அவள் எங்கே அவள் என்றஅவனது தவிப்பை போக்கும் விதமாக அடுத்த அழைப்பாக "சோ next வி have கதக் performance by அதிதி from ஸ்கூல்ஆப் planning அண்ட் architecture டெல்லி "

என்று அழைப்பு விடுக்கப்பட்ட கொலுசின் ஒளி சன்னமாய் அந்த அறையை நிறைக்க எதேர்ச்சியாய் திரும்பியவன் அன்று காளியின் அவதாரமாக நின்றவளை சாந்தமான முகத்தோடு கதக் ஆடுவதற்கான சர்வ அலங்காரத்துடன் நின்றவளை கண்டு கண்ணை சிமிட்ட மறந்து மூச்சுவிடவும் சற்று மறந்தே போனான் என்று சொன்னால் மிகை ஆகாது .

அவளோ முகத்தில் பற்பல பாவனையோடு லால் இஷ்க் எனும் பாடலிற்கு ஏற்றபடி நடனமாட துவங்க அற்ஜித் சிங்கின் குரலில் இருந்த ரசனையோ அவளின் முகபாவத்தில் நிரம்பி வழிந்த உணற்சிகளோ அல்லது இரண்டுமோ அவனை அவளிடத்திலிருந்து கண்ணை பிரிக்க வைக்க விடாது அவளோடு கட்டிப் போட்டது .

கை தட்டும் ஓசையிலேயே தன் நினைவிலிருந்து வெளி வந்தவன் அவள் மேடையிலிருந்து கீழிறங்கி செல்ல அவள் பின்னே ஓடினான் .

மற்றவர்கள் அடுத்த கலை நிகழ்ச்சிகளில் ஐக்கியமாகிவிட அந்த பௌர்ணமி இரவின் ஒளிக்கு மேல் மின்மினிப்பூச்சிகள் என அந்த இருபுறம் புல்வெளிகள் நிறைந்த பாதையில் இருந்த விளக்குகள் மேலும் ஒளியூட்ட வெள்ளைநிற அனார்கலி உடையின் கற்கள் பளபளக்க தான் கொண்டை இட்டிருந்த முடியை அவிழ்த்து விட்டவாறே சென்று கொண்டிருந்தவளை ரசனையோடு ஒரு பார்வை பார்த்து விட்டு அவள் முன் சென்று நின்றவன் வழியை மரிக்க அவளோ அவனை புரியாத பார்வை ஒன்று பார்த்தாள்

நினைவு வர அலட்சியமாய் இதழை சுழித்துவிட்டு முன்னேறி நடக்க அவள் வழியை மரித்தவன் "உன்ட கொஞ்சம் பேசணும் "என்க

அவளோ "ஆனா எனக்கு உன்ட பேச எதுவுமில்லை"என்று கூறி முன்னேறி நடக்க அவளை செல்ல விடாமல் அவள் கையை பிடித்தவன் அவளது வதனத்தை பார்க்க நிலாவின் வெள்ளை ஒளியிலும் கோபத்தில் சிவந்த முகத்துடனும் மற்றோர் கண்டால் உதறல் எடுக்குமளவு ரௌத்திரமாய் இருந்தவள் அவனிற்கு மட்டும் அழகாய் தெரிந்தாள் .

அவள் "ஹொவ் dare you இப்போ கைய எடுக்குறியா இல்ல கைய உடைக்கவா ?"என்றுகேட்க

அவனோ அதில் தெளிந்தவன் கையை மனமில்லாமல் விட்டவன்"அது ஐ ஆம் சாரி என்ன நடந்ததுன்னே தெரியாம உன்ன அப்டி எல்லார் முன்னாடியும் திட்டுனது என் தப்புதான் "என்க

அவளோ முகத்தில் சற்று இலகுத்தன்மை குடி கொள்ள "அவ்ளோ தான ஓகே "என்று திரும்பி நடக்க

அவனோ சற்று தூரம் அவள் சென்றபின் "ஒய் "என்றழைக்க

அவள் திரும்பி ஒற்றை புருவம் தூக்கியவள் "என்ன ?"என்பதை போல் பார்க்க

அவனோ "உன் பேரென்ன ?"என்றுகேட்க

அவளோ "நன் ஆப் யுவர் buisness "என்று விட்டு செல்ல அவள் திட்டியதை ஏதோ கொஞ்சியது போல் பார்த்து சிரித்துக் கொண்டவன் உதடுகள் தானாக முணுமுணுத்தது ராங்கி என்று .

அடுத்த ஒருநாள் முடிந்து அனைவரும் அவரவர் கல்லூரிக்கு செல்ல அவன் என்ன முயன்றும் அவளின் பெயரையோ அவளது வகுப்பையோ கண்டறிய முடியவில்லை .அன்று அவள் நடனமாடிய பொழுதும் அவளையே கவனித்திருந்தவன் அவளது கல்லூரியை கவனிக்காது போக அனைத்து வழியும் அடைத்ததாய் உணர்ந்தவன் மனதின் ஒரு ஓரத்தில் அவளை மீண்டும் பார்க்கமாட்டோமா என்று ஏங்கியபடியே இருக்க அவளை இந்த நிலையில் மீண்டும் பார்ப்பான் என்று அவன் கனவிலும் நினைக்கவில்லை. .

அவள் கையில் ஆங்காங்கே ஊசிகள் குத்தப்பட்டு அங்கிருந்த சாதனங்களோடு இணைக்கப்பட்டிருந்தது. அவளை கண்டவன் மனதில் பெரும் பாரத்தை உணர்ந்தான்.என்ன செய்கின்றோம் என்றே அவள் கையை எடுத்து மெதுவாக வருடினான் அவன் கண்களில் கண்ணீர் சுரந்தது .அவள் நெற்றியில் இதழ் பதிக்க சிறிது நேரத்திற்கு பின்பே தான் செய்து கொண்டிருக்கும் செயல் புத்தியில் உரைக்க விரைவாய் எழுந்தவன் அதற்கு மேல் அங்கிருக்க முடியாமல் சைந்தவியையும் ஏதோ காரணம் கூறி அழைத்து கொண்டு வந்தான் .

வரும் வழியில் சைந்தவி "ஹே என்னாச்சுடா ஏன் ஒரு மாறி இருக்க ?"என்க

அவனோ தடுமாறியபடியே "ந...நானா ஓ ....ஒன்னும் இல்லையே "என்க

ஏதோ சரியில்லை என்று உணர்ந்தவள் "ஏதோ மறைக்குறன்னு மட்டும் தெரியுது என்னனு சொல்லணும்னு தோணேல சொல்லு "என்று விட்டால்.

அவன் தான் திக்ப்ரம்மை பிடித்தவன் போல் தான் ஏன் இப்படி செய்தோம் என்று இரவு முழுதும் மண்டையை உருட்டி கொண்டிருந்தான் ஹரி "ஏன் இப்டி பண்ணேன் அவளை பார்த்தப்போ அவளை அடுத்து மீட் பண்ணனும்னு நெனச்சது என்னவோ உண்மை தான் .அவளை இவ்ளோ நாள் மறக்காம இருந்ததும் உண்மை தான் ஆனா அதுக்காக இப்டி கிஸ்லாம் பண்ணி செய் செய் மாமா என்ன நெனைப்பாரு என்ன"என்று எண்ண மிட .இங்கோ அதிதி எதுவும் அறியாமல் ஆழ்ந்த உறக்கத்தில் இருக்க இந்த காதல் ஜோடிகள் இரண்டும் கை பேசியில் மணிக்கணக்கில் பேசிவிட்டு உறங்கினர் .

Bạn đang đọc truyện trên: Truyen2U.Pro