5

Màu nền
Font chữ
Font size
Chiều cao dòng

இவ்வாறே 2மாதங்கள் மிகவும் அழகாக கழிந்தது.வித்யுத் ஸ்போர்ட்ஸ் மீட்டிற்காக அவர்கள் அணியில் இணைந்து நன்றாக பயிற்சி எடுத்து கொண்டிருந்தான் .அவனின் அபாரமான திறமையை பார்த்த அவர்களின் coach அவனையே அவ்வணியின் தலைவன் ஆக்கினார்.இம்முறை எவ்வித எதிர்ப்பையும் அவ்வணியினர் தெரிவிக்கவில்லை மாறாக மகிழ்ச்சியோடு இருந்தனர் .அவர்களுக்கு 2 நாட்களுக்கு ஸ்போர்ட்ஸ் மீட்டும் பிற இதர நிகழ்ச்சிகளும் போட்டிகளும் பெரிய அளவில் பல கல்லூரிகளுக்கும் சேர்ந்து நடக்கும்.

இவர்கள் படிப்பது மெட்ராஸ் மெடிக்கல் காலெஜ்ல் ஆகையால் அவ்விழா மிகவும் பிரம்மாண்டமான வகையிலேயே நடக்கும் .இவன் கால்பந்தில் பங்கு பெற ஷ்ரவனும் ,சரணும் ஆடல் நிகழ்ச்சியில் பெயர் கொடுத்திருக்க பூஜாவும் வினீஷாவும் ஓவிய போட்டியில் பெயர் கொடுத்திருந்தனர்.சைந்தவியோ எதிலும் பெயர் கொடுக்க வில்லை .இந்த 2மாதத்தில் அந்த நண்பர்கள் குழுவில் அவன் ஐக்கியமாகி இருந்தாலும் அவனுக்கு சைந்தவியிடமே அதிகப்படியான ஈர்ப்பு இருந்தது .தினம் சாப்பாட்டு நேரத்தை அவனுடனேயே சைந்தவி செலவிட்டால் .அவன் முகத்தில் இருந்த கடுமை போய் சற்றே என்றும் இதழில் உறைந்த புன்னகையுடன் வளம் வந்தான்.

ஆனால் விக்ரமாதித்தனை வேதாளம் விடாதது போல் அவனது சட்டென கோபம் கொள்ளும் குணம் அவனை விட்டு போகவில்லை அதை அவன் இயல்பென்றே நண்பர்கள் கருதி அதை பெரிது படுத்தாமல் அவனை அப்படியே ஏற்றுக் கொண்டனர் .என்றும் அவன் கல்லூரி முடிந்த பின்பு 1 மணி நேரம் கால் பந்து பயிற்சி எடுக்க ஹரி விக்னேஷிற்கு சிறப்பு வகுப்பு நடப்பதால் சைந்தவியும் ஒரு மணி நேரம் அந்த மைந்தானத்தின் ஒரு இருக்கையில் அமர்ந்து அவ்வப்போது அவன் விளையாடுவதை பார்த்து கொண்டும் பாடத்தை படித்து கொண்டும் செலவிட்டால்.

பின் ஹரியின் காலெஜ்ற்கு சென்று அவனை அழைத்து கொண்டு வீடு திரும்பினாள்.அவ்வப்போது வித்யுத்தும் அவர்களுடன் இணைந்துக்கொண்டு ஏதேனும் உண்டு விட்டு செல்வதுண்டு .ஹரிக்கும் வித்யுத்திற்கும் ஒரு நல்ல உறவு இதனால் உருவானது.அவ்வப்போது அவளின் வீட்டிற்கும் சென்று வந்தான்.முதல் முறை அவள் அழைத்தபோது இல்லை இல்லை என்று கூறியவன் அவள் வற்புறுத்தி அழைக்கவும் அங்கே சென்றான்.

அங்கே அவர்களது பாசப்பிணைப்பையும் தன்னை அவ்வீட்டின் ஒரு உறுப்பினன் போலவே நடத்தியதையும் பார்த்தவனுக்கு அடிக்கடி அங்கே செல்ல ஆசை எழ பின் அவள் அழைக்கும் போதெல்லாம் மறுக்காமல் சென்றவன் இப்போது அவள் அம்மாவையும் அப்பாவையும் டார்லிங்ஸ் என்று அழைக்கும் அளவிற்கு முன்னேறி விட்டான்.

அனைத்தும் நன்றாக சென்றாலும் அவனிற்கு என்ன பிரச்சனை என்று அவளும் கேட்கவில்லை அவனும் சொல்லவில்லை எனில் கல்லூரி வேளையில் அவனுக்கு பக்க பலமாக இருக்கவே சைந்தவி விரும்பினால்.அவனும் அவளுக்கு ஷ்ரவன் ,சரணை போலவே மிகவும் நெருங்கிய நண்பனானான் .

இப்படியாக ஒருநாள் ஹரியை அழைக்க சென்றிருந்த போது வித்யுதும் வந்திருக்க தனது அக்காவின் வண்டியில் உரியவன் பின் அங்கிருந்த டொமினோஸிற்கு அழைத்து சென்றான் .

உள்ளே சென்ற முவரும் பேசிக்கொண்டே உண்டுகொண்டிருக்க பக்கத்து tabelil அமர்ந்திருந்த பெண்களின் பேச்சு சைந்தவியின் கவனத்தை ஈர்த்தது .அங்கு மூன்று பெண்கள் அமர்ந்திருக்க

பெண் 1 :ஹே அந்த tableல பாருடி அந்த பிளாக் ஷர்ட் செம்மயா இருக்கான்ல

பெண் 2 :ஆமாடி அதுவும் அவனோட அந்த தாடியும் பேசேல் அவன் தலையை கோதி விட்ர ஸ்டைலிலும் கொல்றான்டி.

என்க அவர்கள் பேச்சின் நாயகனான வித்யுதோ இது எதுவும் அறியாமலே சிரித்தபடி பேசியபடியே சாப்பிட்டுக்கொண்டிருந்தான்.சைந்தவியோ அவர்கள் பேச பேச கொதித்துப்போய் அமர்ந்திருந்தாள்.பின் உண்டுமுடித்துவிட்டு மூவரும் எழுந்து வெளியே செல்ல ஹரியிடம் திரும்பியவள் "ஹரி உள்ள என் purse மறந்து வச்சுட்டேன் போ ய் எடுத்துட்டு வரேனடா "என்க அவனும் சரி என்றான் .

உள்ளே நேராய் அந்த டேபிளிற்கு சென்றவள் "வாய் இருக்கின்றதுக்காக இஷ்டத்துக்கு பேச கூடாது .ரசிசீன்களா மனசுக்குள்ளேயே வச்சுக்கணும் இப்டி publicaah பேச கூடாது.behave "என்றுவிட்டு வெளியேறிவிட்டால் மனதில் "என் வித்யுத்த எப்படி இவர்கள் ரசிக்கலாம் என்ற ஆதங்கம் அவளிற்கு குறையவில்லை .ஆமாம் இதில் வித்யுத் என் வித்யுத் என்று ஆனான் ? என்று அவளே அறியவில்லை உணரவுமில்லை .

Bạn đang đọc truyện trên: Truyen2U.Pro