தென்றல் 31

Màu nền
Font chữ
Font size
Chiều cao dòng

நாம் ஒன்றை நினைத்து செயல்பட காலம் அது தன் போக்கில் சென்று கொண்டே இருக்கும். நாம் சில செயல்களை  சிறிது நேரம்  தள்ளிப்போட்டால் கூட காலம் நம் வாழ்க்கையை புரட்டிப்போட்டு விடும். திவ்யாவின் வாழ்க்கையிலும் அதுவே நடந்தது. கையில் கவருடன் கண்களில் கண்ணீர் முட்ட நின்ற திவ்யாவிடம் நெருங்கிய மித்ரன்

"என்ன திவ்யா ஒரு மாதிரி இருக்க . ஆமா கண்ணுலாம் கலங்கி இருக்கு?"  என்று கேட்க திவ்யா பதில் எதுவும் கூறாமல் தன்கையில் வைத்திருந்த திருமண பத்திரிகையை மித்ரனிடம் கொடுத்தவள் மித்ரனின் பின்னால் வந்த ஷாக்சியை கட்டிக்கொண்டு அமைதியாக விசும்பிக்கொண்டிருந்தாள். என்ன நடக்கின்றது என்று புரியாத ஷாக்சி

"ஹேய் திவ்யா என்னாச்சு" என்று கேட்க மித்ரன் கையில் இருந்த பத்திரிகையை காட்டா அதில் "அர்ஜுன் வெட்ஸ் மேகா" என்றிருந்தது. ஒரே நொடியில் எல்லாம் புரிய முதலில் சுதாகரித்த ஷாக்சி

"ஹேய் லூசு அழாதடி, நம்ம அர்ஜுன் கிட்ட போய் எல்லாத்தையும் சொல்லலாம். அவரு புரிஞ்சிப்பாருடி " என்று கூற ஷாக்சியை விட்டு விலகிய திவ்யா 

"எந்த முகத்தை வெச்சிக்கிட்டு போய் பேசுறது ஷாக்சி. அன்னைக்கு அர்ஜுன் என்கிட்ட வந்து அன்னைக்கு அவ்வளவு பேசினப்போ ரொம்ப கேவலமா பேசின பின்னாடி இப்போ போய் நான் அவர காதலிக்கிறேன்னு சொன்னா எப்படி ஷாக்சி. அதுவும் ஜானவி சதீஷ் மேல இருந்த  லவ்னாலதான் இப்படி பழி வாங்கினா. உங்களுக்கும் அதுக்கும் சம்பந்தமில்ல. சோ நம்ம கல்யாணம் பண்ணிக்கலாம்னு சொல்ரது கேவலமா இருக்காது" என்று கேட்க ஷாக்சி என்ன கூறுவது என்று புரியாமல் யோசித்து கொண்டிருக்கையில் மித்ரனோ

"அதுக்காக உன் வாழ்க்கைய நீ கெடுத்துக்க  போறியா?" என்று கேட்க

"இல்லண்ணா, அர்ஜுன் இல்லைன்னா என் வாழ்க்கையே போயிடும்னு நான் சினிமா டயலாக்லாம் பேச மாட்டேன். கொஞ்ச நாள் வருத்தமா இருக்கும் . அப்புறமா அத விட்டு வெளில வந்துடுவேண்ணா. ஆமா நீ ஏதோ சொல்ல வந்தியே என்ன மேட்டர்" என்று கேட்க ஷாக்சி திருமணத்திற்கு ஒத்துக்கொண்டதை மித்ரன் கூறினான். உடனே திருமணத்திற்கு ஏற்பாடுகளை கவனிக்க ஒரே வாரத்தில் திருமணம் மிக எளிமையாக செய்வது என்று தீர்மானித்தனர்.

திருமணத்தின் முதல் அன்று இரவு ஷாக்சி திவ்யாவிடம்

"திவ்யா நான் கல்யாணத்துக்கு ஒத்துக்கிட்டது உங்க அப்பாக்காகத்தான், இருந்தாலும் எனக்கு இப்போ என்னனு சொல்ல முடியாத அளவுக்கு மனப்பாரமா இருக்குடி. எனக்கு ரொம்ப பயமா இருக்கு திவ்யா" என்று கூற அவளோ

"இங்க பாரு ஷாக்சி அண்ணன் அவ்வளவு மோசமான ஆளு லாம் இல்லை. உனக்கு என்ன கணவன் மனைவியா வாழ அவகாசம் தேவை அதுதானே" என்று கேட்க ஷாக்சியோ 

"அது இல்லைடி. நைட்ல நான் டிப்ரசன்கு போடுற டாப்லட்ட போட்டேன்னா என்னென்னமோலாம் உளருவேன். மித்ரன் கூட ஒரே ரூம்ல இருக்கும் போது ஏதும் தப்பா பேசிட்டேன்னா" என்று கூற திவ்யாவோ

"சரி நீ ஒன்னும் யோசிக்காத. அண்ணன்கிட்ட நான் எல்லாமே சொல்லிர்ரேன் சரியா" என்று கூறினாள்.

திருமணப் பெண் என ஷாக்சி மிக சாந்தமான அழகுடன் அதிகமான மேக்கப் ஏதும் இல்லாமல் காணப்பட்டாள். அவளைக்கண்ட மித்ரனின் மனதோ தனக்கு பிடித்தமான பெண்ணை தன் வாழ்க்கை துணையாக்கி கொள்ள போகின்றோம் என்று இறக்கை கட்டாமல் வானில் பறந்து கொண்டிருந்தது. இருந்தாலும் ஷாக்சியிடம் தன் தந்தையின் ஆசைக்காத்தன இந்த திருமணம் என்று கூறி அவன் மனதில் அவள் மேல் உள்ள அன்பை வெளிப்படுத்தாமல் மறைத்தது கொஞ்சம் கவலையாகவும் இருந்தது. இருந்தாலும் என்றும் அவளை தன்னுடனே வைத்துக்கொள்ள வேண்டும் என்ற ஆர்வக்கோலாறில் தான் அவளிடம் நடந்து கொண்ட முறை சரி என்றே அவன் மனது வாதிட்டது. 

திருமணம் மிக எளிமையாக நடந்து முடிய எல்லோரும் வீட்டிற்கு வந்தனர். வீட்டிற்கு வந்தவர்களை திவ்யா ஆரத்தி எடுத்து உள்ளே அழைத்து வந்தாள். என்னதான் சில நாட்களாக அவர்கள் வீட்டில் ஷாக்சி இருந்த போதிலும் திருமணம் முடித்து புகுந்த வீட்டில் நுழைவது ஒரு வகையான இனம் புரியாத ஒரு சந்தோசத்தை கொடுத்தது.

அவசரமாக திருமணத்தை ஏற்பாடு செய்திருந்ததால் ஷாக்சியின் தம்பி வினய் இறுதி நேரத்திலேயே வந்திருந்தான், தன் அக்காவுக்கு நடந்த கொடுமை தெரிந்திருந்தாலும் அவன் எப்போதும் அதை வெளியில் காட்டியே இல்லை. அவளின் நிலை அறிந்த எல்லோரும் அவளை பரிதாபமாக பார்ப்பதை ஷாக்சிக்கு மேலும் வருத்தத்தை கொடுக்கும் என்பதை அறிந்தவன்  அவளிடம் என்றுமே அவளுக்கு நடந்தது அவனுக்கு தெரியும் என்று சொன்னதே இல்லை. இருந்த போதும் அவளின் எல்லா கஷ்டங்களிலும் ஒரு நல்ல சகோதரனாக இருப்பான் என்று அடிக்கடி கூறுவதால் அவனுக்கு எல்லா விடயமும் தெரியும் என்பது ஷாக்சிக்கு தெளிவாக புரிந்தது. இன்னும் இரண்டு நாட்களில் பரீட்சை இருப்பதால் வினய்யால் அதிக நேரம் இருக்க முடியாது என்பதால் அவன் அவர்களிடம் கூறி காலேஜ் செல்ல ஆயத்தமானவன் மித்ரனிடம் சென்று

"மாமா நீங்க அக்காவெ எதுக்கு கல்யாணம் பண்ணிக்கிட்டீங்கனு எனக்கு தெரியாது. ஆனா உங்கள கெஞ்சிச் கேட்டுக்கிரேன். தயவு செஞ்சி அக்கா மேல பரிதாபம் மட்டும் படவேண்டாம். ஏன்னா அவ மேல யாரும் பரிதாபப்பட்டா அவளால தாங்க முடியாது"  என்று கூறியவனை மித்ரன்

"வினய் எனக்கு ஷாக்சிக்கு நடந்த எல்லாமே தெரியும். அப்புறம் அவளுக்கு நடந்த எதுக்குமே அவ பொறுப்பு கிடையாது. அவ பொறுப்பு இல்லாத ஒன்னுக்கு நான் பரிதாபப்படவோ இல்ல்லைன்ன பாவப்படவோ மாட்டேன். இன்னொரு முக்கியமான விசயம் சொல்ரேன். உங்க அக்காவ பொருத்தவரைக்கும் இந்த கல்யாணம் எங்க அப்பாக்காக பண்ணிக்கிட்டது, ஆனா என்ன பொருத்தவரைக்க்கும் இது ஒரு காதல் கல்யாணம். ஏன்னா அது என்னைத் தவிர வேற யாருக்குமே தெரியாது" என்ரு கூறிய மித்ரனை பெருமையாக பார்த்த வினய்

"மாமா எனக்கு என்ன சொல்ரதுன்னே தெரியல. அக்காவுக்கு நடந்தது தெரிஞ்சும் அவ மேல பரிதாபம் கொள்ளாம அவ மேல உங்களுக்கு காதல் வந்திச்சு பாருங்க நீங்க நிஜமாவே ஹீரோதான். ஏன் இதுவே நானா இருந்தா கூட அந்த பொண்ணு மேல பரிதாபப்பட்டு காதல் வருமே தவிர தானா காதல் வராது" என்று கூற மித்ரனோ

"டேய் வினய் உனக்கு உங்க அக்காவ பத்தி தெரியாது. இவ இப்போ இப்படி அமைதியா இருக்குறது எனக்கு பிடிக்கவேயில்ல. காலேஜ்ல படிக்கிறப்போல்லாம் என்கிட்ட எப்படி சரி சமமா மல்லுக்கு நிப்பா தெரியுமா. அப்போ இருந்த ஷாக்சியே வேறடா. இப்போ ஏதோ விதி வசத்தால இப்படி இருக்கா. எல்லாமே ஒரு நன்மைக்குத்தான் வினய். சொல்ரேன்னு தப்பா எடுத்துக்காத, ஒரு வேல ஷாக்சிக்கு இப்படி ஏதும் ஆகலைன்னா கண்டிப்பா அவ இங்க வந்து எங்க கம்பனில வேலைக்கு சேர்திருக்க மாட்டா. அப்படி சேராம இருந்திருந்தா இன்னைக்கு என் வாழ்க்கைல ஷாக்சி என்கிற அத்தியாயம் இல்லாம போய் இருக்கும். அவ கெட்டதுலயும் எனக்கு ஒரு நல்லது நடந்திருக்கு பார்த்தியா. ஆனா ஒன்னு எனக்கு நடந்த நல்லத வெச்சி ஷாக்சியோட வாழ்க்கைல நடந்த கெட்டத மறக்கடிக்க செய்வேன்"  என்று கூற வினய்யோ மித்ரனை கட்டிக்கொன்டான்.

வாழ்க்கையில் எல்லோருக்கும் அவர்களின் திருமணம் முடித்த பின் வரும் முதல் இரவு பற்றி ஒரு வித கனவு இருக்கும். இது ஆண் பெண் என்ற பேதமின்றி எல்லோருக்கும் பொதுவானதே. மித்ரன் என்னதான் ஆரம்பத்தில் சிடுமூஞ்சியாக இருந்தாலும் ஷாக்சி அவன் மனதில் அமர்ந்ததில் இருந்து அவனும் ஒரு சராசரி மனிதனாக தன் திருமணம் முடித்த அன்று இரவு எப்படி இருக்கும் என்று கனவு கண்டிருந்த போதும் ஒரு கையால் ஓசை எழுப்ப முடியாது என்பதையும் அறிந்திருந்தான்.

முதல் இரவு அறைக்குள் ஷாக்சி நுழைய அவளுக்காக காத்திருந்த மித்ரன் அவளுக்காக தான் காத்திருப்பதை வெளிப்படுத்தாமல் இருக்க மிகவும் சிரமப்பட்டான். ஷாக்சியிடம் வீராப்பாக தந்தைக்காகவே இந்த திருமணம் என்று கூறி இருந்தாலும் ஷாக்சி வந்த நிலை கண்டு அவனின் மனது ஏதோ ஒன்றுக்கு ஏங்க துவங்கியது. இருந்தாலும் தன் கன்னியம் தவறாது ஷாக்சியிடல் எப்படி நடந்து கொள்வது என்று ரொம்பவும் சிரமப்பட்டான். ஷாக்சி பொதுவாகவே அழகாக இருப்பாள், அதுவும் இன்று லேசான ஒப்பனையில் நிலவே பொறாமை கொள்ளும் அழகில் இருந்தாள்.

ஷாக்சியை இப்படி கண்ட மித்ரனால் என்ன செய்வது என்று புரியாமல் இருக்க ஏதோ வீட்டில் இருந்த இனிப்பு பண்டத்தை களவாடி உண்ட பிள்ளை போல மித்ரன் முழிப்பதை கண்டவள்

"என்ன மித்ரன் ஏதோ யோசனைல இருக்கீங்க போல " என்று நக்கலாக கேட்க உடனே சுதாகரித்தவன்

"அது ஒன்னுமில்லை ஷாக்சி, வழமையா முதல் இரவு அன்னைக்கு பொண்ணுங்க பால் கொண்டுவருவாங்க. எனக்கு வேற செம்ம பசியா அதான் பால் வந்ததும் சாப்பிட்டு தூங்கலாம்னு இருந்தேன், நீ வீசின கையும் வெறும் கையுமா வந்தியா அதான் இன்னைக்கு நம்ம பசியோடதான் தூங்கனும் போல " என்றவனை ஷாக்சி நிஜமான அக்கறையுடன் 

"அய்யோ சாரி மித்ரன், நான் வேணும்னா போய் பால் எடுத்து வரவா" என்று கேட்க அவள் அருகில் வந்த மித்ரனை ஷாக்சி என்ன இவன் இப்படி அருகில் வருகின்றான் என யோசித்தாள்.

Bạn đang đọc truyện trên: Truyen2U.Pro