தென்றல் 37

Màu nền
Font chữ
Font size
Chiều cao dòng

வீட்டிற்கு வந்ததும் ஷாக்சி திவ்யாவை நோக்கி "என்னடி இப்படி பண்ணிட்ட. கெட்டுப்போன எனக்கே நல்ல வாழ்க்கை அமைஞ்சிரிச்சு. நல்லா இருக்குற உனக்கு ஒரு வாழ்க்கை அமைய இருக்கிறப்போ
ஏன்டி இப்படி கெடுத்துக்கிட்ட" என்று கேட்க அவளை முறைத்த திவ்யா மித்ரனைப் பார்த்து

"சாரிண்ணா" என்று கூறி ஷாக்சிக்கு பளார் என்று ஒரு அறைவிட்டாள்.

"உன்கிட்ட எத்தனைவாட்டி சொல்ரது. உன்ன நீயே தாழ்த்தி பேசாதன்னு. இனிமே இப்படி பேசின கொன்னுடுவேன்" என்று கூற ஷாக்சி

"ஏன்டி இப்பகூட என்ன பத்தியே யோசிக்கிறியே. உன் வாழ்க்கைய பத்தி நாங்க யோசிச்சு எவ்வளவு வேதனைப்படுறோம்னு தெரியலயா உனக்கு?" என்று கேட்க
மித்ரனும்

"இங்க பாரு திவ்யா, ஷாக்சி சொல்ரது நியாயம்தானே. எப்போமே எங்கள பத்தி நினைச்சி எங்களுக்கு எது நல்லதுன்னு நீ பார்த்து பார்த்து செய்றப்போ நாங்க உன் வாழ்க்கை நல்லா இருக்கனும்னு யோசிக்கிறது தப்பில்லையேமா" என்று
கூறியவனை திவ்யா

"அண்ணா நான் கல்யாணம் வேணாம்னு சொல்லவே இல்லயே. நானும் கல்யாணம்
பண்ணிக்குவேன். எனக்கும் என் மனசுக்கு பிடிச்ச மாதிரி ஒருத்தன்
வருவாண்ணா. அப்போ அவன ரொம்ப டார்ச்சர் பண்ணி எதுக்குடா இவள லவ் பண்ணோம்னு
நினைக்கிற அளவுக்கு யோசிக்க வைப்பேன்" என்று கூற ஷாக்சியும் மித்ரனும் புன்னகையுடன்

"நீ செஞ்சாலும் செய்வ" என்று கோரசாகா கூற திவ்யாவோ

"என்ன செஞ்சாலும் செய்வ, கண்டிப்பா செய்யத்தான் போறேன். பார்த்துக்கோங்க "
என்று கூறியவளை மித்ரன்

"அத கொஞ்சம் குயிக்கா பண்ணா நல்லா இருக்கும்" என்றான்.

அன்று இரவு தூங்க அறைக்குள் வந்த ஷாக்சி 'என்ன மித்ரனை காணல்ல' என்று மனதுக்குள் நினைக்க அவனோ எல்லா கணவர்களும் செய்வது போல கதவுக்கு பின்னிருந்து அவளை இறுக்கி அனைத்தான். அணைப்பது தன் உள்ளம் கவர்ந்த கள்வன் என்று தெரிந்த ஷாக்சி ஆர்ப்பாட்டம் எதுவும்
செய்யாமல் அவன் கைகளை எடுத்து அவள் வயிற்றில் அழுத்திப்பிடித்துக்கொள்ள
மித்ரனோ

"ஏன்டி, எவனோ ஒருத்தன் பின்னாடி இருந்து நம்மல கட்டிப்புடிக்கானேனு
சத்தம் போட்டு ஊரக்கூட்டுவியா அத விட்டுட்டு கைய எடுத்து வயித்துல
வெச்சிக்கிற "என்று கேட்க அவளோ அமைதியாக

"என்னை எல்லாம் யாருப்பா அணைக்க போறா. அதுவும் உங்கள விட்டா" என்று
கூறியவளை தன் பக்கம் திருப்பி

"ஷாக்சிம்மா இங்க பாரு, பர்ஸ்ட் இந்த வாங்க போங்கலாம் வேணாம். அப்புறம் உன் மனச ஒரேடியா மாத்திக்க சொல்லல. கொஞ்சம் கொஞ்சமா மாத்திக்க
சரியாடா. இன்னொரு முக்கியமான விசயம் உன் மனசுல உன்ன பத்தி குறைவா எடைபோடாதடா. நம்மல நம்மதான் முதல்ல நம்பனும். சோ இனி என் ஸ்வீட் பொண்டாட்டி
பழசு எல்லாத்தயும் கொஞ்சம் கொஞ்சமா மறப்பாங்களாம் ஒக்கேயா" என்று கேட்க
அவனை இறுக்கி அணைத்து

"தாங்க்ஸ் மித்ரன். எங்க நீங்க உடனே என் மனச மாத்திக்க சொல்வீங்களோன்னு
பயமா இருந்திச்சி. ஆனா கொஞ்சம் கொஞ்சமா மாத்திக்க சொல்லவும் ரொம்ப ஹாப்பியா இருக்கு. அப்புறம் இன்னொரு விசயம் " என்று இழுக்க அவனோ

"அடியே பொண்டாட்டி, அது மட்டும் இல்லைன்னு சொல்லிடாதடி" என்று கவலையாக கூற அவளோ முகத்தை கீழே தொங்கப்போட்டதும் அவனுக்கு அவள் இன்னும் தாம்பத்ய
உறவுக்கு தயாரில்லை என்பது புரிந்தது. அவர்களுக்குள் நடந்த உறவு
ஷாக்சியின் சுயநினைவின்றி நடந்தது அவனுக்கு தெரியும். ஷாக்சியின் முகம்
வாடுவதை கண்ட மித்ரன்

"ஹேய் நாம் சும்மா விளையாட்டா சொன்னேன்பா. அப்புறம் நம்ம கொஞ்ச நாள் ஒருத்தர ஒருத்தர் புரிஞ்சிக்கலாம். அதுக்கு அப்புறமா மத்தத பார்க்கலாம்"என்று கண்ணடிக்க ஷாக்சியின் முகத்தில் ஒரு நிம்மதி பரவியது. ஆனால் மித்ரனோ மனதுக்குள்

'மெழுகு சிலை மாதிரி இருக்குற உன்ன பக்கத்துல வெச்சிக்கிட்டு
எப்படித்தான் நான் கண்ட்ரோல்லா இருக்க போறேனோ'  என்று நினைத்துக்கொண்டான்.

ஒரு வாரத்தின் பின் ரோஹித்திடம் இருந்து மித்ரனுக்கு கால் வர அவன்
எல்லோரையும் ஒரு பார்க்கிற்கு அழைத்திருந்தான். ஷாக்சி, திவ்யா, மித்ரன், அர்ஜுன் , ரோஹித் என எல்லோரும் இருக்க மித்ரன் ரோஹித்தை பார்த்து

"இப்போ எதுக்கு ரோஹித் அவசரமா எங்க எல்லோரையும் கூப்பிட்ட "என்று கேட்க அவனோ

"உங்க எல்லோருக்கும் ஜானவி மேல ரொம்ப கோவம் இருக்கும்னு தெரியும்.
நடந்தது நடந்துடிச்சு, இனி அதுல எதயும் நம்ம மாத்த முடியாது. முதல்ல
மித்ரன் இந்த டாக்குமண்ட்ஸ்ல உங்கப்பாக்கு கொடுக்குறேன்னு சொன்ன ஒன்றரை
கோடிக்கான டீடைல்ஸ் இருக்கு. உங்களுக்கு எப்படி வேணுமோ அப்படியே எடுத்துக்கோங்க. கம்பனி செயார்ஸா வேணுமா இல்ல காசா வேணுமான்னு நீங்களே
டிசைட் பண்ணிக்கோங்க" என்று கூற கோவம் கொண்ட அர்ஜுன்

"இப்போ எதுக்கு இப்ப இப்படி சீன போடுற. காச கொடுத்து அவள நல்லவன்னு காட்ட
பார்க்குறியா. அவளாலதான் எங்க எல்லோரோட வாழ்க்கையும் இப்படி பாதில நிட்குது" என்று கூற அர்ஜுனை முறைத்த ரோஹித்

"முதல்ல நீ வாய மூடி அர்ஜுன். உன்னாலதான் ஜானவி இப்படி ஆனா" என்று கூற அர்ஜுனோ

"இது என்னப்பா புதுக்கதை. எங்க சொல்லு கேட்கலாம்" என்று கேட்டான்.

"உங்க எல்லோருக்கும் ஜானவிய ஒரு கோவக்காரி, பழிவாங்குற உணர்வு இருக்குறவ இப்படித்தானே தெரியும். அவ பாசத்துக்கு ஏங்குற ஒரு சாதாரண பொண்ணா உங்கள்ள
எத்தனை பேருக்கு தெரியும். சின்ன வயசுல அவ அம்மா இறந்துட்டாங்க. அப்பா கேட்டதெல்லாம் வாங்கி கொடுத்தாரு. ஆனா பாசத்த கொடுக்கல. அண்ணன்காரன் நீ
என்ன பண்ண உங்கப்பாகூட சண்ட போட்டுட்டு உன் லைப்ப பார்த்துக்க
போயிட்ட. ஒரு பொண்ணுக்கு ஆணோட அன்பும் பாசமும் எவ்வளவு முக்கியம்னு ஒரு
பொண்ணுக்குத்தான் தெரியும். இத இங்க இருக்குற திவ்யாவும், ஷாக்சியும் மறுக்க மாட்டிங்க என்று நினைக்கிறேன்" என்று கூற அவர்கள் இருவரும் சைகையாலேயே ஆம் என்று கூற தொடர்ந்த ரோஹித்

"சின்ன வயசுல இருந்தே ஒரு ஆணோட அன்பும் பாசத்துக்கும் அவ
ஏங்கிருக்கா. அவளுக்கு ப்ரெண்ஸ்னு சொல்லிக்கவும் யாருமில்ல. அவ படிச்சது முழுக்க லேடீஸ் ஸ்கூல். இப்படி இருக்கும் போதுதான் அவ காலேஜ்ல சதீஸ பார்த்திருக்கா. என்ன காரணம்னே தெரியாம அவன பார்த்ததும் அவளுக்கு பிடிச்சிருந்தது. அவன்கிட்ட அவ பேசலாம்னு இருக்கிறப்போதான் அந்த சம்பவம்
நடந்திருக்கு. அதுக்கு அப்புறம் நடந்த எல்லாம்தான் நமக்கு தெரியுமே.

ஆனா இதுல என்னன்னா அவளுக்கு கோவத்த கூட எப்படி காட்டனும்னு தெரியல. இன்னைக்கு கூட அவ வந்து உங்க எல்லோர்கிட்டயும் பேசுரேன்னு சொன்னா. ஆனா நாந்தான் அவள
வர வேணாம்னு சொன்னேன். ஏன்னா என்ன பொருத்தவரைக்கும் அவ பண்ணது எதுவுமே
தப்பில்ல. ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு கருத்து இருக்கும். இது என்னோட ஒப்பீனியன் இது உங்க எல்லோருக்கும் அது தப்பா கூட தோனலாம். அப்புறம் மித்ரன் உங்கப்பா கம்பனிய பத்தி சொல்ரேன். நிஜாமவே உங்கப்பா கம்பனிய
டெவலப் பண்றேன்னு ரொம்ப கடன் வாங்கி வெச்சிருந்தாரு. விஷ்வனாத் சார் ரொம்ப இலகின மனசு உள்ளவரா கம்பனில வேலை செய்யாம இருந்த 40% ஆனா ஆளுங்கள அவரு
எதுவுமே சொல்ரதில்ல. இது உனக்கே தெரியும் மித்ரன். கம்பனிய டெவலப் பண்ணும் போது இப்படி ஆளுங்க வேலை செய்யாம இருந்தா எதுவுமே பண்ண முடியாது. என்ன
அதுல கீர்த்தி அவினாஷ் மட்டும்தான் உனக்கு விஸ்வாசமானவங்கன்னு
நீக்கினோம், மத்த எல்லோருமே வேலை செய்யாம சம்பளம் எடுத்தவங்கதான். இந்த
லிஸ்ட்ட பாரு உனக்கே புரியும்" என்று மித்ரனிண்ட லிஸ்ட்ட கொடுக்க அவனும் பார்த்து விட்டு ஆமாம் என்று கூறினான். மெலும் தொடர்ந்த ரோஹித்

"உங்க கம்பனிய நாங்க பொறுப்பேற்கும் போது கம்பனியோட மொத்த வால்யூ 10 கோடி. இப்போ அது 18 கோடியா அதிகரிச்சிருக்கு. இதெல்லாம் ஏன் சொல்ரேன்னா
உங்கப்பா கம்பனிய பார்த்துக்கிட்டத விட நாங்க ரொம்ப நல்லா
பார்த்துக்கிறோம். வேணும்னா செயார்ஹோல்டர்ஸ் கிட்ட கேட்டு யாருக்கு மேனேஜ்மண்ட் பொறுப்ப கொடுக்குறதுன்னு கெட்கலாம்" என்று கூற மித்ரனோ

"இல்ல ரோஹித் நீ சொல்ரதெல்லாம் கரக்ட்தான். எங்கப்பா ரொம்ப சாப்ட்
ஹார்ட்டட். அதனாலேயே அவர எல்லோரும் ஈசியா ஏமாத்திடுவாங்க. அதனாலதான் நான் கம்பனி பொறுப்பை ஏத்துக்கிட்டு நிறைய மாற்றங்கள கொண்டு வரனும்னு
நினைச்சேன். அது எல்லாத்தையும் நீங்களே பண்ணிட்டீங்க. இப்போ நாங்க பண்ற பிஸ்னசே நல்லாதான் போகுது சோ எனக்கு அந்த கம்பனி தேவையில்லை. மோர் ஓவர்
அது எங்கப்பாவோட தனிப்பட்ட கம்பனி கிடையாது. அது பார்ட்னர்சிப்
கம்பனி. என்ன எங்கப்பா ரொம்ப காலமா அட்மினிஸ்ட்ரேசன் எல்லாமே
பார்த்துக்கிட்டாரு. எனக்கு அடி பட முன்னாடி 50% மேல செயார்ஸ்
அப்பாகிட்டதான் இருந்திச்சி. அப்புறம்தான் எல்லாமே மாறிடிச்சி" என்று கூற ரோஹித்

"ஹ்ம்ம் சரி மித்ரன். அப்புறம் அடுத்தவாரம் எங்களுக்கு மேரேஜ். நீங்க யாரும் வந்துடாதீங்க. என்னடா கல்யாணத்துக்கு வர வேணாம்னு சொல்ரானேன்னு தப்பா நினைக்காதீங்க. அவளுக்க்கு பழசு எதுவும் ஞாபகப்படுத்த வேணாம்னுதான்
இப்படி சொன்னேன். ஏன்னா நான் ஜானவிக்கு அவ எதிர்பார்த்த அன்பு
எல்லாத்தையும் என்மூலமா கொடுக்கலாம்னு இருக்கேன். உங்க எல்லோரையும் அவ
பார்த்தா அவ மனசுல ஒரு கில்டி பீலிங்க் வரும். என் ஜானுக்கு அது
வரக்கூடாதுன்னு நினைக்கிறேன்" என்று கூற ரோஹித் கூறியதை எல்லோரும் ஏற்றுக்கொள்ள அர்ஜுனோ

"டேய் நானும் வரக்கூடாதாடா?" என்று பாவமாக கேட்க

"நீ இல்லாம எப்படி. எனக்கு இருக்குற ஒரே ஒரு மச்சான்.ஆனா ஒன்னு அர்ஜுன் தயவு செஞ்சி அவகிட்ட பழசு எதயுமே பேசாத ப்ளீஸ் " என்றான்.

"இல்ல ரோஹித் நான் ரொம்ப தப்பு பண்ணிட்டேன். என் தங்கச்சிக்கு காசு ,வசதி இருக்கான்னு பார்த்தேன்னே தவிற அவ மனசுல என்ன எதிர்பார்க்குறா என்று
பார்க்கவே இல்லை. ஜானவி இப்படி ஆக நானும் ஒரு காரணம். அவள ஏதும் டாக்டர் கிட்ட.." என்று அர்ஜுன் கூற அவனை முறைத்த ரோஹித்

"அவளுக்கு ஒன்னுமில்ல. அவளுக்கு தேவை எதிர்பார்ப்பில்லாத அன்பு. அத நான் அவ ஆயுசுக்கும் கொடுப்பேன். என் ஜானு எனக்கு இப்போ எப்படி இருக்காலோ அப்படியேதான் வேணும். அப்புறம் டாக்டர்கிட்ட போற அளவுக்கு அவளுக்கு ஒன்னுமே இல்லை" என்று கூறி சென்றான்.

எல்லோரும் வீட்டிற்கு வர திடீரென்று மயக்கம் வந்து தலை பிடித்து அமர்ந்த
ஷாக்சி வாந்தி எடுத்தாள். அதை தன் கைகளில் தாங்கிய மித்ரன் இதில் இரத்தம் கலந்திருக்க பயந்தவன் ஷாகியை பார்க்க அவள் அப்படியே மயங்கி சரிந்தாள்.

Bạn đang đọc truyện trên: Truyen2U.Pro