1

Màu nền
Font chữ
Font size
Chiều cao dòng

"கேட்டிமேளம் கேட்டிமேளம்" என்று ஐயர் கூற கையில் மாங்கல்யத்தை பெற்று கட்ட ஆயத்தமாக

"மாங்கல்யம்
தந்துனானே மம ஜீவன
ஹேதுனா
கண்டே பத்னாமி சுபாகே
சஞ்சீவ சரத சதம்"

என்ற மந்திர சத்தம் கேட்க... இசை (இசையரசன்) கையில் இருந்த மாங்கல்யத்தை இனியா வின் கழுத்தில் கட்டினான்... அதே நேரம் அதே இடத்தில் பக்கத்தில் அமைக்கப்பட்டிருக்கும் மணவறையில் அன்பு (அன்புச்செல்வன்) கையில் இருந்த மாங்கல்யத்தை எழில் கழுத்தில் மிகவும் வெருப்புடன் கட்டினான்...

"நானா உன்னவிட்டு போகனும்னு நெனச்சேன்,, உன்ன மறக்கனும்னு நெனச்சேன்,, எனக்கு சுயமறியாதைதான் முக்கியனு பட்டுச்சு,, அதா 3 வருசம் உயிருக்கு உயிரா லவ் பண்ண உன்னவிட்டு எந்த காரணமும் சொல்லாம பிருஞ்சேன்,, ஆனா நம்ம காதல் உண்மை டி அதான் நம்மல சேத்துவெச்சுருச்சு" என்ற பூரிப்புடன் இனியாவின் நேற்றியில் குங்குமம் இட்டான் இசை.

"ஏன் டா என்ன லவ் பண்ற மாதிரி நடுச்சுட்டு,, என்கிட்ட எதுவும் சொல்லாம என்ன அவாய்ட் பண்ணீட்டு சும்மா டைம் பாஸ்க்கு தான் லவ் பண்ண னு சொல்லீட்டு என்ன எவ்லோ அழுக வெச்ச,,, இப்போ ஏதோ ஒரு கட்டாயத்துல என் கழுத்துல தாலி கட்டீருக்க,, உன்ன நான் மணிப்பனு நெனைக்கறயா?? மாட்ட மணிக்கவே மாட்ட... போச்சு என் வாழ்க்கையே வீணாபோச்சு" என்று கண்ணீர் வடித்துக்கொண்டே மனதில் புலம்பினாள் இனியா.

அதே நேரம் " என் லைப்பே போச்சு,, எனக்கு எவ்லோ ஆசை இருந்துச்சு,, எனக்கு என்னோட வைப் பத்தி எவ்லோ கனவு இருந்துச்சு எல்லா போச்சு,, இந்த பட்டிக்காட்ட கட்டிவெச்சுட்டாங்களே,,, ஐயோ இவளுக்கு நா எது சொன்னாலும் புறியாதே,,, எப்டியாவ்து இவகிட்ட பேசி டிவர்ஸ்க்கு ஓகே சொல்ல வெச்சறனும், எல்லா என்விதி " என்று மனதில் தன் விதியை நொந்துகொண்டு எழிலின் நெற்றியில் குங்குமம் இட்டான் அன்பு.

" ஐயோ எழில் இவனுக்கும் உனக்கும் செட்டே ஆகாது,, வீட்ல யார்கிட்டையும் மறியாதையா பேசவும் மாட்டான், எதுக்கு எடுத்தாலும் கோவம் வரும், கொஞ்சம்கூட பாசம், குடும்பம்னா என்னனே தெறியாது,, சுத்தமா செட் ஆகாது,,, என்ன பாத்தாலே எதோ வேற்றுகிரகத்துல இருந்து வந்தவங்க மாதிரி மொறைப்பான்,,, இல்ல இந்த லைப் வேண்டா,, இவன் பிடிக்காம ஏன் ஊருக்காக நடிக்கனும் இவன்கிட்ட டிவர்ஸ்பத்தி பேசனும் " என்று மனதில் புலம்பியபடி இருந்தால் எழில். சற்று முன்பு வாங்கிய அறையால் கண்ணத்தில் 4 விரல் பதிந்து சிவந்து இருந்தது அவளுக்கு.

நெடுநாட்களுக்குபின் காதலியின் கை பிடித்து அக்னியை வலம் வரும் சந்தோசத்தில் இசையின் முகம் மலர்ந்து இருந்தது. " என்ன கைவிட்டுட்டு போனவன் தானு டா நீ,, ச்சீ உன் கைய பிடிக்கவே அருவருப்பா இருக்கு"  என்று மனதில் இருக்கத்துடன் அவனுக்கு இணையாக வலம் வந்த இனியாவின் முகம் கோவத்தில் சிவந்து இருந்தது.

தன் அன்னையை முறைத்து
கொண்டு  அன்புவும், தன் தந்தையை பாவமாக பார்த்துக்கொண்டு எழிலும் அக்னியை வலம் வந்தனர்...

சடங்குகள் முடிய அடுத்த படியா பெற்றவர்கள் காலில் விழுந்து ஆசி பெற்றனர் இரு ஜோடிகளும்... சாதாரணமாக கோவிலில் அவசரமாக நடத்தப்பட்ட திருமணம் என்பதால் கூட்டம் குறைவாகவே இருந்தது... இரு ஜோடிகளும் குடும்பத்துடன் நின்று புகைப்படம் எடுத்தனர் (vanga photo vaa pathu yaru yaru ena ena character and ena role nu pappom)

வெள்ளைவேட்டி-வெள்ளைசட்டை மற்றும் பஞ்சுபோல நரைத்த வெள்ளை நிறத்தில் முருக்கு மீசையும், தலைமுடியும் கொண்டு கைத்தடியை கையில் பிடித்துக்கொண்டு கண்ணாடியுடன் அழகாக சிரித்துக்கொண்டு இருப்பவர் தான் நடராஜன், குடும்பத்தின் ஆணிவேர், 88 வயதான தாத்தா. (பாட்டி இல்லை காலமாகி நான்கு வருடங்கள் ஆகிறது)

அவரின் பக்கத்தில் அதே சாயலில் குறைவான நறைமுடியுடன் கம்பீரமாக மிரட்டும் தோனியில் இருக்கும் குழந்தை உள்ளம் கொண்ட 58 வயதான இன்பா (இன்பராஜன்) அந்த குடும்பத்தின் மூத்த மகன், அவரின் மனைவி சரஸ்வதி மூத்த மருமகள், அன்பான குணம் , அமைதியான முகம் கொண்டவர். இந்த தம்பதியின் ஒரே மகன்தான் இசையரசன் .

இசையரசன் ஆறடி உயரம், அளகிய புருவம், கோதுமை நிறம் கொண்டவன். கிரமத்தின் வாசனைக்காக ஏங்கும் நகரவாசி அதனாலையே அடர்த்தியான மீசை வைத்திருப்பான் ( athuvum style than epo)  கோவம் குறைவாகவே வரும் குணம், வீட்டில் அனைவருக்கும் மறியாதை அளித்து பாசமாக நடந்து கொள்வான்.  திருமணம் ஆகி 5 வருசம் குழந்தை இல்லாமல் பிறந்ததால் மிகவும் செல்லம். ஐ ஐ டி - மெட்ராஸ் (IIT Madras) ல் பொறியியல்-கணினி அறிவியல் (B.E Computer Science) பிரிவில் படித்து ஏ & ஐ குரூப்ஸ்ன் ( A & I Groups) 50% ஷேர் ஹேல்டர். (அறிமுகம் இது போதும் மீதம் கதை நகர நகர சொல்ற)

தாத்தாவின் இடதுபுறம் அமர்ந்து இருப்பவர் மகாலட்சுமி , தாத்தாவின் இரண்டாவது குழந்தை. கொஞ்சம் பெருமை பேசும் பெயர்வலி. தான் தவறே செய்தாலும் அதுதான் சரி என்று கூறும் குணம். குடும்பம் முழுவதும் என் கட்டுப்பாட்டின் கீழ் இருக்கிறது என்று பெருமை அளப்பவர். அவருக்கு ஒரே மகள், மகளிற்க்கு திருமணம் ஆகி ஒரு பெண் குழந்தை (அபிநயா) உண்டு. அபி +2 படிக்கிறாள். (Romba sonna kolappikkum pothum)

அடுத்து தாத்தாவின் மூன்றாவது குழந்தை செல்வா (செல்வராஜன்), அவரும் தாத்தாவின் சாயலில் இருப்பார். பொருமையின் சிகரம் (poga poga therium en epd sonnanu 😂) அன்பான மனிதர், அவர் மனைவி தாமரை  , இவர் அமைதியின் சிகரம். ஆனால் கடவுளின் வஞ்சத்தால் இவர்களுக்கு குழந்தைபேரு கிடைக்கவில்லை.

அடுத்து தாத்தாவின் நான்காம் குழந்தை ராஜ் (ராஜராஜன்), தாத்தாவின் சாயலில் கம்பீரமாக இருப்பவர். கோவக்காரர் ஆனால் பாசம் என்றால் உயிரையும் தரும் குணம் கொண்டவர். உடன்பிறப்புகளின் மேல் கொள்ளை அன்பு கொண்டவர். அவரின் மனைவி பார்வதி குடும்பத்தின் கடைசி மருமகள், எதார்த்தமாக பேசுபவர். குடும்பத்தில் உள்ள வாண்டுகள் அனைவரும் இவரிடமே அதிகம் ஒட்டிக்கொள்வார்கள். இந்த தம்பதியின் ஒரே மகள் எழில்.

பார்ப்பதற்க்கு கிரமத்தின் பெண்கள் சாயலில் நீலமான முடி, எளிமையான உடைகள், மேக்கப் போடபிடிக்காதவள் ஆனால் இயற்க்கையாகவே அழகி. புதிய நபர்களிடம் அதிகம் பேசமாட்டால் ஆனால் பிடித்தவர்களிடம் பேசியே காதில் இரத்தம் வரவைப்பால். ஜி.சி.டி கோயமுத்தூரில் ( GCT Coimbatore) பொறியியல்-கணினி அறிவியல் (B.E Computer Science) இறுதி ஆண்டு முடித்து 2 மாதம் ஓய்வு எடுக்கிறாளாம் 😂😂. (புள்ள படுச்சு படுச்சு டையர்டு ஆகீருச்சு போல) அவளுக்கு கணினி துறையில் கோட் டெவலப்பர் (code developer)ஆக வேண்டும் என்பது தான் கனவு.

அடுத்து தாத்தாவின் கடைசி குழந்தை (தாத்தாக்கு மொத்தம் 5 கொழந்தைங்க) மணிமேகலை , ஒரு அண்ணன் இருந்தாலே பாக்கியம் என்னும் நிலையில் மூன்று அண்ணன்களின் செல்ல தங்கை. பதினேழு வயதிலேயே திருமணம் ஆகி ஒரு ஆண் குழந்தைக்கு தாய் ஆனார். வீட்டின் கடைகுட்டி என்பதால் எது கேட்டாலும் கிடைக்கும் ஆனால் மிகவும் அப்பாவி குடும்பம் குடும்பம் என்று மட்டுமே யோசிப்பாவர். மூத்த அண்ணன்ங்கலைவீட கடைசி அண்ணனிடம்  மிகவும் பாசம். அவரோட கணவர் குணசேகரன் அன்பான கணவர், பொருப்பான தந்தை. இந்த தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் ஒன்று அன்புச்செல்வன்
இன்னும் ஒன்று இனியா.

அன்புச்செல்வன்  6.1' அடி உயரம், திராவிட நிறம், திராவிட முகம். நவீன வாழ்க்கை முறையில் ஈடுபாடு அதிகம் கொண்டவன். வித விதமான ஹேர் ஸ்டைல், மீசை அமைப்புகளில் ஈடுபாடு அதிகம். அதிகம் கோவம் வரும் குணம் கொண்டவன், பாசம் அதிகம் இருந்தாலும் வெளிக்காட்டத் தெறியாதவன். அனைவருக்கும் நல்லதே நினைத்துகூறுவான் ஆனால் சில சமயங்கலில் குடும்பத்தில் அனைவரும் அதை தவறாக நினைத்துவிடுவார்கள். கருத்துவேறுபாட்டினால் சண்டையிட்டுக்கொண்டு வெளியேறி விடுவான். குடும்பத்தை பொருத்தவரை வீட்டிற்கு அடங்காத பிள்ளை இவன்.

27 வயதான இவன் ஐ ஐ டி - டெல்லியில் (IIT Delhi) பொறியியல்-கணினி அறிவியல் (B.E Computer Science) பிரிவில் படித்து ஏ & ஐ குரூப்ஸ்ன் ( A & I Groups) 50% ஷேர் ஹேல்டர்.

(A & I Groups - Anbu and Isai Groups than A & I)  இருவரும் சேர்ந்து நடத்தும் நிறுவனம் அது.

அடுத்து இனியா அண்ணனை போலவே நவீன வாழ்க்கை முறையில் நாட்டம் கொண்டவள். தோள்வரை அளவெடுத்து வெட்டப்பட்ட முடிகள், மை இட்ட கண்கள், நவநாகரீக உடைகளுடன் இருப்பாள். எழிலும், இவளும் பார்ப்பதற்கு இரட்டையர் போல தோற்றம் தரும். எல்லோடிடமும் எளிதில் பழகி விடுவாள் ஆனால் கோவம் வந்து வெருத்தால் திரும்பியும் பார்க்ககூட மாட்டாள். பாசக்காரி அதுவும் எழில் என்றால் உயிர்.

எழிலும், இவளும் ஒரே வயது ஆனால் எழில் இரண்டு மாதம் பெரியவள். சிறுவயதில் இருந்தே ஒரே பள்ளி, ஒரே கல்லூரி என ஒன்றாகவே இருப்பார்கள். எழில் படித்த அதே ஜி.சி.டி கோயமுத்தூரில் ( GCT Coimbatore) பொறியியல்-கணினி அறிவியல் (B.E Computer Science) இறுதி ஆண்டு முடித்து இவளும் ரெஸ்ட் எடுக்கிறாளாம்😂. அண்ணனின் கம்பெனி புது பிரிவை நிர்வகிக்க வேண்டும் என்பது இவள் ஆசை.

குடும்பத்தின் இரட்டைவாளு என்றே அனைவரும் இவர்களை  (இனியா - எழில்) அழைப்பார்கள் அவ்லோ குரும்பு. இனியா அதிகம் அவளுடைய அண்ணா அன்புவிடம் ஒட்டமாட்டால் ஏன் என்றால் கருத்துவேறுபாடு அதிகம் ஏற்படும். (அவ்லோ தான் போட்டோல இருக்க எல்லாரையும் அறிமுகப்படுத்தீட்டன் இனி கதைய பாப்போம்)

போட்டோ எடுத்துவிட்டு கோவிலுக்கு வெளியில் வந்த ஜோடிகளில் இனியா வேகமாக வந்து எழிலை அணைக்க,, அன்பு இசையின் காதில் " உன்கிட்ட பேசனும் அங்க வா டா" என்று கூறிவிட்டு நகர்ந்தான்.

இசை நகர்ந்து செல்ல,, எழில் இனியாவிடம்  " என்ன டி இப்டி ஆகீருச்சு?? 😭... உங்க அம்மா கம்முனே இருக்காதா டி😭😭" என்று அணைத்து அழ இனியாவோ  " யார இனி என் லைப்ல பாக்கவே கூடாதுனு நெனச்சு வெறுத்தனோ அவனையே கல்யாணம் பண்ற மாதிரி ஆகீருச்சு டி😭.... ஏன் எழில் உங்க அண்ணுக்கு டைம் பாஸ்க்கு என் லவ்தான் கெடச்சுதா டி" அதற்கு எழில்...

"அப்டி இல்ல டி அண்ணா ஒன்னு சொன்னான்னா எதாவ்து காரணம் இருக்கும் டி" இதை கேட்ட இனியா கோவத்தில் "போதும் நிறுத்து உங்க அண்ணனுக்கு சப்போர்ட் பண்ணாத அவன் சீட் ப்பெலோ,, உனக்கே தெறியும்ல என்ன ஆச்சுனு"  என்று பொறிய.. எழில் அழுதுகொண்டே இனியாவை அணைத்துக்கொண்டு...

"ஏன் டி நீங்ககூட 3இயர்ஸ் லவ் பண்ணீங்க,, ஆனா நா என்ன டி பண்ண😭 எனக்கு ஏன் இப்டி ஒரு தண்டனை... உங்க அண்ணனுக்கும் எனக்கும் என்ன டி சமந்தம்... " என்று அழுகையுடன் அணைக்க... இனியா

"எல்லாமே என்னால தான் டி... சாரி.... எழில் ஐம் ரியலி சாரி டி ஆனா அன்பு ரொம்..." முடிப்பதற்க்குள் அவளின் வாயில் கைவைத்து அடைத்து எழில்...

" நீ  சாரி எதுவும் கேக்கவேண்டாம் டி அப்றம் உங்க அண்ணன் நல்லவன்னு சொல்ல வேண்டா,, நம்ம குடும்பத்துல எல்லாருக்கும் அவன பத்தி தெறியும் ப்ப்ச்ச் அதவிடு நீ அண்ணாகூட சமாதானம் ஆகீறேன் ப்ளீஸ் டி" அதைகேட்ட இனியா கோவத்தில் முறைக்க மருபடியும் எழில்...

"புறியுது டி சாரி..." என்று கூறிவிட்டு தன் வாழ்க்கை இப்டி ஆகிவிட்டதே என்று தோழியாய் அவள் தோளில் சாய்ந்து அழுது தீர்த்தால்... அங்கு

அன்பு,, இசையை கண்டதும் கோவத்தில் சட்டையைபிடித்து "உன்னால மூனு பேரோட லைப்பும் போச்சு டா இசை உன்ன சும்மா விடமாட்ட" என்று சரமாரியாக வெளுத்துக்கொண்டு இருந்தான்.

Next part la pakkala bye👋

Bạn đang đọc truyện trên: Truyen2U.Pro