14

Màu nền
Font chữ
Font size
Chiều cao dòng

Friends oru Chinna req story la spelling mistakes neraiya irukku.. mistakes iruntha atha select panni comment la podunga pa.. enakku konjam mistakes aa crct pannika easy aa irukkum ...

இசை கூறிய அனைத்தையும் கேட்டு இனியாவின் முகம் கோவத்தில் கொந்தலித்தது...

"இனியா....." என்று அவளின் தோள்மேல் கை வைத்தவனை 'பளார்' என்று ஒரு அறைவிட்டாள் இனியா...

கன்னத்தில் கை வைத்தவன் நிமிர்ந்து அவளை பார்க்க... அவள் " இந்த காரணத்துக்காக தான் ப்ரேக்கப் பண்ணயா???" என்க அதற்கு அவன் ஆம் என்று தலையாட்ட அவள் " ஏன் டா அவ சொன்னானு என்னவிட்டுட்டு போனல அப்றம் எதுக்கு இப்போ வந்து பேசற.. இப்போ கூட அவ எதாவது சொல்லுவா எதுக்கு என்கிட்ட பேசற போ..." என்றாள்..

அதற்கு இசை " இல்ல மா,, அப்போ வேற இப்போ வேற... இப்போ யாரு என்ன சொன்னாலும் உன்னவிட்டு நா போகமாட்ட... ஏன்னா நீ என் பொண்டாட்டி" என்க...

அதற்கு அவள் " என்னமோ நீ போறாடி கஷ்டப்பட்டு கல்யாணம் பண்ண மாதிரி பேசற.. எங்க அம்மாக்கு ஒடம்பு சரி இல்லனு சொன்னதால தானு என்ன கல்யாணம் பண்ண... இப்போ வந்து என்னமோ ரொம்ப லவ் பண்ற மாதிரி பேசற .. வாயமூடிட்டு தூங்கு " என்றவளை..

இசை கோவமாக " என்ன டி ஓவரா பேசற.. நா ஏதோ தெறியாமா தப்பு பண்ணீட்ட அதுக்கு ஏன் டி இப்படி படுத்தற... இனியா சாரி டி..." என்க...

அதற்கு அவள் " என்ன சாரி... இப்போ இப்படி பேசற ஒருவேல நா செத்து...." அவளை பேசவிடாமல் அணைத்து இதழை சிறைபிடித்தான்... கோவத்தில் இனியா அடித்தாள், அவனை தள்ளிவிட்டாள் ஆனால் இசை அவளை விடவே இல்லை....

இனியா மனம் இறங்கினால் ஆனால் இசையிடம் விளையாட எண்ணி அவனை வேகமாக தள்ளிவிட்டு  " இனிமேல் உனக்கு இந்த உரிமையெல்லா இல்ல.. பேசாம போய் தூங்கு அப்றம் நா மனுஷியா இருக்க மாட்டா.." என்று கூறிவிட்டு கட்டிலில் ஒரு ஓரமாக படுத்துக்கொண்டாள்...

இசை " என்ன டி இப்படி பண்ற... சாரி டி...மாமா பாவம் கொஞ்சம் பேசேன் டி ப்ளீஸ்" என்று கெஞ்ச..

இனியா மனதிற்க்குள் " நா எவ்வளவு கெஞ்சுன... எவ்வளவு அழுத... நீயும் கொஞ்ச நாள் அழு மாமா... எனக்கா தோனும் போதுதான் உன்கிட்ட பேசுவ..." என்று நினைத்துக்கொண்டு அமைதியாக படுத்திருந்தாள்.

இசை " என் செல்லக்குட்டி... இப்போ மாமாகூட பேசுமாம்... " என்று அவளருகில் படுத்தவன் அவளை திருப்ப அவளோ வேகமாக எழுந்து தரையில் ஒரு போர்வையை விரித்து படுத்துக்கொண்டாள்...

அதற்கு அவனோ " இனியா சரி உன்ன டிஸ்டப் பண்ணமாட்ட... நீ இங்கையே தூங்கு.. " என்க...

அதற்கு இனியா " ஒன்னும் தேவையில்ல...  என்ன தூங்கவிடு  நா காலைல எழுந்து அம்மா ஆப்ரேசன்க்கு போகனும்" என்று கூறியவள் இசையை பார்க்க அவனோ கோவமாக படுத்திருந்தான்... இனியா  மனதிற்க்குள் " கோவப்படுறயா... இன்னும் நெரையா கோவப்படு மாமா... எனக்கும் கோவம்தான்... கொஞ்ச நாள் உன்கிட்ட வெளையாடிக்கற... என் செல்லமாமா உன்கிட்ட நா வெளையாடாம வேற யாரு டா வெளையாடுவா..." என தனக்குள் சிரித்துக்கொண்டாள்...

அப்படியே இருவரும் உறங்கிப்போக காலைப்பொழுது வந்தது... முதலில் விழித்த இசை கீழே இறங்கி வந்தான் அங்கு அன்பு காபிக்கப்புடன் அமர்ந்து இருந்தான்...

இசையை பார்த்த அன்பு அவனை அருகில் இழுத்து அவன் காதிற்க்குள் " மச்சா என்ன டா சமாதானம் ஆகிட்டீங்கலா..." என்க .. இசையோ பாவமாக இல்லை என்று தலையசைத்தான்... அவன் பாவமாக இருப்பதைப்பார்த்த அன்பு அவன் காதில் ஒரு திட்டத்தை சொன்னான்..

அதற்கு இசை " எப்புடி மச்சா அம்மாக்கு ஆப்ரேசன் இந்த டைம்ல... இல்ல டா சேன்ஸ்ஸே இல்ல..." என்க...

அதற்கு அன்பு " இல்ல டா நா எழில் கிட்ட கேக்கற... அவளவிட்டு இனியாகிட்ட பேச சொல்லலாம் டா.." என்க...

இசையோ " ம்ம்ம்ம்... ட்ரை பண்ணி பாரு டா" என்றான் சோகமாக...

இசையிடம் அன்பு பேசிக்கொண்டிருக்கும் போது எழில் எழுந்து கீழே வர... அவளைக் கண்ட அன்பு கண்களால் " மேல வா..." என்க...

எழிலிற்கு தூக்கத்தில் எதுவும் புரியாமல் மேலே பாத்துவிட்டு " மேல என்ன இருக்கு" என்று கண்களால் தேடிவிட்டு அன்புவை பார்த்தவள் கண்களால் அவளிடம் " மேல ஒன்னு இல்ல" என்க...

அன்பு மறுபடியும் கண்களால் " மேல வா... உன்கிட்ட பேசனும்" என்க...

பாவம் அவளோ " ஒன்னும் புரியல " என்றாள் சைகையில் .....

அன்பு கோவமாக எழுந்து மணிமேகலையிடம் " அம்மா நா குளிக்க போற... 11 மணிக்கு உங்களுக்கு ஆப்ரேசன் சோ இப்போல இருந்து ரெடி ஆனாதான் எல்லாரும் ரெடி ஆக கரெக்ட்டா இருக்கும்..." என்று தன் அறைக்கு சென்றான்....

இசையும் " ஆமா அத்த நானும் ரெடி ஆகற" என்று அவன் அறைக்கு சென்றான்.....

அறைக்கு சென்ற அன்பு எழிலிற்காக காத்திருந்தான்... வெகு நேரம் ஆகியும் அவள் வராததால் குளிக்கச்சென்றான்... அந்த நேரம் எழில் அறைக்கு வந்தாள்... உள்ளே நுழைந்தவள் அவளின் அறை ஞாபகத்தில் கதவை சாத்தினாள்... சாத்திய பின்பு தான் நினைவுக்கு வந்தது "ஐயோ இத வேற சாத்திட்டானா... போச்சு அந்த கொரங்கு கிட்ட ஹெல்ப் கேக்கனுமே... நேத்தெல்லாம் ஞாபகம் இருந்துச்சு இன்னைக்கு மறந்துருச்சே" என்று தலையில் அடித்துக்கொண்டு திரும்பவும்...

அன்பு குளித்துவிட்டு துண்டைக்கட்டிக்கொண்டு வெளியே வரவும் சரியாக இருந்தது... அவனைப் பார்த்த எழில் வேகமாக கண்களை மூடிக்கொண்டு "ஐயோ அம்மா.... நா எதுவும் பாக்கல...." என்று கத்தினாள்...

'யாக்கை திரி காதல் சுடர்....அன்பே...' என்று பாடிக்கொண்டே வந்தவன் எழில் கத்தவும் அவளைப் பார்த்து "ஐயயோ....... ஓ மை காட்... " என்று மறுபடியும் குளியலறைக்குள் புகுந்தான்... தலையை மட்டும் வெளியே நீட்டியபடி எழிலிடம்

" ஓய்ய்... வெளிய போ.... அப்போ தான் நா வெளிய வர முடியும்... " என்று முடிப்பதற்க்குள் எழில் கதவைத்த முயல அது முடியாமல் போனது... கதவை பார்த்தபடி "ஹேய் தெறக்கமுடியல பா... ஹெல்ப் பண்ணு" என்க...

அதற்கு அன்பு " சரி நீ அப்படியே நில்லு நா என் ட்ரஸ் எடுத்துட்டு உள்ள போய்க்கற... " என்க.. எழில் சரி என்றாள்.. பின் அன்பு " திரும்பீறாத... வைட்... வைட் எடுத்துக்கற" என்று கூற எழிலிற்கு சிரிப்பு வந்தது...

" நா திரும்ப மாட்ட... நீ ஒன்னும் பயப்படாத... " என்றாள்...

குளியலறையில் உடை மாற்றிய அன்பு வெளியில் வந்து எழிலிடம் " ஹேய் லட்டு திரும்பு " என்க அவளும் திரும்பினாள்... அவளிடம் அன்பு "எனக்கு ஒரு ஹெல்ப் வேணும்.. ப்ளீஸ் நா சொல்லற மாதிரி இனியாகிட்ட சொல்லறயா..." என்க...

என்ன என்பதைப்போல் அவள் பார்க்க அவனோ " இங்க பாரு... நா இப்போ சொல்லறத அப்படியே இனியாகிட்ட அன்ட் எங்க அம்மாகிட்ட நீ பேசனும் " என்றான்...

எழில் " என்ன சொல்லு" என்க...

அவனோ " நம்ம ரெண்டு பேரும் ஹனிமூன் போகப்போறோம்" என்றான்...

எழிலிற்கு கைகள் நடுங்க "வ்வாட்.... நம்மலா.... புரியல... " என்க..

அவன் " இனியாகிட்ட போயி 'நானும் அன்புமாமாவும் ரெண்டு நாள் கழுச்சு மறையூர்ல இருக்க நம்ம எஸ்டேட் வீட்டுக்கு ஹனிமூன் போறோம் நீயும் வரியா'னு கேளு" என்க...

அவளோ " ஏய் லூசூ இப்படி கேட்ட அவ சொல்லுவா 'உங்க ஹனிமூன்க்கு என்ன ஏன் டி கூப்பட்ற'னு... உனக்கு அறிவே இல்லயா...." என்க...

அதற்கு அன்பு " அட ஆமா... வேற என்ன பண்றது .." என்று பாவமாக அவன் கேட்க...

எழில் " உனக்கு என்ன ரெண்டு நாள் கழுச்சு நம்ம மறையூர் போகனும் அவ்லோதானு அத நா பாத்துக்கற... நா மணிகிட்ட பேசற... ஓகே வா... கூல்" என்றாள் அமைதியாக...

அதற்கு அன்பு "ம்ம்ம்ம் தேக்ஸ் டி " என்க...

எழில் " என்னது டி அஅஅ பல்ல தட்டி கைல குடுத்துருவேன்... டி சொன்ன அப்றம் பாரு" என்று கோவம் கொள்ள..

அவனோ அவளை சீண்ட " சரி டி லட்டு" என்க...

எழில் அவனை முறைத்துவிட்டு "உன்கிட்டலா மனுஷன் பேசுவானா " என்று வெளியேற கதவை திறக்க அவளால் முடியவில்லை... திறக்க முயற்ச்சித்துக் கொண்டு இருக்க...

அவளின் பின் இருந்து அன்பு கதவை பிடித்து இழுக்க.. அவளும் உடன் சேர்ந்து இழுத்தாள் " என்கிட்ட மனுஷன் பேசமாட்டா.. உன்ன மாதிரி தேவாங்கு (குரங்கு இனம்) தான் பேசும் " என்க...

அவளோ " ஓஓஓ நா தேவாங்குனா நீ கொரிலா... நீ ஒரு காட்டு கருங்கொரங்கு..." என்க...

அவனோ சிரித்துக்கொண்டே கதவை இழுக்க அவள் கூந்தலில் இருந்து ஒரு நறுமணம் அவனை ஏதோ செய்ய... " ஹேய் ஹேர் ஸ்ப்ரே யூஸ் பண்ணுவியா... என்ன ப்ரேன்ட்" என்க..

அவளோ " ஐயே அதெல்லா யூஸ் பண்ண மாட்டா... " என்க...

அதற்கு அன்பு " இல்ல நீ யூஸ் பண்ற... பொய் சொல்லாத... வாசம் நல்லா இருக்கு... " என்றான்...

எழில் " அது ஹேர் ஸ்ப்ரே இல்ல பா... நம்ம பாட்டி முடி வளர ஒரு பொடி குடுத்துச்சே அதுதான்" என்க...

அதற்கு அன்பு " பாட்டி யா.... பொடியா... பொய் சொல்லாத... இது ஹேர் ஸ்ப்ரே தான்... நீ பொய் சொல்லற" என்க..

அதற்கு அவள் அவனிடம் திரும்பி " வைட் உனக்கு அந்த பொடி போட்டு விட்ற... கதவ தெறக்க ஹெல்ப் பண்ணு.. " என்க.. அவனும் உதவி செய்தான்...

வெளியில் வந்த எழில் சாம்பராணி பாத்திரத்தில் நெருப்புக்கட்டைகளை இட்டு எடுத்து அவனருகில் வந்து " இங்க பாரு சாம்பராணி பொக போடுற மாதிரி இத எடுத்துக்கனும்... அப்றம் இந்த பொடிய இதுல போடனும்... அப்றம்..." என்று அவன் தலையின் பக்கம் புகையை ஊதி தலை துவட்ட...

அன்புவோ " சூப்பரா இருக்கு பா... செம.. இது எப்படி பண்ணனும்.. எதுக்காக பண்ணனும்" என்றான்

அதற்கு அவளோ " நம்ம கிராமத்துல இருக்குல 60ஆம் தலை, சின்னித்தலை, நாகதாலி இலை, கத்தரி மஞ்சள் எல்லா வெயில்ல காய வெச்சு பொடி பண்ணி இப்படி போட்டா முடி நல்லா வளரும் பா... நல்லா வாசணையா இருக்கும் " என்க...

அதற்கு அவன் " ம்ம்ம்ம் நல்லா இருக்கு ... சரி நா சொன்னது ஞாபகம் வெச்சுக்கோ... ஓகே.. " என்க...

அதற்கு அவள் " ஓகே " என்று எழப்போக அங்கு நெருப்பு துண்டு ஒன்று கீழே விழுந்து இருந்தது அதன்மேல் தெரியாமல் காலை வைத்தவள் " ஆஆஆஆ ஐயோ அம்மா... " என்று கத்திக்கொண்டே காலைப் பிடிக்க...

அன்பு " ஹேய் என்ன ஆச்சு.." என்க... அவளோ கட்டிலில் அமர்ந்து காலை பிடித்து ஊதிக்கொண்டு இருந்தாள்...

அதற்கு அன்பு " ஒன்னு இல்ல..." என்று அவனும் பக்கத்தில் அமர்ந்து ஊதிவிட்டான்...

அவள் " எறியுது " என்க... அவனோ அவள் கால்களை மடியில் எடுத்து வைத்து ஊதிவிட்டான்...

தங்களுக்குள் காதல் மலர்ந்ததை உணராத இவர்கள் எப்படி காதலை உணரப்போகிறார்கள்.

Next part la pakkala ta ta 👋

Sorry frnds konjam late update... Nethu konjam manasu Sari illa ennala update yosikka kuda mudiyala... Sorry ellaraium wait panna vechutten...

Bạn đang đọc truyện trên: Truyen2U.Pro