34 - தீபாவளி

Màu nền
Font chữ
Font size
Chiều cao dòng

இந்த தீபாவளி இசை-இனியா,
அன்பு-எழில் இந்த இரண்டு ஜோடிகளுக்கும் தலைதீபாவளி ஆனால் மகாலட்சுமியின் செயலால் அவர்கள் தீபாவளி கொண்டாட இயலாத நிலையில் இருப்பதால் இந்த தீபாவளியை அவர்களின் குழந்தைப்பருவ நிகழ்வுகளுடன் கொண்டாடுவோம். ( Kolandai paruva nigalvu la onu illa, enakku diwali na konjam neraiya doubts irukku, atha Isai and Anbu thatha kitta kekkara mathiri kekkara.. anda doubts Ku ungalukku therunja vilakkam kudunga pa... bcz sinna vayasula irunthu enakku diwali na ethee doubt tha varuthu Sari vanga story kulla pola)

- - - - -

தீபாவளிக்கு முதல் நாள் இரவு பொழுதில் பட்டாசுகளை வெட்டித்து ஓய்ந்துபோய் மாடியில் அமர்ந்து தாத்தா, பாட்டியுன் கதைகேட்டுக்கொண்டே உணவு உண்டுகொண்டு இருக்க அப்பொழுது தாத்தா

" டேய் பசங்கலா நாளைக்கு காலைல யாரு மொதல்ல எழுந்து எண்ணெய் தேச்சு, அரப்பு போட்டு குழுச்சு என்கிட்ட ஆசீர்வாதம் வாங்கறீங்கலோ அவங்களுக்கு நா 1000 ரூபா தருவ.." என்க சிறுவர்கள் நால்வரும் ஆவலுடன் நீ, நான் என்று கூறிக்கொண்டு இருக்க 15வயது இசையோ

" அது ஏன் தாத்தா தீபாவளினா எண்ணெய் தேச்சு, அரப்பு போட்டு குழிக்கனும்?? " என்றான் கேள்வியாக அதற்கு பாட்டி

" அதுவந்து டா கண்ணு தீபாவளி அன்னைக்கு அதிகாலைல (4.30 - 6.00) வானத்துல இருக்கற அஷ்டலக்ஷ்மியும் எண்ணெய், அரப்பு, சீவக்காய் இந்த மூனு பொருள்ளையும் இருப்பாங்க.. அதுனால காலைல எண்ணதேச்சு குழுச்சா நமக்கு அவங்க அருள் கெடச்சு செல்வசெலிப்போட வாழ்வோம்" என்க

14வயதான அன்பு " அப்போ நம்ம அப்படி எண்ண தேச்சு அரப்பு போட்டு குழிக்கலனா நமக்கு செல்வம் கெடைக்காதா பாட்டி ?? அப்படி முழுச்சு சாமி கும்பிட்டாதா செல்வம் கெடைக்குமா பாட்டி ?? (Doubt no 1😂)  " அதற்கு பாட்டி

" அப்படினு இல்ல பா.. இது ஐதீகம்.. " என்க..  9வயதான இனியாவோ பாட்டியிடம்

" இந்த தீபாவளிய யாரு கண்டுபுடுச்சா பாட்டி ? நம்ம ஏன் தீபாவளி கொண்டாடுறோம் " என்க..

அதற்கு சிரித்துக்கொண்டே தாத்தா " தீபாவளிய யாரும் கண்டுபுடிக்கல டா.. அதுக்கு ஒரு கத இருக்கு.. " என்க... 9வயதான எழில் " என்ன கத தாத்தா " என்க

அதற்கு தாத்தா " நரகாசுரன்னு ஒரு அரக்கன் இருந்தான்.. அவன் மனிதஉருவத்துல இருக்கற அரக்கன். பூமில இருந்து பிறந்தவன். அவன் பிரம்மன்கிட்ட ' எனக்கு சாவுனு ஒன்னு வந்தா அது என்னோட அம்மாவால தான் இருக்கனும்' னு வரம் வாங்கீட்டான்... மகாவிஷ்ணுவோட கிருஷ்ணர் அவதாரத்துல சத்தியபாமா அவரோட மனைவி.. ஒருமுறை நரகாசுரன்னுக்கும், கிருஷ்ணருக்கும் போர் வந்து அதுல அசுரன்விட்ட அம்புபட்டு கிருஷ்ணர்கீழ விழுந்த மாதிரி நடிக்கவும் சத்தியபாமாக்கு கோவம் வந்து அசுரன அழிப்பாங்க.. அப்போதான் அசுரனுக்கு தெரியும் சத்தியபாமா பூமித்தாயோட அவதாரம்னு பூமிதான் அவனோட அம்மானு.. அப்போ அவனோட உயிர்போகும்போது பூமித்தாய்மடீல தலைவெச்சு கேப்பான் ' நா நெரையா கெட்டது பண்ணீட்ட.. அதுனால நா இறந்தநால மக்கள் தீபம் ஏத்தி கொண்டாடனும்'னு.. இருட்டு அரக்கனையும், தீப ஒளி அந்த இருட்ட போக்கறதாவும் இருக்கும்.. அதுனால தான் தீபாவளி வந்துச்சு.." என்க..

சிறுவர்கள் கதையில் மூழ்கி இருக்க பாட்டி " வால்மீகி ராமாயணத்துல என்ன இருக்குனா.. இராமர், சீதை வனவாசம் முடுஞ்சு நாடுதிரும்புன நாள மக்கள் விளக்கு ஏத்தி கொண்டாடுறாங்கனு இருக்கு.. அதுதான் தீபாவளினு இருக்கு.." என்றதும் சிறுவர்கள் குலம்ப.. மீண்டும் பாட்டி " ஸ்கந்த புராணத்துல சக்திய தன்னில் பாதியா சிவன் ஏத்துகிட்டு அர்த்தனாரீஸ்வரரா ஜோதிவடிவத்துல இருந்தாராம்.. அதுனால விளக்கு ஏத்தி ஜோதிவடிவத்துல இருக்கற இறைவன நமக்குள்ள கொண்டு வந்து வழிபடனும் " என்க..

இசையோ " பாட்டி இதுல எந்த கத உண்ம பாட்டி ( doubt no 2🤔) " என்க..

பாட்டியோ " இது புராணத்துல இருக்கு பா... " என்க..

அன்புவோ " அப்போ எந்த சாமிய கும்படனும் பாட்டி... அசுரன அழுச்சாங்கனு கொண்டாடனுமா இல்ல ராமர கும்படனுமா இல்ல இறைவன உணரனுமா?? அப்போ நெஜமா என்ன பண்ணனும் பாட்டி ஒன்னுமே புரியல (doubt no 3🤔) "என்க.

தாத்தாவோ " உன் இஷ்ட தெயவத்த கும்புட்டு பட்டாசு வெடி பா... எல்லாருக்கும் இனிப்பு குடுத்து கொண்டாடு.. " என்க..

அன்புவோ " தாத்தா தீபாவளி பாரம்பரியமா கொண்டாடுறோம் சரி.. ஆனா ஏன் பட்டாசு வெடிக்கனும்? " என்க.

பாட்டியோ " அதுதான் பா பழைய காலத்துல இருந்து இருக்க வழக்கம்.. " என்க..

எழிலோ " ஆனா பாட்டி புராணத்துல தீபம்தானு ஏத்த சொல்லீருக்காங்க... நம்ம ஏன் பட்டாசு வெடிக்கறோம்.. யாரு இந்த பட்டாச கண்டுபுடுச்சா ?? நம்ம பழைய கால வழக்கப்படி தீபாவளி கொண்டாடுனா தீபம்தானு ஏத்தனும்.. ( doubt no 4🤔) " என்க..

பாட்டி, தாத்தா இருவரும் அமைதியாக இருக்க இசையோ " அப்போ இந்த பட்டாசும் அந்த காலத்துல இருந்தே இருக்கா பாட்டி (doubt no 5🤔) " என்க தாத்தாவோ முந்திக்கொண்டு

" எங்ககாலத்துலையே நாங்க எல்லாரும் பட்டாசு வெடுச்சு இருக்கோம் பா.. ஒலப்பட்டாசு, லக்ஷ்மி வெடினு ரெண்டு மட்டும் தான் இருக்கும்.. இந்த கம்பிமத்தாப்பு, புஸ்வானம், சங்குசக்கரம்லா உங்க அப்பா சின்ன பையனா இருக்கும்போதுதான் புதுசா வந்துச்சு.." என்க..

இனியாவோ " தாத்தா அப்போ நாங்க வெடிக்கறபட்டாசு இப்ப வந்துச்சா.." என்க.. தாத்தாவோ ஆமாம் என்க..

அன்புவோ " பழைய பண்டிகைல புதுசு புதுசா பழக்கத்த ஏற்படுத்துறோமே தாத்தா இதுதான் கலாச்சாரமா??  அப்போ இந்த பட்டாசு வெடிக்கறது ஒருவிதமான வியாபாரயூக்தியானாலயா  தாத்தா ( doubt no 5 🤔) " என்க..

இசையோ " அப்றம் ஏன் தாத்தா ஸ்வீட், காரம்லா வாங்கி குடுக்கறோம்... எல்லாரு வீட்டுலையும் நெரையா நெரையா ஸ்வீட் வாங்கி மாத்தி மாத்தி குடுக்கறோமே அது எல்லா வேஸ்ட் தானே தாத்தா.. அந்த காலத்துல ஸ்வீட்லா இருந்துச்சா தாத்தா ( doubt no 6 🤔) "என்க..

தாத்தா " அது சந்தோசத்த வெளிப்படுத்தறதுக்காக டா.. " என்க..

அன்புவோ " ஏன் தாத்தா நம்ம 5000 ரூபாய்க்கு பட்டாசு வாங்கி அத வெடுச்சு கரியாக்கறதுக்கு இல்லாதவங்களுக்கு துணி எடுத்து குடுக்கலாமே அத அவங்க தீபாவளிக்கு கெடச்ச துணினு சந்தோசமா போடுவாங்கலே " என்க..

தாத்தாவும் ஆமா டா என்க அதைத்தொடர்ந்து இசை " இப்படி மாத்தி மாத்தி ஸ்வீட் குடுக்கறதுக்கு அளவா பண்ணீட்டு எல்லாருக்கு ஒரு நேரம் சாப்பாடு போடலாமே தாத்தா " என்க.. அவரோ தன் போரக்குழந்தைகளை எண்ணி பெருமிதம் அடைய..

எழிலோ " பட்டாசு சத்தமா வெடுச்சா பறவைகள் பயப்படும்னு பட்டாசே வெடிக்காம ஒரு ஊருல (கூந்தன்குளம்) இருக்காங்க தாத்தா " என்க..

இனியாவோ " அதுவும் இல்லாம பட்டாசுல புகைலா வரும்ல அது பொல்யூசன் " என்க..

பாட்டி " ஒரு நாள் தானுமா.. " என்க..

அன்புவோ " பாட்டி ஒரு நாள்னாலும் அதுல இருக்கற லித்தியம், மெர்க்குறி, ஆர்சனிக், ஈயம் லா காத்துல கலக்கும் போது அத நம்ம ஸவாசிச்சா நமக்கு கெட்டதுதானே.." என்க..

தாத்தாவோ " அப்போ தீபாவளி கொண்டாட வேண்டாம்னு சொல்லறயா டா.." என்க..

அன்பு " இல்ல தாத்தா கொண்டாடலாம்... காலைல எழுந்து எண்ணதேச்சு குழுச்சு தீபம் வெச்சு சாமி கும்படலாம் .. " என்றவன் தயங்க..

இசையோ " ஆனா காச கரியாக்கனுமா தாத்தா.. அதுக்கு நம்ம சாமி கும்பிட்டுட்டு நம்ம குடும்பத்துல எல்லாரும் சேந்து எங்கையாச்சும் வெளிய போகலாம்.." என்க..

அன்பு " எல்லாத்தையும் வீட்டுக்கு கூப்டு விருந்து வைக்கலாம்.. கொழந்தைக வந்தா ஜாலியா எல்லாரும் சேந்து வெளையாடலாம் " என்க...

தாத்தா " டேய் நம்ம மட்டும் அப்படி பண்ணா இந்த சமூகம் ஏத்துக்காது டா.. ஏன் உங்கவீட்ல பட்டாசு வெடிக்கலனு கேப்பாங்க." என்க..

இனியா " கேட்டா கேக்கட்டும் தாத்தா.. நம்ம நல்லதே செய்யலாம்.." என்க..

பாட்டி " அப்போ உங்களுக்கு தீபாவளி பட்டாசு, ஸ்வீட் எதுவும் வேண்டாமா.. " என்க...

அன்புவும், இசையும் உடனே வேண்டாம் என்க சிறுபிள்ளைகளாகிய எழில், இனியா முழிக்க.. அன்பு " தாத்தா எல்லாரும் மாறனும் மாறனும்னு சொல்லுறதுக்கு பதிலா நம்ம ஏன் மாற முயற்சி பண்ணகூடாது.. " என்க அவரும் சரி என்றார்...

அனைவரும் பேசிவிட்டு தூங்க காலை போட்டிபோட்டுக்கொணடு முதலில் எழுந்து நீராடி பெரியவர்களிடம் ஆசி பெற்றனர்.. பின்பு கோவிலுக்கு சென்றுவிட்டு வீட்டிற்கு வந்து விளையாடினர்.. அனைவருக்கும் உணவு, உடையளித்து தீபாவளியை பயனுள்ளதாக கொண்டாடினர்...

- - - - -

அனைவருக்கும் என் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.. அனைவரின் இல்லத்திலும் இருள் விழகி செல்வமும், சந்தோசமும் தீப ஒளியென பரவ இறைவனிடம் வேண்டிக்கொள்கிறேன்... பண்பாட்டைக் கொண்டாடி மகிழ்வோம் மூடநம்பிக்கைகளையும், நவீன வியாபாரயூக்திகளையும் பின்பற்றி புதுமையான பண்டிகையை கொண்டாடாமல் பழமையான பண்டிகையை பழமை மாறாமல் கொண்டாடி மகிழ்வோம்..

நன்றி

Bạn đang đọc truyện trên: Truyen2U.Pro