1- நெஞ்சோடு கலந்தவளே

Màu nền
Font chữ
Font size
Chiều cao dòng

சிறு முன்னோட்டம் 

இது ஒரு தொடர் கதை... இக்கதையின் முதல் பாகத்தின் பெயர், ‘என்னவனே உனக்காக எல்லாம்’
(அக்கதையைப் பற்றி தெரிந்துக் கொள்ளாதவர்கள் அமேசான் கிண்டில் சென்று படித்துக் கொள்ளுங்கள்) ஏற்கனவே படித்தவர்கள் என்றால் இக்கதையில் தொடருங்கள்.
ஆனால் ஒன்று, இக்கதைப் புரிய வேண்டுமென்றால் இதன் முதல் பாகத்தை படித்துவிட்டு வாருங்கள்.
           தன்னவனுக்காக எதையும் செய்ய கூடியவள்... தீயவர்களால் சதியில் இருந்த தன்னவனுக்காக பல இன்னல்கள், துன்பங்கள் என பல கஷ்டத்தை கடந்து தன்னவனை கரம் பிடிக்கும் நேரத்தில், தன்னவனின் உயிர் காக்க தன் உயிரை மாய்த்துக் கொண்டவள்... அவள் நினைவில் வாழும் அவனின் மீதி வாழ்க்கை பயணத்தை இக்கதையில் காண்போம்.
இனி...

நெஞ்சமே-1

‘நான் அர்ஜுன் கிருஷ்ணன். இங்கே பல பேருக்கு என்னை தெரியும். சில பேருக்கு தெரியாது. என்னை பற்றி தெரிந்தவர்களுக்கு என் மதுபாலாவை பற்றி தெரிந்திருக்கும்.

நான் வாழ அவள் இதயத்தை கொடுத்தவள். இப்பொழுது என்னுடைய இந்த வாழ்க்கை என் மதுவுடையது. அவளை தவிர என் வாழ்க்கையிலும் சரி, என் இதயத்திலும் சரி வேற யாருக்கும் இடம் இல்லை. 

ஆனால், அதை புரிந்துக் கொள்ளாத என் குடும்பம் இப்போது வேறு ஒரு பெண்ணை எனக்கு திருமணம் முடிக்க முயற்சி செய்துக் கொண்டு இருக்கிறார்கள்.

அவர்களுக்கு எங்கே தெரியபோகிறது. மது மட்டுமே இருக்கும் இதயத்தில் வேறு ஒருத்திக்கு இடம் இல்லையென்று. என் வாழ்க்கைக்குள் நுழைந்து அப்பெண்ணின் வாழ்க்கையும் வீணாக போகிறது. பாவம் அப்பெண். அவளுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை இந்த ஜென்மம் என் மதுவின் நினைவோடு முடிய போகிறது என்று.

என் நெஞ்சோடு கலந்தவளே என்னை மீளாத் துயரத்தில் ஆழ்த்தி சென்றவள். அவளை என்னால் மறக்க முடியாது. மறந்தும் இன்னொருத்தியை ஏற்றுக் கொள்ளவும் முடியாது.

மதுவின் ஆசைக்காக மட்டுமே இந்த கல்யாணம் என்னும் பந்தம். மற்றபடி அவளுக்கும் எனக்கும் எந்த பந்தமும் இல்லை’ என்று கண்ணாடி முன் நின்று யோசனையில் ஆழ்ந்தவனின் சிந்தனை, கதவு தட்டும் ஓசையில் நினைவுக்கு வந்தது.

"அர்ஜூன்... டேய்! அர்ஜூன்... கதவை திறடா நேரம் ஆகுதுல்ல, முகூர்த்தத்திற்கு நேரமாச்சி சீக்கிரம் வா" என பிரவீன்தேவ் அழைத்துக் கொண்டிருந்தான்.

பிரவீன்தேவ் அர்ஜுனின் தம்பி.

"நீ போ, நானே வரேன்" எனக் கூற, தேவ் அங்கிருந்து சென்றான்.

கண்ணாடியில் மீண்டும் ஒருமுறை தன்னை பார்த்தவனின் கைகள் தன்னிச்சையாக இதயத்தை வருடியது.

"ஏன் மது, நீ மட்டுமே இருக்க வேண்டிய என் வாழ்க்கையில் எல்லாரும் சேர்ந்து யாரோ ஒருத்தியை நுழைய வைக்கப் பார்க்கறாங்க. என்னால முடிந்தவரை போராடி பார்த்துட்டேன். ஆனா, ஒருக்கட்டத்திற்கு மேல் என் போரட்டம் இங்கே உன் அப்பாவிடம் தோற்று போனது. அதற்கு காரணமும் நீ டி" என சில நாட்களுக்கு முன் நடந்த நிகழ்விற்குச் சென்றான்.

அர்ஜூன் மடிகணிணியில் அவன் வேலையைப் பார்த்துக் கொண்டு இருக்க, கோவிந்தராஜ்(மதுவின் தந்தை) அவன் அருகில் வந்து அமர்ந்தார். 
அவர் அமரவும் வீட்டில் உள்ள அத்தனை பேரும் அங்கே அசம்பல் ஆக, தன் வேலையை ஓரம் கட்டி விட்டு அவர்களைப் பார்த்து திரும்பினான்.

அவர்களோ, ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டு அமைதியாக இருந்தனர். இதை பார்த்த அர்ஜூனுக்கு ஏதோ ஒன்று தப்பாக தெரிய, "என்னாச்சி ஏதாவது பேசணுமா?"

கோவிந்தராஜ் மெல்ல பேச்சை ஆரம்பித்தார்.

"ஆமாப்பா அர்ஜூன், மது இறந்து மூன்று வருஷம்  முடிஞ்சிடுச்சி."

"எதாவது சடங்கு செய்யணுமா?”

"சடங்கு தான் அர்ஜூன். ஆனால் நல்ல சடங்கு செய்யணும்" என்று தேன்மொழி நடுவில் பேசினார். (மதுவின் அம்மா)

"ஏய்... தேனு அமைதியா இரு. அதான் நான் பேசிட்டு இருக்கேன்ல. நீ எதுக்கு குறுக்கால பேசிக்கிட்டு" என்று அதட்டிவிட்டு அர்ஜூனிடம் திரும்பினார்.

"இன்னும் ரெண்டு நாளுல உனக்கு கல்யாணம்ப்பா" என அவன் திருமணத்தைப் பற்றி சொல்ல, அர்ஜூன் அதிர்ந்து போனான்.

"என்ன சொல்றீங்க! ரெண்டு நாள்ல கல்யாணமா? யார கேட்டு முடிவு பண்ணீங்க. என் மதுவை தவிர வேற யாருக்கும் என் வாழ்க்கையில் இடம் இல்லை. ஏன் உங்க பொண்ணை மறந்துட்டீங்களா? எப்படி மதுவுக்கு துரோகம் பண்ண மனசு வந்துச்சி உங்களுக்கு?" என அவன் கோபத்தைக் கட்டுப்படுத்திக் கொண்டு கேட்டான்.

அவரோ, "செத்து போனவளுக்கு எப்படிப்பா துரோகம் பண்ண முடியும். என் மகளை நான் மறக்கலப்பா. அவள் கஷ்டப்பட கூடாதுன்னுதான் உனக்கு கல்யாணமே பண்ண முடிவு பண்ணேன்.

உன்னை கடைசி வரைக்கும் தனி ஆளா விட முடியாது. உனக்கும் நல்லது நடக்கணும்ப்பா. இப்போ உனக்குன்னு இருக்கிற சொந்தம் நாங்க மட்டும்தான். என் பொண்ணு இடத்தில நீ இருக்க. அப்போ உனக்கு கல்யாணம் பண்ணி வைக்க வேண்டியது என் கடமை தானே. உனக்கு முன்னாடி உன் தம்பி கல்யாணத்தை நடத்த முடியாது. அதுக்கு பிரவீனும் ஒத்துக்கமாட்டேங்கிறான். எத்தனை நாளுக்கு வயசு பொண்ண வீட்ல வைக்க முடியும். பாக்குறவங்க தப்பா பேச மாட்டாங்களா?"

"ஓ பிரவீனுக்கும் மொழிக்கும் திருமணம் நடக்க நான் தடையா இருக்கேன்னு நீங்க சொல்லவரீங்க, இதை பத்தி நீங்க கவலை பட வேண்டாம். நான் இன்னிக்கே போன் பண்ணி பிரவீனை சென்னையில் இருந்து வர சொல்றேன். அவன் வந்ததும் மொழிக் கூட கல்யாணம் பண்ணி வைங்க. சோ பிரச்சனை முடிஞ்சிது” அலட்சியமாகக் கூறிவிட்டு மீண்டும் மடி கணினியை எடுத்து தனது வேலையைப் பார்க்க, கோவிந்தராஜிக்கு கோபம் வந்தது.

"நீ சொல்றது எல்லாம் எங்களுக்கும் தெரியும்ப்பா. ஆனா, உன் தம்பிதான் உனக்கு ஒரு நல்ல காரியம் நடக்காம அவன் பண்ணிக்க மாட்டேன் சொல்லிட்டானே?”
"அப்போ மொழிக்கு வேற மாப்பிள்ளை பாருங்க" என ரொம்ப கூலாக கூற, அனைவரும் இந்த பதிலை அவனிடமிருந்து எதிர்ப்பார்த்ததுதான் என்று அமைதியாக இருக்க, மொழியோ அவனை மனதிற்குள் திட்டிக் கொண்டிருந்தாள்.

"அதுக்கு நாங்க ரெடிப்பா, ஆனால் உன் தம்பி அமைதியா இருக்கணுமே?"

"பிரவீன் எந்த கலாட்டாவும் செய்யாம நான் பார்த்துக்கிறேன்" என்று கூறினான்.

அவனுக்கு நன்கு தெரியும், ‘இவர்கள் தன்னை கல்யாணத்திற்கு சம்மதம் சொல்ல வைக்க தான் பிரவீனின் கல்யாணத்தை சாக்காக சொல்கிறார்கள். இவர்களால் பிரவீனை விட்டு தர முடியாது’ என நினைத்து இதழோரம் வெற்று புன்னகை உதிர்த்தான்.

கோவிந்தராஜுக்கு புரிந்தது, ‘இவனை இப்படியெல்லாம்  சொல்லி வழிக்கு கொண்டு வர முடியாது’ என நினைத்தவர், அவன் எந்த பெயரை சொன்னால் சம்மதம் சொல்வானோ அந்த பெயரை வைத்து பேச ஆரம்பித்தார்.

"சரிப்பா, நாங்க மொழிக்கு வேற பையனா பார்க்கிறோம். ஆனால் மதுக்கு தான் நான் என்ன பதில் சொல்ல போறேனோ?" என உளறுவது போல் கூறிவிட்டு அங்கே இருந்து எழுந்து செல்ல,

மதுவின் பெயரை கேட்டதும் செய்து கொண்டிருந்த வேலையை விட்டுவிட்டு அவர் கையை பிடித்து தடுத்து, "மதுவா, என் மதுவா என்ன சொல்றீங்க. மது வந்தாளா! எப்போ வந்தா? ஏன் என்னை பார்க்காம போயிட்டா?" என்று ஆர்வத்துடன் சிறு குழந்தை போல் கேட்டான்.

தான் நினைத்து போல் அர்ஜூன் நடந்துக் கொண்டதை நினைத்து இவர் உள்ளுக்குள் சிரித்துக் கொண்டு வெளியே அப்பாவியாக முகத்தை வைத்துக் கொண்டு, "மதுவா! நான் எப்போப்பா மதுவை பத்தி சொன்னேன்?" என அவர் நடிக்க,

அர்ஜூனோ, “பிளீஸ் நீங்க இப்போ மதுக்கு என்ன பதில் சொல்வதுன்னு சொன்னீங்க?"

"அச்சசோ உளறிட்டேனா! மது வந்து என் அர்ஜூனை இப்படி தனியா தவிக்க விட்டுட்டீங்க. இதுவே உங்க பையனா இருந்து இருந்தால் இந்நேரம் அவனுக்கு ஒரு கல்யாணத்தை பண்ணி இருப்பீங்கனு சொல்லி என்கிட்ட அழுதாள். நல்ல ஆத்மாவை  இப்படி அழ வைக்க கூடாதுன்னு தான்ப்பா கடகடவென உனக்கு ஒரு பொண்ணை பார்த்து கல்யாண தேதியை முடிவு பண்ணி, இந்த ஒரு மாசமா கல்யாண வேலையில் முழ்கியதால், நீ தான் மாப்பிள்ளைன்னு சொல்ல மறந்துட்டேன்ப்பா" என வராத கண்ணீரை வர வைத்தார்.

இவர் நடிப்பதை பார்த்த தேன்மொழி, அருண்மொழி, ஷாம், ஷாலினி, விஷ்ணு, ராதா வாயைப் பிளந்துக் கொண்டு ஆச்சரியமாகப் பார்த்தனர்.

அனைவருக்கும் கண் சாடை காட்டி அழுவது போல் நடிக்கச் சொல்ல, அப்படியே அனைவரும் நடித்தனர். மொத்த குடும்பமே நடிப்பத்தை அறியாத அர்ஜூனின் மனதில் தன்னவளின் அழுகை மட்டுமே கண் முன் தோன்றியது.
‘உயிரோடு இருக்கும் போது அழ வைத்தது போதும். ஆன்மாவாக இருக்கும் போதாவது சந்தோஷமா, நிம்மதியா இருக்க வேண்டும்’ என யோசித்தவன், மது பேசியதாக சொல்வதில் ஏதோ தவறு இருப்பதாக உள் மனம் சொல்ல அதை கேட்க திரும்பினான்.

அவனின் முகபாவனையைக் கவனித்து கொண்டு இருந்தவர், ‘அர்ஜூன் ஏதோ தன்னிடம் கேள்வி கேட்கதான் திரும்புகிறான்’ எனச் சரியாக யூகித்து, அவன் திரும்பும் சமயம் தன் நெஞ்சை பிடித்துக் கொண்டு மயங்கி சரிந்தார்.

அவர் மயங்கியதும், அர்ஜூன் மூளையும் மனமும் அவன் யோசித்ததை மறந்து போனது.

அனைவரும் பதற்றமடைய அர்ஜூன், அவரை தூக்கிக் கொண்டு ஹாஸ்பிட்டலுக்கு சென்றான். தேனு மட்டுமே அவர்களுடன் செல்ல, மற்றவர்கள் வீட்டிலே இருந்து விட்டனர்.

"யப்பாடியோ மாமா இம்புட்டு அழகா நடிப்பாருன்னு நான் எதிர்பார்க்கல ஷாலு" என்று ஷாம் கூற,

மற்றவர்களும், "ஆமா நாங்களும் எதிர்பார்க்கலை. அப்போ அர்ஜூன் கல்யாணத்திற்கு சம்மதம் சொல்லிடுவாருன்னு நினைக்கிறேன்" என விஷ்ணு சொல்ல, அனைவரும், “ஆமா... ஆமா” என்று தலையை ஆட்டினர்.

ஹாஸ்பிட்டலுக்கு அழைத்து வந்ததும் டாக்டர் அவரை செக்கப்பிற்காக, எமர்ஜென்ஸி வார்ட் அழைத்து செல்ல, அர்ஜுனையும் தேனுவையும் வெளியே நிற்க சொல்லிவிட்டு சென்றார்.

தேனோ முந்தனையை வாயில் வைத்துக் கொண்டு அழுது புலம்பினார்.

"எப்போ பாரு உன்னை பத்திதான்ப்பா அவருக்கு கவலை. உன் வாழ்க்கை எங்க பொண்ணு மதுவை நினைத்து வீணாகிடுமோன்னு பயந்துட்டே இருப்பாரு. மதுவே வந்து உனக்கு ஒரு நல்லது நடக்கணும்னு சொல்லிட்டு போனதிலிருந்து இந்த மனுஷன் ஓய்வே இல்லாமல் கல்யாண வேலையை பார்க்க ஆரம்பிச்சிட்டார். ஆனா நீயே அவர் மனசை காயப்படுத்திட்டப்பா" என அழுதார்.

அதற்குள் டாக்டர் வெளியே வர, "டாக்டர் இப்போ அவருக்கு எப்படி இருக்கு. என்னாச்சி அவருக்கு?" என்று அர்ஜூன் கேட்க,

“அவருக்கு மனஅழுத்தம் ஏற்பட்டு இருக்கு. அதான் வேற ஒன்னும் இல்லை” என்று டாக்டர் சொல்லிவிட்டு போக, இருவரும் உள்ளே சென்றனர்.

கோவிந்தராஜ், அர்ஜூனை பார்த்து அவன் பதிலுக்காக அமைதியாக இருக்க, தேனோ நடித்து அழ ஆரம்பிக்க, கோவிந்தராஜ் பார்த்த பார்வையில் அமைதியானாள்.

அர்ஜூன் மெல்ல அவர் அருகில் சென்று கரத்தை பிடித்துக் கொண்டு, தன் மனதை கல்லாக்கி, “சம்மதம்” என்று சொல்லியவன் ஒரு நிபந்தனையும் வைத்தான்.

கோவிந்தராஜ், அர்ஜூன் கல்யாணத்திற்கு சம்மதம் சொன்னதே போதும் என நினைத்தவர், அவன் சொல்ல போகும் நிபந்தனைக்குச் சரியென்று ஒப்புக் கொண்டார். 

"நான் கல்யாணம் முடிந்த கையோடு இங்கே இருந்து சென்னைக்கு சென்று விடுவேன். என் மதுவின் நினைவோடு வாழ்ந்த அந்த இல்லத்திற்கு, இன்னொருத்தியின் கரத்தை பிடித்துக் கொண்டு என்னால் காலடி எடுத்து வைக்க முடியாது" என தன் நிபந்தனையைச் சொல்ல, இருவரும் அதிர்ந்து போனார்கள்.

‘தன் மகள் இல்லையென்றாலும் அவளின் இதயத் துடிப்பை கொண்டு வாழும் அர்ஜூனை கண் முன் வைத்துக் கொண்டு நன்றாக பார்த்துக் கொள்ள வேண்டும்’ என ஆசைப்பட்டவரின் ஆசையில் மொத்தமாக இடியை இறக்கினான். ஆனால், இப்போது அர்ஜூன் கல்யாணமே முக்கியம் என நினைத்து அவரின் மனதை கல்லாக்கி கொண்டு சரியென்று ஒப்புக்கொண்டார். மற்றவர்களையும் ஒப்புக்கொள்ள வைத்து சம்மதம் வாங்கினார்.

இதோ இன்று திருமண நாள். தன் மனதை சாகடித்து விட்டு, முகத்தில் எந்த ஒரு உணர்ச்சியும் இன்றி மணமேடைக்கு சென்றான்.

இங்கே இவன் இப்படி இருக்க, அங்கு மணப்பெண்ணோ, "பாட்டி... பாட்டி... ப்ளீஸ் பாட்டி. இந்த கல்யாணத்தை நிறுத்திடுங்க. இன்னும் தாலி கட்டுறவரை நேரம் இருக்கு. எனக்கு இன்னும் நம்பிக்கை இருக்கு என்னை தேடி என் அர்ஜூன் வருவான். இத்தனை வருஷம் காத்திருந்த என்னை அந்த கடவுள் ஏமாற்றமாட்டாரு பாட்டி.  உங்க காலுல கூட விழுறேன் பாட்டி" என தன் பாட்டியின் காலில் விழுந்து இந்த திருமணத்தை நிறுத்த சொல்லி மன்றாடிக் கொண்டு இருந்தாள் மணப்பெண்ணான ரோஜா.

என்னவளின் நினைவோடே வாழ நினைப்பவனின்  மனம் மாறி கல்யாணம் என்னும் பந்ததில் இணைந்து தன் வாழ்க்கையை தொடங்குவானா அர்ஜூன்கிருஷ்ணா?

தன் சிறு வயது காதலை நினைத்து அந்த அர்ஜூனுக்காக, தன் சிறு வயதிலிருந்தே காத்திருக்கும் இவள், தன் சிறு வயது காதலை மறந்து தன் வாழ்க்கையைத் தொடங்குவாளா ரோஜா? என்று இனி வரும் அத்தியாயங்களில் பார்ப்போம்.

அர்ஜூன்கிருஷ்ணா மற்றும் ரோஜாவின் வாழ்க்கை காதலாக மாறுகிறதா என்று இனி அடுத்த அத்தியாயத்தில் காணலாம்.

Bạn đang đọc truyện trên: Truyen2U.Pro