வருவான்.5

Màu nền
Font chữ
Font size
Chiều cao dòng

ரகுநந்தன் வீட்டு வாசலுக்கே வந்துவிட்டான். பூவினாவிற்கு சந்தோஷமாக இருந்தது.

"நீ வீட்டுக்கு போ." என்றான் ரகுநந்தன்.

"நீங்க கிளம்புங்க." என்றாள் பூவினா.

"இப்படியே போனா ரெண்டு பேரும் இங்கேயே நிற்கவேண்டியதுதான். நீ கிளம்பு."என்று ரகுநந்தன் வற்புறுத்தவும் வீட்டுக்கு வந்து மாடி பால்கனியில் எட்டி பார்த்தாள். ரகுநந்தன் நின்று கொண்டிருந்தான்.
பூவினா "டாட்டா" காட்டினாள். அவனும் கையசைத்தான். 'நீங்க கிளம்புங்க' என்பது போல சைகை செய்தாள். அவன் தலையசைத்து விட்டு நடக்க ஆரம்பித்தான். பூவினா தன்னுடைய அறைக்கு வந்து, மீண்டும் ஜன்னல் வழியாக பார்த்தாள். நடந்து கொண்டிருந்தத ரகுநந்தன் நின்று திரும்பிப் பார்த்தான். பூவினா டாட்டா காட்ட, அவனும் டாட்டா காட்டி விட்டு சென்றான். அவன் கண்ணிலிருந்து மறையும் வரை பார்த்துக் கொண்டிருந்தாள். ரோடு திரும்பும் இடத்தில் நின்று மீண்டும் பூவினாவை பார்த்துவிட்டு சென்று விட்டான்.

ஜன்னல் கதவை மூடிவிட்டு, படுக்கையில் அமர்ந்தாள். 'என்னை பார்ப்பதற்காகவா இவ்வளவு தூரம் வந்திருக்கிறார்? வண்டியில் வந்தது போலவும் தெரியவில்லையே? பஸ்ஸில் வந்திருப்பாரோ? பின்னே? நடந்தேவா அவ்வளவு தூரம் போகமுடியும்?' என்று நினைத்து சிரித்தவள், 'ஏதோ மோதிரம் என்று சொன்னாரே?' என்று தோன்ற வேகமாக தான் கலட்டி வைத்த கோட் டை எடுத்து, அதன் பாக்கெட்டில் கையை விட, அதில் ஒரு மோதிரம் இருந்தது. ஊதா நிற கல் பதித்த மோதிரம். பழைய வடிவத்தில் இருந்தாலும், பூவினாவிற்கு அந்த மோதிரத்தை ரொம்ப பிடித்தது. அந்த மோதிரத்தை தன்னுடைய விரலில் போட்டுப் பார்த்தாள். தன் கை விரலுக்காகவே அளவெடுத்து செய்தது போலிருந்தது. இது யாருடையதாக இருக்கும்? நிச்சயம் ஒரு பெண்ணுடையதாகத்
தானிருக்கும். ஆண்கள் போடும் மோதிரம் போல இல்லை. அந்த பரிசோதனைக் கூடத்தில் தானே இந்த மோதிரம் என்னுடைய கோட் பாக்கெட்டில் விழுந்தது? ரகுநந்தன் விரல்களில் சுண்டு விரலில் கூட போட முடியாது. பிறகு யாரோடது? ரகுநந்தன், அவருடைய மோதிரம் என்றாரே?!! ஒரு வேளை இந்த மோதிரத்தை வாங்கத்தான் வந்தாரோ? பிறகு ஏன் வாங்காமல் போய்விட்டார்!! என்று அன்று ரகுநந்தனை பார்த்தது முதல் நினைத்து பார்த்தபடியே உறங்கிவிட்டாள்.

காலை ஆறுமணிக்கு எழுந்தவள் பல் விளக்கிவிட்டு, கீழே அடுப்படிக்கு சென்று, அம்மா காய்ச்சி வைத்திருந்த சூடான பாலில் அம்மா தயாரித்து வைத்திருந்த சத்துமாவை கலந்து எடுத்து வந்து டைனிங் டேபிளில் அமர்ந்து குடித்தாள். தம்பியும் எதிரில் வந்து அமர்ந்தவன், பூவினாவின் விரலில் இருந்த மோதிரத்தை பார்த்து,

"ஐ! இந்த மோதிரம் ஏது அக்கா? நல்லாயிருக்கே? எங்கே குடு பார்ப்போம்." என்றான்.

அவனிடம் கொடுப்பதற்காக மோதிரத்தை கழட்டினாள். ஆனால் மோதிரத்தை க் கழட்ட முடியவில்லை. எவ்வளவு முயற்சி செய்தும் கழட்ட முடியவில்லை. அது புரிந்து அவள் அருகில் வந்து மோதிரத்தை பார்த்தான். அவன் மோதிரம் சம்மந்தமாக ஏதாவது கேள்வி கேட்டுவிடுவானோ? என்று பயந்தவன், பேச்சை மாற்ற நினைத்து,

"அம்மா எங்கடா?"

"அப்பாவ பார்க்க யாரோ வந்திருக்காங்க. அவங்களுக்கு விருந்தோம்பல் பண்ண போயிருக்காங்க..." என்று கூறி சிரித்தான். அவன் சொல்லிக் கொண்டிருக்கும் பொழுதே வந்த அம்மா,

"எந்திரிச்சுட்டியா? நல்லதா போச்சு. உங்க அப்பாவை பார்க்க ஒரு தம்பி வந்திருக்கார். அவருக்கு காபி கலந்து கொடுத்துடு. நான் உங்கப்பாவுக்கு முருங்கைக் கீரை சூப் செஞ்சு கொண்டு வர்றேன்." என்றார்.

"அதையே வந்தவனுக்கு ம் குடுங்கம்மா. .. முருங்கைக் கீரை சூப் உடம்புக்கு நல்லது." என்றாள் துடுக்காக.

"இந்த வாய்தான் உன்னை கெடுக்குது. வீட்டுக்கு வந்தவங்களுக்கு யாராவது மருந்து கொடுப்பாங்க ளா? "

"அப்பாவுக்கு அதானே குடுக்கறீங்க?"

"அவரும் மருந்து போல தான் குடிக்கிறார்."

"அவரே குடிக்கும் போது, வந்தவங்களுக்கு என்ன ஸ்பெஷல் கவனிப்பு?" என்று கூறி தன்னுடைய அப்பாவிற்கு கலந்து வைத்த சூப்பையே இரண்டு டம்ளர்களிலும் ஊற்ற,

"அடிப்பாவி நிஜமாவே சூப் பை ஊத்திக் கொண்டு போகிறாள்! " என்று பூவினாவின் தலையில் தட்டி, காபி தயாரித்து மற்றொரு டம்ளரில் ஊற்றி கொடுத்து அனுப்பினாள்.

வேண்டுமென்றே காபி டம்ளரை தன் புறம் வைத்துக் கொண்டு, முருங்கை கீரை சூப்பை வந்தவனுக்கு கொடுக்க சென்றாள். அப்பாவின் ஆபீஸ் கதவை சம்பிரதாயமாக தட்ட, அவளுக்கு முதுகை காட்டியவாறு அமர்ந்திருந்தவன், திரும்பிப் பார்க்காமலேயே

"ம்ம் வாங்க!" என்று கூற,

"பெரிய இவரு! என் வீட்டுக்கு வந்து என்னையே வரவேற்பாரு.. இரு உனக்கு முருங்கைக் கீரை சூப் பை யே குடுக்கிறேன்' என்று நினைத்தவள், காபியை தன் புறம் வைத்துக் கொண்டு முருங்கை கீரை சூப்பை வந்தவனுக்கு கொடுக்க, அவன் அதை எடுக்க கையை நீட்டும் போதுதான் கவனித்தாள், வந்தவனின் விரல்களில் தான் போட்டிருந்த ரகுநந்தன் மோதிரம் போலவே, ஊதா நிறத்தில் கொஞ்சம் தடிமனான சைசில் இருந்தது.

'அட!' என்று நினைத்து நிமிர்ந்தவள், அதிர்ச்சியானாள்.

"நீங்களா?" என்று கேட்டவளிடம்,

"உனக்கு இவரைத் தெரியுமாம்மா?" என்று அப்பா கேட்டபிறகே, அதே அறையில் அப்பா இருப்பதை உணர்ந்தவள், தன்னிச்சையாக "இல்லப்பா" என்றாள். அவளின் நடவடிக்கை சற்று வித்தியாசமாக படவே, காபி டம்ளரை அவர் எடுத்துக் கொண்டு,

"சரிம்மா நீ போ!" என்றார். அவர் கையில் காபி டம்ளரை பார்த்தவள்,

"அப்பா உங்களுக்குதான் சூப்! இவருக்கு காபி." என்று கூறியதோடு நிற்காமல் அப்பாவின் கையிலிருந்த காபியை வாங்கி, வந்தவன் முன்னால் வைத்து விட்டு, முருங்கை சூப் பை எடுக்கப் போனவளிடம்,

"ஏன் எனக்கு சூப் இல்லையா?" என்று அவன் கேட்க நிமிர்ந்து அவனை பார்த்தவள், மீண்டும் அதிர்ந்து, 'யார் இவன்?' என்று நினைத்தவள் மயங்கிச் சரிந்தாள்.

"பூவி! அம்மா!" என்று பதறியவர் தன் மனைவியே அழைக்க,

இந்த பெண்ணை துக்கலாமா, வேண்டாமா? என்று யோசித்துக் கொண்டிருந்தவன், ராஜனின் பரிதவிப்பை பார்த்தவன், ஆபத்துக்கு பாவமில்லை என்று நினைத்து பூவினாவை அலேக்காக தூக்கி வந்து ஹாலில் இருந்த ஷோபாவில் படுக்க வைத்தான். அவனுடைய கையிலிருந்த வாட்ச் எதிலோ மாட்டிக் கொள்ள, ராஜன் வந்து, பூவினாவின் கையில் அணிந்திருந்த மோதிரத்தில் மாட்டிக்கொண்ட, வாட்சை விடுவித்து வந்தவனிடம் கொடுத்தார். அதற்குள் பூவினாவின் அம்மா வள்ளியும் தம்பி விஜய் விஷ்வாவும் வர,

"ஒன்னுமில்லை ஆன்ட்டி! சிறு மயக்கம்தான். சில்லுனு தண்ணீர் எடுத்து வாங்க!" என்று வந்தவன் கூற,

விஜய் சென்று தண்ணீர்எடுத்து வந்து, அக்காவின் முகத்தில் பளிச் சென்று தெளிக்க, பூவினா மெல்ல சுய உணர்வை அடைந்தாள்.

"சரிங்க ஸார்! நான் இன்னைக்கு சாயந்தரம் வர்றேன்." என்று கூறி விட்டு சென்று விட்டான்.

மயக்கத்திலிருந்து எழுந்தவளை,

"என்னாச்சு டி உனக்கு?" என்று வள்ளி கேட்டார்.

பூவினா சுற்றிலும் கண்களால் துழாவ,

"என்னடி திருட்டு முழி முழிக்கிற? என்னங்க ஆஸ்பத்திரிக்கு கூட்டிட்டு போவோமா" என்று வள்ளி கேட்டதும்,

"இதுக்கெல்லாமா ஆஸ்பத்திரிக்கு போறது? போ! நீ போய் உன் வேலையை கவனி, விஜய் நீ ஸ்கூலுக்கு கிளம்பு." என்று இருவரையும் அனுப்பி விட்டு மகள் அருகில் அமர்ந்தார்.

"என்னடா ஆச்சு உனக்கு? ஏன் வித்யாசமா நடந்துக்குற?"

"ஒன்னுமில்லை ப்பா. "

"உனக்கு வேல் ஐ தெரியுமா?"

"யார் ப்பா அது?"

"அப்பாவிடம் எதையும் மறைக்காதடா... இதுக்கு முன்னாடி நீ வேல் ஐ பார்த்திருக்கிறாயாடா?"

"உண்மையிலேயே எனக்கு வேல் னு யாரையும் தெரியாதப்பா. .. உங்ககிட்ட நான் ஏன் மறைக்கப் போறேன்?" என்று கூறிய பூவினாவின் கண்களில் இருந்த உண்மையைக் கண்டவர்,

"சரி! நீயும் கிளம்புடா. காலேஜுக்கு நேரமாயிடும்." என்றார்.

"சரி" என்று எழுந்து இரண்டு அடி எடுத்து வைத்தவள், யோசனையுடன் தன்னையே பார்த்துக் கொண்டிருந்த அப்பாவிடம்,

"அப்பா இன்னைக்கு உங்களை பார்க்க வந்தாரே அவர் எங்கே?" என்று கேட்டாள்.

அவள் கண்களையே பார்த்தவாறு, "கிளம்பி போயிட்டார் டா. .. ஏன் அவரை எங்காவது பார்த்திருக்கிறாயாடா?" என்று ராஜன் கேட்க,

அப்பாவிடம் சொல்லலாமா? என்று யோசித்தவள், சேச்சே வேண்டாம்!' என்று நினைத்தவள்

"இல்லையப்பா! " என்றாள் ஆனால் அவள் முகத்தில் தெரிந்த குழப்பத்தைப் பார்த்தவர், பூவினா செல்வதையே பார்த்த வண்ணம் அமர்ந்திருந்தார்.

தன் அறைக்கு சென்றவள், அப்படியே நாற்காலியில் அமர்ந்தாள். யார் இவன்? முதலில் பார்த்த போது ரகுநந்தன் போலவே இருந்தான். மறுபடியும் பார்த்தால் வேறு யாரோ போல இருக்கான்!! அவன் கையில் ரகுநந்தன் மோதிரம் போலவே ஒன்று போட்டிருக்கான். ... யார் இவன்?' என்று நினைக்க, நினைக்க தலைவலிப்பது போல் தோன்ற, எழுந்து பாத்ரூமிற்குள் சென்று அப்படியே ஷவரில் நின்றாள்.

மெயின் ரோட்டில் புல்லட் பறந்தது. அதில் அமர்ந்திருந்த சரவணவேல் ஐ.பி.எஸ் மனம் மட்டும் பிரபல வக்கில் ராஜன் வீட்டில் நடந்ததிலேயே இருந்தது. அந்த பெண், வக்கில் ராஜன் மகள் போலிருக்கிறது. அந்தப் பெண் ஏன் என்னிடம் வித்யாசமாக நடந்து கொண்டாள். முதலில் ஏற்கனவே தெரிந்தவளைப் போல பார்த்தாள், அப்புறம் அந்நிய பார்வை பார்த்தாள். என்னை எங்காவது இதற்கு முன்பு பார்த்திருக்கிறாளா? அவளைத் தூக்கிக் கொண்டு போகும் போது அவள் விரலில் என் மோதிரத்தை ப் போல அதே மோதிரம் போட்டிருந்தாளே? என் மோதிரமே ரொம்ப பழய மாடல்... எப்போ? எங்கே வாங்கினது ன்னு தெரியலப்பா னு அப்பா சொன்னார். அதே மாதிரி மோதிரம் அவளும் அணிந்திருந்தாள். எனக்கு கூட அவளை எங்கோ பார்த்தது போலத்தானிருக்கு.' என்று யோசித்த படியே தன் வீட்டிற்கு வந்துவிட்டான். புல்லட்டை அதற்கான இடத்தில் வைத்து விட்டு, வீட்டினுள் சென்றான்.

காலேஜுக்கு வந்தும் பூவினா யோசனையாகவே இருக்க,

"என்ன வினு! இன்னைக்கும் இப்படி இருக்க?" என்று சோர்ந்து போன குரலில் கேட்டாள் கிரேசா.

இவளிடம் சொல்லலாமா? என்று ஒரு நிமிடம் யோசித்தவள், வேண்டாம் இவளையும் குழப்ப வேண்டாம்.' என்று முடிவுக்கு வந்து,

"இந்த மோதிரத்தை கொஞ்சம் கழட்டி விடேன்." என்றாள்.

"ஆஹா! என்ன ஒரு அழகான கலர்ல கல் வைத்த மோதிரம்? எப்ப வாங்கியது வினு?" என்று கேட்டபடியே மோதிரத்தை கழட்ட அரும்பாடு பட்டாள் கிரேசா. இறுதியில்,

"முடியல வினு! இதை ஏன் கழட்டுற? நல்லாதானே இருக்கு?" என்றாள்.

"இது என்னோடது இல்லை கிரேசா... அழகா இருக்கேன்னு சும்மா போட்டு பார்த்தேன்... கழட்ட முடியவில்லை. மோதிரத்துக்கு சொந்தக்காரங்க காரங்க கேட்டா என்ன பண்றதுன்னு தெரியல." என்று கூறியபடி அந்த மோதிரத்தை யே பார்த்தாள்.

இரவு உணவு முடிந்ததும் தன் அறைக்கு வந்தாள் பூவினா. அறைக்குள் வந்ததுமே ரகுநந்தன் ஞாபகம் வந்தது. தனியா இருந்தாலே ரகுநந்தனைத் தான் நினைக்கிறேன். என்று நினைத்தவளுக்கு காலையில் அப்பா அறையில் பார்த்தவனின் முகம் ஞாபகத்திற்கு வந்தது. அவனுக்கு கொஞ்சம் கூட ரகுநந்தன் சாயல் இல்லை... பிறகு எப்படி ரகுநந்தன் போல தெரிந்தான்? என்று மண்டையை உருட்டிக் கொண்டிருக்கும் போது தம்பி விஜய் உள்ளே வந்தான்.

"என்னடா?"

"எனக்கு இந்த கணக்கை மட்டும் சொல்லி குடுக்கா. எப்படி போட்டாலும் ஆன்சரே வரமாட்டேங்குது." என்று கூறி பூவினாவின் அருகில் அமர்ந்தான்.

அவனுக்கு கணக்கு சொல்லிக் கொடுத்து முடிக்கும் போது மணி ஒன்பது முப்பதாகி இருந்தது. விஜய் பூவினா கட்டிலின் மேல் லேயரில் போய் படுத்து தூங்கி விட்டான். அவனைப் பார்த்தவளுக்கு சிரிப்பு வந்தது. படுக்கையில் படுத்து, எதுவும் பேசாமல் இருந்தாலே தூங்கி விடுவான். படுத்து இரண்டு நிமிடம் கூட ஆகவில்லை... அசந்து தூங்கிவிட்டான்.' என்று நினைத்தவாறே, அவன் காலடியில் இருந்த போர்வையை எடுத்து அவன் இடுப்பு வரை போர்த்தி விட்டாள்.

மீண்டும் தன் படுக்கையில் அமர்ந்து ஏதோ கதை புத்தகத்தை விரித்தவளுக்கு, ரகுநந்தன் ஞாபகம் வந்தது. மணி பார்த்தாள் ஒன்பது நாற்பதை தாண்டிவிட்டது. இப்பொழுது போய் பார்ப்போம் ரகுநந்தன் இருக்க மாட்டான். அடுத்த முறை பார்க்கும் போது, 'நான் நினைத்தேன் நீங்க வரலைன்னு சொல்லனும்.' என்று நினைத்தவள் எழுந்து தம்பியைப் பார்த்தாள். அவன் அசந்து தூங்கிக் கொண்டிருந்தான். மெல்ல ஜன்னலருகில் சென்றவள், சப்தம் எழுப்பாமல் ஜன்னல் கதவை திறந்து பார்த்தாள். அங்கே அதே இடத்தில் ரகுநந்தன் நின்று கொண்டிருந்தான். அதிர்ச்சி அடைந்தவள், மணி ஆகிவிட்டது கிளம்புங்க என்று சைகை செய்தாள். அவன் சிரித்தபடி நின்றான். என்னால் வெளியே வர முடியாது. அம்மா கதவைப் பூட்டியிருப்பார்கள். நீங்க கிளம்புங்க.. நாளைக்கு பார்க்கலாம்.' என்று எழுதி அழிரப்பரில் வைத்து சுருட்டி ரகுநந்தன் மேல் எரிந்தாள். அதை எடுத்து படித்தவன் சிரித்தபடி டாட்டா காட்டி விட்டு நடக்க ஆரம்பித்தான். இவர் ஏன் இப்படி பண்றார். இந்த ராத்திரி நேரத்தில் என்னை பார்ப்பதறுகாக இங்கு வந்து நிற்கிறாரே? சாப்பிட்டிருப்பாரா? 'என்று நினைத்தவள், பாதி தூரம் போய் திரும்பிப் பார்த்த ரகுநந்தனிடம், 'சாப்பிட்டு விட்டீர்களா?' என்று சைகையில் கேட்க, அவன் அசையாமல் அவளையே பார்த்தான். தெரு விளக்கு வெளிச்சத்தில் அவன் கலங்கி நிற்பது தெரிய, 'சாப்பிட்டுவிட்டு தூங்குங்க' என்று சைகை காட்டினாள். அவன் தலையசைத்து சம்மதித்தான். சிறிது நேரம் நின்றபடி அவளை பார்த்தவன் மீண்டும் டாட்டா காட்டி விட்டு நடந்தான். அப்போழுது அங்கே வந்த புல்லட்டின் ஹெட்லைட் வெளிச்சத்தில், புல்லட் ஓட்டியவனை பார்த்த ரகுநந்தன் அதிர்ந்து நின்றான். அந்த புல்லட் வெளிச்சத்தில் ரகுநந்தன், பூவினா  கண்களுக்கு தெரியாமல் போகவே,  கண்களை கசக்கி விட்டு பார்த்தவள், புல்லட்டில் வந்து கொண்டிருந்த சரவணவேல் ஐ.பி.எஸ் ஐ பார்த்துவிட்டாள். பூவினா, தன்னைப் பார்க்காமல், சரவணவேலையே பார்ப்பதை கவனித்தான் ரகுநந்தன்.


இதனால் பூவினா வாழ்க்கையில் என்ன நடக்கப்போகிறது?

அடுத்த அத்யாயத்தில்
பார்ப்போம். ...

💍💍💍💍💍💍

Bạn đang đọc truyện trên: Truyen2U.Pro