பகுதி14

Màu nền
Font chữ
Font size
Chiều cao dòng

Part 14

"நீ என்னவோ சொல்ற... சொல்றது எல்லாம் நல்லாதான் இருக்கும் இது நடந்தா கண்டிப்பா நானும் ரொம்ப சந்தோஷபடுவேன்" அருணாச்சலம்.

"எல்லாம் நல்லதாவே நடக்கும் நீ இதுக்கு முதல்ல ஓகே சொல்லுடா" விஜயபாஸ்கர்

மொபைலை எடுத்தவர் போட்டோவை அனுப்பி விஜய் "இது என் பொண்ணு.... பேரு வைஷ்ணவி". என்று மகளின் போட்டோவை பார்த்தபடி கூறினார் அருணாச்சலம்.

"என் மருமக எவ்வளவு லட்சணமா அழகா மகாலட்சுமி போலவே இருக்கா ... இந்த பொண்ண என் பையன் வேண்டாமுன்னு சொல்லிடுவானா ??...அப்பா... எப்போ கல்யாணம் வைச்சுக்கலாமுன்னு கேட்பான்!!!..பொண்ணுதான் தயவு பண்ணி என் பையன ஓகே சொல்லனும்". என்றார் விஜயபாஸ்கர் சிரித்தமுகமாக.

அதை கேட்டு சிரித்த அருணாச்சலம்" என் மாப்பிள்ளைக்கு என்னடா குறை ஹேன்சமா இருக்காரு வேற என்னடா வேணும்".

"அப்பாடா... உன் வாயிலருந்து மாப்பிள்ளை என்ற ஒரு வார்த்த வரவழைக்க என் பையனை எவ்வளவு ... டேமேஜ் பண்ண வேண்டியதா இருக்கு" என்று போலியாக சலித்துக் கொண்டார் விஜயபாஸ்கர்.

"சரி சரி என்னை கிண்டல் பண்ணது போதும்.... லலிதாகிட்டயும் கேட்டுட்டு உனக்கு தகவல் சொல்றேன்.."என்றவர் இடைவேளி விட்டு சரிங்களா சம்பந்தி". என்றார் நண்பரின் கைப்பற்றி.

ஹா...ஹா... என்று சிரித்தவர் "சரிங்க சம்பந்தி "என்றார் கிண்டலாக.

இருவரும் பல வருட கதைகளை பேசியதில் மகிழ்ந்தனர்.

மறு நாள் அருணாச்சலம் இந்தியாவிற்கு வருவதாக இருந்தது.

சிவா தந்தையை அழைத்து வர தானே விமானநிலையம் சென்று கொண்டிருந்தான். தந்தையிடம் எப்படி கூறுவது அவர் எப்படி தங்கிக்கொள்வார் என்றேல்லாம் யோசித்து கொண்டே காரில் விமான நிலையத்தை அடைந்தவன் தந்தையின் வரவிற்க்காக காத்திருந்தான்.

தந்தையை கண்டவன் அவரிடம் இருந்து லகேஜை பெற்றுக்கொண்டு கண்களில் வருத்தத்துடன் "வாங்க அப்பா" என்றான்.

சிவாவை பார்த்தார் அவன் முகத்தில் இருந்த மாற்றத்தை கவனித்து "ஹேய் என்னப்பா ஏன் கண்ணல்லாம் ஒரு மாதிரி ரெட்டா இருக்கு"...ஏன் சிவா டல்லா இருக்க ? என்றார்

"......."

"சிவா என்னாடா ஆச்சு ஏன் இப்படி இருக்க? ...என்னடா ஏதாவது லவ் மேட்டரா??... பொண்ணு வேண்டாமுன்னு சொல்லிட்டாளா??...". என்றார் கண்ணடித்து மகனின் சுபாவம் தெரிந்தும் மகனை பேச வைக்க கூறினார்.

"என்னப்பா நீங்க....வாங்க போகலாம் போற வழியில எல்லாம் சொல்றேன் வாங்க" என்று கார் பார்கிங் செய்த இடத்திற்கு கூட்டி சென்றான்.

வண்டியில் அமர்ந்தவன் முன் இருக்கையில் தந்தை அமர காரின் கதவை திறந்து விட்டான். காரில் அமர்ந்தவர் "அஹங்... சிவா அம்மா எப்படி டா இருக்கா? கான்பிரன்ஸ் முடிஞ்சி நேத்து நைட் கால் பண்ணேன் அவ அட்டன் பண்ணவே இல்லை... சரின்னு உனக்கு பண்ணேன் லைன் கிடைக்கல... மேனேஜர் வருவார்ன்னு பார்த்தா நீ வந்துருக்க நீ ரெஸ்ட் எடுக்க வேண்டியது தானேடா ஆபிஸ் போய்ட்டு வந்து ஏன் அலைச்சல் உனக்கு" என்றார் சிவாவை பார்த்து.

"எனக்கு என்னப்பா... நான் நல்லாதான் இருக்கேன்". என்றவன் சற்று நிறுத்தி "நான் உங்க கிட்ட ஒன்னு சொல்லனும்" என்று இழுத்தான்.

"அதைதானேடா ரொம்ப நேரமா கேட்டுகிட்டு இருக்கேன் இப்பவாவது தோனுச்சே சொல்லனுமுன்னு... சொல்லுடா" அருணாச்சலம்

"அது ... அப்பா அம்மா ஆஸ்பிடல்ல இருக்காங்க "சிவா

குரல் தடுமாற சிவா என்ன ஆச்சு அவளுக்கு?. ஏன் ஆஸ்பிடல்ல இருக்கா...?". குரலில் இருந்த உற்சாகம் வடிந்து அன்பு மனைவிக்கு என்ன ஆனதோ என்ற தவிப்பில் வினவினார் அருணாச்சலம்.

"அப்பா...பிளிஸ்... பிளிஸ்... பதட்டப்படாதிங்க நீங்க இப்படி நெர்வஸ் ஆவிங்கன்னுதான் உங்களுக்கு தெரியபடுத்தாம இப்போ சொன்னேன். அம்மாவுக்கு பரவயில்லை மதியம்தான் நார்மல் ரூம்க்கு மாத்தினாங்க என்று தாயை குறித்து அனைத்தையும் கூறினான் சிவா.

"சிவா... நேரா ஆஸ்பிடல் போ எனக்கு உடனே அவள பார்க்கனும்... வைஷூவும் காயூவும் எங்க இருக்காங்க". என்றார் உடைந்த குரலில். அத்தனை நேரம் மகிழ்ச்சி நிறைந்து வழிந்த மனதில் முழுவதும் சோகமே நிறைந்து இருந்தது.1 மணி நேர பயணமும் முள் மேல் இருப்பதை போல் தவித்தார் கண்களில் ஓரம் ஈரத்தினை உணர்ந்தார்.இத்தனை வருட வாழ்வில் ஒரு நாள் கூட வலி என்று கூறி அவர் படுத்து பார்த்தது இல்லை. வேலை வேலை என்று தன் மனையாளை சரியாக கவனிக்கவில்லையோ என்ற குற்ற உணர்வு ஒரு புறம் நெஞ்சை பிழிந்தது.

"சரிப்பா... நான் ஆஸ்பிடலுக்கே போறேன். நீங்க கவலை படாதிங்கப்பா வைஷூவும் காயூவும் அங்கதான் இருக்காங்க" என்றான்.

மனைவி இருக்கும் அறையை நடுங்கும் கைகளால் திறந்தவர். உள்ளே நுழைந்து செயற்கை சுவாசம் நிறுத்தப்பட்டு சீரான வேகத்தில் சுவாசித்து கொண்டிருந்த மனைவியை பார்த்து கலங்கினார்.

"லலிதா" என்று அழைக்கும் போதே குரல் கமரியது அவர் அழைப்புக்காகவே காத்திருந்தவர் போல் மெல்ல கண்களை திறந்தார் லலிதா .

"என்னம்மா ஆச்சு ஒரு சின்ன வலினா கூட எங்ககிட்ட சொல்லி இருக்கலாம்ல இப்படி எங்ககிட்ட சொல்லாம எங்கள தவிக்க விட்டுட்டியே மா" அருணாச்சலம்.

அருகில் வர கை அசைத்து கண்களை துடைத்து விட்டார் லலிதா

"பிள்ளைங்க நான் இல்லாம உன்னை இந்த நிலமையில பாத்து துடிச்சு போயிட்டாங்க " என்றார் மனைவியின் கைபிடித்து.

"எனக்கு ஒன்னும் இல்லைங்க நான் நல்லாதான் இருக்கேன். நீங்க கலங்கினா என்னால... தங்கிக்க முடியல ...இன்னும் கொஞ்ச வருஷம் உங்க கூட இருந்து உங்கள இம்சிக்காம போகமாட்டேங்க" என்று முகத்தில் சிறு புன்னகையுடன் வார்த்தைகளை மெல்ல மெல்ல கோர்த்தார்.

துவண்டு போனவருக்கு புது தெம்பு கிடைத்தது போல் இருந்தது மனைவி பேசியது "எனக்கு தைரியம் சொல்லி எனக்கு எப்பவுமே என் கூடவே இருக்கனும் மா" என்றவர்  மனதார கடவுளை பிரதித்தார்.

பசங்க எங்கங்க நீங்க வீட்டுக்கு போயிட்டு ரெஸ்ட் எடுங்க என்றார் லலிதா.எல்லாரையும் வீட்டுக்கு அனுப்பி இருக்கேன் மா வைஷூவும் சிவாவும் இப்ப வந்துடுவாங்க நீ துங்குமா அவங்க வந்ததும் நான் கிளம்புறேன் என்றார் போர்வையை போர்த்தியபடி .

"ம்.. எனக்கும் அசதியாதான் இருக்கு" என்று கூறி கண்களை மூடிக்கொண்டார்.

மருத்துவரின் ஆலோசனைபடி இரண்டு நாள் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்றவரை வீட்டிற்கு அழைத்து வரபட்டு கவனித்து கொண்டனர்.

"ஏங்க எனக்கு ஆப்ரேஷன் பண்றதுக்குள்ள வைஷூக்கு ஓரு இடம் பாத்து கல்யாணம் பண்ணிடனும் எனக்கு அவ கவலைதான் பெரிசா இருக்கு பெரியவனுக்கு உஷா பொண்ணு தான்னு பேசியிருக்கோம் சின்னவளுக்கு இன்னும் வருஷம் இருக்கு .இவளை ஒரு நல்ல இடமா பாத்து கொடுக்கனும்".

"இப்போ என்ன லலிதா அவசரம் பொருமையா எல்லாம் நல்லபடியா முடியட்டும் அதுக்குள்ள நீயும் சரி ஆகிடுவ கொஞ்சம் நாள் போகட்டும்"

"இல்லங்க ஆப்ரேஷனுக்குள்ள நிச்சயம்மாச்சும் பண்ணணும் பிளிஸ் மறுக்காதிங்க இப்பவே ஜோசியர பாக்கனும் பொண்ணு ஜாதகம் கொடுக்கனும் அவர வரசொல்லி போன் பண்ண சொல்லுங்க ",

"சரி சரி....நீ ஏன்மா இவ்வளவு பரபரப்பா இருக்க?. "

பாத்துக்கலாம்மா கவலைய விடு"

"எனக்கு ஒன்னும் இல்லிங்க என் பொண்ணு கல்யாணம் பாத்தாலே நான் சரியாகிடுவேன்".

"உனக்கு என் பிரண்ட் விஜய் தெரியும் ல அவன.நான் லண்டன்ல பாத்தேன் அதை சொல்லத்தான் உன்னை பாக்க சந்தோஷமா வந்தேன்".என்று ஆரம்பித்தவர் நண்பர்கள் பேசிக்கொண்டதை மனைவிக்கு கூறினார்.

"இப்போ சொல்றிங்க.... உங்கள... சரி சரி பையன் போட்டோவ காட்டுங்க வைஷூ... வைஷூ... இங்க வாம்மா"

"அடியே.. அடியே...ஏன்டி இப்படி கத்துற ??????....கொஞ்ச பொறுமைடா என்றார்  அருணாச்சலம் மனைவியை பார்த்து.

"சும்மா... அந்த பக்கம் போங்க கத்தாத, பேசாத, நிக்காத, அப்பப்ப்பா எவ்வளவு கண்டிஷன்ஸ்". என்று தாடையில் இடித்துக் கொண்டார் லலிதா

"ஏன்ம்மா சொல்லமட்ட உனக்கு ஒன்னுன்னா தவிக்கறது நாங்கதானே"என்றார் கேள்வியாக

"பிளிஸ் ரொம்ப சந்தோஷமா இருக்கேன் எதுவும் சொல்லிடாதிங்க." லலிதா

"என்னம்மா கூப்பிட்டிங்களா" என்று டீ ஷர்ட்டும் 3 /4 பேண்டும் கழுத்து வளைவு வரை இருந்த முடியில் போனிடெய்லை போட்டிருந்தவள் எந்தவித ஒப்பனையுமின்றி கையில் டிரேயுடன் லலிதாவிற்கும் அருணாச்சலத்திற்கும் ஜுஸை கொண்டுவந்தாள்.

"குட்டிமா இந்தாடா இந்த போட்டோவ பார்த்து ஓகே வா இல்லையான்னு சொல்லுடா அம்மாவுக்கு உனக்கு கல்யாணம் பண்ணி பாக்க ஆசையா இருக்கு ட வேண்டாம் மட்டும் சொல்லிடாத செல்லம் "

"......"

"என்னடா போட்டோவ பாருடா"

"அம்மா இப்போ என்னம்மா கல்யாணத்துக்கு அவசரம் அண்ணாவுக்கு முதல்ல பண்ணிடுங்க உங்களுக்கு சரியாகட்டும் அப்பறம்" பாக்கலாம்

"என்னடா அம்மாதான்  சொல்றேனே கொஞ்சம் பாருடா"லலிதா

"அது ... இல்லம்மா"

"பிளீஸ் டா அம்மாவுக்காக"

"அம்மா....."

"உன் மனசுல வேற ஏதாவது இருக்கம்மா அப்படி இருந்தா அதையாவது சொல்லுடா உன் மனசுக்கு பிடிச்சா தான்மா எது ஒன்னும் செய்வோம்.".

"மிசஸ் லலிதா அருணாச்சலம் நீங்க ரொம்ப யோசிக்கிறிங்க உங்க கற்பனை குதிரைய கொஞ்சம் நிப்பாட்டுங்க அப்படி இருந்தா முதல்ல உங்ககிட்ட சொல்லிட்டு தான் அவனுக்கு சொல்லுவேன் டியர்" என்றாள் அன்னையின் கன்னத்தை செல்லமாக கிள்ளியபடி.

ஏய் வாயடி என்ன சொல்ற அம்மாவ.... எவ்வளவு ஆசையா கேக்குறாங்க".என்றான் அந்நேரம் அன்னையை காண வந்த சிவா.

"போதும் போதும் என்னை வீட்ட விட்டு துரத்துறதுல ரொம்பதான் இன்டிரஸ்டா இருக்கிங்க எல்லாரும்"என்றாள் அலுத்தபடி

"அப்படி இல்ல வைஷூகுட்டி எனக்கு நான் நல்லா இருக்கும் போதே உன்னை கல்யாணம் பண்ணி கொடுத்தா திருப்தியா இருக்கும் அதான்டா"

"அம்மாவை பின்னிருந்து கழுத்தில் கை போட்டு கட்டிக்கொண்டவள் உனக்கு ஓகேனா எனக்கும் ஓகே தா மா" என்றவளை முன்னிழுத்து நெற்றியில் முத்திரை பதித்தார் லலிதா

"அப்புறம் என்னங்க

அவருக்கு போன் பண்ணி நமக்கு சம்மதமுன்னு சொல்லுங்க எப்போ வராங்கன்னு கேளுங்க."

"சரி சரி பறக்காத இரு சொல்றேன்". என்றவர் போனில் அனைத்தையும் அருணாச்சலம் கூற அடுத்த வாரம் அனைவரும் பெங்களூர் வருவதாக தெரிவித்தார் விஜயபாஸ்கர்.

Bạn đang đọc truyện trên: Truyen2U.Pro