பகுதி 19

Màu nền
Font chữ
Font size
Chiều cao dòng

Part 19

"அம்மா  என்னால முடியவே முடியாது கட்டாயப் படுத்தாதிங்க".காயூ

"செல்ல பொண்ணுல நான் சொல்றத  இந்த ஒருமுறை கேளு டா. எனக்கு ஆசையா இருக்கு மா"லலிதா.

"அம்மா என்ன மா?... இவ கிட்ட போய் கெஞ்சிகிட்டு இருக்கிங்க, இதுதான்  வேறு கொடுக்க முடியாதுன்னு சொல்லுங்க.... தன்னால செய்வா".வைஷ்ணவி.

"ஏய்!!!! முண்டகண்ணி உனக்கு என்ன? ஈசியா சொல்லிட்டு போய்டுவ நான் தானே மாட்டிக்கிட்டு கஷ்டபட போறேன்".காயூ.

“காயூ.... அவ உனக்கு அக்கா அவள போய் முண்டகண்ணி அது இதுன்னு சொல்ற நல்லாவா இருக்கு.....,கல்யாணம் பண்ணி உன் மாமா வந்தாலும்  இதேபோல தான் உன் வாய் நீளுமா??? இனி ஒரு முறை இப்படி கூப்பிட்டு என்கிட்ட  அறையை வாங்கிக்காத புரியுதா இந்தா இதை போடு...” என்று மகளிடம் ஒரு கவரை ஒப்படைத்து அந்த அறையை விட்டு போனார் லலிதா.

“ம்கும் நீ மட்டும் என்னை கத்திரிக்காய் ன்னு கூப்பிடலாம்!!!!  இதை யாரும் கேக்கமாட்டங்க என்ன  உலகம் டா ??? சாமி.... அம்மா இதே சாக்குன்னு இந்த கவர கொடுத்துட்டு போய்ட்டாங்க.”

“என் அம்முல்ல இன்னைக்கு மட்டும் இதை போட்டுக்கோ எனக்காக டியர் பிளிஸ் அம்முலு” என்று தங்கையை கொஞ்சினால்.
(இவ எதுக்காக இந்த அலும்பல் பண்றா....... இவங்க எதுக்கு கெஞ்சராங்க).

“அக்கா.... ம்..ம்...என்று அழுவதைபோல் இரண்டு முறை கனைத்தவள்  இதை கட்டிக்கிட்டு நடக்கும் போது அன்  ஈஸியா இருக்கும் கா நீ எல்லாம் காலேஜ் போன பின்னாடிதானே போட்டுகிட்ட???? என்னை மட்டும் எதுக்கு இந்த பாடு படுத்தறிங்க???”

“ நீ அக்கவோட அம்முலு தானே இந்த அக்கா சொன்னா கேக்கமாட்டியா என்று தங்கையை சம்மதிக்கவைக்க பாடுபட்டாள் . இந்த டேக்னிக் வேலை செய்தது.

மலர்சரங்களினாலும், அலங்கார மின் விளக்குகலாலும் வண்ணமயமாய் இருக்க பெரிய பெரிய தொழிலதிபர்களும் அரசியல் சினிமா பிரமுகர்கலும்  நிறைந்து  இருந்த  பெங்களூரிலே பெரிய திருமண மண்டபத்தில் தான் இத்தனை வாக்குவாதமும்.

பெங்களூரில் திருமணமும் மும்பையில் இருவிட்டு சார்பில் வரவேற்பும் செய்வதாய் ஏற்பாடு செய்திருந்தனர்.

ஏய்......கத்திரிக்கா என்ன ஆச்சிடி?? ஒரு மாதிரியா இருக்க ... எங்க அத்தை கொடுத்த அந்த கவர காட்டு பாக்கலாம். என்று கேட்டுக்கொண்டே அறைக்குள் நுழைந்தால் உஷாவின்  மகள் நீலா.

“வருங்கால அண்ணி  ஆச்சேன்னு பாக்கேறேன். சும்மா சும்மா அத்தையும் (காயூவின் அம்மா) மருமகளும் என்னை வம்புபண்றதே  வேலையா வைச்சிருக்கிங்க” என்று முறைத்து உறுத்து பார்த்தால் காயத்திரி.

“ம்... இல்லன்ன என்ன பண்ணுவ???.....  பெரிய  இவ ரொம்பதான் சீன் போடுற அத்தை  சொன்னத செய்ய!!!!.”

“வேண்டா அண்ணி நீயும் ஆரம்பிக்காத...... அதான் ஒத்துக்க வைச்சிட்டாங்களே இந்த முண்டகண்ணி மேடம் “ .என்று அக்காவை முன்னிருந்து அனைத்தது போல் நின்றாள்.

“ ஏய்.. காத்திரிக்கா என்ன பண்ற வைஷூவோட டிரஸ் கலஞ்சிட போகுது அதுவும் இல்லாமா மாப்பிள்ளை ரொம்ப பாவம்  அவரும் இவளுக்காக காத்துகிட்டு இருக்கார்.... எப்போ வைஷூ வெளியே வரப்போற , என்றவள் மேலிருந்து கீழ் வரை ஒரு முறை பார்த்து  “ ப்பாஆஆஆஆ செமயா இருக்க நான் மட்டும் பையனா இருந்த உன்னை தான் கல்யாணம் பண்ணிக்கிட்டு இருப்பேன் . ம்...” என்று ஏக்க பெருமூச்சு விட்டாள்.

ஹா... ஹா... என்று சிரித்த வைஷூ  “ எங்க அண்ணா தப்பிச்சி இருக்கும் அண்ணி” ....என்று கூறினாள் .

“ரொம்பதான்  அண்ணணுக்கு சப்போர்ட்டு!!! ஆமா எங்க உங்க அண்ணன் ஆளையே காணும் நிறைய விஐபிங்களாம் வந்துருக்காங்க அவங்களயெல்லாம் இன்வைட் பண்றத விட்டுட்டு எங்க போனாரு” என்றாள் நீலா.

“ எங்க அண்ணனா??? ம் எத்தனை நாளைக்கு அப்படி கூப்பிடுறேன்னு பாக்கலாம் என்று  வைஷூ கூறும்போதே கதவை தட்ட திறந்தால் நீலா  (கண்ணும் கண்ணும் கலந்து இன்பம் கொண்டாடுதே) சிவாவை பார்க்க சிவா நீலாவை  பார்க்க வைஷூவும் காயூவும் பின்னால் பாடினர். உள்ள வரலாமா? “ என்றவன் பக்கதிலிருந்தவளை பார்த்து கொண்டிருந்தான்.

“ ஹலோ...ஹலோ... அண்ணா... என்ன சைலண்ட் ஆகிட்ட என்று கேட்ட தங்கையின் பக்கம் தலையை திருப்பியவன்  வைஷூவின் கையில் ஒரு வைரம் வைத்த பிளாட்டின மோதிரம் போட்டு விட்டு கூடவே பிளாட்டினத்தில் வைரம் பதித்த சயின் அடங்கிய பாக்சை தங்கையின் கையில் கொடுத்தான்.

“வாவ்வ்வ் சூப்பர் அண்ணா....”என்ற தங்கையிடம் “இதை இனி கழட்டவே கூடாது சரியா என்று வைஷூவின் கைகளை பிடித்தபடி கூறியவன். கௌஷிக் ரெடி, நீ ரெடியாகிட்டியான்னு பாக்க வந்தேன் டா ”என்றான் .

அவனையே பார்த்து கொண்டிருந்த நீலாவை கண்களின் முன்னே சொடக்கை போட்டு "ஹாலோ மேடம் கொஞ்சம் கீழே இறங்கி வரிங்களா" என்றான் சிவா.

“நான் எங்க அத்தான் போனேன்!!
இங்கதானே இருக்கேன்!! என்றாள்” .ஒன்றும் அறியாதவளாய்.

“ஆமா ஆமா அதான் பாத்தேனே ஈ யோ கொசுவோ போறது கூட தெரியாம பட்டிகாடு மிட்டாய் கடை பாத்தது போல பாத்துகிட்டு இருக்க”. என்றான் கிண்டலாய்.

“அண்ணா  பழமொழி  எல்லாம் சொல்ற அம்மவோட டிரைனிங்கா? “ என்றாள் வைஷூ கண் சிமிட்டியபடி

“என்ன எல்லோரும் ஒன்னு சேர்ந்து கிண்டல் பண்ணிகிட்டு இருங்கிங்க... இருங்க அத்தைகிட்ட சொல்றேன்” என்று சிணுங்கி சொல்ல போக போனவளை போக முடியாமல் ஒரு கரம் பிடிக்க திரும்பி பார்த்தாள் நீலா.

“ஏய் எங்க அம்மாவுக்கு டென்ஷன் ஏத்தாதே  நீ இங்கயே இரு அங்க வந்து ஏதாச்சும் பேசின  வாய தைச்சிடுவேன் பாத்துக்க” என்றவன் இன்னும் 15 நிமிஷத்துல வைஷூவை கூட்டிக்கிட்டு வா என்று கூறிவிட்டு சென்றான்.

அவன் கைபிடித்து நின்றதால் அவன் கைகளையே ஆச்சரியமாய் பார்த்தவள் சிவா அறையை விட்டு சென்றதும் முகம் வாடினாள். “ வைஷூ நெஜமாவே உங்க அண்ணனுக்கு என்னை பிடிக்கலையா ஏன் இப்படி திட்டுறாரு” என்றாள் நீலா.

“ஐய்யோ அண்ணி... அண்ணன் பாக்குற பார்வைய வைச்சி உங்களாள கண்டுபிடிக்க முடியலையா ??? அவரு உங்களதான் என்று சொல்லவந்தவள் கொஞ்சம் நிறுத்தி சுத்தல்லவிடுவோம் என நினைத்து நிங்களே நேரடியா கேக்க வேண்டியது தானே “ என்று அவளை ஏற்றி விட்டாள்.

“சரி சரி அதை நா பாத்துகிறேன்”
என்று தோரணையாக கூறியவள் “காயூ சீக்கிரம் ரெடியாகு கூப்பிடுறாங்க” என்றாள் நீலா.

“நான் ரெடி இதை கொஞ்சம் போட்டு விடுங்க அண்ணி “ என்று ஒரு குந்தன் செட் எடுத்து கொடுத்தாள்.அனைவரும் கிளம்பி இருக்க ஒரு பெண்மணி  வந்து கூப்பிடுறாங்க வா மா போகலாம் என்று அழைக்க  இத்தனை நேரம் இருந்த அடாவடித்தனம் போய் மெல்லிய பதற்றம் ஒட்டி கொண்டது வைஷூவிற்கு. நீலாவின் கைகளை இறுக்க பற்றி கொண்டவளை மணமேடையை நோக்கி அழைத்து சென்றனர்.
____________________________________

"டேய்  என்னடா? உன் அலங்காரம் இன்னும் முடியலையா? எவ்வளவு நேரம் தான் கண்ணாடியே பாத்துகிட்டு இருப்ப... அங்க ஐயர் மாப்பளைய கூப்பிட்டு கிட்டு  இருக்காரு இங்க நீ கண்ணாடி முன்னாடி நின்னுகிட்டு இருக்க” என்று கரண் கேட்க .

“எங்க என்னை பார்த்து சொல்லு பாக்கலாம்.காலைல இருந்து 1/2 அவரா கண்ணாடி முன்னாடி இருந்தவன் நீ ...நான் இப்போதான்  வந்து நின்னேன்... உடனே  ஓட்ற பத்தியா ..... உன் கல்யாணத்துல நீ என்னென்ன அலும்பல் பண்ணேன்னு சொல்லவா” என்று வாரியவனை "போதும் போதும் நிறுத்துடா" என்று வழிந்தான் கரண்.

“ஓகே  ஓகே வா போகலாம்” கௌஷிக்

மணமேடையில் சென்று அமர்ந்தவன் அய்யர் சொல்லும் மந்திரங்களை சொல்லி கொண்டிருந்தாலும் கண்கள் அவள் வருவதை எதிர்பார்த்து கொண்டிருந்தன.  கிர்ஷ் தன் நண்பர்கள் பட்டாளத்துடன்  அரட்டை அடித்துக் கொண்டு அமர்ந்திருந்தான். பூஜா நிறை மாதம் என்பதால் வேலை அதிகம் கொடுக்காமல்  அமரசொல்லி இருந்தார் மாதூரி. கரண் மற்றும் சிவா விருந்தினர்களை வரவேற்று கொண்டிருந்தார்கள். மணமேடையில் கரணின் பெற்றவர்களும் வைஷூவின் பெற்றவர்களும் இருந்தனர்.

பல மணிநேர காத்திருப்பிற்கு பின்  அவனின் காதல் தேவதையை கண்டான் அடர் பச்சை  நிறத்தில் கை அகலத்தில் தங்க ஜரிகையிட்டு புடவை முழுவதும் தாமரை மலரை ஜரிகையில் இழைத்திருந்தது.பல கவிதைகள் பேசும் அழகிய கண்களுக்கு மையிட்டு ,வில் போன்ற புருவத்தின் மத்தியில் பொட்டு வைத்து இயற்கையாய் சிவப்பாய் இருந்த கொவ்வை இதழ்கள் மேலும் சிவந்து இருந்தது, கைமுழுவதும் மருதாணியிட்டு தங்க வைர வலையல்கள் கைகளில் மின்னியது .மருதாணியின் உதவியால் சிவந்து இருந்த பூ போன்ற பாதத்தை அடி மேல் அடி வைத்து மங்கையவள் அவன் பக்கத்தில் அமர்ந்தாள்.

அதே சமயம் இன்னொரு இதயமும் விழுந்தது.வைஷூவுடன் வந்த காயூவை பார்த்து விழுந்தான் நம்ம கிர்ஷ். ராயல் ப்ளூ நிறத்தில் வேலைபாடுகள் நிறைந்த பாவடையும் சந்தன நிற ஜார்ஜெட் தாவணியில் இருந்த காயூவை பாராத்தவன் தொபுக்கடீர்னு விழந்துட்டான். நண்பர்கள் பட்டாளம் சலசலத்து கொண்டிருந்ததும் காதில் விழாது அவளிடமே பார்வையை பதித்திருந்தான்.

இது எதையும் கவனத்தில் கொள்ளும் மனநிலமையில் காயூ இல்லை  அவள் கைகள் இடையை மறைக்கும் தாவணியில்  இருந்தது. மனதிற்குள்ளே தாயையும் தமக்கையையும்  அர்ச்சனை செய்து கொண்டிருந்தாள்.

தன் இருமகள்களையும் விழிகளில் நிறைந்து  கொண்டார் லலிதா. அருணாச்சலம் மகளின் கல்யாண கோலத்தை கண்டு பூரிப்படைந்து இருந்தார்.
மாதூரி தன் இரண்டாவது மகனுக்கும் கௌரவமான இடத்தில் பெண் கிடைத்ததில் பரம திருப்தி.விஜயபாஸ்கரின் நிலையை சொல்லவும் வைண்டுமோ 25 ஆண்டுகால நட்பு உறவுகளானது மிகவும் சந்தோஷம்.

மனையில் அமர்ந்தவளுக்கு யாரோ உருத்து பார்ப்பதுபோல் தோன்ற திரும்பி பார்க்கவும் கௌஷூக்கின் ரசனையான பார்வையால் அவனை காண முடியாமல் தலை கூனிந்தாள்.” டாலி யூ லூக்கிங் சோ ஆசம் டியர்.” என்று  இவளுக்கு மட்டும் கேட்கும்படி கூறினான். மந்திரம் ஓதிய அய்யர் மாங்கல்யத்தை கொடுக்க  பெரியவர்களும் உற்றார் உறவினர்களும்  கூடி இருக்க தன்னில் சரிபாதியாய் ஆக்கிக்கொண்டான் கௌஷிக்.

Bạn đang đọc truyện trên: Truyen2U.Pro