பகுதி 20

Màu nền
Font chữ
Font size
Chiều cao dòng

Part 20

அம்மி மிதித்து அருந்ததியின் முகம் பார்த்து அக்னியை சாட்சியாய் வைத்து இன்று முதல் நீ என்னில் சரி பாதி என்றும் உன்னை விட்டு நீங்கேன் என்று உறுதி எடுத்து அவளின் கைப்பற்றி கொண்டு அக்னியை வலம் வந்தவர்கள் பெற்றவர்களின் கால்களில் விழுந்து வணங்கி ஆசி பெற்றனர்.

உஷா லலிதாவை பார்த்து அண்ணி நீங்க இங்க பிள்ளைய பாத்துக்கங்க நாங்க வீட்டுக்கு போய் எல்லாத்தையும் ரெடி பண்றோம் . அண்ணன்கிட்ட சொல்லிடுங்க... அவர் என்னை தேடப்போறார் என்றவரிடம் சரி என்றவர் ஒரு நிமிஷம் உஷா இதோ வரேன் என்றார் லலிதா.

மாதுரியிடம் சென்ற லலிதா அண்ணி பூஜாவ பாருங்க ரொம்ப டையர்டா தெரியறா ...வீட்டுக்கு தான் உஷா போராங்க கூட அனுப்பி வைச்சா அங்க போய் கொஞ்சம் ரெஸ்ட் எடுப்பா என்றார்.

சரி .....பூஜா நீபோய் ரெஸ்ட் எடு நாங்க சடங்கு முடிச்சிட்டு வந்திடுறோம் என்று இந்தியில் கூறியவரை கணவர் அழைக்க அவரிடம் சென்றார்.

லலிதாவை தயக்கமாய் ஏறிட்ட பூஜாவை கவனித்த லலிதா ஏன் மா ஒருமாதிரியா இருக்க உனக்கு துணையா காயூவ அனுப்பி வைக்கிறேன் நான் சொல்றது உனக்கு புரியுதான்னு  தெரியல ம்... என்றவர் யோசனையாக   காயூ... காயூ.... என்று அழைத்தார்.

நண்பிகளுடன் செல்பி ஏடுத்து கொண்டிருந்த காயத்ரி லலிதா அழைத்ததில் செல்லை எடுத்துக்கொண்டு ஒரு கையில் பாவடையை பிடித்தபடியே ஒடி வந்தவள்  , நண்பன் ஒருவன் தோல்மீது கைபோட்டு பேசியபடியே சென்ற கிர்ஷின் மேல் மோதி கிழே விழுந்தவளின் செல்போன் கிராச் ஆனது . அதை பார்த்த காயூ ஒற்றை கையை ஊண்றி எழுந்து கோபமாக "ஏய் பார்த்து வரமாட்ட தடி மாடு மாதிரி குறுக்க வர?". என்று அதட்டினாள். அவளது அதட்டலில் வெகுண்டு எழுந்தவன்" இத்தனுண்டு சைஸ்ல இருந்துட்டு  யாரு வந்து தடிமாடுன்னு சொல்ற மோதினது நீ என்னை திட்ற நியாயமா பாத்த நான்தான் உன்னை திட்டனும் குட்டச்சி

"ஏய் யார பாத்து குட்டச்சின்னு சொல்ற  போட நெட்டக்கொக்கு"காயூ.

"வாட போடா சொன்னா வாய உடைச்சிடுவேன்".கிர்ஷ்

"எங்க உடைடா பாக்கலாம். உன்னால தான்டா போன் உடைஞ்சு போச்சு"என்று எகிறிக்கொண்டு போக "ஆள பாத்த டீசன்டா அழகா இருக்க... வாய பாரு காது வரைக்கும். நீ கண்ணு தெரியாம வந்து மோதிட்டு ஒவரா பேசுறடி குட்டச்சி"..என்று கூறி வெறுபேற்ற

"போடா எருமை உன்கிட்டல்லாம் மனுசன் பேசுவான ... ச்சி போடா" காயூ

"உன்னை யாருடி பேச சொன்னா ...பேசாத போடி மங்கி" என்றவன் அந்த இடத்தை விட்டு அகன்றான்." நீதாண்டா மங்கி நான் இல்ல" என்று முனுமுனுத்தவள் தாய் அழைத்தது நினைவில் வர அய்யோ இந்த லலிதா கிட்ட வேற லேட்டா போய் திட்டு வாங்கனும். சே எல்லாம் இந்த நெட்ட கொக்கால வந்தது.இந்த ஆப் சாரி வேற  தொல்லை முதல்ல  வீட்டுக்கு போகனும்.

"காயூ பூஜாவ வீட்டுக்கு கூப்பிட்டுகிட்டு போ கொஞ்சம் ரெஸ்ட் எடுக்கட்டும் .நீ அவளுக்கு துணையா இரு .அப்புறம் நீ இதை இந்தில அவகிட்ட சொல்லு நான் சொல்றது அவளுக்கு புரியல" என்று கூறினார்.

அப்பாடா நாம நெனச்சபடியே நம்மல வீட்டுக்கு அனுப்புறாங்க... தேங்க்ஸ் மா ...ஐ லவ்யூமா என்று மனதுக்குள் தாயை கொஞ்சியவள் வெளியே சாதரணமாக "சரிமா" என்றாள்.

பூஜாவை அழைத்து கொண்டு உஷாவுடன் வீட்டுக்கு சென்றதை நண்பர்களுடன் பார்த்திருந்த கிர்ஷ் அப்பா!!! என்னமா திட்றா ரொம்ப அமைதியான பொண்ணுண்ணு சொன்னாங்க இப்படி கத்தறா ஒரு வேலை தப்பா சொல்லிட்டாங்களோ?!?.. என்று நினைத்து கொண்டு இருந்தான்.

"இங்க பாரு குலாபி ஏன் என்னை பாக்க மாட்ற??" என்று கௌஷூக் கொஞ்சும் குரலில்அவளுடைய முகத்தை திருப்பி கூற

"பிளிஸ் கௌஷி ஒரு மாதிரி இருக்கு உங்கள பாக்க ..அதுவும் எனக்கு  நீங்க இதுபோல அஸ்கி வாய்ஸ்ல பேசுறது வெக்கவெக்கமா வருது..."என்றாள் ரகசியமான கூறினாள்

"ஹையய்யோ என்ன டாலி இப்படி சொல்ற நீ வெட்க்கபட்டு என்னைய பார்க்கமா இருந்த எப்படி நமக்குள்ள ????" எல்லாம் உன் மாமு பாவம் டி பாத்துக்க" என்றான் குழைந்த குரலில்.

"அவன் கூறுவதன் அர்த்தம் புரிய என்னங்க நீங்க இப்படியே  பேசுனிங்க எழுந்து போய்டுவேன்..." என்றாள் மெல்லிய சிணுங்கிய குரலில்.

"சரி சரி இனி பேசல பட் என்னோட வேலைய எப்படி நான் செய்யாம இருக்கறது சரி ஒரு டீல் உன்னை ப்ளஷ் பண்ண வைக்காம இருக்கனுமுன்னா  அதுக்கு இப்போ ஏதாவது எனக்கு கொடுக்கமுடியுமா??? எனி ஐடியா..." என்றான் அவள் காதில் மட்டும் விழும்படி.

"கௌஷி இது மண்டபம் ....நம்ம போட்டோ ஷூட் எடுத்துட்டு இருங்கோம்.... இங்க வந்து என்னனென்ன கேக்கறிங்க உங்கள என்ன செய்ய??" என்று திரும்பி நின்றவளை நேரம் காலம் தெரியாமல் அந்த போட்டோ கிராபர் கௌஷிக்கின் மார்பில் சாய்ந்து கௌஷிக்கை  நெற்றியில் இதழ் பதிப்பது போல் போஸ் கொடுக்க சொல்ல மேலும் சிவந்து   இருந்தது வைஷூவின் கன்னங்கள் .

அனைத்தும் முடிந்து அருணாச்சலத்தின் வீட்டுக்கு புது மண தம்பதியர் வர அவர்களுக்கு ஆலம் சுற்றி அழைத்து சென்று பூஜை அறையில் விளக்கேற்றி மனமாற இறைவனை பிரார்தித்து பின் தம்பதியரை அமரவைத்து பால் பழம் கொடுத்தனர்.

லலிதாவும் , அருணாச்சலமும் மாதுரியிடமும், விஜயபாஸ்கரிடமும் பேச வேண்டும் என அழைத்து சென்று விஷயத்தை கூற அவர்கள் இருவரும் இதை கௌஷிக்கிடம் எப்படி கூறுவது என்று விழித்தனர்.கரண் வரவே அவனிடம் விஷயத்தை கூறி கௌஷிக்கிடம் தெரிவிக்க செய்தனர்.

"கௌஷிக் உன்கிட்ட கொஞ்சம் பேசனும்"கரண்.
"என்ன பையா இப்போ கூப்பிடுற எனி இம்பார்டன்ட் மேட்டர்"கௌஷிக்.
வைஷூவை பார்த்துவிட்டு "ரொம்ப இம்பார்டன்ட்" என்று அழுத்தி கூறி "கொஞ்சம் வாடா" என்று அழைத்து சென்றான்.

"வைஷ்ணவிக்கு நல்லபடியா கல்யாணம் முடிஞ்சா திருப்பதிக்கு அனுப்பி வைக்கிறதா அத்தை வேண்டிகிட்டாங்களாம் இப்போ" என்று இழுத்த கரண் 'ம் .... சொல்லு ணா அதுக்கு" என்று கௌஷிக் ஊக்கம் கொடுக்க "நீங்க கொஞ்சம்...கொஞ்சம்...இன்னைக்கு இல்லை நான் சொல்லவருவது புரியுதா உனக்கு" என்ற கரணை எரிப்பது போல் பார்த்தான் .

இப்போதான் அவளையே கொஞ்சம் கொஞ்சமா வழிக்கு கொண்டு வர்றேன் அதுக்கும் இப்போ தடா வா என்று மனதில் நினைத்தவன் "சரி எப்போ கிளம்பனும் அதையும் சொல்லு"என்றான் எரிச்சலாக

"நாளைக்கு மார்னிங்7.30 க்கு கிளம்பனும்  அதுவரையும்" என்று இழுத்தவனை பார்த்து "ஒகே புரியுது அண்ணா" என்றான்.

அருகில் வந்து அமர்ந்த கௌஷிக்கை பார்த்த வைஷூ கௌஷிக்கின் முகம் ஏதோ சரியில்லை என்பதை அறிந்தாள்.

"என்னங்க ...என்னங்க..."என்று அழைத்தவளின் பக்கம் திரும்பாமல் இருந்தவனை "ஹே... டாலி" என்று அழைத்து காலை சுரண்டினாள்.

நானே சைலண்ட்டா இருந்தாலும் இவ இருக்க விடமாட்டுறாலே இவ பக்கம் திரும்பினாலே மனசு அலபாயுதுதான்னு தான் திரும்பாம இருக்கேன் .

ரகசியமான குரலில் "இப்போ எதுவும் கேக்காத அப்புறம் சொல்றேன்" என்று செல்லை தம்பியிடம் இருந்து வாங்கி மெயிலை செக் செய்ய தொடங்கினான் .ஏராளமான வாழ்த்துக்களுடன் ஶ்ரீயின் மெயிலும் இருக்க அப்போதுதான் திருமணத்திற்கு ஶ்ரீ வராததை கவனித்தான்.

மாதுரி வைஷூவை அழைத்து ஒய்வு எடுக்குமாறு கூறினார் சிவாவின் அறைக்கு கௌஷிக்கை அனுப்பி வைத்தனர்.

"என்ன மாப்பிள ஒருமாதிரி மூட் அப்சட் ஆனபோல இருக்கிங்க" சிவா.

"இது நியாயமா மச்சான் கல்யாணம் ஆன முதல்நாளே பிரிச்சி வச்சிட்டிங்க எங்கள?" என்று கௌஷிக் சலித்த குரலில் கேட்க.

"இன்னைக்கு ஒரு நாள்தானே மாப்பிள்ளை கொஞ்சம்  பொறுத்துக்குங்க அப்புறம் உங்கள யார் பிரிக்க போறா?".சிவா.

"அது சரி அப்படி ஒரு எண்ணம் வேற இருக்கா?".என்றான் கௌஷிக்  சிரித்தபடி
____________________________________
"பூஜா அண்ணி இந்தாங்க இந்த பாலை குடிங்க அத்த கொடுத்து விட்டாங்க "நீலா.

நீலா ஆங்கிலத்தில் கூற பாலை பெற்றுக் கொண்டு யோசனையோடு பார்த்தாள் பூஜா. "பால் ரொம்ப சூடா இருக்கா அக்கா" என்று வைஷூ கேட்க

"அதெல்லாம் ஒன்னும் இல்லை  இளம் சூட்டில் தான் இருக்கு நீங்க ரெண்டுபேரும் நல்லா ஹிந்தி பேசுரிங்க இவங்க மட்டும் ஏன் பேசமாட்டுறாங்க?".

"அதுவா... மேடம் அன்னிய மொழிய பேசமாட்டங்களாம் இந்தம்மா இங்கிலீஷ் பேசலனா அவங்க காலேஜ் ல இருந்து தள்ளி விட்டுவாங்க அதுக்கு பயந்து இங்கிலீஷ்ல பேசுறா" என்று கூறி சிரித்த காயூவை முதுகில் இரண்டு போட்டவள்."சும்மா இரு கத்திரிக்காய் ரொம்ப முக்கியம் நான் ஹிந்தி கத்துக்காதது.இருங்க அண்ணி நானே சொல்றேன் என் சோக கதைய".

" எனக்கும் இந்தி சாருக்கும் ஆகல... சரியா எழுதலன்னு  ஒரு வாட்டி ரொம்ப அடிச்சாரு அவரு எங்க வீட்டு வழியா போகும்போது கல்லை தூக்கி அடிச்சிட்டேன். கோவத்துல பிரின்சிபல் கிட்ட கம்பலைண்ட் பண்ணி பெரிய பிரச்சனையாகி  மாமா வேற ஸ்கூல் சேர்த்துவிட்டாரு அன்னையல இருந்து ஹிந்திக்கும் எனக்கும் ரொம்ப தூரம்... என்று கண்ணடித்தவள் அதுக்கு அப்புறம் நான் ஹந்தி கத்துக்கவே இல்லை. என்று சிரித்தாள். உங்க டவுட் கிளியரா இப்போ படுங்க" நான் அம்மா கூட இருக்கேன் என்று கூறி சென்று விட்டாள் நீலா.

அனைவரும் உறங்கிவிட இரு இதயங்கள் அவரவர் துணையை நினைத்து கண்கள் மூடி இருந்தது.

விடிந்ததும் திருப்பதிக்கு காரில் பயணம் ஆனார்கள் இருவீட்டாரின் சார்பில் பெரியவர்கள் செல்ல முடியாமல்  இருக்க இவர்களை மட்டும் அனுப்பி வைத்தனர்.

வைஷூவிடம் கௌஷிக்கிற்கு தெரியாமல்  கோவில் சென்று வரும் வரை ஜாக்கிரதையாக இருக்கும்படி அறிவுறுத்தினார் லலிதா "அம்மா" என்று சினுங்கிய மகளிடம் "சொல்றது எங்க கடமை டா அதான் ... நீங்க நல்ல பிள்ளைங்கன்னு எனக்கு தெரியாதா??"என்றார் லலிதா.

இனிமையான காலை நேர பயணம் கேசட்டில் ஹிந்தியில் வெளியான காதல் பாடல்கள் பக்கத்தில் வெண்மல்லி சூடி மனதையும் சிந்தனையையும் கவர்ந்த மங்கை இந்த உலகத்தையே வென்றது போன்ற பிரம்மையில் வண்டியை செலுத்தி கொண்டிருந்தாலும் எண்ணம் முழுவதும் மனைவியை சுற்றியே வட்டமிட்டது.

சாலையோர காட்சிகளை கண்களில் நிறைத்துக் கொண்டே வந்தவளின் சிந்தனையை கலைக்கும் வண்ணம் குலாபி என்று உருகும் குரலில் அழைத்தான் கௌஷூக்

அவனின் குரலில் ஏற்பட்ட வேறுபாட்டை உணர்ந்த வைஷூ" என்னங்க சொல்லுங்க " என்றாள்.

"நமக்கு இடையே ஏன் டியர் இவ்வளவு கேப் கொஞ்சம் பக்கத்துல தான் வந்து உக்காறேன்"கௌஷிக்

"இன்னும் நான் தள்ளி உக்காந்தா ஸ்டேரிங் மேலதான் உக்காரனும் வண்டிய பாத்து ஓட்டுங்க."வைஷூ

"நமக்கு நேத்துதான்டி கல்யாணம் ஆச்சி கொஞ்சம் கூட ரோமன்சையே காணும் உங்கிட்ட, என்னமோ கல்யாணம் பண்ணி பத்து வருசம் ஆனப்போல பேசுற" என்றான் கடுப்பாக

"நாம போறது கோவில் அதுலயும் இவரு ஏடு குண்டல வாடு செமத்தியா கொடுத்துடுவாரு அதனால இந்த ரொமன்ஸ ஓரம் கட்டிட்டு வண்டிய சரியா ஓட்டுங்க" என்றாள்.

"என்கூட பேசுறதுலயோ கிட்ட வந்து உட்காருதலையோ ஒன்னும் உன் சாமி கோச்சிக்க மாட்டாரு அவரும் கல்யாணம் ஆனவருதான் என் பீலிங்ஸ் கொஞ்சமாச்சும் அவருக்கு புரியும்" என்று திருப்பி விட்டான் .

"ரொம்பதான் ... சரி பக்கத்துல உக்காறேன் பட் சைலன்ட்டா வரனும்" என்று கண்டிஷன் அவள் போட   "ஓகே ஆனா நான் செய்யறதா நீ ஏன்னு கேட்டா அவுட்டு இதுக்கு ஓகே வா" என்றான்.

"சரி " என்றவளை கூர்ந்து பார்த்தவன் ஏசியை ஆப் செய்து விட்டு காரின் கண்ணாடியை இறக்கி விட்டான் இவரோட வேலைய உடனே ஆரம்பிச்சிட்டாரா எதுவும் கேக்காத வைஷூ என்று மனதில் சொல்லி கொண்டாள்.

வண்டியின் வேகத்திற்கு காற்று வீசா கழத்து வளைவு வரை இருந்த முடி கற்றையில் அடங்க மறுத்த முடிகள் காதோரம் குறுகுறுப்பை கூட்டியது.காற்றில் பறந்த ஷிபான் புடவையில் மறைந்த அங்கங்ள் தெரிய புடவையை சரி செய்தவள் கௌஷிக் போதும் விளையாட்டு டோர் கிளோஸ் பண்ணுங்க. ரொம்ப காத்து வருது என்றாள்.

"டாலி... நீ அவுட்டு என்னை கேட்டுட்டல்ல....என்று குஷியாக கூறினான் கௌஷிக்

"வைட் வைட் நான் என்ன கேட்டேன் டோர் கிளோஸ் பண்ண சொன்னேன்".நக்கலாக கேட்டாள் வைஷூ

"இதை ஒத்துக்க மாட்டேன் இது போங்கு ..ஒரே ஒரு வேஜ்டேரியன் கிஸ் ஆச்சுமா கொடுடி என்றவனை இப்போ முடியாது திரும்பி வரும்போது பாத்துக்கலாம்" என்று கூறினாள்.இப்படியே சின்ன சின்ன கெஞ்சல்கள், கொஞ்சல்கள்,மிஞ்சல்கள் செய்து கொண்டு திருப்பதியை அடைந்தனர்.

Bạn đang đọc truyện trên: Truyen2U.Pro